திருச்சி -சோமரசம்பேட்டை, அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் சிவகுமார் மற்றும் மல்லியம்பத்து ஊராட்சியின் தலைவர் விக்னேஷ்வரன் இருவரும் நண்பர்கள். கடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரான தி.மு.க. ஒ.செ. கதிர்வேல், சுயேட்சையாக நின்ற விக்னேஷ்வரனிடம் தோல்வியைச் சந்தித்தார். அதோடு, அன்னகாமாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் பொறுப்பில் தன்னைச் சேர்க்காததும் கதிர்வேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, கதிர்வேல் தொடர்ச்சியாக ஊராட்சிமன்றப் பணிகளில் இடையூறு செய்து வந்திருக்கிறார்.

dd

அதோடு, அன்னகாமாட்சி அம்மன் கோயிலுக்குள் கதிர்வேலுவின் ஆதரவாளர்கள், ஒரு பன்றியைக் கொண்டுவந்து பலியிட்டுச் சமைத்துச் சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்பட்ட அடிதடியில், கோவில் பூசாரியும், காவலாளியும் தாக்கப்பட்டதில், பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் புகாரளித்தும், அமைச்சர் நேருவின் ஆதரவாளர் என்ற காரணத்தால் கதிர்வேல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ddகதிர்வேல், ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபோது, ஊராட்சி மன்றத்திற்குச் சொந்த மான இடுகாட்டுக்குரிய 5 சென்ட் இடத்தைப் பட்டா போட்டு விற்பனை செய்துள்ளார். மேலும், இப்பகுதியிலுள்ள விளைநிலங்கள் அனைத்துக்கும் விற்பனை செய்ய என்.ஓ.சி கொடுத்து, வாசன் ரியல் எஸ்டேட் அதிபரான ரவி முருகையாவிற்கு விற்பனை செய்துள்ளார். தற்போது, அந்த ஊராட்சிக்கு ஒரு பூங்கா அமைக்க இடுகாட்டுக் கான பகுதியைப் பயன்படுத்த முயற்சித்தபோது அந்த இடம் விற்கப்பட்டது தெரியவந்தது.

Advertisment

இந்நிலையில் கதிர்வேல், நாகராஜன், மணப்பாறை இ.உ.ஞ. ரமேஷ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட செங்கதிர்ச்சோலையைச் சேர்ந்த சிலர், ரவி முருகையாவிடம் பணம் பெற்றுக்கொண்டு, நிலத்தைத் தங்களது பெயரிலேயே கிரையம் செய்து கொண்டு அனுபவித்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிவகுமார் புகார் அளித்திருந்தார். அதையடுத்து ஆவணப் பதிவுகளை முறைப்படுத்தி, ஊராட்சிக்குச் சொந்தமான 5 சென்ட் இடத்தை அளந்த அதிகாரி கள், அளவைக் கற்களை ஊன்றிச் சென்றுள்ளனர். ஆனால் இரவோடு இரவாக அக்கற்களை மர்ம நபர்கள் அப்புறப்படுத்தியுள்ளார்கள். இதை யடுத்து, ஊராட்சிமன்றம் சார்பில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்த இடத்தை மீட்டெடுப் பதில், விக்னேஷ்வரனுடன் உறுதுணையாக இருந்தவர் சிவகுமார்.

இந்நிலையில், 28-ம் தேதி மாலை 6 மணியளவில், பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவர், வீட்டு முன்பாக நின்றுகொண்டிருந்த சிவகுமாரை சவுக்குக் கட்டையால் சரமாரியாகத் தாக்கினர். தடுக்கவந்த சிவகுமாரின் மனைவி மைதிலியைத் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சிவகுமாரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

dmk

Advertisment

இச்சம்பவம் குறித்து சிவகுமாரின் மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், "எங்களுக்கு யோகேஷ் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். கணவர் சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஷ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கற்சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினர். அதற்கு என் கணவரும் உறுதுணையாக இருந்தார். எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன், அங்கமுத்து மகன் தீபக், வாசன் எஸ்டேட் தொழிலதிபர் ரவி முருகையா ஆகியோர் பிரச்சினை செய்துகொண்டிருந்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன், தீபக் மற்றும் கொலைக்கு காரணமாக ddஇருந்த தி.மு.க. பிரமுகர் கதிர்வேல், ரவி முருகையா உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 29-11-2021 அன்று பிரேத பரிசோதனை முடிந்ததும், கதிர்வேல் மற்றும் ரவிமுருகையாவைக் கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று, திருச்சி தலைமை அரசு மருத்துவமனை முன்பு சிவகுமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பிரச் சனை குறித்து மல்லியம்பத்து ஊராட்சிமன்றத் தலைவர் விக் னேஷ்வரனிடம் பேசுகையில், "இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் மற்றும் தீபக் இருவரும் தங்களுடைய வாக்கு மூலத்தில் கதிர்வேல் மற்றும் ரவிமுருகையாவிற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித் துள்ளதால், காவல்துறை கொலையாளிகளைக் கைது செய்யவில்லை. கதிர்வேல் அறிவுரையின்படி கொலையாளிகளே சரணடைந்து, சிவகுமாரைக் கொலை செய்ததற்கு வேறு காரணம் உள்ள தாகவும் தெரிவித்துள்ளனர். முதல் தகவலறிக்கை யில், கதிர்வேல் மற்றும் ரவிமுருகையாவின் பெயர்கள் உள்ள நிலையில், நேற்று அமைச்சர் நேருவிடம் காவல்துறை அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து பேசியதில், கதிர்வேல் மற்றும் ரவிமுருகையாவின் பெயர் சேர்க்கப்படாமல் வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறியதாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் அரசியல் தலையீடு இல்லாதிருந்தால்தான் அதிகாரிகள் நேர்மையாகச் செயல்படுவார்கள்'' என்றார்.