சட்டமன்றத் தேர்தல் 2021 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!

ss

வ்வொரு தேர்தல் களத்திலும் நக்கீரன் வழங்கும் களநிலவரத்தை வாசகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும்-அனைத்துக் கட்சி வேட்பாளர்களும்-வாக்காளர்களான பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம். இந்தத் தேர்தல் களத்திலும் நக்கீரனின் சர்வே எப்போது வெளியாகும் என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

கலைஞர்-ஜெயலலிதா என இரண்டு தலைவர்கள் இல்லாத சட்டமன்றத் தேர்தல், தி.மு.க-அ.தி.மு.க. இரண்டு கழகங்களும் வழக்கம்போல பலம் காட்டும் களம், புதிய அரசியல் சக்திகளின் வருகை, வாக்குகள் பிரியும் அளவிலான கூட்டணிகள், ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் என வித்தியாசமான இந்த தேர்தலின் நாடித் துடிப்பை அறிவதில் நக்கீரன் மிகுந்த கவனத்துடன் களமிறங்கியது.

அரை நூற்றாண்டு காலத்தை கடந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மாற்றும் எண்ணம் இளைய தலைமுறையிடம் இருக்கிறதா என்பதையறிய 18 வயது நிறைந்த புதிய-இளம் வாக்காளர்களிடம் மாநிலம் தழுவிய அளவிலான முதல் கட்ட சர்வேயை வெளியிட்டது நக்கீரன். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க அரசின் கடைசி நேர அறிவிப்புகளான கடன் ரத்து அறிவிப்புகளின் தாக்கம் குறித்த சர்வே வெளியிடப்பட்டது. மூன்றாவதாக, சசிகலாவின் அரசியல் துறவு குறித்து முன்கூட்டியே வெளியிட்ட நக்கீரன் அதன் தாக்கம் குறித்த தமிழக மக்களின் கருத்துகளைக் கேட்டு சர்வே வெளியிட்டது.

dd

ஜெ. நிராகரித்த பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பதை அக்கட்சியினர் விரும்புகிறார்களா? என அடுத்த கட்ட சர்வேயை நக்கீரன் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர்களின் தொகுதியில் வெற்றி யாருக்கு என்ற நக்கீரனின் சர்வே வெளியாகி மக்களின் மனதை பிரதிபலித்தது. போட்டி போட்டுக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்ட இரண்டு கழகங்களின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் நம்புகிறார்களா என்பது அடுத்த சர்வேயாக வெளிவந்தது.

ஒவ்வொரு சர்வேயும் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில், ஆண்-பெண் என இருபாலரிடமும் சம அளவிலான எண்ணிக்கையில் எடுக்கப்பட்டது. கிராமம், நகரம், மலைப்பகுதி என வாக்காளர்கள் உள்ள இடங்களில் பயணித்து, விவசாயிகள்-தொழிலாளர்கள்-அரசு ஊழியர்கள்-வணிகர்கள்-பிற துறையினர் என பல தரப்பினரின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டன. அதனை அறிவியல் பூர்வமான ஆய்வுக்குட்படுத்தி, தெளிவான தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதே அளவுகோலுடன், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறியும் மெகா சர்வேயில் நக்கீரன் அணி களமிறங்கியது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, அவர்களின் மனநிலையை தெரிந்துகொண்டு, அதன்பிறகே யாருக்கு வாக்கு என்பதைக் கேட்டறிந்து பதிவு செய்தோம்.

வாக்குப்பதிவுக்கு 10 நாட்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்னமும் முழு வீச்சை எட்டாத நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதில் தெளிவாக இருக்கி றார்கள் என்பது தெரிய வந்தது.

இரு பெரும் கட்சிகள், புதிய கட்சிகள், பிரிந்த கட்சிகள், பல கூட்டணிகள் என எல்லாவற்றையும் அவர்கள் கவனத்தில் கொண்டிருப்பது தெரிந்தது. அத்துடன், தங்களுக்கான பிரச்சினைகள் என்ன, அவற்றைத் தீர்க்கும் கட்சி எது, தமிழ்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் மக்களுக்குத் தெளிவான பார்வை உள்ளது.

இவற்றின் அடிப்படையில் எடுக்கப் பட்ட நக்கீரன் மெகா சர்வேயின்படி, எந்தெந்த தொகுதியில் யாருக்கு முன்னிலை என்பது விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத் தேர்தல் களம் என்றாலே பணம் புழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. வாக்குப்பதிவுக்கு முன்பாக ஓட்டுக்குப் பணம் என்கிற பிரம்மாஸ்திரம் வெளியே வரும்.

அந்த அஸ்திரம் இன்னும் முழுமையாக ஏவப்படாத நிலையில், மக்களின் மனசாட்சியின் குரலாக இந்த சர்வேயை வெளியிடுகிறோம்.

-ஆசிரியர்

சைதாப்பேட்டை

saidai

மா.சுப்ரமணியன் தி.மு.க. - சைதை துரைசாமி அ.தி.மு.க.

முன்னாள் மேயர்கள் இருவரும் மோதும் தொகுதி. மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கிறவராக இருக்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன். துரைசாமிக்கு சீட் கிடைத்ததில் அ.தி.மு.க. கூடாரத்தில் அதிருப்தி. இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் கிட்டத்தட்ட சமவலிமையிலிருக்கும் தொகுதி. அ.ம.மு.க. செந்தமிழன், நா.த. பா.சுரேஷ்குமார் ஆகியோரும் களத்தில். கடும் போட்டியாக இருந்தாலும் மா.சு.முந்துகிறார்.

எழும்பூர் (தனி)

egmore

பரந்தாமன், தி.மு.க. - ஜான்பாண்டியன், த.மு.க.

தி.மு.க. 11 முறை வென்ற தொகுதி. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பலமில்லாததால்தான் ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.க. பிரபு, ம.நீ.ம. உதயபானு, நா.த கீதாலட்சுமியும் வாள்சுழற்றுகிறார்கள். கூட்டணிக் கட்சிகளும் ஆதரவும் அ.தி.மு.க. வேட்பாளருக்குக் குறைவு. தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதி.

துறைமுகம்

fort

சேகர்பாபு, தி.மு.க. - வினோஜ் பி. செல்வம், பா.ஜ.க.

தமிழகத்தின் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. மார்வாடிகளின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை செல்வத்துக்கு. அ.ம.மு.க. சந்தானகிருஷ்ணன், ம.நீ.ம. ரமேஷ், நா.த. முகமது கதாபியும் களத்தில். ஆனால் வினோஜின் மீதான நெகடிவ் இமேஜ், தி.மு.க. மற்றும் கூட்டணி பலத்தால் துறைமுகத்தில் கரைசேர்கிறார் சேகர்பாபு.

திருவொற்றியூர்

tt

கே.பி.சங்கர், தி.மு.க. - கே.குப்பன், அ.தி.மு.க. - சீமான், நாம் தமிழர்

கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.சங்கர் என்பதும் தீவிர பிரச்சாரமும் தி.மு.க.வுக்கு சாதகம். கே.குப்பன் இலை சின்னத்தையும் கரன்ஸியையும் நம்பி மோதுகிறார். சீமான், நாடார் சமுதாய வாக்குகளைப் பிரிப்பது இரு கழக வேட்பாளர்களுக்கும் இடைஞ்சல். சீமான் தமிழகம் தழுவிய பரப்புரை செய்ய வேண்டிய நிலையில், சங்கர் முன்னிலை பெறுகிறார்.

இராயபுரம்

rayapuram

ஐட்ரீம் இரா.மூர்த்தி தி.மு.க.- டி.ஜெயக்குமார் அ.தி.மு.க.

அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மூர்த்திக்குமே கடும் போட்டி. அ.ம.மு.க. ராமஜெயம், நா.த. கமலி, குணசேகரன் ம.நீ.ம.வும் ஆட்டத்தில். தொகுதி மக்களிடம் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறார் ஜெயக்குமார். இஸ்லாமியர் வாக்கு, மீனவர் வாக்கு கணிசமாக தி.மு.க.வுக்கு வரும். இருபக்கமும் சம வலிமையால் இழுபறியில் இராயபுரம்.

திரு.வி.க. நகர் (தனி)

hh

தாயகம் கவி தி.மு.க. பி.எல். கல்யாணி த.மா.க.

எதிர்த்தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லாதது தாயகம் கவிக்கு ஜாக்பாட். த.மா.க.வின் கல்யாணி, முன்னாள் கவுன்சிலர். நா.த. இளவஞ்சி, ம.நீ.ம. ரம்யா பேருக்கு மட்டுமே போட்டி. தி.மு.க.வுக்கு எளிதான தொகுதி.

மாதவரம்

na

சுதர்சனம் தி.மு.க. - மாதவரம் மூர்த்தி அ.தி.மு.க.

மாதவரம் மூர்த்தி தொகுதியில் பிரபலமானவர். ஆனால் அ.தி.மு.க எதிர்ப்பலை, பா.ஜ.க. கூட்டணி மூர்த்திக்குப் பாதகம். சுதர்சனம் வெற்றிக்கு தீவிர வேலை பார்த்தாகவேண்டும். நா.த.க. ஏழுமலை, ம.நீ.ம. கொண்டலசாமி, அ.ம.மு.க. தட்சிணாமூர்த்தியும் போட்டியில். பிற வேட்பாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைத் தடுத்தால்தான் வெற்றி சுதர்சனத்துக்கு. இழுபறியில் மாதவரம்.

ஆர்.கே.நகர்

rknagar

எபினேசர் தி.மு.க.- ஆர்.எஸ். ராஜேஷ் அ.தி.மு.க.

