Advertisment

நக்கீரன் சொன்னது போல் சி.பி.ஐ. வலையில் விஜய்!

vijay


னநாயகனுக்காக தணிக்கைச் சிக்கல்களை எதிர்கொண்ட விஜய், கரூர் உயிர்ப்பலிகளுக்காக டெல்லியில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்ற விஜய்க்கு, தேவையான பாதுகாப்பு கொடுக் கப்பட்டது. 

Advertisment

இதற்கிடையே, "ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாததால் விஜய் மட்டு மல்ல ஒட்டுமொத்த அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஜனநாயகனுக்கு ஏற்பட்ட சிக்கலில் அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் பலரும் சென்சார் போர்டுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கொதித்த நிலையில், விஜய் மட்டும் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் மௌனமாக இருந்துவருகிறார். இது, த.வெ.க. தொண்டர்களிடம் ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  

Advertisment

விஜய்யின் ஜனநாயகனுக்கு சென்சார் சர்டிஃபிகேட் தராமல் இழுத்தடிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சான்றிதழ் தரச்சொல்லி உத்தரவிட்டார் தனி நீதிபதி ஆஷா. இதனால் திட்டமிட்டபடி 9-ந்தேதி படம் ரிலீஸாகும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், ஆஷாவின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான முதல் அமர்வில், உடனடியாக மேல்முறையீடு செய்தது மத்திய தணிக்கை வாரியம். 

இந்த மேல்முறையீட்டு மனு 9-ந்தேதியே எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சென்சார் போர்ட் தரப்பில் சிலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், ஜன நாயகன் படத்தயாரிப்பு தரப்பில் முகுல் ரஹோத்தகியும் களமிறங்கி னர். இரு தரப்பும் சீனியர் கவுன் சில்களை களமிறக்கியதால் சென்சார் சர்டிஃபிகேட் விவகாரம் ஏகத்துக்கும் பரபரப்பானது. 

vijay1

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனால், பொங்கலுக்கு "ஜனநாயகன்' ரிலீஸ் ஆகாத சூழல் உருவானதா


னநாயகனுக்காக தணிக்கைச் சிக்கல்களை எதிர்கொண்ட விஜய், கரூர் உயிர்ப்பலிகளுக்காக டெல்லியில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்ற விஜய்க்கு, தேவையான பாதுகாப்பு கொடுக் கப்பட்டது. 

Advertisment

இதற்கிடையே, "ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாததால் விஜய் மட்டு மல்ல ஒட்டுமொத்த அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஜனநாயகனுக்கு ஏற்பட்ட சிக்கலில் அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் பலரும் சென்சார் போர்டுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கொதித்த நிலையில், விஜய் மட்டும் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் மௌனமாக இருந்துவருகிறார். இது, த.வெ.க. தொண்டர்களிடம் ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  

Advertisment

விஜய்யின் ஜனநாயகனுக்கு சென்சார் சர்டிஃபிகேட் தராமல் இழுத்தடிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சான்றிதழ் தரச்சொல்லி உத்தரவிட்டார் தனி நீதிபதி ஆஷா. இதனால் திட்டமிட்டபடி 9-ந்தேதி படம் ரிலீஸாகும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், ஆஷாவின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான முதல் அமர்வில், உடனடியாக மேல்முறையீடு செய்தது மத்திய தணிக்கை வாரியம். 

இந்த மேல்முறையீட்டு மனு 9-ந்தேதியே எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சென்சார் போர்ட் தரப்பில் சிலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், ஜன நாயகன் படத்தயாரிப்பு தரப்பில் முகுல் ரஹோத்தகியும் களமிறங்கி னர். இரு தரப்பும் சீனியர் கவுன் சில்களை களமிறக்கியதால் சென்சார் சர்டிஃபிகேட் விவகாரம் ஏகத்துக்கும் பரபரப்பானது. 

vijay1

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனால், பொங்கலுக்கு "ஜனநாயகன்' ரிலீஸ் ஆகாத சூழல் உருவானதால் விஜய், படத்தின் தயாரிப்பாளர், விஜய் ரசிகர்கள், த.வெ.க.வினர் என பலரும் அப்-செட்டானார்கள். 

அதேசமயம், ஜனநாயகனுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் போர்க்குரல் உயர்த்திய நிலையில்... விஜய் மட்டும் அமைதியாகவே இருந்தார். இது, அவருக்கு எதிராக எதிர் மறை விமர்சனங்களை த.வெ.க.விலேயே உரு வாகியிருக்கிறது. இந்தநிலையில், 21-ஆம் தேதியும் படத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்கிற சந்தேகத்தில் இருந்து வருகிறது படத் தயாரிப்பு நிறுவனம். 

