ராங்கால் எடப்பாடிக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! -வேகமெடுக்கும் விறுவிறு பிளான்கள்! ஆரம்பமானது வேட்டை! அலறும் ரவுடிகள்! ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக பெண் பிரமுகர்!

ss

"ஹலோ தலைவரே, 2026 சட்ட மன்றத் தேர்தலை மையப்படுத்தி இப்போதே தமிழக அரசியலில் காய் நகர்த்தல்கள் ஆரம்பிச்சிருக்கு''”

"ஆமாம்பா, சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் எடப்பாடியுடன் அமித்ஷா பேசியதாகத் தகவல் வருதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே அ.தி.மு.க. -பா.ஜ.க.வுக்கு இடையிலான கூட்டணியை மலரவைக்க எடப்பாடியுடன் பிரதமர் மோடி பேசிவந்த நிலையில், தற்போது கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடியுடன் பேசினாராம். அப்போது "2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த ஒரு மெஹா கூட்டணியை உருவாக்க முயலுங்கள். இப்போது எங்களுடன் இருக்கும் பா.ம.க., த.மா.கா. ஆகியவற்றோடு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் நம் பக்கம் இழுக்க முயலுங்கள். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை யும், விடுதலைச் சிறுத்தைகளையும், முடிந்தால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் நம் கூட்டணிக்குக் கொண்டுவந்தால், நீங்கள் தான் முதல்வர் நாற்காலியில் அமர்வீர்கள்' என்று சொல்லி, அவர்களைக் கொண்டு வரும் அசைன்மெண்டையும் அமித்ஷா கொடுத்தாராம்.''”

"இதெல்லாம் நடக்குற கதையா?''”

"நீங்க கேட்கும் இதே கேள்வியைத்தான் அமித்ஷாவிடம் எடப்பாடியும் கேட்டாராம்.''

rr

"குறிப்பாக பா.ம.க. இருக்கும் திசையிலேயே, விடுதலைச் சிறுத்தைகள் இருக்க மாட்டார்களே, அப்படியிருக்க எப்படி இந்தக் கூட்டணி சாத்தியமாகும் என்றாராம் எடப்பாடி. அதற்கு, அமித்ஷா, அரசியல் ரீதியாக தி.மு.க.வை எதிர்க்கும் அளவுக்கு நெருக்கடி களை உருவாக்கினால், எல்லாம் நடக்கும். அரசியலில் நடக்காதது என்று எதுவும் இல்லை என்று எடப்பாடிக்கு உபதேசம் செய்தாராம். அதற்கு எடப்பாடி, முதல்ல உங்க மாநில நிர்வாகியைத் தூக்குங்கள். அப்போதுதான் எங்கள் தொண்டர்கள் உங்களை ஏற்பார்கள் என்று சொல்ல, கொஞ்சம் பொறுத்திருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் என்றாராம் அமித்ஷா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க.

"ஹலோ தலைவரே, 2026 சட்ட மன்றத் தேர்தலை மையப்படுத்தி இப்போதே தமிழக அரசியலில் காய் நகர்த்தல்கள் ஆரம்பிச்சிருக்கு''”

"ஆமாம்பா, சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் எடப்பாடியுடன் அமித்ஷா பேசியதாகத் தகவல் வருதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே அ.தி.மு.க. -பா.ஜ.க.வுக்கு இடையிலான கூட்டணியை மலரவைக்க எடப்பாடியுடன் பிரதமர் மோடி பேசிவந்த நிலையில், தற்போது கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடியுடன் பேசினாராம். அப்போது "2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த ஒரு மெஹா கூட்டணியை உருவாக்க முயலுங்கள். இப்போது எங்களுடன் இருக்கும் பா.ம.க., த.மா.கா. ஆகியவற்றோடு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும் நம் பக்கம் இழுக்க முயலுங்கள். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை யும், விடுதலைச் சிறுத்தைகளையும், முடிந்தால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் நம் கூட்டணிக்குக் கொண்டுவந்தால், நீங்கள் தான் முதல்வர் நாற்காலியில் அமர்வீர்கள்' என்று சொல்லி, அவர்களைக் கொண்டு வரும் அசைன்மெண்டையும் அமித்ஷா கொடுத்தாராம்.''”

"இதெல்லாம் நடக்குற கதையா?''”

"நீங்க கேட்கும் இதே கேள்வியைத்தான் அமித்ஷாவிடம் எடப்பாடியும் கேட்டாராம்.''

rr

"குறிப்பாக பா.ம.க. இருக்கும் திசையிலேயே, விடுதலைச் சிறுத்தைகள் இருக்க மாட்டார்களே, அப்படியிருக்க எப்படி இந்தக் கூட்டணி சாத்தியமாகும் என்றாராம் எடப்பாடி. அதற்கு, அமித்ஷா, அரசியல் ரீதியாக தி.மு.க.வை எதிர்க்கும் அளவுக்கு நெருக்கடி களை உருவாக்கினால், எல்லாம் நடக்கும். அரசியலில் நடக்காதது என்று எதுவும் இல்லை என்று எடப்பாடிக்கு உபதேசம் செய்தாராம். அதற்கு எடப்பாடி, முதல்ல உங்க மாநில நிர்வாகியைத் தூக்குங்கள். அப்போதுதான் எங்கள் தொண்டர்கள் உங்களை ஏற்பார்கள் என்று சொல்ல, கொஞ்சம் பொறுத்திருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் என்றாராம் அமித்ஷா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்குக் கொண்டு வரவேண்டும் என்று மாஜி மந்திரி வேலுமணி வலியுறுத்தியதை யும், சீமான் எம்.ஜி.ஆரையும் ஜெ.வையும் நக்கலடித்து வருவதால் அது சாத்தியப் படாமல் போனதையும் அப்போது அமித்ஷாவிடம் எடப்பாடி விவரித்ததாகவும் சொல்கிறார்கள்.''”

"சரிப்பா, தமிழக பா.ஜ.க.வின் அந்த மாநில நிர்வாகி, லண்டனில் வீடு வாங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் விறுவிறுப்பா உலவுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, விரைவில் லண்டன் செல்லவிருக்கும் அந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி, முன்னதாகவே தனது வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லண்டனில் 46 கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். மேற்படி நிர்வாகியால் துபாயில் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கும் பணத்தில் இருந்துதான் அந்த வீடு வாங்கப்பட்டிருக்கிறதாம். மீண்டும் தமிழகம் திரும்பினால் அரசியலில் பெரிய அளவுக்கு எதிர்காலம் இருக்காது என்றும், அதோடு பல்வேறு வழக்குச் சிக்கல்களில் சிக்கவேண்டிய நிலைவரும் என்றும் அவர் கருதுவதால், லண்டனிலேயே செட்டில் ஆகிவிடும் திட்டமும் அவரிடம் இருக்கிறதாம். இதை அவரது நெருங்கிய நண்பர்கள் தரப்பே தமுக்கடித்துக்கொண்டு இருக்கிறது.''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தைத் தொடர்ந்து காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்கள் ஆரம்பித்துவிட்டதே?''”

dd

"ஆமாங்க தலைவரே, அதிரடி ஆக்ஷனுக்கு காவல் துறை தயாராவது குறித்தெல்லாம் ’முதல்வர் உத்தரவு; ஹிட் லிஸ்ட் தயாரிக்கும் போலீஸ்; "என்கவுன்டர் பயத்தில் ரௌடிகள்!'’ என்ற தலைப்பில், நம் நக்கீரனில் அட்டைப்பட செய்தி வெளிவந்தது. அதுபோலவே முதலாவ தாக புதுக்கோட்டையில், பிரபல ரவுடி துரை என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார். தற் போதைய சென்னை கமிஷனராக வந்திருக்கும் அருண், ஏற்கனவே அந்த ரவுடியைக் குறிவைத் திருந்தார் என்கிறார்கள். அவரைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கைதான 11 பேரில் ஒருவரான ரவுடி திருவேங்கடமும் என்கவுன்டருக்கு ஆளாகி இருக்கிறார். காவல்துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவில், தமிழகம் தழுவிய அளவில் மொத்தம் 546 தனிப்படைகள் இருக்கின்றன. இவற்றுக்கு உரிய உத்தரவுகள், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் மூலம் பிறப்பிக்கப் படுகிறதாம். இந்தத் தனிப்படைகள் அத்தனை டேஞ்சரஸ் கிரிமினல்களையும் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றனவாம். அதே நேரம் என்கவுன்டர் தொடர்பான சர்ச்சை களும் வெடித்துவருகின்றன.''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில், பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரின் பெயரும் அடிபடுகிறதே?''”

"சில மாதங்களுக்கு முன் சென்னை மெரினாவில் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் மனைவி அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சொல்லியிருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த அஞ்சலையின் பின் னணிகள் குறித்து உளவுத்துறை போலீசார் ஆராய்ந்து வருகிறார்களாம். முதல்கட்டமாகக் கிடைத்த தகவலின்படி, அஞ்சலை என்பவர், ஆற்காடு சுரேஷின் மனைவி இல்லை; துணைவி யாம். இவர், வட சென்னை மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவராக இருந்துவருகிறாராம்.

f

இவரது பின்னணிகள் எல்லாம் ’அடேங்கப்பா’ ரகம் என்கிறார்கள் மாநில உளவுத்துறையினர். விரைவில் பா.ஜ.க. ரௌடிகள் குறித்த பட்டியலை காவல்துறையினரே அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளனராம்.''”

"நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரியே காங்கிரஸ் கட்சியின் சீனியரான திருநாவுக்கரசர் தரப்பு, ஒரு இலக்கிய அமைப்பைத் தொடங்கியிருக்கே?''”

r

"ஆமாங்க தலைவரே, திருநாவுக்கரசரின் பிறந்தநாள் 13ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்ட பத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டிருக்கு. அந்த நிகழ்ச்சியிலேயே ’"முத்தமிழ்க் களஞ்சியம்'’ என்கிற பெயரில் ஒரு கலை இலக்கியப் பேரவையை, அவரது சம்பந்தி விஜயகுமார் தொடங்கியிருக்கார். இலக்கிய அமைப்பின் மூலம் முக்குலத் தோர் சமூகத்தினரை ஒன்றி ணைக்க வேண்டும் என்பது தான் இவங்க தரப்பின் நோக்கமாம். இதை தமிழகம் தழுவிய அளவில் நடத்தப் போறாங்களாம். இதற்கான நிர்வாகிகளையும் தேர்ந் தெடுத்து அறிவிக்கப்போற தாவும் பேச்சு அடிபடுது.''”

"இந்த இலக்கிய அமைப்பே, அரசியல் நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டிருக்குன்னு சொல்றாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த முத்தமிழ் களஞ்சியத்தை விரைவில் வலிமைப்படுத்தி 2026 தேர்தல் சமயத்தில், அதன் முக்குலத்தோர் சார்ந்த அரசியல் நிலைப்பாட்டை திருநாவுக் கரசர் அறிவிப்பாராம். குறிப்பாக சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக்கொள்ள மறுத்துவருவ தால், முக்குலத்தோர் சமூகத்தினர் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் இருக்காங்களாம். அதனால் அப்படிப்பட்டவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, தேர்தல் நேரத்தில் அ.தி. மு.க.வில் இணைய முனைவது, அதுக்கு வாய்ப்பில்லை என்றானால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது என்பதுதான் திருநாவுக் கரசரின் திட்டமாம். இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்க்க வருகிற ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டம் வைத்திருக்கிறாராம்.''”

"என்னப்பா மறுபடியும் தமிழக அரசின் செய்தித்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"தமிழக செய்தித்துறையில் ஒரு இணை இயக்குநர், தன்னை அமைச்சர் எம்.ஆர்.கே.வின் உறவினர் என சொல்லிக்கொண்டு, தன் பங்குக்கு ஆட்டம் போடுகிறாராம். இவரை நம்பி பலரும் கோரிக்கை மனுக்களோடு வந்து சந்திக்கிறார்களாம். இவர் மூலம் செல்லும் இந்த மனுக்களை அமைச்சர்களோ அல்லது அவர்களது பி.ஏ.க்களோ கவனிக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக ஏடாகூடச் செய்திகளை உருவாக்கிப் பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். இவர் விவகாரம் மேலிடத்துக்கும் போயிருக்கிறதாம்.”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தன்னைப் பற்றி மீடியாக்கள் மத்தியில் கடுமையாகக் குற்றம்சாட்டிய மாநில பா.ஜ.க. நிர்வாகி பற்றி தயாரிக்கப்பட்ட புகார் மனுவோடு, செல்வப்பெருந்தகை கடந்த 11ஆம் தேதி இரவு சென்னை கமிஷனர் அலுவலகம் சென்றாராம். அவரது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனர் அருணோ, "சாதிய வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நீங்கள் கொடுத்திருக்கும் புகாரில், அதற்கு ஏதுவான ஷரத்துகள் இல்லை. அதனால் புகாரை ஏற்க முடியாது' என்று சொல்லிவிட்டாராம். இதனால் அங்கிருந்து வாட்டத்தோடு கிளம்பிய செல்வப் பெருந்தகை, மீடியாக்களின் பார்வையில் பட்டுவிடாமல் இருக்க பிரதான வழியைத் தவிர்த்துவிட்டு, அங்கிருந்து மாற்றுப் பாதையில் வெளியேறிச் சென்றாராம்.''

__________

இடைத்தேர்தல்! வெற்றிக் கொண்டாட்டத்தில் தி.மு.க.!

rr

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பதிவான வாக்குகள் 1,95,495. இதில் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவாலயத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார். "தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்த இடைக்கால பரிசு இந்த வெற்றி' என்கிறார்கள் தி.மு.க. அமைச்சர்கள்.

அன்புமணி ராமதாஸோ, “"பணம், பொருள், பரிசு, கொடுத்து அதிகாரத்தை பயன்படுத்தி பெற்ற வெற்றி. இந்தமுறை அ.தி.மு.க.வினருக்கு, தி.மு.க.வினர் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளனர். இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை. இத்தனைக்கும் பிறகும் இவ்வளவு வாக்குகள் பெற்ற பா.ம.க.வுக்குதான் உண்மையான வெற்றி' என்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, “"இடைத்தேர்தல் வெற்றியை தி.மு.க. ஏலம் எடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவில்லை. இந்தத் தோல்வி மக்களுக்குத்தான்'’என்கிறார். "20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின், இப்படி பலரும் விக்கிரவாண்டி தொகுதியில் வலம்வந்ததோடு, வாக்காளர்களை வளைப்பதற்கு அனைத்து வழிமுறைகளையும் கையாண்டார்கள். வரும் 2026 பொதுத்தேர்தலில் கூட்டணிகள் அமைவதைப் பொறுத்து இந்த வெற்றியில் மாற்றம் ஏற்படலாம்' என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

-எஸ்.பி.எஸ்.

nkn170724
இதையும் படியுங்கள்
Subscribe