படைபலம், பணபலத்துடன் பிரச்சாரத்துக்குப் போகும் வியூகம் ராஜேஷின் பலம். கண்ணில் காசைக் காட்டி, தீவிர பிரச்சாரத்தைக் கையிலெடுத்தால் மட்டுமே எபினேச ருக்கு ஜெயம். அ.ம.மு.க. காளிதாஸுக்கு, டி.டி.வி. தினகரனின் 20 ரூபாய் வாக்குறுதியே வில்லன். நா.த. கௌரிசங்கரும் ம.நீ.ம. பாசிலும் களத்தில். இழுபறிப் பட்டியலில் ராதாகிருஷ்ணன் நகர்.

மயிலாப்பூர்

mylai

வேலு தி.மு.க. - நட்ராஜ் அ.தி.மு.க.

தி.மு.க.வின் வேலு முந்துகிறார். ஆனாலும் அது கிட்டத்தட்ட 1% வாக்கு வித்தியாசத்தில்தான். பா.ம.க., பா.ஜ.க. பலத்தில் நெருங்கிவருகிறார் நடராஜ். மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீப்ரியாவும் நாம் தமிழர் மஹாலட்சுமியும் அ.ம.மு.க.வின் கார்த்திக்கும் களத்திலிருக்கின்றனர்.

விருகம்பாக்கம்

virugai

விருகை ரவி- அ.தி.மு.க. - பிரபாகர் ராஜா -தி.மு.க.

விருகம்பாக்கத்தில் ரவி, பிரபாகர் ராஜாவுடன், சுயேட்சை வேட்பாளராக ஸ்டார் குணசேகரனும் மல்லுக்கட்டுவது நிலைமையைச் சிக்கலாக்குகிறது. தனசேகரனைச் சரிக்கட்டினால் பிரபாகர்ராஜாவுக்கு சூரிய வெளிச்சம் பிரகாசமாகும். மய்யத்தின் சினேகனும் தே.மு.தி.க. பார்த்தசாரதியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறார்கள்.

தி.நகர்

tnagar

ஜெ. கருணாநிதி, தி.மு.க. - சத்தியநாராயணன், அ.தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ.வான சத்யாவுக்கு கட்டப்பஞ்சாயத்துகளும் ர.ர.க்கள் அதிருப்தி யும் மைனஸ் எனில் ஜெ.கருணாநிதிக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கையும் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் ப்ளஸ். அதனால் முன்னிலை பெறுகிறார். ம.நீ.ம.வின் பழ. கருப்பையா இரு தரப்புக்கும் சிறிது சேதாரம் ஏற்படுத்தலாம். மக்கள் ஆதரவு கருணாநிதிக்கே.

வேளச்சேரி

v

அசன் மௌலானா, காங்கிரஸ் - அசோக், அ.தி.மு.க.

தொகுதியில் நல்ல பெயர் இல்லாதது அசோக்கின் பலவீனமென்றால், கூட்டணி ஒத்துழைப்பு இல்லாததும், கரன்சியை அவிழ்க்காததும் அசன் மௌலானாவின் பலவீனம். ம.நீ.ம. வேட்பாளர் சந்தோஷ்பாபு தொகுதியை வலம்வராததும் கொரோனாவில் முடங்கிவிட்டதும் பலவீனம். வெற்றி மதில்மேல் பூனையாக இருக்கிறது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

cheupak

உதயநிதி, தி.மு.க. - எல்.ராஜேந்திரன், அ.ம.மு.க - கஸாலி, பா.ம.க.

தி.மு.க. மும்முறை வெற்றிபெற்ற தொகுதி. கலைஞரின் பேரனாக உதயநிதி தீவிரமாக வாக்குச் சேகரிப்பது பலம். பா.ம.க.வின் கஸாலியைவிட அ.ம.மு.க.வின் ராஜேந்திரனே உதயநிதிக்குப் போட்டியாகத் தெரிகிறார். மக்கள் நீதி மய்யமும், நா.த.க.வும் காட்சியிலே வரவில்லை. தி.மு.க.வுக்கு எளிதான தொகுதி.

அண்ணாநகர்

annangar

மோகன், தி.மு.க. - கோகுல இந்திரா, அ.தி.மு.க.

அதிருப்தியாளர்களோடு கைகுலுக்கியும் பலவீனமான பகுதிகளை சரிசெய்தும் மோகன் ஆயத்தமாக இருந்தாலும், கோகுல இந்திராவும் சரிக்குச் சரி மோதுகிறார். ம.நீ.ம.வின் பொன்ராஜ் பிரிப்பது தி.மு.க. வாக்கு. அ.ம.மு.க. பிரிக்கும் வாக்குகள் தி.மு.க.வுக்குப் பலம். சிறிய வித்தியாசத்தில் தி.மு.க. முன்னணி வகிக்கிறது.

ஆயிரம்விளக்கு

1000lights

எழி

எழிலன், தி.மு.க. - குஷ்பு, பா.ஜ.க.

கலைஞரின் மருத்துவர் என்பதும் இளைஞர்கள் ஆதரவும் எழிலனுக்கு ப்ளஸ். குஷ்புவுக்கு கட்சியை விட பாப்புலாரிட்டியே பலம். அ.ம.மு.க. வைத்தியநாதனுக்கு ஒவைசி கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆதரவு, வன்னியர் ஆதரவு தெம்பூட்டுகிறது. நா.த.க. அ.ஜே.ஜெரின் களத்தில் நிற்கிறார். தி.மு.க. முந்த, இரண்டாமிடத்துக்கு தாமரையும் குக்கரும் போட்டியிடுகின்றன.

பெரம்பூர்

perambur

ஆர்.டி.சேகர், தி.மு.க. - தனபாலன், பெருந்தலைவர் மக்கள் கட்சி

அதிக பிரபலமில்லாத எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஆர்.டி. சேகருக்கு சாதகம். முன்னிலையில் இருக்கிறார். எனினும் தனபாலன் அ.தி.மு.க. தொண்டர்கள், பொறுப் பாளர்களை கரன்சியால் கவனித்து உற்சாகப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நா.த. மெர்லின் சுகந்தி, ம.நீ.ம. பொன்னுசாமி, அ.ம.மு.க. லட்சுமி நாராயணனும் அடித்து ஆடுகிறார்கள்.

கொளத்தூர்

kulathur

மு.க.ஸ்டாலின், தி.மு.க. - ஆதிராஜாராம், அ.தி.மு.க.

மூன்றாம் முறையாக கொளத்தூரிலும் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்கும் மு.க.ஸ்டாலினுக்கு எல்லா வகையிலும் சாதகமான தொகுதியாக இருக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு கட்சியில் நல்ல பெயர் இருந்தாலும் தொகுதி நிலவரம் கைகொடுக்கவில்லை. ம.நீ.ம. ஜெகதீஷ், அ.ம.மு.க. ஜெ. ஆறுமுகம், நா.த.க செல்வா ஆகியோரும் களத்திலுள்ளனர்.

வில்லிவாக்கம்

vv

வெற்றியழகன், தி.மு.க. - ஜே.சி.டி.பிரபாகர், அ.தி.மு.க.

பிரபாகர் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் எனினும், சிங்காரம்பிள்ளை பள்ளியை தனியாருக்கு தாரைவார்த்த விவகாரத்தில் அதிருப்தி நிலவுகிறது. வில்லிவாக்கம் தி.மு.க. கோட்டையென்பது பேராசிரியர் அன்பழகன் பேரன் வெற்றியழகனுக்கு ஆசுவாசம். நா.த. ஸ்ரீதர்நாத், தே.மு.தி.க. சுபமங்களம், ம.நீ.ம. ஸ்ரீ ஹரன்பாலன் களத்தில். தி.மு.க. தரப்பில் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.

மதுரவாயல்

dd

கணபதி தி.மு.க. - பெஞ்சமின் அ.தி.மு.க.

அமைச்சர் பெஞ்சமினுக்கு தொகுதி மக்களின் அதிருப்தி, அ.தி.மு.க. எதிர்ப்பலை இடைஞ்சல். கட்சி கூட்டணி செல்வாக்குடன் கணபதி முதல்முறையாக களமிறங்கு வதால் அனுபவமின்மை மட்டுமே பலவீனம். அ.ம.மு.க. லக்கி முருகன் பிரிக்கும் ஓட்டுகள் கணபதிக்கு ஆதாயம். ம.நீ.ம. பத்மபிரியா, நா.த. கணேஷ்குமாரும் களத்தில். தி.மு.க. முன்னிலை.

அம்பத்தூர்

a

அலெக்சாண்டர் அ.தி.மு.க. - ஜோசப் சாமுவேல் தி.மு.க.

தி.மு.க.வுக்கு கம்யூனிஸ்ட், வி.சி.க. கூட்டணி கூடுதல் மைலேஜ் தரும். அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. வாக்குகள், பணபலம், ஆட்சியிலிருக்கும் கட்சியென்பது கூடுதல் பலம். அ.ம.மு.க. வேதாச்சலம், ம.நீ.ம. வைத்தியநாதன். நா.த. அன்பரசன் வாக்குகளைப் பிரிப்பர். இரு தரப்பிலும் சமபலம். மெலிதாக முன்செல்லும் அ.தி.மு.க. விடம் தி.மு.க. கடைசிவரை போராடி முன்னேற வேண்டும்.

கும்மிடிப்பூண்டி

g

டி.ஜே. கோவிந்தராஜ் தி.மு.க - பிரகாஷ் பா.ம.க.

தி.மு.க. வேட்பாளர் சுறுசுறுப்பாக வாக்கு அறுவடையில். வி.சி.க. தோள் கொடுக்கிறது. வன்னியர் என்பதும் வேலைசெய்கிறது. பா.ம.க.வுக்குள் பிரகாஷ் மீதான அதிருப்தியால், களப்பணியில் தேக்கம். ம.நீ.ம. சரவணன், தே.மு.தி.க. டில்லி, பா.ம.க.வில் சீட் கிடைக்காத சுயேட்சை லட்சுமி ஆகியோரும் களத்தில். கோவிந்தராஜுவுக்கே ஜாக்பாட்.

