துறவறம் டூ அரசியல்! மீண்டும் சசி!

sasi

சிகலா அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போகிறார் எனச் சொன்ன ஒரே பத்திரிகை நக்கீரன் தான். மறுபடியும் சசிகலா அரசியலுக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

சசிகலா சமீபத்தில் சில பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர்கள், பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நெருக்கமானவர் கள். அவர்களிடம் அரசியல் நிலவரம் பற்றி விவாதித்திருக்கிறார் சசிகலா. அவர்கள், சசிகலாவின் அரசியல் ஆர்வத்தை வெளியில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

sasi

எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்போதே ஜெ.வுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா, எத்தனையோ ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறார். கணவர் நடராஜனையே ஒதுக்கி வைத்து ஜெ.யுடனான உறவைப் பெரிதாக சசிகலா நினைத்ததற்குக் காரணமே அரசியலில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம்.

இன்றும் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் யார் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது சசிகலாவுக்குத் தெரியும். மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என எல்லோருடைய பலமும் பலவீனமும் சசிகலாவுக்கு அத்துப்படி. டி.டி.வி. தினகரனுக்கு அந்தளவு தெரியாது. ஓ.பி.எஸ்.ஸுக்குப் பதில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்த கருப்பசாமியைத்தான் ஜெ. முதல்வராக்க வேண்டும் என நினைத்தார். கொடியங்குளம் சம்பவத்திற்கான பிராயசித்தம் என ஜெ. நினைத்ததை மாற்றி ஓ.பி.எஸ்.ஸை கொண்டுவந்தவர் சசிகலா. அதே ஓ.பி.எஸ்., பா.ஜ.க. பக்கம் சாய்ந்த பி

சிகலா அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போகிறார் எனச் சொன்ன ஒரே பத்திரிகை நக்கீரன் தான். மறுபடியும் சசிகலா அரசியலுக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது.

சசிகலா சமீபத்தில் சில பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர்கள், பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நெருக்கமானவர் கள். அவர்களிடம் அரசியல் நிலவரம் பற்றி விவாதித்திருக்கிறார் சசிகலா. அவர்கள், சசிகலாவின் அரசியல் ஆர்வத்தை வெளியில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

sasi

எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்போதே ஜெ.வுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா, எத்தனையோ ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறார். கணவர் நடராஜனையே ஒதுக்கி வைத்து ஜெ.யுடனான உறவைப் பெரிதாக சசிகலா நினைத்ததற்குக் காரணமே அரசியலில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம்.

இன்றும் அ.தி.மு.க.வில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் யார் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது சசிகலாவுக்குத் தெரியும். மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என எல்லோருடைய பலமும் பலவீனமும் சசிகலாவுக்கு அத்துப்படி. டி.டி.வி. தினகரனுக்கு அந்தளவு தெரியாது. ஓ.பி.எஸ்.ஸுக்குப் பதில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்த கருப்பசாமியைத்தான் ஜெ. முதல்வராக்க வேண்டும் என நினைத்தார். கொடியங்குளம் சம்பவத்திற்கான பிராயசித்தம் என ஜெ. நினைத்ததை மாற்றி ஓ.பி.எஸ்.ஸை கொண்டுவந்தவர் சசிகலா. அதே ஓ.பி.எஸ்., பா.ஜ.க. பக்கம் சாய்ந்த பிறகு, அவருக்குப் பதில் எடப்பாடியைக் கொண்டுவந்தவரும் சசிகலாதான். எடப்பாடியின் பணிவு, கணக்கு காட்டுவதில் உள்ள நேர்மை இவைதான் எடப்பாடியை முதல்வராக்கியது. எடப்பாடியின் ப்ளஸ்பாயின்டுகள் சசிகலா வை எடப்பாடியை முதல்வராக அமர வைத்தது என்றாலும் அவரது மைனஸ் பாயின்டுகளும் சசிக்குத் தெரியும். தினகர னின் அடாவடியான செயல்பாடு களால் எடப்பாடி திசைமாறி பா.ஜ.க. பக்கம் திரும்பினார். சசிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

எடப்பாடியின் கண்ட்ரோல் பா.ஜ.க. கையிலிருக்கிறது என பா.ஜ.க.விடம் தனியாக டீலிங் பேசினார் சசி. ஆனால் பா.ஜ.க.வை மீறி சசி எதிர்ப்பில் தீவிரமானார் எடப்பாடி. "எனக்கென ஒரு தனி ராஜ்யம். நானே அதன் ராஜா'' என செயல்பட்ட எடப்பாடி, சசியும் பா.ஜ.க.வும் சேர்ந்து போட்ட ஒற்றுமை இணைப்பு முயற்சி களை முறியடித்து சசியை வெறுப்பேற்றினார். அதனால்தான் தேர்தல் முடியும்வரை அரசியல் துறவறம் என்றதோடு, "அ.தி.மு.வுக்கு ஆதரவு' எனவும் அறிவித்தார்.

d

தேர்தல் முடிவு வந்தது. அ.தி.மு.க. தோற்றது. பல சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு அ.ம.மு.க. காரணமாக அமைந்தது. எடப்பாடி, அ.தி.மு.க.வை கொங்கு வேளாளர் பகுதிக்கு மட்டுமான கட்சியாகக் குறுக்கி வெற்றிபெற்றார். இதுதான் சரியான சமயம் என சசி காய் நகர்த்த ஆரம்பித்தார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் வியூகத்தின் முதற்கட்டமாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸை வளைத்தார் சசி. சசியும் ஓ.பி.எஸ்.ஸும் நடத்திய பேச்சுவார்த்தைகள் அ.தி.மு.க.வினர் அனைவ ருக்கும் தெரியவந்தது. அதிர்ந்துபோனார் எடப்பாடி. பன்னீரின் சசி ஆதரவு அசைவு கள் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது என டெல்லிக்கு தூண்டில் போட்டார் எடப்பாடி. "நாங்கள் தேர்தலின்போது 60 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு கொடுங்கள் என கேட்டோம். அதில் சசி, தினகரன், விஜயகாந்த் ஆகியோரை சேர்த்துக் கொள்கிறோம். இரண்டு கூட்டணிக்குள் உடன்பாடு என ஒரு பார்முலாவையே முன்வைத்தோம். நீங்கள் பா.ஜ.க. சொல்வதைக் கேட்டிருந்தால் 30 தொகுதிகள் அதிகமாக வெற்றிபெற்றிருக்கலாம். தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்திருக் கலாம். அதை நீங்கள் செய்யவில்லை. இன்று பன்னீர், சசியுடன் பேசுவதாகச் சொல்கிறீர்கள். அவர் சரியான பாதையில்தான் செல்கிறார். இதில் நாங்கள் தலையிட ஒன்றுமில்லை'' என கைவிரித்துவிட்டனர் பா.ஜ.க.வினர்.

பன்னீரின் அசைவுகளை பா.ஜ.க. மூலம் தடுக்க முடியாது, மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் அரசை புறக்கணிக்கவும் முடியாது என்பதால் வாலை சுருட்டிக்கொண்டார் எடப்பாடி. எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டாலும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கட்சி கொறடா ஆகியோரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் முடங்கிப்போய்விட்டது அ.தி.மு.க. என்கிற கவலையைக்கூட எடப்பாடியால் வெளிப்படுத்த முடியவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என கூட்டாக அறிக்கை விட்டதெல்லாம் மாறி, எடப்பாடியை மீறி ஆளும் தி.மு.க. அரசிடம் கோரிக்கை வைப்பதும்... அது நிறைவேறியவுடன் நன்றி தெரிவிப்பதும் என பன்னீர் தனி ஆவர்த்தனம் செய்வதையும் எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. சி.வி.சண்முகம் போன்று தோற்றுப்போன அ.தி.மு.க.வினர் ஓ.பி.எஸ். அணியிலும், எம்.எல்.ஏ.க்களாக ஜெயித்தவர்கள் எடப்பாடி அணியிலும் அணிவகுக்க... ஓ.பி.எஸ். மூலமாக சசிகலாவின் காய் நகர்த்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக்கண்டு எடப்பாடி பயந்துபோயுள்ளார்'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். அனேகமாக கொரோனா காலத்தினால் தள்ளிப்போயுள் ளது தினகரனின் குடும்ப திருமணம். அது நடைபெறும் போது சசிகலா தனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி அறிவிப்பார். அதற்காக அ.தி.மு.க.வினரை திருமணத்திற்குத் திரட்ட சசிகலா உத்தரவிட் டுள்ளார். அதற்குள் அ.ம.மு.க.வை உடைக்க திட்டம் போடுகிறார் எடப்பாடி.

"கல்யாணம் முடிந்ததும் திருப்பம் வரும் என அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வுக்கு ஓடாதபடி தடுத்துவருகிறார் டி.டி.வி.தினகரன்' என்கிறது மன்னார்குடி வகையறா.

-ஆகாஷ்

_______________

தொண்டர்களிடம் பேசிய சசி

கட்சித் தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோவிலிருந்து சில...

அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகியிடம் சசிகலா பேசும் ஆடியோவில், "இப்பத்தான் தொண்டர்களெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். மனவருத்தத்தில் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. கட்டாயம் வர்றேன். விரைவில் இந்த கொரோனா தாக்கம் குறைந்ததும் எல்லோரையும் சந்திக்க நான் வர்றேன். சீக்கிரம் வந்துவிடுவேன் ஒன்றும் கவலைப்படாதீங்க. கண்டிப்பா கட்சியை சரிபண்ணிவிடலாம். தைரியமாக இருங்க எல்லோரும். கொரோனா முடிஞ்சதும் நான் வந் திருவேன். எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க. உங்க வீட்டிலேயும் ஜாக்கிரதையா இருங்க. கொரோனா ரொம்ப மோசமாக இருக்குப்பா. ஜாக்கிரதையா இருங்க. நிச்சயம் வந்துருவேன்பா.''

அ.ம.மு.க.வைச் சேர்ந்த கோபாலிடம் பேசும் சசிகலா, "கோபால் பேசுறீங்களா நாமக்கலில் இருந்து. நல்லா இருக்கேன். உங்க லெட்டர் வந்தது. கொரோனா என்பதால போஸ்ட் ஆபீஸ்ஸெல்லாம் இல்ல. லெட்டர் எழுதி அனுப்ப முடியல. அதனாலத்தான் போன்ல பேசுறேன். நான் நிச்சயம் விரைவில் வந்து எல்லோரையும் பார்க்கப்போறேன். ஒண்ணும் கவலைப்படாம இருங்க. தைரியமா இருங்க. எல்லாத்தையும் சரிபண்ணிடலாம். கவலைப்படாம இருங்க. தலைவர், அம்மா எப்படி கட்சியை வச்சியிருந்தாங்களோ, அந்த அளவுக்கு நான் கொண்டுபோயிடுவேன். ஒண்ணும் கவலைப்படாதீங்க.''

கோபால்: எடப்பாடி பழனிசாமியால எனக்கு ரத்தக் கண்ணீரே வருதும்மா..

சசிகலா: அவுங்க செஞ்ச தப்புக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க. எல்லாத்துக்கும் ஒரு நல்ல முடிவு வரும். கவலைப்படாதீங்க, தைரியமா இருங்க.

கோபால்: கண்டிப்பா உங்கள நம்பித்தாம்மா இருக்கோம்..

சசிகலா: துணிச்சலோட இருங்க. நான் விரைவில் வந்து நல்லது பண்ணுவேன் நிச்சயம்.

nkn090621
இதையும் படியுங்கள்
Subscribe