விஜய் மௌனமாக இருப்பது ஏன்? என விசாரித்தபோது, "மேல்முறையீட்டிலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என விஜய் நம்பிக்கையுடன் இருந்தார். சாதகமான தீர்ப்பு கிடைக்காததால் அவருக்கு செம கோபம். ஜனநாயகனின் தயாரிப்பாளர் மற்றும் த.வெ.க.வின் முக்கியஸ்தர்கள் விஜய்யிடம் இதுபற்றிப் பேச, ஒரு சினிமாவை ரிலீஸ் செய்ய இவ்வளவு போராட வேண்டுமா? மக்கள் ஜனநாயகத்துக்கு முன்னால் இவர்களின் அரசியல் அதிகாரம் எந்தளவுக்கு போகுதுன்னு நானும் பார்க்கிறேன். ஒரு சினிமாவைப் பார்த்து ஏன் இந்தளவுக்கு பயப்படுகிறார்கள்? பதட்டப்படுகிறார்கள்? சென்சார் போர்டை கண்டித்து நான் அறிக்கை வெளியிடலாம்னு நினைக்கிறேன்'' எனச் சொல்லியிருக்கிறார். 

ஆனால், படத்தின் தயாரிப்பாளரோ, "வேண்டாம்; முதலில் சென்சார் சர்டிஃபிகேட் வரட்டும், அப்பறம் பேசிக்கலாம். இப்போதைக்கு நீங்கள் ஏதேனும் பேசி, அது வேறு ஒரு சிக்கலையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடப்போகிறது.  படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத சூழலை உருவாக்கி விட்டார்கள். 21ஆம் தேதி விசாரணைக்குப் பிறகும் தடை ஏற்படுத்தப்பட்டால், அதன்பிறகு உங்கள் கோபத்தைக் காட்டுங்கள் என கேட்டுக் கொண் டார். அதனால்தான் மௌனமாக இருக்கிறார் விஜய்''’என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள். 

இந்த நிலையில், சினிமா விமர்சகர்களோ,  ஜனநாயகனை சாதாரணமாக ரிலீஸாக விட்டி ருந்தாலே அது பாட்டுக்கு வந்த சுவடே இல்லாமல் முடங்கிப்போயிருக்கும். தேவையில்லாமல் இந்த அளவுக்கு ஹைப் உருவாகியிருக்காது. ஒரு மொக்கை படத்துக்கு இவ்வளவு ஹைப் தேவையா? நாங்கள் கேள்விப்படுவதை வைத்து மதிப்பிடுகிறபோது, அந்தளவுக்கெல்லாம் அந்த படம் வொர்த் இல்லை. ஒருவேளை, விஜய்க்கு தேவைப்படும் அரசியலை முன்னெடுப்பதற்காக இப்படிப்பட்ட ஹைப் உருவாக்கப்படு கிறதோ?''’என்று கேள்வி எழுப்புகின்றனர்.  

இதற்கிடையே, ஜனநாயகனை மையப்படுத்தி ஏற்படுத்தப்படும் அரசியலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் விஜய்க்குமிடையே எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் உருவாகி யிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, விஜய் தனித்துப் போட்டியிடுவதில் அமித்ஷாவின் விருப்பமும் அடக்கம் என்கிறார்கள் பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்களுக்கு நெருக்க மான அரசியல் வியூக வகுப்பாளர்கள். 

vijay2

அவர்களிடம் நாம் பேசியபோது, ‘"தேசிய அளவில் பா.ஜ.க.வினரால் உருவாக்கப்பட்ட  அறிவுஜீவிகளிடம் அண்மையில் பெரிய அள விலான ஒரு விவாதத்தை அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்த விவாதமே, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பானதுதான். தமிழக அரசியல் சூழல்களை அவர்கள் விவாதித்தபோது, தி.மு.க.வை எப்படி வீழ்த்துவது? என்பதுதான் அடிப்படையாக இருந்துள்ளது. 

அந்த விவாதத்தில், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அதன் கட்டமைப்பு, தொண் டர்களின் எண்ணிக்கை, சிறுபான்மையினரின் ஆதரவு, அரசு ஊழியர்கள் ஆதரவு, கூட்டணி பலம் ஆகியவைதான். இதில் கட்டமைப்பையும் தொண்டர்களின் பலத்தையும் உடைக்க முடியாது. ஆனால், மற்றவைகளை உடைக்க முடியும். 

குறிப்பாக, ஓய்யூவூதிய கோரிக்கை விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களின் ஆதரவு இந்த முறை முழுமையாக தி.மு.க.வுக்கு கிடைக்காது என உளவுத்துறை நமக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதனால் அரசு ஊழியர்களை பற்றி யோசிக்கத் தேவையில்லை. 

அடுத்து கூட்டணி பலம். ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் தி.மு.க.விடம் பிரச்சினை பண்ணிக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை ஊதி பெரிதாக்கப்பட்டால் காங்கிரசை கழட்டி விட தி.மு.க. தயங்காது. ஏன்னா எந்த சூழலிலும், கூட்டணி ஆட்சிக்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ள மாட்டார்.  தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேறினால், அக்கட்சியை நடிகர் விஜய் சேர்த்துக் கொள்ளக்கூடாது. விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்கிற துணிச்சலில்தான் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. காங்கிரசை சேர்த்துக்கொள்ளக் கூடாது என விஜய்க்கு அறிவுறுத்த வேண்டும்.  