திருத்தணி

thh

சந்திரன் தி.மு.க. - கோ. அரி அ.தி.மு.க.

கோ. அரி முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர். தொகுதிக்கு அறிமுகமானவர். சந்திரன் நகர்மன்றத் தலைவராக பரீட்சயமானவர். கூட்டணி செல்வாக்கு, பணபலம் அரிக்கு. தலித், சிறுபான்மையினர் ஆதரவு சந்திரனுக்கு. தே.மு.தி.க. கிருஷ்ணமூர்த்தி, ம.நீ.ம. தணிகைமலை, நா.த. அகிலாவும் போட்டியில். மயிரிழையில் தி.மு.க. முந்துகிறது.

திருவள்ளூர்

th

ரமணா அ.தி.மு.க. - வி.ஜி. ராஜேந்திரன் தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கு தொகுதி மக்களின் அதிருப்தி தடைக்கல். ரமணாவுக்கு நாயுடு வாக்கு வங்கியும், பா.ம.க. வாக்கு வங்கியும் தெம்பளிக்கிறது. அ.ம.மு.க. குரு, நா.த. பசுபதியும் வாக்கு வேட்டையில். தி.மு.க.வின் வெற்றித் தேடலுக்கு அ.தி.மு.க. ரமணா முட்டுக்கட்டை போடுவார்.

பூந்தமல்லி (தனி)

po

கிருஷ்ணசாமி தி.மு.க. - ராஜமன்னார் பா.ம.க.

ராஜமன்னார் சீட்டுவாங்கியதில் அ.தி.மு.க.வினருக்கு மனவருத்தம். கிருஷ்ணசாமி தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கானவர். வி.சி.க. வாக்கு வங்கி கூடுதல் சப்போர்ட்.. அ.ம.மு.க. வேட்பாளர் ஏழுமலை ராஜமன்னார்க்கே இடைஞ்சல். ம.நீ.ம. ரேவதி, நா.த. மணிமேகலை களத்தில். கிருஷ்ணசாமிக்கு களம் சாதகம்.

ஆவடி

avadi

நாசர் தி.மு.க. - மா.பாண்டியராஜன் அ.தி.மு.க.

பா.ஜ.க. சார்பு, தொகுதி மக்கள் அதிருப்தி, அ.தி.மு.க. எதிர்ப்பலை பாண்டியராஜனை நெருக்குகிறது. கடந்த முறை ஏற்பட்ட தோல்விக் கறையைக் கழுவ நாசர் போராடுகிறார். அமைச்சர் தரப்பில் பணபலம் துணைநிற்கிறது. ம.நீ.ம. உதயகுமார், நா.த. விஜயலட்சுமி, அ.ம.மு.க. சங்கர் கணிசமாக வாக்கைப் பிரிப்பர். தி.மு.க.வுக்கு சாதகம் தெரிகிறது.

பொன்னேரி (தனி)

po

சிறுணியம் பலராமன் அ.தி.மு.க.- துரை சந்திரசேகர் காங்கிரஸ்

அதிக முறை அ.தி.மு.க. வென்ற தொகுதி. சிட்டிங் எம்.எல்.ஏ. மீதான அதிருப்தி, துறைமுக விரிவாக்க திட்டத்துக்கான எதிர்ப்பு பலராமனுக்கு இடைஞ்சல். அ.ம.மு.க. பொன்ராஜா. நா.த. மகேஸ்வரி, ம.நீ.ம. தேசிங்கு ராஜன் ஆகியோரும் களத்தில். சந்திரசேகரை பின்னுக்குத் தள்ளுகிறார் பலராமன்.

உத்திரமேரூர்

uu

சுந்தர், தி.மு.க. - சோமசுந்தரம், அ.தி.மு.க.

அ.தி.மு.க.வின் சோமசுந்தரம், தொகுதி மாறியிருப்பது பலவீனம். பணமே அவரது பலம். சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க. சுந்தர், தொகுதிக்கு பரிட்சயமானவர். வன்னியர், தலித், சிறுபான்மையினர் வாக்குகள் பலம். அ.தி.மு.க.வின் வாக்குகளை அ.ம.மு.க. ரஞ்சித்குமார் பிரிக்கிறார். ச.ம.க. சூசையப்பன், நா.த.க. காமாட்சி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் (தனி)

oo

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் - பழனி, அ.தி.மு.க.

காங்கிரஸின் செல்வப்பெருந்தகைக்கு தொகுதியில் மக்கள் செல்வாக்கும், கூட்டணி ஆதரவும் பலம். அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. பழனிக்கு தொகுதியில் எதிர்ப்பும், அ.ம.மு.க.வின் மொளச்சூர் பெருமாள், வாக்குகளைப் பிரிப்பதும் பலவீனம். பணமே பலம். ம.நீ.ம.வின் தணிகைவேல் களத்தில் இருக்கிறார்.

காஞ்சிபுரம்

kk

எழில் அரசன், தி.மு.க. - மகேஷ்குமார் - பா.ம.க.

தி.மு.க.வின் சிட்டிங் எழில் அரசனுக்கு வன்னியர் வாக்குகளும், கூட்டணியால் தலித் வாக்குகளும் கிடைப்பது பலத்தைப் பெருக்கி முன்னேறுகிறது. பா.ம.க.வின் மகேஷ்குமாருக்கு பண பலமும், வன்னியர் வாக்குகளும் பலம். அ.தி.மு.க. சோமசுந்தரத் துக்கு ஒதுக்காதது பலவீனம். அ.ம.மு.க.வின் மனோகரன், ம.நீ.ம.வின் கோபிநாத், நா.த.க.வின் சால்டின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஆலந்தூர்

alanthur

தா.மோ. அன்பரசன், தி.மு.க. - ப.வளர்மதி, அ.தி.மு.க.

அன்பரசன் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர். இதே தொகுதியில் வளர்மதியை வீழ்த்திக்காட்டியவர். பிராமணர், வன்னியர், தலித்துக்கள் மெஜாரிட்டி. தொகுதிப் பிரச்சனைகளை சுணக்கமின்றித் தீர்ப்பது அன்பரசனுக்குப் பலம். உட்கட்சி பூசல் வளர்மதியின் பலவீனம். ம.நீ.ம. சரத்பாபு, நா.த. கார்த்திகேயன், எஸ்.டி.பி.ஐ. தமிம் அன்சாரியும் வாக்கு வேட்டையில். வெற்றிப்பாதையில் அன்பரசன்.

பல்லாவரம்

p

இ.கருணாநிதி தி.மு.க. - சிட்லபாக்கம் ராஜேந்திரன் அ.தி.மு.க.

தி.மு.க.வின் கருணாநிதி மீதான தொகுதி மக்கள் அதிருப்தி பாதகம். சிறுபான்மையினர் செல்வாக்கு துணை வரும். ராஜேந்திரனின் எளிமையும் மக்களுடனான நெருக்கமும் பாசிட்டிவான அம்சம். சீட்டுக் கிடைக்காத தன்சிங்கின் எதிர்ப்பைச் சமாளித்தாகவேண்டும். நா.த. மினிஸ்ரீ, மை இந்தியா வீரலட்சுமி களத்தில். இழுபறியில் பல்லாவரம்.

செங்கல்பட்டு

cc

வரலட்சுமி மதுசூதனன் தி.மு.க. - கஜேந்திரன் அ.தி.மு.க.

அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க. வந்த கஜேந்திரனுக்கு சீட் கொடுத்ததில் அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பு. பணபலம், பா.ம.க.வின் அரவணைப்பை நம்பி கஜேந்திரன் களமிறங்குகிறார். வரலட்சுமி மதுசூதனனுக்கு பணபலம், கூட்டணி செல்வாக்கு இரண்டும் பிரகாசம். அ.ம.மு.க. சதீஸ், நா.த. சஞ்சீவிநாதன். ஐ.ஜே.கே. முத்தமிழ்ச் செல்வன் ஆகியோரும் களத்தில். லட்சுமியின் பக்கமே ஜெயலட்சுமி.

தாம்பரம்

ta

எஸ்.ஆர்.ராஜா தி.மு.க. - டி.கே.எம். சின்னையா அ.தி.மு.க.

மக்கள் செல்வாக்கு, பணபலம் சின்னையாவுக்கு இருந்தாலும் உட்கட்சிப் பூசல் பள்ளம் வெட்டுகிறது. எஸ்.ஆர்.ராஜாவுக்கு கிறித்துவ, இஸ்லாமிய வாக்கு துணைவருகிறது. அ.ம.மு.க. கரிகாலன், ம.நீ.ம. சிவ இளங்கோவன் வாக்கைப் பிரிப்பார்கள். மெல்லிய வித்தியாசத்தில் ராஜாவின் தலை தப்பும்.

சோழிங்கநல்லூர்

s

அரவிந்த்ரமேஷ் -தி.மு.க. - கே.பி.கந்தன் - அ.தி.மு.க.

தி.மு.க. சிட்டிங் அரவிந்த்ரமேஷுடன் மோதுவது கே.பி.கந்தன். இருவருமே வன்னியர். சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க. பக்கமென்றால், பா.ம.க., பா.ஜ.க. ஓட்டுகள் அ.தி.மு.க. பக்கம். சீமானின் நாம் தமிழர் கட்சியின் மைக்கேல் பிரிக்கும் வாக்குகள் இரு கட்சியினரையுமே அச்சுறுத்துகிறது. மயிரிழையில் தி.மு.க. முன்னணியில் நிற்கிறது.

திருப்போரூர்

hh

எஸ்.எஸ். பாலாஜி விடுதலைச் சிறுத்தைகள் - திருக்கச்சூர் ஆறுமுகம் பா.ம.க.

