உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டீச்சர்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு பணிகளைச் செய்துவருகின்ற சூழ்நிலை யில், பணி நியமனத்திற்கு பல லட்சங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவரும் விஷயம் வெளியில் கசிந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜி.ஓ. 56 கொண்டுவந்து, அதில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர் களுக்கு மட்டுமே இந்த பணிக்கான வாய்ப்பு என்பதைப்போலவும், பி.எச்.டி. படிப்புக்கு 9 மதிப்பெண், நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண், பணி அனுபவத்திற்கு 10 மதிப்பெண் என மொத்தமாக 34 மதிப்பெண்களை முன்னிறுத்தி ஏற்கனவே கல்லூரியில் பணிபுரிகின்றவர்களிடம் 25 லட்சம் வசூல் வேட்டையில் இறங்கியது முன்னாள் அமைச்சர் அன்பழகன் நெட்வொர்க். இதில் ஒட்டுமொத்தமாக 700 கோடிகளுக்கு மேலாக வசூல்செய்ததாகப் பேச்செழுந்தது. அப்போது நக்கீரனில் “"பட்டியல் போட்டு பணம் பறித்த அமைச்சர் பினாமி!'” என செய்தி வெளியிட்
உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டீச்சர்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு பணிகளைச் செய்துவருகின்ற சூழ்நிலை யில், பணி நியமனத்திற்கு பல லட்சங்களில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவரும் விஷயம் வெளியில் கசிந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜி.ஓ. 56 கொண்டுவந்து, அதில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர் களுக்கு மட்டுமே இந்த பணிக்கான வாய்ப்பு என்பதைப்போலவும், பி.எச்.டி. படிப்புக்கு 9 மதிப்பெண், நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண், பணி அனுபவத்திற்கு 10 மதிப்பெண் என மொத்தமாக 34 மதிப்பெண்களை முன்னிறுத்தி ஏற்கனவே கல்லூரியில் பணிபுரிகின்றவர்களிடம் 25 லட்சம் வசூல் வேட்டையில் இறங்கியது முன்னாள் அமைச்சர் அன்பழகன் நெட்வொர்க். இதில் ஒட்டுமொத்தமாக 700 கோடிகளுக்கு மேலாக வசூல்செய்ததாகப் பேச்செழுந்தது. அப்போது நக்கீரனில் “"பட்டியல் போட்டு பணம் பறித்த அமைச்சர் பினாமி!'” என செய்தி வெளியிட்டோம். 1,300 பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்புவரை சென்றநிலையில், அ.தி.மு.க. ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு தி.மு.க. ஆட்சியமைத்தது. ஆட்சிக்கு வந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த இந்த 56 ஜி.ஓ. மூலமாக அதிகப்படியான ஊழல் நடந்திருப்பதை உணர்ந்த தி.மு.க. அரசு, உடனடியாக அந்த ஜி.ஓ.வை நீக்கி, டி.ஆர்.பி. மூலமாக தேர்வு நடத்துவதற்குத் திட்டமிட்டது. அதன்படி பழைய காலியிடமான 1,300, மற்றும் தற்போதைய காலியிடம் 2,700 என இரண்டையும் சேர்த்து 4,000 காலிப் பணியிடத்திற்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அந்த பழைய 56 ஜி.ஓ.வை முன்னிறுத்தி சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று நின்றுபோனது, அந்த பழைய நெட்வொர்க், நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடர்ந்து, இந்த தேர்வினை நிறுத்திவைத்தது. இந்த சூழ்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சராக செழியன் வந்தவுடன், இந்த பிரச்சனையால் கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் படும் சிரமத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக வழக்கிலுள்ள 1,300 இடங்களை விடுத்து, மீதமுள்ள 2,708 காலிப்பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கி டி.