ராங்கால் சட்டமன்றம்! கவர்னர் வருவாரா? காணாமல் போன மனிதர்கள் கண்ணீர் வெள்ளத்தில் தென் தமிழகம்!

ss

""ஹலோ தலைவரே, ஜனவரி முதல் வாரத்திலேயே சட்டப் பேரவையைக் கூட்டுவதற் கான ஏற்பாடுகள் நடக்குது.''’’

""ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில், தமிழக சட்டப்பேரவை கூடுவது வழக்கம் என்றாலும், இந்தமுறை எதிர்பார்ப்பு அதிகமா இருக்குதே?''’’

""உண்மைதாங்க தலைவரே. ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப் பேரவையின் அவ் வாண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கவர்னரின் உரையுடன் தொடங்குவது வழக்கம்தான். அந்த வகையில்தான் பேரவையைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பா நடக்குது. இந்த ஆண்டாவது அரசு தயாரித்துத் தரும் உரையை கவர்னர் ஆர்.என். ரவி வாசிப்பாரா? இல்லை கடந்த ஜனவரியில் அந்த உரையை மாற்றிப் படித்ததன் மூலம், அரசின் பெரும் கண்டனத்தைச் சந்தித்து, பாதியிலேயே சபையில் இருந்து எழுந்து சென்றது போல், இப்போதும் கவர்னர் ரவி நடந்துகொள்வாரா? என்கிற விவாதமும் எதிர்பார்ப்பும் பல தரப்பிலும் எழுந்திருக்கிறது. இதே விவாதம் கவர்னரின் ராஜ்பவன் அதிகாரிகள் மத்தியிலும் நடந்து வருகிறதாம். கவர்னருக்கு நெருக்கமான உயரதிகாரிகள் சிலர், இந்தமுறை உச்ச நீதிமன்றத்தின் பார்வை நம் பக்கம் திரும்பியிருப்பதால், பிரச்சினைக்கு இடம்கொடுக் காமல், தி.மு.க. அரசு தயாரித்துத் தரும் உரையை நீங்கள் அப்படியே படிப்பதுதான் நல்லது என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். ஆனாலும் இதற்கு கவர்னர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை யாம்.''’’

rr

""சரிப்பா, நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்ன்னு தெரியுதே?''’’

""ஆமாங்க தலைவரே, தேர்தலுக்கான தேதியை பிப்ரவரிவாக்கில் அறிவிக்கும் மும்முரத் தில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. தாங்கள் அறிவிக்கும் தேதி, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் எந்த வகையிலும் இடைஞ்சலானதாக இருந்துவிடக் கூடாதுன்னு நினைக்கும் ஆணையம், இதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பட்ஜெட் விவகாரங்கள் குறித்து விசாரித்துத் தகவல்களைப் பெற்றிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்

""ஹலோ தலைவரே, ஜனவரி முதல் வாரத்திலேயே சட்டப் பேரவையைக் கூட்டுவதற் கான ஏற்பாடுகள் நடக்குது.''’’

""ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில், தமிழக சட்டப்பேரவை கூடுவது வழக்கம் என்றாலும், இந்தமுறை எதிர்பார்ப்பு அதிகமா இருக்குதே?''’’

""உண்மைதாங்க தலைவரே. ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப் பேரவையின் அவ் வாண்டுக்கான முதல் கூட்டத்தொடர், கவர்னரின் உரையுடன் தொடங்குவது வழக்கம்தான். அந்த வகையில்தான் பேரவையைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பா நடக்குது. இந்த ஆண்டாவது அரசு தயாரித்துத் தரும் உரையை கவர்னர் ஆர்.என். ரவி வாசிப்பாரா? இல்லை கடந்த ஜனவரியில் அந்த உரையை மாற்றிப் படித்ததன் மூலம், அரசின் பெரும் கண்டனத்தைச் சந்தித்து, பாதியிலேயே சபையில் இருந்து எழுந்து சென்றது போல், இப்போதும் கவர்னர் ரவி நடந்துகொள்வாரா? என்கிற விவாதமும் எதிர்பார்ப்பும் பல தரப்பிலும் எழுந்திருக்கிறது. இதே விவாதம் கவர்னரின் ராஜ்பவன் அதிகாரிகள் மத்தியிலும் நடந்து வருகிறதாம். கவர்னருக்கு நெருக்கமான உயரதிகாரிகள் சிலர், இந்தமுறை உச்ச நீதிமன்றத்தின் பார்வை நம் பக்கம் திரும்பியிருப்பதால், பிரச்சினைக்கு இடம்கொடுக் காமல், தி.மு.க. அரசு தயாரித்துத் தரும் உரையை நீங்கள் அப்படியே படிப்பதுதான் நல்லது என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். ஆனாலும் இதற்கு கவர்னர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை யாம்.''’’

rr

""சரிப்பா, நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்ன்னு தெரியுதே?''’’