பா.ம.க.வும் வி.சி.க.வும் மோதும் தொகுதி. பா.ம.க. வேட்பாளர் ஆறுமுகத்துக்கு வன்னியர், அ.தி.மு.க. வாக்குகள் பலம். சீட்டு எதிர்பார்த்திருந்த தண்டரை மனோகரன் அதிருப்தி பலவீனம். வி.சி. வேட்பாளர் வன்னியர், வழக்கறிஞர், செல்வாக்கு மிக்கவர். சீட்டுக்கிடைக்காத தி.மு.க. இதயவர்மனின் அதிருப்தி பாலாஜிக்கு சறுக்கல். சிறிய வித்தியாசத்தில் சிறுத்தை சீறுகிறது.

செய்யூர் (தனி)

cc

பனையூர் பாபு வி.சி.க. - கணிதா சம்பத் அ.தி.மு.க.

தொகுதிக்கு உட்பட்ட நபர்களுக்கு சீட்டுத் தரவில்லை என்ற அ.தி.மு.க.வினரின் சிடுசிடுப்பு பாபுவுக்கு சாதகம். கணிதா சம்பத் தொகுதி மக்களுக்கு பரிட்சயமானவர். ம.நீ.ம. அன்பு தமிழ்சேகரன், நா.த. ராஜேஷும் நெருக்கடி தருகின்றனர். இரு தரப்பும் சமநிலையில். பண விநியோகம் வெற்றியைத் தீர்மானிக்கும்.

மதுராந்தகம்(தனி)

nnnd

மல்லை சத்யா ம.தி.மு.க. - மரகதம் குமரவேல் அ.தி.மு.க.

வேட்பாளர் இருவருமே வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள். எனினும் மல்லை சத்யா ஓரளவுக்கு பரிட்சயமானவர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு நிகராக பணம் செலவழிக்கமுடியாதது சத்யாவின் பலவீனம். அ.ம.மு.க. மூர்த்தி, ம.நீ.ம. தினேஷ், நா.த. சுமிதா மூவருக்கும் தொகுதியில் செல்வாக்கில்லை. சிறிய வித்தியாசத்துடன் மல்லை சத்யா மெல்ல முந்துகிறார்.

திருப்பத்தூர்

hh

நல்லதம்பி தி.மு.க. - ராஜா பா.ம.க.

தி.மு.க.வின் பலமாக உதயசூரியன் சின்னமும் நிலையான கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் உள்ளன. பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையும் சேர்கிறது. வன்னியர் வாக்குகள் ஆதரவாக இல்லை. பா.ம.க.வின் பலவீனமாக அ.ம.மு.க. ஞானசேகரன், நா.த.க. சுமதி, ஆகியோர் அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளைப் பிரிப்பது பாதகமாக உள்ளது.

ஜோலார்பேட்டை

kk

வீரமணி, அ.தி.மு.க. - தேவராஜ் தி.மு.க..

தி.மு.க.வின் பலமாக அ.தி.மு.க. வேட்பாளர் வீரமணியின் மீது மக்களின் அதிருப்தி உள்ளது. இருகட்சிகளும் வன்னியர் வாக்குகளால் சமநிலையிலேயே உள்ளது. அ.ம.மு.க. தென்னரசு சாம்ராஜ், நா.த.க. சிவா போன்றவர்கள் பெரும் வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். இரு கூட்டணிகளும் சம பலம்

வாணியம்பாடி

v

முகமது நயீம் - இந்தியன் முஸ்லிம் லீக் .செந்தில்குமார் - அ.திமுக.

முஸ்லிம் லீக்குக்கு சாதகமாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் பலமும் இஸ்லாமியர் வாக்கு பலமும் உள்ளது. பலவீனமாக ஏணி சின்னம் உள்ளது. அ.தி.மு.க.வின் பலவீனமாக பா.ஜ.க. எதிர்ப்பும், ஞானதாஸ் ச.ம.க, உவைசி கட்சியின் அகமது, நா.த.க. தேவேந்திரன்.போன்றவர்களின் வாக்குப் பிரிதலும் உள்ளது.

ஆம்பூர்

ambur

வில்வநாதன் தி.மு.க. - நாசர் முகமது அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக கூட்டணிக் கட்சிகளின் பலமும் சிறுபான்மை தலித் மக்கள் வாக்குகளும் உள்ளன. பலவீனமாக அ.தி.மு.க. வேட்பாளராக ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. நா.த.க. மெகருன்னிசா, எஸ்.டி.பி.ஐ. உமர்பரூக், ச.ம.க. ராஜா வாக்குகளைப் பிரிப்பது அ.தி.மு.க.வுக்கு பாதகமாவதால் தி.மு.க.வுக்கு மெலிதான முன்னேற்றம்.

ஊத்தங்கரை (தனி)

h

தமிழ்செல்வன், அ.தி.மு.க. - ஆறுமுகம். காங்கிரஸ்

காங்கிரஸின் பலமாக தி.மு.க. வாக்குவங்கி, அருந்ததியர் வாக்குகள். அ.தி.மு.க.வின் பலமாக பணபலமும் தி.மு.க.வுக்கு சீட் கிடைக்காத காரணத்தால் கூட்டணி ஒற்றுமையின்றி வாக்குகள் சிதறி அ.தி.மு.க. முன்னிலை பெறுகிறது.

பர்கூர்

pp

மதியழகன் தி.மு.க. - கிருஷ்ணன் அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக மதியழகன் மக்களுக்கு அளித்துவரும் வேலை வாய்ப்புகள். வி.சி.க வாக்குகள். பலவீனம் பெரிதாக இல்லை. அ.தி.மு.க.வின் பலவீனமாக கூட்டணிக்குள் ஒற்றுமையின்மையும் உள்ளடி வேலைகளும் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது.

கிருஷ்ணகிரி

kk

செங்குட்டுவன் தி.மு.க. - அசோக்குமார் அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மேல் மக்கள் வெறுப்பு. அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. பலவீனம் ம.நீ.ம.ரவிசங்கர், நா.த.க நிரந்தரி புதிய வாக்காளர்களின் வாக்கைப் பிரிப்பது.

தளி

thali

ராமச்சந்திரன் இ.கம்யூ. - நாகேஷ்குமார் பா.ஜ.க.

தி.மு.க. கூட்டணி பலமும் கம்யூனிஸ்ட் செல்வாக்கும் உள்ள தொகுதி. நா.த.க. செல்வராணி வாக்குகளைப் பிரித்தாலும் தி.மு.க. அணி வலுவாக உள்ளது. காவிகளுக்கு இடமில்லை என்கின்றனர் மக்கள். அ.தி.மு.க. கூட்டணி பிரச்சாரத்தில் உற்சாகமில்லை.

வேப்பனஹள்ளி

bbb

பி.முருகன் தி.மு.க. - கே.பி.முனுசாமி அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக அ.தி.மு.க.வின் கடும் உட்கட்சிப் பூசல் உள்ளது. மக்களின் மனநிலை அ.தி.மு.க.வுக்கு எதிராகவே இங்கு உள்ளது. ம.நீ.ம.ரவிசங்கர், நா.த.க.சக்திவேல் இவர்களின் ஓட்டுப் பிரித்தல்கள் அ.தி.மு.க.வுக்கு பாதகமாகிறது.

ஓசூர்

oo

ஒய்.பிரகாஷ் தி.மு.க. - ஜோதி பாலகிருஷ்ணரெட்டி அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக நிரந்தர வாக்கு வங்கியும், கூட்டணி பலமும் உள்ளது. தொடர்ச்சியாக ஒரே வேட்பாளருக்கே சீட் கொடுப்பதால் அ.தி.மு.க. வுக்குள் நிலவும் உட்கட்சி உள்ளடிகள் தி.மு.க.வுக்கு சாதகம். ம.நீ.ம. மசூத், நா.த.க.கீதாலட்சுமி வாக்குகளை பிரித்தாலும் முன்னணி நிலவரத்தில் மாற்றமில்லை.

சங்ககிரி

ss

சுந்தரராஜன் - அ.தி.மு.க. - கே.எம்.ராஜேஷ் - தி.மு.க.

பா.ம.க. கூட்டணியும், முதல்வரின் உறவினருக்கு விசுவாசி என்பதும் சுந்தரராஜனுக்கு பலம். மக்களிடம் அதிருப்தி பலவீனம். தொகுதிக்குள் நற்பெயர் ராஜேசுக்கு பலம். தி.மு.க. மீதான கெட்ட பெயர் பலவீனம். ம.நீ.ம.வின் செங்கோடன், அ.ம.மு.க.வின் செல்லமுத்து, நா.த.க.வின் ஸ்ரீரத்னா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

சேலம் மேற்கு

salem

அருள் - பா.ம.க. - சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் - தி.மு.க.

வன்னியர்கள் உள்ஒதுக்கீடும், அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பும், பணமும் அருளுக்கு பலம். கட்டப்பஞ்சாயத்து இமேஜ் பலவீனம். கட்சிக்குள்ளும், தொகுதியிலும் அறிமுகமில்லாதது ராஜேந்திரனின் பலவீனம். சர்ச்சைகளில் சிக்காதது பலம். தே.மு.தி.க.வின் மோகன்ராஜ், நா.த.க.வின் நாகம்மாள், ம.நீ.ம.வின் தியாகராஜன் ஆகியோர் களத்தில். மாம்பழம் முந்துகிறது.

சேலம் வடக்கு

sa

வழக்கறிஞர் ராஜேந்திரன் - தி.மு.க. - ஜி.வெங்கடாசலம் - அ.தி.மு.க.

