ஆருத்ரா போலி நிதி நிறுவன அதிபர் ஹரீஷ் என்கிற பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப் பட்டதில் அபின் தினேஷ் மோடக் ஐ.பி.எஸ். என்கிற நேர்மையான காவல்துறை அதிகாரியின் போராட்டம் வெற்றி பெற்றுள் து என்கிறார்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். ஹரீஷ் சாதாரண ஆள் அல்ல. பொதுமக்களிடம் அதிக வட்டி தருகிறேன் என கொள்ளையடித்துள் ளான். இவன் பா.ஜ.க.வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் அண்ணாமலைக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டிக்கு அடுத்த நிலையில் இருப்பவன். இவனுக்கு அண்ணாமலை முழு ஆதரவு கொடுத்தார்.
கைது செய்யப்படும் வரை இவனை பா.ஜ.க.விலிருந்து அண்ணாமலை நீக்கவில்லை. பிரதமரை வரவேற்கும் கமிட்டியிலும் இவன் பெயர் இடம்பெற்றிருந்தது. இவன் ஒரு பா.ஜ.க. தலைவர் என்கிற அடையாளத்துடன் பா.ஜ.க. கொடி பொருத்திய காரில் இந்தியா முழுவதும் சுற்றுவதற்கு அண்ணாமலை அனுமதியளித்தார். இவனை தேடப்படும் குற்றவாளியாக அபின் தினேஷ் மோடக் அறிவித்தார். உடனே இவனை பிரதமரை வரவேற்கும் கமிட்டியில் உறுப்பினராக அண்ணாமலை அறிவித்தார். அத்துடன் டெல்லியில் உள்ள பா.ஜ.க. பிரமுகர்களிடம், "தமிழக அரசு ஹரீஷை அரசியல் ரீதியாகப் பழிவாங்க நினைக்கிறது, போலீசாரின் கையில் சிக்காமல் பாதுகாத்து வையுங்கள்''’என சொல்லி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
அத்துடன் ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கு என்பது அரசியல் ரீதியாக பழிவாங்க தி.மு.க. அரசு போட்ட வழக்கு என அண்ணா மலையும் அமர்பிரசாத் ரெட்டியும் பத்திரிகை களில் பேட்டியளித்தனர். அத்துடன் ஹரீஷுக்கு ஆதரவாக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மூலம் அபின்தினேஷ் மோடக்கின் கீழ் பணி புரியும் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கோடிக்கணக் கில் காசு கொடுத்து போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கிறது என உளவு பார்த்தார் அண்ணாமலை. அந்த ஐ.பி.எஸ். அதிகாரியைக் கண்டுபிடித்த அபின் தினேஷ் மோடக் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து ஹரீஷை தேடும் நடவடிக்கைகளை அவருக்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியிடம் ஒப்படைத்தார் மோடக்.
டெல்லியில் கரோல் பாக் பகுதி யில் கடத்தல்காரர்கள் தங்கியிருக்கும் ஒரு லாட்ஜில் ஹரீஷ் தங்கியிருக்கிறான் எனக் கண்டுபிடித்த மோடக்கே நேரடி யாகப் போய் அவனைப் பிடிக்க முயன் றார். அங்கிருந்து உத்தரப் பிரதேசத் திற்கு அண்ணாமலை ஆதரவுடன் தப்பித்தான் ஹரீஷ். உ.பி.யிலிருந்து கோவா வழியாக கர்நாடகாவுக்கு வந்த ஹரீஷ், அங்கிருந்து பாண்டிச்சேரிக்குள் நுழைந்தான். பாண்டிச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.வாக இருந்த அமர் பிரசாத் ரெட்டியின் உறவினர் ஹரீஷுக்கு அடைக்கலம் கொடுத்தார். பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி என மாறி மாறித் தங்கிவந்த ஹரீஷ், திடீரென்று மும்பைக்குப் பயணமானான்.
அவன் வசமிருந்த 2500 கோடி ரூபாயை அமெரிக்காவுக்கு மாற்றத் திட்டமிட்டு அண்ணா மலை அவனை மும்பைக்கு அனுப்பி வைத்தார். மும்பையில் ஆருத்ரா நிதி நிறுவனக் கணக்கிலிருந்து பணம் கைமாறி அமெரிக்காவில் அண்ணாமலைக்கு நெருக்க மான ஒரு அக்கவுண்டுக்கு பணம் செல்கிறது என கண்டு பிடித்தார் அபின் தினேஷ் மோடக். ஹரீஷ் மும்பையில் இருக்கிறான் என உறுதிசெய்த போலீஸ் விமான நிலையம் உட்பட அனைத்துப் பகுதிகளி லும் கண்காணிப்பை வலுப் படுத்தியது.
மும்பையிலிருந்து பெங்களூர் வந்த ஹரீஷ் பாண்டிச்சேரிக்கு போகும் வழியில் அவனது சொந்த ஊரான வேலூருக்கு வருவான் என காத் திருந்தார் அபின் தினேஷ் மோடக். அவர் எதிர் பார்த்தது போல் வேலூருக்கு ஆருத்ரா நிறுவன மோசடியில் தேடப்படும் மற்றொரு குற்றவாளியான மாலதி என்பவருடன் ஜாலியாக வந்த ஹரீஷை கொத்தாகப் பிடித்து தூக்கினார் மோடக்.
