காலத்துக்கேற்றவாறு திருடர்களும் நவீனமயமாகி வருகின்றனர். ஆன்லைன் மோசடி, ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் பொருத்தி வாடிக்கையாளர் களின் வங்கிக் கணக்கு விவரங்களை அறிவது, அலைபேசி மூலம் வங்கியிலிருந்து பேசுவதுபோல் தேனொழுகப் பேசி ஆதார், சி.வி.சி. எண்களைக் கைப்பற்றி பணத்தைச் சுருட்டுவதுதான் இப்போ தைய பேஷன். சென்னையில் சிறிதுகாலம் ஸ்கிம்மர் வழி வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது அதிகமாகக் காணப்பட்டது. அயனாவரம் கான்ஸ் டபிள் சாலை ஏ.டி.எம்.மில் நடந்த சம்பவம், அவர் களது கொட்டம் முழுமையாக அடக்கப்பட வில்லையோ என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.

atm

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவர் செல்போன் நிறுவனமொன்றின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு 10 மணியளவில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். ஒன்றில் பணமெடுக்கச் சென் றார். தனது ஏ.டி.எம். கார்டை சொருகி இழுத்த போது எடுப்பதற்குச் சிரமமாக இருக்கவே, அழுத் தம் தந்து இழுத்துள்ளார். அப்போது ஸ்வைப்பிங் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சாதனமொன்றும் கூடவே வந்துவிட்டது. அது ஸ்கிம்மர் கருவியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆராய்ந்தபோது, பாஸ்வேர்டு பதியுமிடத் தில் பட்டையாய் ரகசிய கேமராவும் வைக் கப்பட்டிருப்பதைத் aaதெரிந்துகொண்டார். உடனடியாக கிருஷ்ணன் போலீஸுக்குத் தகவலளித்தார். போலீஸார் ஸ்கிம்மர், கேமரா இருந்ததை உறுதிசெய்துள்ள நிலையில், வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஏ.டி.எம்.மில் வங்கி பொருத்தி யிருக்கும் காமிராவில் சோதனையிட்டபோது மர்ம நபர்கள் அவற்றைப் பொருத்துவதும் பதிவாகி யுள்ளது. இதுதொடர்பாக அயனாவரம் இன்ஸ் பெக்டர் நடராஜனிடம் பேசியபோது, ""ஸ்கிம்மர், கேமரா மூலம் திருடப்படும் விவரங்கள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கேயே போலி ஏ.டி.எம். கார்டுகள் தயார் செய்யப்பட்டு திருடி, சதவிகித அடிப்படையில் இருதரப்பாலும் பிரித்துக்கொள்ளப்படுகிறது.

இதுவரை இந்த ஏ.டி.எம்.மில் யாருக்கும் பணம்போனதாக புகார் வரவில்லை. இதைத் தவிர வேறு ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தியிருக்கிறார்களா என்பதையும் நோட்டம் விட்டு வருகிறோம்'' என்றார்.

Advertisment

மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் செல்வராணி, ""இதேபோன்று அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்திலுள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மிலும் தாம்பரம் சேலையூரிலும் ஸ்கிம்மர் பொருத்தி கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டனர். அவர்களது குழுவுக்கோ, அவர் களுடன் தொடர்புடைய குழுவுக்கோ இதில் தொடர்பிருக்கிறதா என விசாரித்து வருகிறோம்'' என்றார்.

எந்த ஏ.டி.எம்.மில் எவன் ஸ்கிம்மர், வெச்சிருப்பானோனு பயந்துக்கிட்டே பணமெடுக்க வெச்சுட்டாங்களே….

-அருண்பாண்டியன்

Advertisment