அரசு ஊழியர்கள், சிறுபான்மையினரின் வாக்குகள், ராஜேந்திரனின் நற்பெயரும் பலம். செவ்வாய்ப்பேட்டை வாக்காளர்கள் பலவீனம். பா.ம.க. கூட்டணியும், பணமும் வெங்கடாசலத்தின் பலம். நா.த.க.வின் இமய ஈஸ்வரன், ம.நீ.ம.வின் குரு சக்ரவர்த்தி, அ.ம.மு.க.வின் நடராஜன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

சேலம் தெற்கு

signal

இ.பாலசுப்ரமணியன் - அ.தி.மு.க. - ஏ.எஸ்.சரவணன் - தி.மு.க.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும், தி.மு.க.வின் அடாவடிகள் மீதான மக்களின் பயமும் பாலசுப்ரமணியனுக்கு பலம். தொகுதிக்கு அறிமுகமில்லாததும், கட்சியினர் அதிருப்தியும் சரவணனுக்கு பலவீனம். ம.நீ.ம.வின் பிரபு மணிகண்டன், நா.த.க.வின் மாரியம்மா, அ.ம.மு.க.வின் செ.வெங்கடாசலம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

வீரபாண்டி

vv

மருத்துவர் தருண் - தி.மு.க. - ராஜா என்ற ராஜமுத்து - அ.தி.மு.க.

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தாரின் எதிர்ப்பு, உள்ளடி வேலைகள் தருணுக்கு பலவீனம். அ.ம.மு.க.வின் எஸ்.கே.செல்வம் வாக்குகளைப் பிரிப்பது பலம். தொகுதியில் அறிமுகமில்லாதது ராஜாவுக்கு பலவீனம். தி.மு.க., அதிமுகவிடையே இழுபறி. நா.த.க.வின் ராஜேஸ்குமார், ஐ.ஜே.கே.வின் அமுதா களத்தில் உள்ளனர்.

கெங்கவல்லி (தனி)

gg

ரேகா பிரியதர்ஷினி - தி.மு.க. - நல்லதம்பி - அ.தி.மு.க.

மண்ணின் மைந்தரென்பதும், ஆதிதிராவிடர்களின் வாக்குகளும் நல்லதம்பிக்கு பலம். அ.ம.மு.க. வாக்குகளைப் பிரிப்பதும், பா.ஜ.க.வுக்கான எதிர்ப்பும், கூட்டணியும் தி.மு.க.வின் ரேகா பிரியதர்ஷினிக்கு பலம். அ.ம.மு.க.வின் பாண்டியன், ஐ.ஜே.கே.வின் பெரியசாமி, நா.த.க.வின் வினோதினி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஆத்தூர் (தனி)

at

கு.சின்னதுரை - தி.மு.க. - ஜெயசங்கரன் - அ.தி.மு.க.

கட்சியினரின் ஒத்துழைப்பும், தொகுதிக்குள் நற்பெயரும் சின்னதுரையின் பலம். தொகுதிக்கு வளர்ச்சி பணி எதுவும் செய்யாததும், அ.ம.மு.க.வின் மாதேஸ்வரன் வாக்குகளைப் பிரிப்பதும் ஜெயசங்கரனுக்கு பலவீனம். நா.த.க.வின் கிருஷ்ணவேணி, ச.ம.க.வின் சிவகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஏற்காடு (தனி)

er

தமிழ்செல்வன் - தி.மு.க. - கு.சித்ரா - அ.தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ. சித்ரா, வளர்ச்சிப்பணி எதுவும் செய்யாததும், மக்களைச் சந்திக்காததும் பலவீனம். சித்ரா மீதான அதிருப்தியும், 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பும் தமிழ்செல்வனுக்கு பலம். கட்சிக்குள் அதிருப்தி பலவீனம். தே.மு.தி.க.வின் குமார், ஐ.ஜே.கே.வின் துரைசாமி, நா.த.க.வின் ஜோதி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஓமலூர்

dd

ஆர்.மணி - அ.தி.மு.க. - மோகன் குமாரமங்கலம் - காங்கிரஸ்

அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதும், வன்னியர் வாக்கு வங்கியும் மணிக்கு பலம். மக்களிடம் அறிமுகமில்லாதது மோகன் குமாரமங்கலத்துக்கு பலவீனம். தி.மு.க.வின் ஆதரவும், காங்கிரஸ் பாரம்பரியமும் பலம். ம.நீ.ம. சீனிவாசன், அ.ம.மு.க. மாதேஸ்வரன், நா.த.க. ராஜா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மேட்டூர்

nn

ஸ்ரீனிவாச பெருமாள் - தி.மு.க. - சதாசிவம் - பா.ம.க.

தி.மு.க.வின் ஸ்ரீனிவாச பெருமாள், மேச்சேரியைச் சேர்ந்தவராக இருப்பதும், ஆதிதிராவிடர் வாக்குகளும், வலுவான கூட்டணியும் பலம். வன்னியர் வாக்குகள் பா.ம.க.வுக்கு பலம். ஜி.கே.மணி தொகுதி மாறியது பலவீனம். தே.மு.தி.க.வின் ரமேஷ் அரவிந்த், நா.த.க.வின் மணிகண்டன், ம.நீ.ம.வின் அனுசுயா ஆகியோர் களத்தில் உள்ளனர். தி.மு.க. முந்துகிறது.

எடப்பாடி

ep

எடப்பாடி பழனிசாமி - அ.தி.மு.க. - சம்பத் குமார் - தி.மு.க.

முதல்வரின் தொகுதியாக இருப்பதும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளைச் செய்திருப்பதும், ஜாதிரீதியான வாக்குகளும், பா.ம.க. கூட்டணியும் அ.தி.மு.க.வின் பலம். தொகுதிக்கு அறிமுகமில்லாதது சம்பத் குமாரின் பலவீனம். ம.நீ.ம.வின் தாசப்பராஜ், நா.த.க.வின் ஸ்ரீரத்னா, அ.ம.மு.க.வின் பூக்கடை சேகர் ஆகியோரும் களத்தில் உள்ளனர். முதல்வர் முந்துகிறார்.

நாமக்கல்

n

கே.பி.பி.பாஸ்கர் அ.தி.மு.க. - காண்ட்ராக்டர் ராமலிங்கம். தி.மு.க.

இருகட்சிகளும் சமபலத்தில் கடும்போட்டியுடன் உள்ளன. அ.தி.மு.க. மீது தனிப்பட்ட அதிருப்தி எதுவும் இல்லை. தி.மு.க.வுக்கு கூட்டணிக் கட்சிகள் பலம் குறிப்பாக கொ.ம.தே.க. ஆதரவு. ம.நீ.ம.ஆதம்பரூக், நா.த.க. பாஸ்கர், தே.மு.தி.க. செல்வி போன்றோரும் களத்தில். இழுபறி நிலை.

ராசிபுரம் (தனி)

rasi

மருத்துவர் மதிவேந்தன். தி.மு.க. - மருத்துவர் சரோஜா. அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக வேட்பாளரின் நற்பெயர், கூட்டணி பலம் அ.தி.மு.க. கூட்டணி மீதான அதிருப்தியும் உள்ளது. வாக்குறுதியளித்த திட்டங்கள் எதையும் செய்யாததும் அ.ம.மு.க. அன்பழகனின் ஓட்டுப்பிரிப்பும், ராம்குமார் ஐ.ஜே.கே., நா.த.க. சிலம்பரசி புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதும் அ.தி.மு.க.வின் பலவீனமாக உள்ளது.

சேந்தமங்கலம் தனி

dd

பொன்னுசாமி தி.மு.க. - சந்திரன் அ.தி.மு.க.

நிலையான வாக்கு வங்கி, கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு தி.மு.க.வின் பலம். முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகரன், அ.ம.மு.க. சந்திரன் வாக்குகளைப் பிரிப்பது அ.தி.மு.க. பலவீனம். செல்வராஜ் (ஐ.ஜே.கே.), ரோகிணி (நா.த.க.) களத்தில். பணபலத்தை நம்பி சந்திரன். தி.மு.க. முந்துகிறது.

பரமத்தி வேலூர்

tt

ஏ.கே.எஸ்.மூர்த்தி தி.மு.க. - சேகர் அ.தி.மு.க.

தி.மு.க.வின் பலமாக ராஜவாய்க்கால் ரீமாடலிங், தடுப்பணை திட்டங்கள், கூட்டணிக்கட்சிகள் பலம், அ.தி.மு.க. மீதான அதிருப்தி உள்ளது. அ.ம.மு.க.வேட்பாளர் சாமிநாதன் வாக்குகளைப் பிரித்தல் போன்றவை அ.தி.மு.க.வுக்கு பாதகம். நா.த.க.யுவராணி, ம.நீ.ம.நடராஜன் இளம் புதிய வாக்காளர்களை நம்பி களத்தில் உள்ளனர்.

திருச்செங்கோடு

tt

ஈஸ்வரன் -கொ.ம.தே.க. - பொன் சரசுவதி -அ.தி.மு.க.

பொன் சரசுவதி எம்.எல்.ஏ.வாக நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அ.தி.மு.க.வின் கட்சி பலம் கைகொடுக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஆர்.சுந்தரம் வாக்குகளை பிரிக்கிறார். தி.மு.க. மற்றும் கூட்டணியின் பலம் ஈஸ்வரனுக்கு கைகொடுக்கிறது. அ.ம.மு.க. ஹேமலதா, நா.த.க. நடராஜன் களத்தில் நிற்கின்றனர்.

குமாரபாளையம்

kumarapalayam

அமைச்சர் தங்கமணி -அ.தி.மு.க. - வெங்கடாஜலம் -தி.மு.க.

வாக்காளர்களிடம் எளிமையாக பழகுவது, பணபலம் இவை தங்கமணியின் பலம். பள்ளிப்பாளையம் ஒன்றியத்தின் மக்கள் செல்வாக்கு, கூட்டணி கட்சிகள் வெங்கடாஜலத்தின் பலம். நா.த.க. வருண், தே.மு.தி.க. ரமேஷ், சுயேச்சை சரவணன் களத்தில் நிற்கிறார்கள். இறுதி நேர கவனிப்பில் தங்கமணி முந்துகிறார்.

அவினாசி (தனி)

av

அதியமான் - ஆதித்தமிழர் பேரவை - தனபால் - அ.தி.மு.க.

தொகுதிக்குள் மக்களின் எதிர்ப்பும், விவசாயிகள் அதிருப்தியும் தனபாலுக்கு பலவீனம். கூட்டணி பலத்துடன் அவினாசி - அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற பிரச்சாரம் மக்களிடம் எடுபடுவது அதியமானின் பலமாகி முன்னேற்றுகிறது. தே.மு.தி.க.வின் மீரா, ம.நீ.ம.வின் வெங்கடேஷ்வரன், நா.த.க.வின் ஷோபாவும் களத்தில் உள்ளனர்.

பல்லடம்

pp

முத்து ரத்தினம் - ம.தி.மு.க.- எம்.எஸ்.எம்.ஆனந்தன் - அ.தி.மு.க.

ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆனந்தனுக்கு பலவீனம். ம.தி.மு.க.வின் முத்துரத்தினத்துக்கு கூட்டணிக்கட்சியினரின் ஒத்துழைப்பும், நற்பெயரும் முன்னிலை தருகிறது. நா.த.க.வின் சுப்பிரமணியனும், அ.ம.மு.க.வின் ஜோதிமணியும், ம.நீ.ம.வின் மயில்சாமியும் களத்தில் உள்ளனர்.

உடுமலைப்பேட்டை

uu

தென்னரசு - காங்கிரஸ் - உடுமலை ராதாகிருஷ்ணன் - அ.தி.மு.க.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு பணமே பலம். காங்கிரஸின் தென்னரசுக்கு கூட்டணி பலம். தொகுதியின் அனைத்துப் பிரச்சனைகளையும் பேசுவது மக்களை ஈர்க்கிறது. ம.நீ.ம.வின் ஸ்ரீநிதியும், அ.ம.மு.க.வின் பழனிசாமியும், நா.த.க.வின் பாபுவும் களத்தில் இருக்கிறார்கள். காங்கிரஸ் முந்துகிறது.

மடத்துக்குளம்

mm

ஜெயராம கிருஷ்ணன் - தி.மு.க. - மகேந்திரன் - அ.தி.மு.க.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மகேந்திரன் பெயரும் ஓரளவு அடிபட்டது என்பது பலவீனம். தொகுதிக்குள் நற்பெயரும், பொதுக்காரியங்களைச் சிறப்பாகச் செய்துமுடிப்பதும், வலுவான கூட்டணியும் ஜெயராம கிருஷ்ணனின் பலம். அ.ம.மு.க. சண்முகவேலுவும், நா.த.க. தனுஜாவும், ம.நீ.ம. குமரேசனும் களத்தில் உள்ளனர்.

திருப்பூர் தெற்கு

yy

செல்வராஜ் - தி.மு.க. - குணசேகரன் - அ.தி.மு.க.

தொகுதிக்கு ஏதும் செய்யாதது, சிட்டிங் எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு பலவீனம். பணமே பலம். மாநகராட்சி மேயராகச் செயல்பட்டதும், வலுவான கூட்டணியும் தி.மு.க.வின் செல்வராஜுக்கு கூடுதல் தெம்பைத் தருகிறது. அ.ம.மு.க.வின் விசாலாட்சியும், ம.நீ.ம.வின் அனுஷா ரவியும், நா.த.க.வின் சண்முகசுந்தரமும் களத்தில் உள்ளனர்.

திருப்பூர் வடக்கு

tt

ரவி - சி.பி.ஐ. - விஜயகுமார் - அ.தி.மு.க.

கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக தொகுதி இருப்பதும், கூட்டணிக் கட்சிகளும் ரவிக்கு பலம். அதுவே தோழருக்கு முன்னிலை தருகிறது. தொகுதிக்குள் பெயரைக் கெடுத்துக்கொண்டதும், பா.ஜ.க. கூட்டணியும் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு பலவீனம். பணமே பலம். ம.நீ.ம.வின் சிவபாலனும், நா.த.க.வின் ஈஸ்வரனும், தே.மு.தி.க.வின் செல்வகுமாரும் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் (தனி)

tt

கயல்விழி, தி.மு.க. - எல்.முருகன்,பா.ஜ.க.

பா.ஜ.க.வுக்கு இங்கே பலம் இல்லாததால் இலைத் தரப்பை நம்பியே நிற்கிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன். வெளியூர் வேட்பாளர் என்பதால் அவர் மீது அந்நியப் பார்வையே படிந்திருக்கிறது. தி.மு.க. கயல்விழிக்கு கட்சி பலம் கைகொடுக்கிறது. தொகுதியின் 27 சதவிகித சிறுபான்மையினரின் வாக்கும் லம்பாகக் கிடைக்கலாம். ஆயினும், கரன்ஸி மேஜிக் கைகொடுக்கும் என்று நம்புகிறார் முருகன்.

காங்கேயம்

kk

மு.பெ.சாமிநாதன், தி.மு.க. - முருகவேல், அ.தி.மு.க.

சாமிநாதன் தொகுதிக்கு அறிமுகமானவர். கூட்டணி பலமும் இவருக்கு அரணாக இருக்கிறது. அ.தி.மு.க. முருகவேலின் முகம், பலருக்கும் புதுமுகம். மேலும் அங்கே சீட் கிடைக்காத எக்ஸ் எம்.எல்.ஏ. நடராஜ், வெங்கு மணிமாறன் ஆகியோர் ஒதுங்கி நிற்கிறார்கள். தி.மு.க. தரப்பு கரன்ஸி விசயத்தில் தாராளம் காட்டவேண்டும் என்கிறார்கள். இப்போதைய நிலவரம், சாமிநாதனுக்கு சாதகம்.

திருவாரூர்

th

பூண்டி கலைவாணன் தி.மு.க. - என்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.

கலைஞர் இருமுறை வென்ற தொகுதி, தொகுதியிலுள்ள இஸ்லாமியர்கள், கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க. செல்வாக்கு பூண்டி கலைவாணனின் பலம். தொடர்ச்சியாக தி.மு.க வெற்றிபெறும் தொகுதி. அ.தி.மு.க பன்னீர்செல்வத்துக்கு நல்ல மனிதர் என்ற பெயரிருந்தாலும் கட்சியினரின் ஆதரவு முழுமையாக இல்லை. அ.ம.மு.க. கூட்டணியின் எஸ்.டி.பி.ஐ. நஸிமாபானு பிரிக்கும் முஸ்லிம் வாக்குகளை மீறி தி.மு.க. பலம் காட்டுகிறது.

நன்னிலம்

NN

காமராஜ் அ.தி.மு.க. - ஜோதிராமன் தி.மு.க.

ஹாட்ரிக் வெற்றிக்காக போட்டியிடுகிறார் அமைச்சர் காமராஜ். தொகுதியில் நன்கு அறிமுகமானவர் தி.மு.க. ஜோதிராமன். கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகள், தனது சமூக வாக்குகள் ஜோதிராமனின் பலம். ஜனவரியிலே வேலையைத் தொடங்கிய அமைச்சர் விட்டமின் ப பலத்தில் ஜோதிராமனை ஓரடி பின்னேயே வைத்திருக்கிறார்.அ.ம.மு.க. அக்ரி என்.ராமச்சந்திரனின் திருவிளையாடல், வெற்றி- தோல்வியை இழுபறியாக்குகிறது.

திருத்துறைப்பூண்டி (தனி)

T

இந்திய கம்யூனிஸ்டு மாரிமுத்து - அ.தி.மு.க. சுரேஷ்குமார்

விவசாயிகள், மக்கள் பிரச்சினைகளுக்காக களமிறங்கி தொகுதிக்கே அறிமுகமானவர் மாரிமுத்து. வி.சி.க. வாக்குகளும் தொகுதியில் கணிசம். சுரேஷ்குமாருக்கு இலை சின்னம் மட்டுமே பலம். மனைவி, மாமனார் மீது புகார் இருப்பது பலவீனம். கஜா புயல் கால நிவாரணப் பணிகள் கம்யூனிஸ்ட் மாரிமுத்துவை முந்தச் செய்கிறது. அ.ம.மு.க. ரஜினிகாந்த், நாம் தமிழர் ஆர்த்தியும் களத்தில்.

மன்னார்குடி

M

டி.ஆர்.பி. ராஜா தி.மு.க - சிவ.ராஜமாணிக்கம் அ.தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு சொந்த செல்வாக்கு+கட்சி செல்வாக்கு பலம். அ.தி.மு.க வேட்பாளர் ஏற்கனவே காங்கிரஸ், அ.ம.மு.க. கட்சிகளுக்கு சென்று வந்தவர்/ லோக்கல். ர.ர.க்களின் ஒத்துழைப்பு தடையாக உள்ளது. அ.ம.மு.க.வில் மா.செ.வான எஸ்.காமராஜ் களமிறங்குவது இலைக்கு விழ வேண்டிய கள்ளர் ஓட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சூரியப் பிரகாசமான தொகுதி.

பெரம்பலூர் (தனி)

D

பிரபாகரன் தி.மு.க. - இளம்பை தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க. - ராஜேந்திரன் தே.மு.தி.க.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூரியன் பெரம்பலூரில் களம் காணுவது தி.மு.க.வை உற்சாகம் அடைய வைத்துள்ளது. மூன்றாவது முறையாக களம் காணும் தமிழ்ச்செல்வனைப் பற்றி எழுந்த சர்ச்சைகளே அவரது பலவீனம். ஐ.ஜே.கே. சார்பாக சசிகலா நிற்கிறார்.

குன்னம்

KK

சிவசங்கர் (தி.மு.க.) - ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)

அரியலூர் மா.செ. சிவசங்கரை குன்னத்தில் களம் இறக்கியது தி.மு.க. தலைமை. அ.தி.மு.க.வில் ராமச்சந்திரன் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக செய்த செயல்பாடுகளும் பணமும் பெரிய ப்ளஸ். வன்னியர் இட ஒதுக்கீடு, பொன்பரப்பி கலவரம் போன்றவை மோதலை கடுமையாக்குகிறது. ம.நீ.ம. சாதிக்பாட்ஷா, அருள் (நாம் தமிழர்), கார்த்திகேயன் (அ.ம.மு.க.) களத்தில் உள்ளனர். சூரியனும் இலையும் கடுமையாகப் போராடுகின்றன.