ஆர்.பி. நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி தமிழகத்திலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி அன்று அறிவிப்பினை வெளியிட்டது. அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பம் ஆன்லைன் மூலமாகப் பெறப்பட்டு, அதற்கான தேர்வு வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி 195 மையங்களில் நடைபெற உள்ளதாக அறிவித்திருந்தது டி.ஆர்.பி. இந்த சூழ்நிலையில்தான் திருவண்ணாமலை மாவட் டத்திலுள்ள தேர்வு மையங்களுக்கு, எந்த அறைக்கு யார் யார் தேர்வுக் கண்காணிப்பாளர்களாக வருவார்கள் என்கிற முழு விவரமும், சம் பந்தப்பட்ட கண்காணிப்பாளர்களின் தொடர்பு எண்ணோடு வெளியில் கசிந்துள்ளது. டி.ஆர்.பி. தயார்செய்து, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்ட இந்த தேர்வு அலு வலர்களின் லிஸ்ட் எப்படி வெளியில் கசிந்தது, இதனால் தேர்வின் நம்பகத்தன்மை இழந்து ஊழலுக்கு வித்திட வாய்ப்புள்ளது என குரல்கள் எழுந்தன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/teacherexam1-2025-12-26-11-03-40.jpg)
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களிடம், பணி வாங்கிக்கொடுப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு நபருக்கு 40 லட்சம் வரை வசூல் வேட்டையில், பழைய அ.தி.மு.க. அமைச்சர் தலைமையிலான நெட்வொர்க்கே களமிறங்கியுள்ளதாம். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 40 லட்சமும், ஏற்கனவே 25 லட்சம் கொடுத்து பணிக்காகக் காத்துக்கிடக்கும் நபர்கள், மீதமுள்ள 15 லட்சம் கொடுத்தால் போதும் பணி நிச்சயம் எனவும் அடித்துக் கூறியுள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டு மின்றி தமிழகம் முழுவதும் இதே மாடலில் லிஸ்ட்டை கசியவிட்டுள்ளனர். இப்படி லிஸ்ட்டைக் கசியவிடுவதன் மூலமாக எப்படி தேர்வில் தேர்ச்சி பெறமுடியும்? என்ற கேள்விக்கு, முதலில் இதைக் கசியவிட்டது யாரென்ற கேள்விக்கு விடை தெரிந்தாலே, மற்ற விஷயங்கள் தெரியும்.
இந்த லிஸ்ட்டை ஒன்று கல்வி அலுவலர் வெளியில் விட்டிருக்கவேண்டும் இல்லையென்றால் டி.ஆர்.பி போர்டில் உள்ளவர்கள் யாராவது விட்டிருக்கவேண்டும். அந்த வகையில் டி.ஆர்.பி. மெம்பரான தமிழ்க் கடவுள் பெயரைக் கொண்டவர்தான் இந்த லிஸ்ட்டை எடுத்து இந்த நபர்களில் யார் பணத்தைக் கொடுத்தால் அவருக்குச் செவிசாய்ப்பாரோ அவர்களைத் தேர்வுசெய்து கசியவிட்டிருக்கிறார். அந்த நபர்களுக்கு ஒரு தொகையை வழங்கி, அந்த நபர்கள் எந்த அறைக்கு பணி மேற்பார்வைக்குச் செல்கிறார்களோ, அந்த அறையில் பணம் கொடுத்தவர்களைப் போடவைத்து அவர்களை தேர்ச்சி பெறவைப்பது திட்டமாம். 13 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் போடப் பட்டிருக்கிறது
லோகத்துக்கெல்லாம் அதிபதி என பொருள்வரும் கூடலூர் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியரும் இந்த வசூல் லிஸ்டில் இருக்கிறாராம். அ.தி.மு.க. ஆட்சியில் செயல்பட்ட அதே நெட்வொர்க்தான் தற்போதும் புகுந்து விளையாடியுள்ளது என பேராசிரியர்களே புலம்பித்தள்ளுகின்றனர்.
என்ன செய்யப்போகிறது அரசு?
-சே
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us