Skip to main content

ஏ.டி.எம். கொள்ளையில் பெரிய பெரிய லிங்க்! -போலீசிடம் கக்கிய சந்துருஜீ

Published on 12/06/2018 | Edited on 13/06/2018
சாமானியர்கள் துவங்கி பில்லியனர்கள் வரை அனைவரது பணத்தையும் அவர்களுக்குத் தெரியாமல் அபேஸ் செய்து வந்த புதுச்சேரி கும்பல் சிக்கியிருப்பது ஏ.டி.எம். கொள்ளை விவகாரத்தில் புதுத் திருப்பத்தை உண்டாக்கியுள்ளது. "புதுச்சேரியில ரெண்டு வருஷமா மக்களோட வங்கி கணக்குலேந்து பணம் குறைஞ்சிட்டு வர்றதா ஒரு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.