அரியலூர்

AR

ராஜேந்திரன் - அ.தி.மு.க. - சின்னப்பா - ம.தி.மு.க.

ம.தி.மு.க.வின் சின்னப்பாவுக்கு தொகுதியில் நல்ல பெயரும், தொடர்ச்சியான தோல்வியால் அனுதாபமும் உள்ளது. தி.மு.க.வின் தீவிரப்பணி தேவைப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.வாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதோடு, அ.தி.மு.க.வினரிடையே செல்வாக்கும் ராஜேந்திரனின் பலம். அ.ம.மு.க துரை மணிவேல், ஐ.ஜே.கே கமல் பாஸ்கர், நா.த.க சுகுணா குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஜெயங்கொண்டம்

d

கண்ணன் தி.மு.க. - பாலு பா.ம.க. - சொர்ணலதா ஐ.ஜே.கே.

காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கடும் போட்டியை ஏற்படுத்துகிறார். பா.ம..க.வில் வைத்தியை வேட்பாளராக்காததால் நிலவும் கடும் அதிருப்தியை சமாளிக்க பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸே நேரடியாக பிரச்சாரம் செய்து போராடுகிறார். இந்தச் சண்டையில் தி.மு.க. கண்ணன் முன்னேறுகிறார். நாம் தமிழர் மகாலிங்கம், அ.ம.மு.க. சிவா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை

tmalai

எ.வ.வேலு தி.மு.க. - எஸ்.தணிகைவேல் பா.ஜ.க.

.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. நிற்பது, கடந்த பத்தாண்டுகளாக செய்துவரும் மக்கள் பணி ஆகியவை வேலுவின் பலம். அதனால் முன்னேறுகிறார். அ.தி.மு.க., பா.ஜ.க.வினருக்கு தணிகைவேல் மீதுள்ள அதிருப்தி பலவீனம். ம.நீ.ம. சார்பில் அருள், அ.ம.மு.க. பஞ்சாட்சரம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கீழ்பென்னாத்தூர்

e

கு.பிச்சாண்டி தி.மு.க.- செல்வகுமார் பா.ம.க.

செல்வகுமார் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பா.ம.க.விற்கு விழாத தலித் வாக்குகள் ஆகியவை பலவீனம். யார் அழைத்தாலும் விழாவுக்குச் செல்லும் பிச்சாண்டியின் மக்கள் தொடர்பு பெரும்பலம். ம.நீ.ம. சார்பில் சுதானந்தம், அ.ம.மு.க. சார்பில் கார்த்திகேயன், நாம் தமிழர் ரமேஷ்பாபு ஆகியோர் களத்தில் உள்ளனர்.

செய்யாறு

ss

ஜோதி தி.மு.க.- தூசிமோகன் அ.தி.மு.க.

அ.தி.மு.க.வில் மா.செ.வான தூசிமோகனுக்கு அதிருப்தியால் கட்சியினர் வேலை பார்க்கவில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு களம் காணும் உதயசூரியன் தி.மு.க.வினரை உற்சாகமடைய வைத்து முன்னேற வைக்கிறது. ம.நீ.ம. மயில்வாகனம், அ.ம.மு.க. வரதராஜன் நாம் தமிழர் பீமன் களத்தில் உள்ளனர்.

வந்தவாசி

f

அம்பேத்குமார் தி.மு.க. - முரளி பா.ம.க.

மைனாரிட்டி வாக்குகள் தி.மு.க.வின் பலம். பா.ம.க. முரளி வெளிமாவட்டம் என்பது பலவீனம். வன்னியர் வாக்குகளை மா.செ. தரணிவேந்தன் கொண்டுவர அம்பேத்குமார் முன்னிலைபெறுகிறார். ம.நீ.ம. சுரேஷ், அ.ம.மு.க. வெங்கடேசன், நாம் தமிழர் பிரபாவதி களத்தில் உள்ளனர். தக்க வைக்கிறது சூரியன்.

போளூர்

d

அக்ரி கிருஷ்ணமூர்த்தி அ.தி.மு.க. - சேகரன் தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ.வான தி.மு.க. சேகரன் மீது அதிருப்தி நிலவுகிறது. அதேபோல் அ.தி.மு.க. அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதும் மக்களிடம் பயம் இருக்கிறது. பா.ஜ.க.வின் சேத்துப்பட்டு ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜெயசுதா, அன்பழகன் துணையோடு முன்னிலை பெறுகிறார். ம.நீ.ம. கலாவதி, அ.ம.மு.க. விஜயகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கலசபாக்கம்

d

பன்னீர்செல்வம் அ.தி.மு.க. - சரவணன் தி.மு.க.

இருவரும் வேறு தொகுதியைச் சேர்ந்தவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிட்டி.ங் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் கள வேலை கைகொடுக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தி.மு.க. நிற்பது பலம். ஐ.ஜே.கே. ராஜேந்திரன் தே.மு.தி.க. நேரு, நாம் தமிழர் பாலாஜி களத்தில் நிற்கிறார்கள்.

செங்கம் தனி

d

மு.பெ.கிரி தி.மு.க. - நைனாகண்ணு அ.தி.மு.க.

இரண்டுபேருமே அமைதியானவர்கள். தண்டராம்பட்டு, தானிப்பாடி, செங்கம் நகரம் தி.மு.க.வுக்கு பலம். புதுப்பாளையம், ஜவ்வாது மலை மற்றும் பா.ம.க. வாக்குகள் அ.தி.மு.க.வுக்குப் பலம். தேர்தல் வேலையில் அதிருப்தி இல்லாமை தி.மு.க.வை முன்னிலைபெற வைக்கிறது. ஐ.ஜே.கே. ஜான்ராஜ், தே.மு.தி.க. அன்பு, நாம் தமிழர் வெண்ணிலா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஆரணி

arani

சேவூர் அன்பழகன் தி.மு.க. - ராமச்சந்திரன் அ.தி.மு.க.

பா.ம.க.வின் வன்னியர் சங்கமே தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்கிறது. அமைச்சர் ராமச்சந்திரன் சம்பாதித்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என அதிருப்தி நிலவுகிறது. ம.நீ.ம. மணிகண்டன், தே.மு.தி.க. பாஸ்கரன், நாம் தமிழர் பிரகலதா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி (தனி)

jj

செந்தில்குமார் அ.தி.மு.க. - மணிரத்தினம் காங்கிரஸ்

காங்கிரஸின் மணிரத்தினம் தொகுதிக்கு புதியவராக இருப்பது பலவீனம். செந்தில்குமாருக்கு தொடக்கத்தில் அ.தி.மு.க.வுக்குள் எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், மா.செ. குமரகுருவின் தீவிர களப்பணி, பா.ம.க.வின் கணிசமான செல்வாக்கால் முந்துகிறார். தே.மு.தி.க. சார்பாக விஜயகுமார், நாம் தமிழர் முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ரிஷிவந்தியம்

ra

கார்த்திகேயன் தி.மு.க. - சந்தோஷ் அ.தி.மு.க. - பிரபுசிவராஜ் தே.மு.தி.க.

சிட்டிங் எம்.எல்.ஏ.வாக செய்த பணிகள், தாராளமாகச் செய்யும் செலவு, கூட்டணி பலம் ஆகியவை கார்த்திகேயனுக்கு கை கொடுக்கிறது. பா.ம.க.வின் வாக்கு சந்தோஷுக்கு பலமாக உள்ளது. தே.மு.தி.க.வின் பிரபுசிவராஜ் செல்வாக்குடன் உள்ளார். ம.நீ.ம.வின் சண்முகசுந்தரம், நாம் தமிழர் சுரேஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

உளுந்தூர்பேட்டை

dd

குமரகுரு அ.தி.மு.க. - மணிகண்ணன் தி.மு.க.

முதல்வரின் நண்பராக இருப்பதும், தண்ணீராகச் செலவழிக்கும் பணமும் அ.தி.மு.க.வின் குமரகுருவுக்கு பலம். பல்வேறு தொகுதிப்பணிகளும், மக்கள் செல்வாக்கும், தி.மு.க.வின் மணிகண்ணனுக்கு பலம். கடும்போட்டி நிலவுகிறது. அ.ம.மு.க. ராஜாமணி, ம.நீ.ம. சின்னையன், நா.த.க. புஷ்பகிரி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

சங்கராபுரம்

dd

உதயசூரியன் தி.மு.க.- ராஜா பா.ம.க.

சிட்டிங் எம்.எல்.ஏ.வான உதயசூரியன், அரசியல் நெளிவுசுளிவோடு, கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்வது பலம். பா.ம.க.வின் டாக்டர் ராஜாவுக்கு வன்னியர் வாக்குகளும், அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பும் பலம். அனைந்திந்திய முஸ்லிம் கட்சியின் முஜிபுர் ரஹ்மான், நா.த.கவின் ரஜியாமா களத்தில் உள்ளனர்.

போடி

bb

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. – - தங்க.தமிழ்ச்செல்வன் தி.மு.க.

சொந்த பலம் நிறைந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு சொந்தத் தொகுதியிலே எதிர்ப்பு, மகன்கள் சிறைபிடிக்கப்பட்டது என நெகடிவ்வுக்கும் குறைவில்லை. ஓ.பி.எஸ். சொத்துக்களை அம்பலப்படுத்துதல், இடைவிடாத தீவிரப் பிரச்சாரத்தோடு, சரிக்குச் சரியாக போட்டியிடும் தி.மு.க. தங்க.தமிழ்ச்செல்வன், ஓ.பி.எஸ்.ஸின் கவலையை அதிகரித்திருக்கிறார். கடும்போட்டிக் களமாக உள்ளது.