""ஆமாங்க தலைவரே, தேர்தலுக்கான தேதியை பிப்ரவரிவாக்கில் அறிவிக்கும் மும்முரத் தில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. தாங்கள் அறிவிக்கும் தேதி, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் எந்த வகையிலும் இடைஞ்சலானதாக இருந்துவிடக் கூடாதுன்னு நினைக்கும் ஆணையம், இதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பட்ஜெட் விவகாரங்கள் குறித்து விசாரித்துத் தகவல்களைப் பெற்றிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளிகளின் இறுதித் தேர்வுகள் எப்போது நடக்க இருக்கின்றன என்பது குறித்த தரவுகளையும் அது கேட்டு வாங்கியிருக்கிறது. அதேபோல் திருத்தமான வாக்காளர்கள் பட்டியல்களைத் தயார் செய்வது குறித்தும், மாநில தேர்தல் ஆணையங்களை அது உஷார் படுத்தியிருக்கிறதாம். இப்படி தேர்தல் ஆணையம் சைடில் தெரியும் பரபரப்புகளால், அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாகி உள்ளன.''’’

""எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில், தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் தொடங்கிடிச்சே?''’’

""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. தரப்பு, மீண்டும் தங் கள் அதிகா ரத்தை டெல்லியில் தக்கவைத்துக் கொள்ளும் பதட்டத்தில் இருக்க, பா.ஜ.க.வையும் மோடியையும் வீழ்த்தியே ஆவது என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, ஒரு வித வேகத்தில் வரிந்துகட்டி நிற்கிறது. குறிப்பாக, தங்கள் குடையின் கீழ் இருக்கும் கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை எத்தனை தொகுதிகளில் நிற்பது என்பது குறித்த பேச்சு வார்த்தையைத் தொடங்கிவிட்டது. இந்த இந்தியா கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிதான் பெரியது. எனினும் மாநில கட்சிகளு டன் கூட்டணி வைத்துதான் கரையேறவேண்டும் என்கிற நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, சீட்டுக்காக அவற்றிடம் கைகட்டி நிற்கவேண்டிய நிலைமையும் இருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநிலக் கட்சிகளோ, அதற்கு சிங்கிள் டிஜிட்டில்தான் சீட் தரமுடியும் என்று சொல்ல, அது காங்கிரஸை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறதாம். இந்த சூழலில் இத்த கைய சிக்கல்களை அது எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வியும், இந்தியா கூட்டணியிலேயே எழுந்திருக்கிறதாம்.''’’

""தமிழ்நாட்டு நிலவரம் பத்தி காங்கிரஸின் தேசியத் தலைமை தீவிரமாக ஆலோசிக்குதே?''’’

""2024 மக்களவைத் தேர்தலுக்காக தயாராகும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த நிர்வாகி களுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது தி.மு.க.வுட னான கூட்டணி தொடர்வது பற்றிய ஆலோசனைகளை நடத்துவதோடு, தொகுதிப் பங்கீடு, போட்டியிட விரும்பும் தொகுதிகள், மாநில அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்தும் விவா திக்க இருக்கிறார்களாம். இந்தக் கூட்டத்திற்காக தமிழகத்திலிருந்து மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி தொடங்கி, ப.சிதம்பரம், செல்வப்பெருந் தகை, மாணிக்தாகூர், செல்லக்குமார் உள்ளிட்ட பலரையும் டெல்லிக்கு அழைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.''’’

""வெள்ளப் பாதிப்பைப் பார்க்க ராகுல் வரவில்லை என்கிற ஆதங்கம் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இருக்கிறதே?''’’

""மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும், அதைத் தொடர்ந்து கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்கிற ஆதங் கம் மக்களிடம் இருக்கிறது. இதையறிந்த தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், அவற்றைப் பார்வையிட ராகுல் காந்தியும் பிரியங்காவும் வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த சேதத்தில் அரசியல் லாபம் பார்க்க நினைக்கும் டெல்லியோ, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனை முதலில் அனுப்பிவைத்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் பார்வையிட வர இருக்கிறார். இந்தத் தகவலையும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமைக்குப் பாஸ் செய்து, ராகுல், பிரியங்காவைக் கூப்பிடு கிறார்கள். இதுகுறித்து ராகுலிடம் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எடுத்துச் சொன்னபோது, "அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். நம்ம தமிழக நிர்வாகிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரண உதவிகளைச் செய்யச் சொல்லுங்கள்' என்று சொல்லிவிட்டாராம் ராகுல். இதனால் காங்கிரஸ் தரப்பு ஆதங்கத்தில் இருக்கிறது.''’’

ff

""கடும் வெள்ளப் பாதிப்பைச் சந்தித்த தென்மாவட்டப் பகுதிகள் சில இன்னும் முழுதாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லையே?''’’

