"ஒரு தடவைதான் முதலீடு. மாதம் ரூ. 1லட்சம் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தை காண்பிக்க, தங்களுக்கும் ஏ.டி.எம். மையம் கிடைத்துவிடும் நம்பிக்கையில் ஏறக்குறைய ரூ.100 கோடியை இழந்துள்ளனர் மேற்கு மண்டல மக்கள்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், "கோவை அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியிலுள்ள IZET E-PAYMENT PVT LTD நிறுவனத்தில், தங்களுடைய தயாரிப்பாக ழடஊ ஆபங என்ற ஆபங இருக்கின்றது. இந்த ஆபங மையத்தின் உரிமைபெற ஒரு தடவை முதலீடு செய்தால் போதும். மாதம்தோறும் ரூ 1 லட்சம் சம்பாதிக்கலாம் என சமூக வலைத்தளங்களான இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் கடந்த 2023 இறுதியில் விளம்பரம் செய்தது மேற்படி நிறுவனம். ரூ.5,54,000 கட்டினால் போதும், மாதம்தோறும் ரூ 49,000 ரூபாயும், பணப்பரிவர்த்தனைகள் செய்யும் லாபத்தில் 60% நிறுவனத்திற்கும், 40% பயனாளிக் கும் கொடுக்கப்படும். அந்தவகையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1 லட்சமாவது சம்பாதிக்கலாம். இயந்திரத்தை நிறுவனமே வழங்கும். ஆனால் ந
"ஒரு தடவைதான் முதலீடு. மாதம் ரூ. 1லட்சம் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தை காண்பிக்க, தங்களுக்கும் ஏ.டி.எம். மையம் கிடைத்துவிடும் நம்பிக்கையில் ஏறக்குறைய ரூ.100 கோடியை இழந்துள்ளனர் மேற்கு மண்டல மக்கள்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், "கோவை அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியிலுள்ள IZET E-PAYMENT PVT LTD நிறுவனத்தில், தங்களுடைய தயாரிப்பாக ழடஊ ஆபங என்ற ஆபங இருக்கின்றது. இந்த ஆபங மையத்தின் உரிமைபெற ஒரு தடவை முதலீடு செய்தால் போதும். மாதம்தோறும் ரூ 1 லட்சம் சம்பாதிக்கலாம் என சமூக வலைத்தளங்களான இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் கடந்த 2023 இறுதியில் விளம்பரம் செய்தது மேற்படி நிறுவனம். ரூ.5,54,000 கட்டினால் போதும், மாதம்தோறும் ரூ 49,000 ரூபாயும், பணப்பரிவர்த்தனைகள் செய்யும் லாபத்தில் 60% நிறுவனத்திற்கும், 40% பயனாளிக் கும் கொடுக்கப்படும். அந்தவகையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1 லட்சமாவது சம்பாதிக்கலாம். இயந்திரத்தை நிறுவனமே வழங்கும். ஆனால் நிறுவனம் நிறுவக்கூடிய இடத்திற்கு வாடகை, மின்சார பில் இவைகளை பயனாளிகள் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது.
இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் லட்சக்கணத்தில் பணத்தைக் கட்டி நிறுவனத்தில் சேர்ந்துள்ளோம். மொத்த பணம் கட்டியும் இயந்திரம் வரவில்லை. ஒருசிலருக்கு வந்த இயந்திரத்தை திரும்ப எடுத்துச்சென்றுவிட்டார்கள். பல மாதங்களாக காத்திருந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. கேட்டால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்'' என்றனர் அவர்கள்.