ஆண்டிப்பட்டி

anti

மகாராஜன்-தி.மு.க. - லோகிராஜன் -அ.தி.மு.க.

அ.தி.மு.க.வில் முறுக்கோடை ராமருக்கு சீட் தரப்படாததில் ஓ.பி.எஸ். சமூக மக்கள் அதிருப்தி லோகிராஜனுக்கு குழிபறிக்கிறது. அ.ம.மு.க. ஜெயக்குமார், நா.த.க. ஜெயக்குமார், ம.நீ.ம. குணசேகரனும் களத்தில். இரண்டு ராஜன்களில் தி.மு.க. ராஜன் கிரீடத்தை நோக்கி முன்னேறுகிறார்.

கம்பம்

k

ராமகிருஷ்ணன் தி.மு.க. - சையதுகான் அ.தி.மு.க.

கடந்த முறை தவறவிட்ட தி.மு.க. ராமகிருஷ்ணனுக்கு தொகுதியில் நல்ல பெயர். சையதுகான், எடப்பாடி ஆதரவாளர் ஜக்கையனை பின்னுக்குத்தள்ளி வேட்பாளரான சையதுகானுக்கு முஸ்லிம் ஆதரவும் இல்லை உட்கட்சி ஆதரவும் இல்லை. நா.த.க. அனிஸ்பாத்திமா, அ.ம.மு.க. சுரேஷ், ம.நீ.ம. வெங்கடேஷ் ஓட்டுப் பிரிப்பாளர்கள் மட்டுமே. ராமகிருஷ்ணனுக்கு கெட்டியான வாய்ப்பு.

பெரியகுளம் (தனி)

pp

சரவணக்குமார் தி.மு.க. - முருகன் அ.தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ.+ தொகுதியில் நல்ல பெயர்+ வி.சி.க. வாக்குவங்கி சரவணக்குமாரின் பலம். கட்சிக்காரர்கள் அதிருப்தி+ சென்னை வேட்பாளர் என்பது முருகனின் பலவீனம். அ.ம.மு.க.வின் கதிர்காமுவும் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் செய்ய, ம.நீ.ம. பாண்டியராஜனும், நா.த.க. விமலாவும் களத்தில் நிற்கின்றனர். மக்கள் தராசு சரவணக்குமார் பக்கம் சாய்கிறது.

செஞ்சி

cc

செஞ்சி மஸ்தான் (தி.மு.க.) - ராஜேந்திரன் (பா.ம.க.) - கௌதம் சாகர் அ.ம.மு.க. - ஸ்ரீபதி நாம் தமிழர் கட்சி

முஸ்லிம் வாக்குகள்+ மக்கள் அறிமுகம் + கூட்டணி மஸ்தானின் பலம். அவரைப்போலவே பிரபலமானவர் பா.ம.க. வேட்பாளரான ராஜேந்திரன். அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் பலமாக இருக்கிறது. யார் வெற்றிக்கோட்டைத் தாண்டினாலும் குறைவான வாக்குகள்தான் வித்தியாசம்.

மயிலம்

mylam

டாக்டர் மாசிலாமணி - தி.மு.க. - சிவகுமார் - பா.ம.க.

அன்புமணிக்கு நெருக்கமான சிவகுமார் தீவிரமாக ஓட்டு வேட்டையாடினாலும், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி செய்துவரும் சேவைகளும், கட்சிகள் கடந்த நற்பெயரும் முந்த வைக்கிறது. தே.மு.தி.க. சுந்தரேசன், நாம் தமிழர் உமா மகேஸ்வரி, ஐ.ஜே.கே ஸ்ரீதர் களத்தில் உள்ளனர்.

திண்டிவனம் (தனி)

t

அர்ச்சுனன் அ.தி.மு.க. - சீதாபதி தி.மு.க.

சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க. சீதாபதியை விட ஓட்டு வேட்டையில் அ.தி.மு.க. அர்ச்சுனன் முந்தி கடும் போட்டியை உருவாக்குகிறார். சீதாபதியின் நல்ல அணுகுமுறை அவருக்கு பிளஸ் ஆகிறது. ஆனால் அ.தி.மு.க.வை எட்டிப்பிடிக்க சீதாபதி இன்னும் வேகமாக ஓட வேண்டும். தே.மு.தி.க. சந்திரலேகா கவனம் பெறுகிறார். ம.நீ.ம. பொய்யாமொழி, நா.த.க. பேச்சிமுத்து களத்தில் உள்ளனர்.

வானூர் (தனி)

va

வன்னியரசு - விடுதலை சிறுத்தைகள் - சக்கரபாணி - அ.தி.மு.க.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் வி.சி.க.வுக்கு கிடைத்த அதிக வாக்குகள், வன்னியரசுக்கு பலம். சிட்டிங் எம்.எல்.ஏ. சக்கரபாணிக்கு அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணியால் வாக்குகள் பிரிவது பலவீனமாக உள்ளது. தே.மு.தி.க சார்பில் கணபதி, நாம் தமிழர் சார்பில் லட்சுமி களத்தில் உள்ளனர்.

விழுப்புரம்

ve

சி.வி.சண்முகம் அ.தி.மு.க. - லட்சுமணன் -தி.மு.க.

அ.தி.மு.க.விலிருந்து வந்த லட்சுமணன் தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டி ருப்பதால் உடன்பிறப்புகள் இனிதான் வேகம் காட்ட வேண்டும். நலத்திட்டங்கள் மூலம் அமைச்சர் சண்முகம் செல்வாக்கு பெற்றுள்ளார் .ம.நீ.ம. தாஸ், தே.மு.தி.க. பாலசுந்தரம், நா.த.க.செல்வம் களத்தில் உள்ளனர். தி.மு.க. தலைமையின் கவனம் தொகுதிப்பக்கம் திரும்ப வேண்டும் என கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.

விக்கிரவாண்டி

vv

முத்தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க. - புகழேந்தி தி.மு.க.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வாக்காளர்களைக் கவரும் உதவிகளும், பா.ம.க.வின் ஆதரவும் முத்தமிழ்ச்செல்வனுக்கு பலம் தந்து முன்னேற வைக்கிறது. தி.மு.க.வின் புகழேந்திக்கு கூட்டணிக்கட்சிகளின் ஆதரவும், இடைத்தேர்தல் தோல்வியால் எழும் அனுதாபமும் பலம். நா.த.க.வின் ஷிபா ஆஸ்மி, அ.ம.மு.க.வின் துரவி ஐயனார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திருக்கோவிலூர்

dd

பொன்முடி தி.மு.க. - கலிவரதன் பா.ஜ.க.- வெங்கடேசன் தே.மு.தி.க.

பொன்முடிக்கு சொந்த செல்வாக்கும் கட்சித்தலைமையின் ஆதரவும் பலம். அதில் முன்னேறுகிறார். பா.ஜ.க.வின் கலிவரதனுக்கு வன்னியர்கள் ஆதரவு பலம். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாதது பலவீனம். தே.மு.தி.க.வின் வெங்கடேசனும் கடும் போட்டியை ஏற்படுத்துகிறார். நா.த.க. முருகன் களத்தில் உள்ளார்.

வேலூர்

ve

கார்த்திகேயன் தி.மு.க. - அப்பு அ.தி.மு.க.

முதலியார் சமூக வாக்குகளை அனைவரும் பிரித்துக்கொள்வதால் சிறுபான்மை வாக்கு மற்றும் எளிமையான செயல்பாடுகளால் கார்த்திகேயன் முந்துகிறார். அ.தி.மு.க. அப்புவின் முரட்டுத்தனம் அவரை பின்தங்க வைக்கிறது. அ.ம.மு.க. தர்மலிங்கம், நா.த.க. பூங்குன்றன், ம.நீ.ம. விக்ரம் களத்தில் நிற்கிறார்கள்.

காட்பாடி

dd

துரைமுருகன் தி.மு.க. - ராமு அ.தி.மு.க.

வன்னியர் சாதி ஓட்டுகள், தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.வாக இருந்து செய்த சாதனைகள் துரைமுருகனின் பலம். வன்னியரல்லாத அ.தி.மு.க. ராமு, வேறு தொகுதியைச் சேர்ந்தவர். பா.ம.க. ஒத்துழைப்பு தரவில்லை... அதனால் பின்தங்கியிருக்கிறார். அ.ம.மு.க. ராஜா, நா.த.க. திருக்குமரன், ஐ.ஜே.கே. சுதர்சன் களத்தில் உள்ளனர்.

அணைக்கட்டு

d

நந்தகுமார் தி.மு.க. - வேலழகன் அ.தி.மு.க.

வேலழகன் வன்னியர், அதனால் பா.ம.க. கை கொடுக்கிறது. தி.மு.க. நந்தகுமார் நாயுடு. பட்டியலினத்தவர். அவருக்கு (அருந்ததியர்) வாக்குகள், எம்.எல்.ஏ.வாக செய்த செயல்பாடுகள் பலமாக உள்ளது. கடும் போட்டி நிலவுகிறது. அ.ம.மு.க. சதீஷ்குமார், ஐ.ஜே.கே. ராஜசேகர், நா.த.க. சுமித்ரா களத்தில் உள்ளனர்.

கே.வி.குப்பம் (தனி)

dd

சீதாராமன் தி.மு.க. - பொன்.மூர்த்தி புரட்சி பாரதம்

பெரும்பலத்தில் உள்ள வன்னியர்கள் வெளியூர்க்காரரான மூர்த்திக்கு வேலை செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். இரண்டு முறை தோற்ற தி.மு.க. சீதாராமனின் அறிமுகமும், அவர் மீதான அனுதாபமும் கைகொடுக்கிறது. பணம்தான் முடிவு செய்யும். நா.த.க. திவ்யா, ஐ.ஜே.கே. வெங்கடசாமி, தே.மு.தி.க. தனசீலன் களத்தில் உள்ளனர்.

nkn260321
இதையும் படியுங்கள்
Subscribe