அதேசமயம், விஜய் கட்சியில் சேர வாய்ப்பில்லை எனத் தெரிந்தால், தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியே வராது. ஆனால், தி.மு.க. கொடுக்கிற சீட்டைத்தான் காங்கிரஸ் பெறும். இதனால், வலிமையான கூட்டணி எனச் சொல்லப்பட்ட தி.மு.க. கூட்டணிக்குள், தேர்தல் களத்தில் பழைய இணக்கம் இருக்காது. இது, தி.மு.க. கூட்டணிக்கு மைனஸ். மேலும், ஜெயித்து வந்தால் நமக்கு நெருக்கடி தருவார்கள் என கணக்கிட்டு, தேர்தலில் காங்கிரசை தி.மு.க. தோற் கடிக்கவும் செய்யும். அந்தவகையில், கூட்டணி ஆட்சி கேட்டு காங்கிரஸ் மிரட்டுவது நமக்கு சாதகம்தான். அதனால், காங்கிரசை விஜய் சேர்த்துக்கொள்ளக்கூடாது என எச்சரிக்கை செய்ய வேண்டும். 

அடுத்து, தி.மு.க.வுக்கு ஆதரவான சிறுபான்மையினரின் பார்வை, தற்போது விஜய்க்கு சாதகமாக இருக்கிறது. அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யை இழுத்தால், அது தி.மு.க.வுக்குத்தான் லாபம். அதனால், விஜய் தனித்துப் போட்டியிடுவதுதான் தி.மு.க.வுக்கு வலிமையான சிறுபான்மையினரின் ஆதரவை உடைக்க முடியும். 

அது மட்டுமல்ல, பா.ஜ.க.வை எதிர்க்கும் சக்தி தி.மு.க.வுக்கு மட்டுமே இருக்கிறது என்கிற அரசியல் பிம்பத்தை கட்டமைத்து வைத்துள்ளது தி.மு.க. இதனால்,  தமிழகத்திலுள்ள பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க. அறுவடை செய்துகொண்டி ருக்கிறது. இந்த அறுவடையை திசை திருப்ப வேண்டுமானால், பா.ஜ.க.வையும் விஜய் கடுமையாக விமர்சிக்க வேண்டும். அப்போது தான், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களில் தி.மு.க.வை விரும்பாதவர்கள் குறிப்பாக இளைஞர்கள், விஜய் பக்கம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் பா.ஜ.க.வையும் விஜய் விமர்சிக்க வேண்டும். 

தி.மு.க.வை எதிர்ப்பது போன்று பா.ஜ.க.வை யும் விஜய் எதிர்த்தால்தான், தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்கும் சிறுபான்மையினரின் ஆதரவு மற்றும் பா.ஜ.க. எதிப்பாளர்களின் ஆதரவு ஆகிய இரண்டையும் தி.மு.க.வுக்கு செல்லாமல் தடுக்க முடியும். இந்த இரண்டு ஆதரவும், அ.தி.மு.க. -பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்கிற சூழலில், அது, விஜய்க்கு சென்றால்தான் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை தடுக்கலாம் என டெல்லியில் நடந்த அந்த ஆலோ சனையில் பல்வேறு ஆங்கிளில் விவாதித்திருக்கிறார்கள். 

தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி, விஜய் கட்சி என மும்முனைப் போட்டி கடுமையாக இருந்தால், யாருக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்காது. இதைவைத்து, தேர்தலுக்குப் பிறகு, விஜய் கணிசமாக வெற்றி பெற்றிருந்தால், அவரையும் நம் பக்கம் இழுத்து பா.ஜ.க. தலை மையில் கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும் என்கிற திட்ட மிட்டு, காய்களை நகர்த்தி வருகிறார் அமித்ஷா. 

இந்த வியூகங்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளது "ஜனநாயகன்'. இந்தப் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்கள் வெளிப்படையாகத் தெரிந்ததுதான். இதை வைத்து, எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை டெல்லியோடு போட்டுக்கொள்ள விஜய்க்கு நெருக்கடி தரப்படுகிறது. விரைவில் அது அம்பல மாகும்''’என்று விவரிக்கிறார்கள் அரசியல் வியூக வகுப்பாளர்கள்.  

ஆக, ஜனநாயகனை வைத்து ஏகப்பட்ட அரசியல் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.க., சி.பி.ஐ. விசாரணையில், தங்களின் வியூகத்தின்படி அனைத்து விசயங்களும் விஜய்க்கு புகுத்தப்படுகிறது. ஆக, பா.ஜ.க.வின் வலையில் எளிதாக சிக்கிக்கொண்டிருக்கிறார் விஜய்! 

nkn140126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe