சமீப காலங்களில் தைவான், ஜப்பான், இந்தியா என அண்டை நாடுகளிடம் சீனா தொடர்ச்சியாக பிரச்சனைகளை இழுத்துவரு கிறது. அதிகார தோரணையில் உலக நாடுகளிடம் அமெரிக்க நடந்துகொள்வதால் அமெரிக்காவை பெரிய அண்ணன் என்பார்கள். சீனா தற்போது சின்ன அண்ணனாக உருவெடுத்துவருகிறது.
இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பெமா வாங்கியோம் தோங்டாங். இவர் லண்டனிலிருந்து சுற்றுலாவாக ஜப்பான் சென்றார். அவரது விமானம் சீனாவின் ஷாங்காய் சென்று அங்கிருந்தே ஜப்பான் விமானம் ஏறவ
சமீப காலங்களில் தைவான், ஜப்பான், இந்தியா என அண்டை நாடுகளிடம் சீனா தொடர்ச்சியாக பிரச்சனைகளை இழுத்துவரு கிறது. அதிகார தோரணையில் உலக நாடுகளிடம் அமெரிக்க நடந்துகொள்வதால் அமெரிக்காவை பெரிய அண்ணன் என்பார்கள். சீனா தற்போது சின்ன அண்ணனாக உருவெடுத்துவருகிறது.
இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பெமா வாங்கியோம் தோங்டாங். இவர் லண்டனிலிருந்து சுற்றுலாவாக ஜப்பான் சென்றார். அவரது விமானம் சீனாவின் ஷாங்காய் சென்று அங்கிருந்தே ஜப்பான் விமானம் ஏறவேண்டும். ஆனால் விமானத்தில் ஏறவிடாமல் சீன குடிவரவு அதிகாரியொருவர் பெமாவை வரிசையிலிருந்து பிரித்து அழைத்துச்சென்றார்.
இதுகுறித்துக் கேட்ட பெமாவிடம் அவர், "உனது இந்திய பாஸ்போர்ட் செல்லாது, அருணாசலப்பிரதேசம் சீனாவில் இருக்கிறது. நீங்கள் சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்''’என்று சொல்லி அவரை 18 மணி நேரத்துக்குமேல் தடுத்து வைத்திருந்தார். தடுத்துவைத்திருந்த நேரத்தில் அவருக்கு உணவும் வழங்கப்படவில்லை. தனக்கு சட்டபூர்வ உதவி வேண்டும். நண்பர்களைத் தொடர்புகொள்ள விடுங்கள் என அவர் மீண்டும் மீண்டும் கேட்டபிறகே, நண்பரைத் தொடர்புகொள்ள அனுமதித்திருக்கிறார்கள்.
பிறகு அவர் லேண்ட் லைன் மூலம் நண்பர் ஒரு வரைத் தொடர்புகொண்டு, சீனாவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டிருக்கிறார். அவர்கள் வந்து உதவிசெய்த பிறகே அங்கிருந்து கிளம்ப முடிந்தது. “"நான் பதினான்கு ஆண்டுகளாக லண்டனில் இருக்கிறேன். பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். சீனாவில் நடந்த அனுபவம் எங்கும் நடந்ததில்லை. இந்த அனுபவம் மோசமானது. என்னிடம் பேசிய சீன அதிகாரிகள் ஆங்கிலத்தில் கூட பேசவில்லை. மாண்டரின் மொழியிலேயே பேசினார் கள். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாறி மாறி விசாரித்தனர்''’என நொந்துபோய் பேசியுள்ளார்.
இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியால் பெமா ஜப்பான் சென்ற நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது இந்தியா. மாறாக, சீனாவோ, அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கிலோமீட்டர் சீனாவின் பகுதிகள் என கருத்துத் தெரிவித்துள்ளது. அப்பகுதியை இந்தியாதான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை யென்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஷாங்காயில், அருணாசலப்பிரதேசப் பெண் எந்தவிதத்திலும் துன்புறுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் 4000 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்ததாக இந்திய எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தியா சுதந்திரமடைந்தது முதல் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் போக்குக்கு இந்திய அரசு என்ன பதிலடி தரப்போகிறது?
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us