பா.ஜ.க. மா.த. லண்டனுக்கு சென்றபிறகு பா.ஜ.க. வில் மோதல் உச்ச கட்டத்தை அடைந் துள்ளது. லண்டனில் ஜாலியாக மலைகளில் ‘டிரெக்கிங்’ ஏறி விளையாடிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. மா.த. புதிதாக நியமிக்கப்பட்ட பா.ஜ.க. நிர்வாகக் குழுவை வரவேற்று சிறு அறிக்கை கூட கொடுக்க வில்லை. நிர்வாகக் குழுவின் தலைவர் ஹெச்.ராஜா கவர்னரை போய் பார்த்ததும் லண்டனிலிருந்து கமலாலயத்துக்குப் போன் செய்தார் பா.ஜ.க. மா.த. “எனது மாநிலத் தலைவர் அறையைப் பூட்டுங்கள். எனது அறைக்கோ எனது தலைவர் ஆசனத்துக்கோ ஹெச்.ராஜா வந்து அமரக்கூடாது, அவர் நிர்வாகக் குழு தலைவரே தவிர மாநிலக்குழு அல்ல” என கடுமையாக கமலாலய நிர்வாகிகளிடம் பேசி னார் பா.ஜ.க. மா.த. அவரின் கோபத்தைக் கண்ட நிர்வாகிகள் அவரது அறைக்கு பூட்டுப் போட்டு விட்டு சாவியை அவரது வீட்டில் ஒப்படைத்துவிட்டார்கள்.

Advertisment

ss

அந்த அறையில் பா.ஜ.க. மா.த. இதுவரை தலைவராக இருந்தபோது நடந்த பல ரகசியமான நடவடிக்கைகள், அது தொடர் பான ஆவணங்கள் மற்றும் கேமராக்கள் இருந்தன. அதையெல்லாம் தனது ஆட்களை விட்டு தனியாக எடுத்துச் சென்றிருக்கிறார் பா.ஜ.க. மா.த. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு பா.ஜ.க. மா.த.வின் விருப்பப்படி நியமிக்கப்படவில்லை. இவையனைத்தும் அரவிந்த் மேனன் என்கிற மேலிடப் பொறுப்பாளர் தயாரித்த லிஸ்ட்படிதான் அமைக்கப் பட்டுள்ளது. அந்த லிஸ்ட் டில் தமிழிசை இடம் பெறவில்லை.

Advertisment

தமிழக பிராமணர் களுக்கு பா.ஜ.க. மா.த. முக்கியத்துவம் தரவில்லை என்கிற புகார் நீண்ட காலமாக இருந்தது. அதை சரிக்கட்டும் வகையில் பா.ஜ.க. விற்கு எப்பொழுதும் ஓட்டுப்போடும் பிராமணர்களை சமாதானப்படுத்த ஹெச்.ராஜாவை பொறுப்புக்குழு தலைவராக நியமித்தனர். அதேபோல் அந்தக் குழுவில் மாற்றுக் கட்சியிலிருந்து பி.ஜே.பி.க்கு வந்த யாரும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டனர். இது பா.ஜ.க. மா.த. பரிந்துரைத்த குழுவல்ல. கேசவ வினாயகத்தை பொறுப்புக்குழு தலைவராக நியமிக்குமாறு பரிந்துரை செய்திருந்தார். அவர் பா.ஜ.க. மேலிடப் பொறுப் பாளர்களான சுதாகர் ரெட்டி, அரவிந்த்மேனன் ஆகியோரை மதிக்கவேயில்லை.

அரவிந்த் மேனன் மகராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக இருந்தவர். மகாராஷ்டிராவில் இன்றளவும் பா.ஜ.க. ஒரு பெரிய சக்தியாக வளர்ந்ததற்கு அரவிந்த் மேனனும் ஒரு முக்கியக் காரணம். அதேபோல் ஒடிசாவில் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதற்கும் அவரது உழைப்பு ஒரு காரணம். மகாராஷ்ட்ராவில் அவர் மீது எழுந்த ஒரு புகாரின் காரணமாக அவரை தமிழகப் பொறுப்பாளராக நியமித்தார்கள்.

Advertisment

அவரது நியமனத்துக்கு மாநிலத் தலைவரான பா.ஜ.க. மா.த. முதலில் வாழ்த்து சொல்லவில்லை. பிறகு சில நாட்கள் கழித்தே வாழ்த்து சொன்னார். ஆடுமலை போனவுடன் கேசவ விநாயகத்துக்கு பொறுப்பு கொடுக்க வேண் டும் என்கிற பா.ஜ.க. மா.த.வின் சிபாரிசை முழுவதுமாக நிராகரித்த அரவிந்த் மேனன் மேலிடத்துடன் பேசி புதிய நிர்வாகக் குழுவை அறிவித்து விட்டார்.

dadf

புதிய நிர்வாகக் குழுவில் பொறுப் பேற்றுள்ளவர்கள் கூட்டணியை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என வரிசையாக அறிவித்தது, ‘இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என அ.தி.மு.க. மற்றும் எடப்பாடியை எதிர்த்து மிகக் கடுமையாக பேசிவிட்டு லண்டனுக்குச் சென்ற பா.ஜ.க. மா.த.வுக்கு எதிராக அமைந்தது. இதை அவர் ரசிக்கவில்லை. கமிட்டி கன்வீனர் ஹெச்.ராஜாவை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டுமென கட்சி மேலிடம் இந்த நிர்வாகக்குழுவை அமைக்கும் உத்தரவிலேயே குறிப்பிட்டிருந்தது. ‘நான் லண்டனுக்குப் போனாலும் அங்கிருந்து ஆன்லைன் மூலம் அரசியல் செய்வேன் ’ என பா.ஜ.க. மா.த. சொல்லியிருந்தார். தன்னைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என சொல்லாமல் ஹெச்.ராஜாவை கேட்டு முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டி ருப்பது பா.ஜ.க. மா.த.வுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கமிட்டி தலைவர் ஆனதும் ஹெச்.ராஜா நேராகச் சென்று கவர்னரைப் பார்த்தார். அது பா.ஜ.க. மா.த.வுக்கு பிடிக்கவில்லை. பா.ஜ.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் தகுதி ஆகஸ்ட் மாதத்தோடு காலாவதி ஆகிவிடுகிறது. புதிதாக உறுப்பினர்களை சேர்த்து அவர்கள்தான் புதிய மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பா.ஜ.க. மா.த.வின் பதவிக் காலமும் காலாவதியாகி விட்டது. இப்பொழுது அதிகாரத்தில் இருப்பது இந்த நிர்வாகக் குழு மட்டும்தான். இவர்கள் பா.ஜ.க. மா.த. மீடியாவில் ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பத்தை உடைப்பதோடு அவர் நியமித்த மாவட்டத் தலைவர்களையும் மாற்றும் நிலை பா.ஜ.க.வில் உருவாகி உள்ளது. இந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. ஆக்குவேன் என பா.ஜ.க. மா.த. அளித்த வாக்குறுதிக்கு எதிராக நிர்வாகக்குழு செயல்படும் சூழல் உருவாகி உள்ளது. இப்படி அனைத்துவிதத்திலும் அவர். ஒதுக்கப்படுகிறார் என்கிற சூழல் பா.ஜ.க.வில் பெரும் கலவரத்தை உருவாக்கி உள்ளது.

“கமிட்டிமேல் வெறுப்பில் இருக்கும் பா.ஜ.க. மா.த. ஆதரவாளர்கள் கட்சியை விட்டே போவதாக அறிவித்து தங்களது சமூக வலைத்தள கணக்குகளை மூடி வருகிறார்கள். பா.ஜ.க. மா.த.வுக்கும் நிர்வாகக் குழுவிற்கும் இடையே சமாதானம் செய்வதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், கடும் கோபத்தில் இருக்கும் ஆடுமலை சமாதானம் அடையவில்லை. எதிர்காலத்தில் பா.ஜ.க. மா.த. தனிக்கட்சி தொடங்குவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை” என்கிறார்கள் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள்.