Advertisment

அத்திக்கடவு -அவிநாசி திட்டம் தொடக்கம்! சாதித்த முதல்வர்!

ss

டப்பள்ளி அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் என ஈரோடு மாவட்டத்தின் மூன்று பாசனப் பகுதிகளிலுள்ள மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் நேரடி விளைச்சலுக்கும், 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கும் பவானி ஆற்று நீரே உயிராயுதம். கீழ்பவானி பாசன பகுதி களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து நேரடியாக நீர் செல்கிறது. தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன பகுதிக்கு கொடிவேரி அணையிலிருந்து பிரிந்து செல்கிறது. பின்னர், பவானி கூடுதுறை அருகே அணைக்கட்டு என்ற இடம் வரை வந்து அங்கிருந்த

டப்பள்ளி அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் என ஈரோடு மாவட்டத்தின் மூன்று பாசனப் பகுதிகளிலுள்ள மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் நேரடி விளைச்சலுக்கும், 10 லட்சம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கும் பவானி ஆற்று நீரே உயிராயுதம். கீழ்பவானி பாசன பகுதி களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து நேரடியாக நீர் செல்கிறது. தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன பகுதிக்கு கொடிவேரி அணையிலிருந்து பிரிந்து செல்கிறது. பின்னர், பவானி கூடுதுறை அருகே அணைக்கட்டு என்ற இடம் வரை வந்து அங்கிருந்து காவேரி ஆற்றில் கலக்கிறது. இந்த உபரி நீரை வறட்சியான பகுதிகளில் பயன்படுத்தும் திட்டம்தான் அத்திக்கடவு - அவினாசி திட்டம்.

Advertisment

ss

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகள் இன்றுவரை வறண்ட பூமியாகத்தான் இருக்கின்றன. இங்குள்ள குளம் குட்டைகளில் உபரி நீரைக் கொண்டுவந்து சேமிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக, கலைஞரின் ஆட்சியில் ஆய்வுப்பணி தொடங்கப்பட்டது. அடுத்து வந்த ஜெ. ஆட்சியில் 3 கோடி ஒதுக்கீடு செய்தார். 2018ல் எடப்பாடி பழனிச்சாமி 250 கோடி, தொ டர்ந்து ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அடுத்துவந்த மு.க.ஸ்டா லின் ஆட்சியில், 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு, பவானிசாகர் அணைக்கட்டிலிருந்து உபரி நீரை 125 கி.மீ.க்கு ராட்சத குழாய்களில் எடுத்துவர 6 நீரேற்று நிலையங்கள் அமைக் கப்பட்டன. மொத்தம் 125 குளங்கள், 74 ஏரிகளை நிரப்பத் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் 25,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாக விளைச்சல் பெறும். மேலும் 5 லட்சம் மக்களுக்கு குடிநீர் தேவைகளும் பூர்த்தி அடையும். இதற்கு தொடர்ந்து உழைத்தவர்கள், ஈரோடு அமைச்சர் முத்துசாமியும், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனும்தான்.

Advertisment

இத்திட்டத்தை 17ஆம் தேதி, சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் குறைகூறிய தமிழக பா.ஜ.க. தலைவரின் முயற்சியை முறியடித்துள் ளது தமிழக அரசு. "இது ஒரு உபரி நீர்த் திட்டம். நேரடியாக பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீரை எடுத்துவந்து குளம், குட்டைகளுக்கு நிரப்ப முடியாது. எப்போது ஆற்றில் அதிகமாக உபரி நீர் வருகிறதோ அப்போதுதான் இதை எடுக்க முடியும். இதுதான் சட்டம். இதைக்கூட தெரியாத மெத்தப்படித்த அந்த மனிதர், விவசாயிகள், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப எவ்வளவோ அரசியல் செய்து பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. விவசாயிகள், பொதுமக்கள் எல்லோரும் முதல்வரின் நிர்வாகத்தை நம்புகிறார்கள். மக்களின் 65 ஆண்டுகால எதிர்பார்ப்பை தி.மு.க. அரசு இப்போது நிறைவேற்றியுள்ளது'' என்றார் அமைச்சர் சு.முத்துசாமி. அரசியல் கடந்து விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை விதைத்துள்ளது இத்திட்டம்.

nkn210824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe