"ஹலோ தலைவரே, மோடி அரசு தனது அதிரடி முகத்தைக் காட்டப்போவதாக டெல்லியில் பரபரப்பு எழுந்திருக்கிறது.''”
"ஆமாம்பா, ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்கும் பா.ஜ.க., சிறுபான்மைக்கு எதிரான தனது அதிரடி மசோதாக்களை நிறைவேற்றத் தயாராகுதே?''”
"உண்மைதாங்க தலைவரே,டெல்லி ராஜ்ய சபாவில் பா.ஜ.க.வின் பலம் உயர்ந்துள்ளது. ராஜ்யசபாவில் மொத்தம் 234 இடங்கள் உள்ளன. இதில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 113 இடங்களைப் பெற்றிருக்கின்றன. சமீபத்தில், புதிதாக 6 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம், பா.ஜ.க. கூட்டணியின் பலம் ராஜ்யசபா வில் 119 ஆக உயர்ந்திருக்கிறது. பெரும்பான்மைக்கு 117 இடங்கள் போதுமானது. தற்போது 2 எம்.பி.க்கள் பா.ஜ.க.விடம் கூடுதலாகவே இருக்கிறார்கள், இத்தனை நாளாய் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாமல் பல மசோதாக்களை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற முடியாமல் திணறிவந்தது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவும் இதில் ஒன்று. தற்போது, மெஜாரிட்டி கிடைத்திருப்பதால் அடுத்த கூட்டத்தொடரில், சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் விரும்பாத இந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு தயாராகி வருகிறது. இதேபோன்று, மாநில அரசுகளுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான மசோதாக்களை எல்லாம் நிறைவேற்றலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறதாம் மோடியின் பா.ஜ.க. அரசு.''”
"லண்டன் சென்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பாதியிலேயே தமிழகம் திரும்பிவிடலாமா? என்கிற அளவுக்கு யோசிக்கிறாராமே?''”
"அதுக்குக் காரணம் இருக்குங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர் இல்லை என்கிற குறையே தெரியாத அளவுக்கு வேகமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். மாநிலத் தலைவரின் சுயநல அரசியலால், கட்சியின் சீனியர்கள் தொடங்கி, நீண்ட காலமாக இருக்கும் தொண்டர்கள் வரை பலரும் ஒதுங்கியே இருந்தனர். அவரால் ஓரங் கட்டப்பட்ட பலரும் தற்போது ராஜா பின்னால் அணி திரள்கிறார்கள். மாநிலத் தலைவருக்கு நேர்மாறாக, ஹெச்.ராஜாவை அப்பாயின்ட்மெண்ட் இல்லாமலே பலரும் சந்தித்து வருகிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும் தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களிடம் கட்சிப் பணிகள் குறித்து ராஜா விவாதிக்கிறார். அவர்கள் சொல் லும் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்டு தீர்த்து வைக்கிறார். இப்படிப் பட்ட சூழலில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஒதுங்கியிருக்கும் கட்சிக் காரர்களையும் கூட அழைத்து அவர் களின் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கச் செய்துவருகிறாராம் ராஜா. இவரது இந்த அதிரடி பாணியை அறிந்த மாநிலத் தலை வர், லண்டன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தமிழகத்துக்கு வந்து விடமாலா என்றுகூட யோசிக்கிறாராம்.''”
"தமிழக பா.ஜ.க.வில் சலசலப்பும் பர பரப்பும் இருந்துகொண்டே இருக்கிறதே?''
"பா.ஜ.க. தமிழிசை, தனக்கு எந்தவித கட்சிப்பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்கிற ஆதங்கத்தில் இருந்தார். அவருக்கு தென்சென்னை தொகுதிக்கான பொறுப் பையும், மாவட்டங்களுக்கான மேற்பார் வைப் பொறுப்பையும் தற்போது கொடுத்து அவரது ஆதங்கத்தைத் துடைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. இதற் கிடையே தமிழக பா.ஜ.க. கையில் எடுத்திருக்கும் உறுப்பினர் சேர்க்கையில் கொஞ்சமும் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறாராம் அமித்ஷா. அதேபோல் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறதாம். இந்தச்சூழலில் அமர்பிரசாத் ரெட்டிக்கும், கார்த்திக் கோபிநாத் துக்கும் இடையே இளைஞரணிச் செயலாளர் யார்? என்கிற யுத்தம் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்த நிலையில் ஒன்றிய இணையமைச்சர் முருகனும், வானதி சீனிவாசனும் கட்சி அலுவலகமான கமலாலயத்துக்கே வருவதில்லை என்கிற புகாரும் எழுந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஹெச்.ராஜா தரப்பு எப்படி சரிசெய்யப்போகிறது என்கிறார்கள் பா.ஜ.க. சீனியர்கள்.''”
"தங்கள் மது ஒழிப்பு மாநாட்டு அழைப்பு மூலம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறாரே திருமாவளவன்?''”
"தாங்கள் நடத்த இருக்கும் கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சி வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி சிறுத்தைகள் திருமாவளவன், எடப்பாடி தரப்பிற்கு புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார். இதையொட்டி தங்கள் கூட்டணிக்கு திருமா வரப்போகிறார் என்று அ.தி.மு.க. தரப்பில் டாக்கும் எழுந்திருக்கிறது. ஆனால் திருமாவோ, எடப்பாடி உள்ளிட்டவர்கள் தங்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று போகிற போக்கில்தான் சொல்லியிருக்கிறார். அதற்கும் நிறைய விளக்கமும் கொடுத்திருக்கிறார். இருந்தும் சிறுத்தைகளைத் தங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று எடப்பாடித் தரப்பு பெரும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறது. இவர்கள் அதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயன்றபோதும் திருமா கொஞ்சமும் பிடிகொடுக்கவில்லையாம். தி.மு.க. தரப்போ, தாங்கள் சட்டமன்றத் தேர்தலில் பெறவிருக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்காகத்தான் திருமா இப்படி மாநாட்டுக்கு பொதுஅழைப்பு விடுத்திருக்கிறார் என்று கருதுகிறதாம். அதேசமயம், இது ஒரு பரபரப்பான கவனஈர்ப்பு சமாச்சாரம்தான். மற்றபடி திருமாவுக்கு கூட்டணி மாறும் உத்தேசமெல்லாம் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.''”
"அ.தி.மு.க.வில் தனது அரசியல் வாரிசை கொண்டுவரும் முடிவுக்கு எடப்பாடி வந்திருக் கிறாராமே?''”
"எடப்பாடி, தனது அரசியல் வாரிசாக தனது மகன் மிதுனை அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். தனக்குப் பிறகு அ.தி.மு.க.வின் பெரும் சொத்துக்கள் வேறு ஒருவர் கைக்குக் போவதில் அவருக்கு விருப்பமில்லையாம். இந்த மிதுனும் டெல்லியில் இருக்கும் அரசியல் வியூக அமைப்பாளர் சுனிலும் ஒன்றாகவே இயங்குகிறார்களாம். இந்தக் கூட்டணிதான் எடப்பாடியை இயக்குகிறது என்று சசிகலா குற்றம்சாட்ட ஆரம்பித்திருக்கிறார். வருகிற நவம்பருக்குள் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சசிகலா எடப்பாடிக்கு கெடு விதித்திருக்கிறாராம். அது நடக்காவிட்டால் அ.தி.மு.க. சீனியர்கள் அனைவரோடும் சேர்ந்து எடப்பாடியைத் தூக்கி எறிவோம். அ.தி.மு.க.வைக் கைப்பற்றுவோம் என்றும் சசிகலா தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் சூளுரைத்து வருகிறாராம். இதெல்லாம் என்னை ஒன்றும் செய்யமுடியாது. கட்சி இப்போது முழுக்க முழுக்க என் கையில்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி, மிதுனை தன் அரசியல் வாரிசாகக் கொண்டுவரும் போது, அ.தி.மு.க.வில் மிகப்பெரிய ஒரு பிரளயம் வெடிக்கும் என்கிறார்கள்.''”
"நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் அ.தி. மு.கவைச் சேர்ந்த செஞ்சியார் சேரப்போவதாக செய்திகள் அடிபடுகிறதே?''”
"தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் தலைமையால் புறக்கணிக் கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தங்கள் கட்சிக்கு அழைத்து வருமாறு, நடிகர் விஜய் தனது தரப்புக்கு உத்தரவிட்டாராம். இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனை அவர் தரப்பு அணுகியிருக்கிறது. செஞ்சியாரோ, ஆகட்டும் பார்க்கலாம் என சொன்னாராம். இந்தத் தகவல் பரவிய நிலையில், அ.தி.மு.க. தரப்பு அதிர்ச்சியடைந்தது. உடனே எடப்பாடியும். செஞ்சியார் தொடர்பா உலவும் செய்திகள் வெறும் வதந்திதான் என மறுத்தார். எனினும் செஞ்சியார் உட்பட கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தங்கள் கட்சி சீனியர்கள் பலரையும் தொடர்புகொண்டு சமா தானப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில், எடப்பாடி மீது அதிருப்தி யிலுள்ள செஞ்சியார் உள்ளிட்ட அ.தி.மு.க. சீனியர் களைத் தொடர்புகொண்ட ஓ.பி.எஸ்., "அ.தி.மு.க.வில் இருந்தால் எடப்பாடி உங்களை வளரவிடவே மாட்டார். நீங்கள் விஜய் கட்சிக்கு செல்ல நினைத்தால் செல்லுங்கள். அது நல்ல முடிவு’ என்று கூர்சீவி வருகிறாராம்.''”
"அமைச்சர் ஒருவரின் கார் ஓட்டுனர் ஒரு இளம்பெண்ணை சீரழித்துவிட்டதாக பரபர தகவல் ஒன்று கிளம்பியிருக்கிறதே?''”
"அந்த விவகாரம் பற்றியும் சொல்றேங்க தலைவரே, லால்குடி தாலுகா புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரும், லால்குடி தாலுகா சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரும் காதலித்து வந்தார்களாம். இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்தச்சூழலில் அந்த மாணவியோ, குளிர்பானத் தில் மயக்க மருந்து கொடுத்து, தன்னை சிலம்பரசன் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டினார் என்றும், அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி, பலமுறை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் காவல்துறையில் புகார் கொடுக்க... கடந்த 4ஆம் தேதி லால்குடி போலீஸ் டீம், அந்த சிலம்பரசனைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, மேற்படி சிலம்பரசன் கடந்த மூன்றரை மாத காலமாக லால்குடி தி.மு.க. மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான சத்தியசீலனிடம் ஓட்டுனராக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் பா.ஜ.வை.ச் சேர்ந்த சிலர், அமைச்சர் அன்பில் மகேஷின் ஓட்டுநர் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியதாக பொய்த்தகவலை ஊடகங்களில் பரப்பி பரபரப்பை ஏற்படுத்த, இதற்கு அமைச்சர் தரப்பு மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறது.''”
"தமிழக காவல்துறையில் பனிப்போர் நடந்துவருகிறதே?''”
"காவல்துறையில் வட இந்திய அதிகாரி களுக்கும் தமிழக அதிகாரிகளுக்கும் இடையில் ஒருவித பனிப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக, வட இந்திய அதிகாரிகளான டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை கமிஷனராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், முன்னாள் மதுவிலக்குத் துறை ஏ.டி.ஜி.பி.யான மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் ஒரு அணியாக இருந்துவருகிறார்கள். இந்த டீம் சென்னை நகர கமிஷனராக இருக்கும் அருண், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேல் ஆகியோரை டார்கெட்டாக வைத்து, அவர் களுக்கு எதிர்த்திசையில் காய்களை நகர்த்திவரு கிறதாம். அதேசமயம், தமிழகத்தில் அண்மைக் காலமாக பகீர் க்ரைம்கள் நிறைய அரங்கேறி வருகின்றன. இதற்குக் காரணம், டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் திறமையின்மைதான் என்கிறார்கள். அதோடு டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை அவர் சுதந்திரமாக செயல்பட விடவில்லையாம். தமிழகத் தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி அறிக்கை கொடுத்ததற்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால், க்ரைம்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. கமிஷனர் அருண் கட்டுப்பாட்டில் உள்ள சென்னையிலோ, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின் எந்தக் கொலை யும் நடக்கவில்லை. அப்படி இருந்தும் வடஇந்திய அதிகாரிகள், தமிழ் அதிகாரிகளை டார்கெட் செய்து புகார் கிளப்பி வருகிறார்களாம்.''”
"நானும் ஒரு சுவாரசியமான விஷயம் சொல்றேன் தலைவரே! வடமாவட்டத்துல உள்ள ஒரு தொகுதியோட மக்கள் பிரதிநிதி அவர். ஆளும்கட்சியிலும் மாவட்டத்திலும் முக்கிய கட்சிப் பதவியில இருக்கார். அவருக்கு சொந்தமா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. திருடுபோகாமல் இருக்கவும், அங்கு யார் வந்துபோகிறார்கள் என கண்காணிக்கவும் அவர் சி.சி.டி.வி. கேமரா வைச்சார். அங்க நடக்கிறதை வீட்டில இருக்கிற மொபைல் போன்லயே பார்க்கலாமாம். சில வாரங்களுக்கு முன்னால அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அழகிய பெண்மணி ஒருவரை மக்கள் பிரதிநிதி அழைத்துச் செல்லும் காட்சியை அவ ரின் மனைவி மொபைலில் பார்த்து கோபமாகி யிருக்கிறார். காரியம் முடிஞ்சு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல வீட்டுக்கு வந்தவரை, கதவைச் சாத்திட்டு கல்யாண வயசுல வாரிசுங்க இருக்கறப்ப இன்னொருத்தி கேட்குதா எனக்கேட்டு ரவுண்ட் கட்டி வெளுத்திருக்கிறார் தாலி கட்டிக்கொண்ட தாரம். கேமரா வெச்சிட்டு கேர்லெஸ்ஸா இருந்து மாட்டிக்கிட்ட வயித்தெரிச் சல்ல மக்கள் பிரதிநிதி இருக்க, உட்கட்சி எதிரி களோ அந்த வீடியோ கிடைக்குமா என அலைந்து கொண்டிருக்கிறார்களாம்.''