இதில் பாதிக்கப்பட்ட திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவரோ, "சதுரங்க வேட்டை மாதிரிதான் இதுவும். ஆசையைக் காண்பிச்சு ஏமாத்திட்டாங்க... கூலிவேலை பார்க்கின்றேன். உழைச்சு எப்படியும் முன்னேறணும்னு போராடும் எங்களுக்கு சோஷியல் மீடியாவில் வந்த ழடஊ ஆபங ஆசையைக் காண்பித்தது. மாதம் கரண்ட் பில், வாடகை போனாலும் மீதம் இருக்குல்ல. பிழைச்சுக்கலாம் என்கின்ற ஆசையில் நகையை வித்து, வட்டிக்கு கடன் வாங்கி ரூ 5,54,000 கட்டினோம். 6 மாசம் கழிச்சு ஆபங வந்துச்சு. ஒரு தடவைதான் பணத்தை நிரப்புவதாகக் காண்பித்தார்கள். அதற்கப்புறம் அவர்கள் வரவில்லை. வாடகை, கரண்ட் பில், வட்டி அதிகமாக போக அலுவலகத்தைக் கேட்டால் பிஸினஸ் வேண்டாமென எழுதிக்கொடு. பணம் வரும்பொழுது தருகின்றோம் என்கிறார்கள். என்னைய மாதிரி ஆயிரக்கணக்கான நபர்கள் ஏமாந்திருக்கின்றார்கள்'' என்றார் அவர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக்கோ, "அது பிராடு கம்பெனி. இதற்கு முன்னால் இதுபோல் சென்னையில் நிறுவனத்தை நடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடிச்சிருக்காங்க. மாதம் இவ்வளவு ரூபாய் வந்துவிடும் என்கின்ற ஆசையில் பணத்தைக் கட்டிவிட்டு காத்திருக்கையில் ழடஊ ஆபங அமையவிருக்கின்ற இடத்தைப் பார்க்கணும், சீலிங் இப்படி இருக்கணும், கண்ணாடிக் கதவு இப்படி இருக்கணும் எனக் கூறியே லட்சக்கணக்கில் செலவு வைப்பாங்க. அதிகம் அழுத்தம்கொடுத்தால் ஒரு டப்பா மெஷினை கொண்டுவந்து வைப்பாங்க. 3 நாள்தான் அதுக்கு ஆயுசு இருந்துச்சு. சாஃப்ட்வேர் மாற்றினால் வேலைசெய்யும் எனக்கூறி அதனையும் எடுத்துட்டுப் போய்ட்டாங்க. இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார்செய்தால் ஏதோ என்னை குற்றவாளிபோல் ட்ரீட்செய்து மிரட்டி அனுப்பி விடுகின்றார்கள். நான் மட்டுமல்ல என்னைப்போல் பீளமேடு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலர்'' என்றார் அவர்.
தர்மபுரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரோ, "ரூ. 5,54,000 கட்டி ஒரு வருடமாகியும் வராததால் பணத்தைக் கேட்டு நச்சரிக்க, இதே இடத்தில் உனக்கு மினி பேங்க் வைத்துத்தருகின்றோம் என மீண்டும் ஆசை வார்த்தை கூற, கூடுதலாக ரூ.9 லட்சம் கொடுத்து காத்திட்டிருக்கேன். மூன்று மாதம் முன்பே அனைவருமாக இங்கேவந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார்கொடுக்க, அங்கிருந்த பெண் எஸ்.ஐ. அதனைப் பற்றி விசாரிக்காமல் ‘"அப்படி என்ன ஆசைடா உங்களுக்கு..?'’ என விரட்டிவிட்டார். இப்பொழுது கமிஷனரிடம் புகாரளித்துள்ளோம்'' என்கிறார் அவர்.
IZET E-PAYMENT PVT LTD என்கின்ற இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோர் உள்ளனர் என்கின்றது கம்பெனியின் விவரக்குறிப்பு. இதுகுறித்துக் கருத்தறிய IZET E-PAYMENT PVT LTD உ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணைத் தொடர்புகொண்டோம். அணைத்துவைக்கப் பட்டிருந்தது.
"இந்த புகாரில் உள்ளதனைத்தும் உண்மை. இதனை நம்பவேண்டாம் என ஆர்.பி.ஐ.யும் கூறிவிட்டது. பீளமேடு ஸ்டேஷன், குற்றப்பிரிவு அனைத்திலும் நடந்ததை விசாரித்து வருகின்றோம். தொடர் விசாரணையில் எங்களுக்கு சில அழுத்தங்கள் வருகின்றது. முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு இந்த கம்பெனியின் முப் பெரும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி யது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. தேவைப்பட்டால் அவரையும் விசாரணைக் குள் கொண்டுவருவோம்'' என்கின்றது மாநகர உளவுத்துறை.
விசாரணை தொடர்ந்து நடைபெறுமா..? பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா..? என்பதுதான் பலரின் கேள்வி.