""சென்னை பகுதிகள் சந்தித்த வெள்ளப் பாதிப்பை விட பலமடங்கு பாதிப்பை தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. இதுவரை இப்படியொரு வெள்ளப் பெருக்கு நினைவுதெரிந்த நாள் முதல் ஏற்படாததால், இந்த கன மழை ஆரம்பித்தபோது, அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் திடீரென மழை நீர் பெருக்கெடுத்ததிலும் 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் உடைப்பெடுத் ததிலும் தாமிரபரணி ஆறே, ஆவேசம் கொண்டு ஊர்களுக்குள் புகுந்ததிலும், ஒரே இரவில் நிலைமை அங்கே மோசமாக மாறியது. வீட்டை விட்டு வெளியே சென்ற பலர், இன்னும் வீடு திரும்பவில்லை என்கிற புகார் நிறையவே இருக் கிறது. காணாமல் போனவர்கள் பற்றிய துல்லியமான கணக்கு யாரிடமும் இல்லை என்கிறார்கள்.''

""ஆமாம்பா, கோவில்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், இப்படியொரு மழையை ஜென்மத்திற்கும் பார்த்திருக்கமாட்டார்களே?''’’

""ஆமாங்க தலைவரே, பாதிப்பு ஏற்பட்டு இத்தனை நாள் ஆகியும் இன்னும் வெள்ளம் வடியாத பகுதிகளும், மின்சாரம் திரும்பாத கிராமங்களும் உள்ளன. சோமாலியா நாட்டில் நடப்பது போல், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குக் கொண்டு சென்ற உணவுபொருட்கள் கூட, மற்றொரு பகுதியினரால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் அங்கே அரங்கேறின. இதனால் சில அமைச்சர்கள் மீது அதிகாரிகள் மீதும் மக்கள் கொண்டிருக்கும் கோபம் இன்னும் கரையவில்லை. அதனால்தான் பல இடங்களில் இப்போதும் கூட மறியல் போராட்டங்கள் நடக்கின்றன. இதற் கிடையே, அதிரடி நிவாரணப்பணிகளால் அமைச் சர் உதயநிதியும், கனிமொழி எம்.பி.யும், மக்களின் அபிமானத்தை ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.''’’

""அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய எடப் பாடி, தான் எடுத்த நிலைக்கு மாறாக பா.ஜ.க. வினரை யாரும் விமர் சிக்கக்கூடாது என்று தடை போட்டிருக்கிறாரே?''’’

""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இது உறுதியான முடிவு என்று எடப்பாடியும் தொடர்ந்து சொல்லி வந்தார். இந்த நிலையில், பொதுக்குழு தொடங்கும் முன்பாகவே பா.ஜ.க.வை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று தகவல் பாஸ் பண்ணியதோடு, இனி கட்சி நிர்வாகி கள் யாரும் பா.ஜ.க.வையோ அதன் தலைவர்களை யோ விமர்சிக்க வேண்டாம் என்று தடைபோட்டி ருக்கிறார் எடப்பாடி. நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகன் ஜெயவர்த்தனனைக் குறிவைக்கும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் காத்திருந்த மாஜி மந்திரி ஜெயகுமார் இதைக்கண்டு எரிச்சலாகிவிட்டாராம். எடப்பாடியின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம், டெல்லியோடு உறவு வளர்த்திருக்கும் கொங்கு மண்டல மாஜி மந்திரிகளான மணியான புள்ளிகள், "பா.ஜ.க.வை விமர்சிப்பதை நீங்கள் தடுக்காவிட் டால், மோசமான நிலையை சந்திக்க நேரிடும்' என எச்சரித்தார்களாம். இதுதான் எடப்பாடியின் மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.''’’

""நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன். புதுவையில் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை, ஊழலுக்கு இடம் தராமல் சிறப்பாக செயல் படுத்திய, அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரான சத்தியமூர்த்தியை, டெல்லிக்கு பிரஷர் கொடுத்து பா.ஜ.க. அரசியல்வாதிகள் மாற்றியது குறித்து அண்மையில் நாம் பேசிக்கொண்டோம். நேர்மையான இந்த அதி காரி மாற்றப்பட்டதைக் கண்டித்து, பொதுமக் கள் அங்கே தொடர்போராட்டம் நடத்திய தகவலையும் அப்போது நாம் பகிர்ந்துகொண் டோம். இந்த மக்கள் போராட்டம் குறித்து உளவுத்துறை அனுப்பிய ரிப்போர்ட்டைப் பார்த்த ஒன்றிய உள்துறை அமைச்சகம், "ஒரு அதி காரிக்கு இந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கா?'’ என்று மூக்கில் விரலை வைத்ததாம். இந்த நிலை யில் மக்கள் செல்வாக்குள்ள அதிகாரி சத்திய மூர்த்தியை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக்கும் எண்ணத்தோடு, தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க.வும் அவரோடு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனவாம்.''

nkn301223
இதையும் படியுங்கள்
Subscribe