ஹரீஷ் கைதானார் என்கிற தகவலைக் கேட்டதும் அதிர்ந்துபோன அண்ணாமலை, “"ஹரீஷுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை நாங்கள் விளையாட்டுப் பிரிவிலிருந்து நீக்கிவிட்டோம்''” என அமர்பிரசாத் ரெட்டி மூலம் ஒரு அறிக்கை கொடுத்தார். ஆனால் ஹரீஷுக்கும் அண்ணாமலைக்குமான தொடர்பு, அவர் ஒட்டுமொத்த ஆருத்ரா நிறுவன மோசடியைக் காப்பாற்றுவதற்காக முதல் கட்டமாக இருநூறு கோடி ரூபாய் வாங்கினார் என்பதற்கான வங்கிப் பரிவர்த்தனைகளை ஆதாரமாக எடுத்த கே.டி.ராகவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏற்கெனவே கொடுத்து விட்டார். நிர்மலா இந்தத் தகவல்களை அமித் ஷாவிடமும் ஜே.பி.நட்டாவிடமும் பகிர்ந்தார்.
ஜே.பி.நட்டா அண்ணாமலையை அரசியலுக்குக் கொண்டு வந்த பி.எல்.சந்தோஷை அழைத்து, “"நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து பா.ஜ.க.வின் தேசியச் செயலாள ராக இருக்கிறீர்கள். நீங்கள் அரசியலுக்குக் கொண்டு வந்த அண்ணாமலை எப்படிப்பட்ட கிரிமினல் வேலைகளைச் செய்கிறார் பாருங்கள்''’என நிர்மலா கொடுத்த விவரங்களைக் காட்டினார்.
ஏற்கெனவே, எடப் பாடியுடன் மோதி ‘எடப் பாடியைக் காலி செய் கிறேன்’ என சசிகலாவிடம் பெரும் பணம் வாங்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என எடப்பாடியின் உருவ பொம்மையை எரித்து தமிழகத்தில் தனித்துப் போட்டி என அண்ணாமலை பேசி வருவதால், அமித்ஷா கோப மடைந்து பி.எல்.சந்தோஷை கூப்பிட்டு திட்டி இருக்கிறார். அதனால் அண்ணா மலை மீது கடுப்பில் இருந்த பி.எல். சந்தோஷ் அண்ணாமலையை கடுமை யாகத் திட்டியிருக்கிறார். டெல்லிக்கு வந்த அண்ணாமலையை அமித்ஷாவும் அவருடன் சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்க அனுமதிக்காமல் விரட்டியடித் திருக்கிறார். இந்நிலையில் அபின் தினேஷ் மோடக் சிறையிலிருக்கும் ஹரீஷுடன் பேசி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அவனிடம் இருந்து எவ்வளவு பணம் பெற்றார்கள் என வாக்குமூலத்தை வாங்கி முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைத்து விட்டார்.
இதனால் கடுப்பான அண்ணாமலை, இதய அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் கே.டி.ராகவனை, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழிசை உட்பட பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும் சென்று பார்த்த நிலையில் அவர் மட்டும் அங்கு போகவேயில்லை. அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து தூக்கி எறியப்படு வாரா? ஆருத்ரா நிதி நிறுவன மோசடி யில் போலீஸ் பிடியில் சிக்குவாரா? என்பதுதான் அடுத்தடுத்த நாட்களில் வரப்போகும் கிளைமாக்ஸ்.
____________
இறுதிச் சுற்று!
ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டையும் சேலையும் அணிந்து 27-ந் தேதி திங்கள்கிழமை நடந்த சட்டப்பேரவையில் கலந்துகொண்டனர். பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் எதிராக முழக்கமிட்டபடி பேரவைக்குள் நுழைந்தனர். இவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி வரவில்லை. காலதாமதமாக தனியாக வந்தார். ராகுல்காந்தியின் பதவிப் பறிப்பை கண்டித்து பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் வந்தார். அவர் அணிந்திருந்தது கருப்பு சேலை. இதைக் கண்டு பலருக்கும் அதிர்ச்சி. அவரிடம், "நீங்களுமா மேடம்? " என கருப்பு சேலை அணிந் திருப்பதை பலரும் கேட்க, அப்போதுதான் காங்கிரஸின் கருப்பு ஆடையின் பின்னணி அறிந்து, "அய்யய்யோ...நான் அணிந்தது அதற்காக இல்லை'' என மறுத்துவிட்டு பேரவைக்குள் சென்றார்.
ராகுலின் தகுதி நீக்கம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயற்சித்தது. அதற்கு அனுமதி தரப்படாததால் வெளிநடப்பு செய்தது காங்கிரஸ். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தின் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். மோடி அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் இரு அவைகளும் முடங்கின; ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை அருகே தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
-இளையர்
படம்: ஸ்டாலின்