Advertisment

ஆருத்ரா மோசடி! நித்தி பாணியில் தப்பியோடும் ஆர்.கே.சுரேஷ்! -வலை வீசும் போலீசார்

rk

ருத்ரா மோசடி மறுபடியும் ஹைலைட்டிற்கு வந்திருக்கிறது. இது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆசியுடன் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடு தொடர்புடையது என்பதால் பெரிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது. சுமார் 2400 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா மோசடி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ரூசோ, அதில் 15 கோடியை பிரபல நடிகரான ஆர்.கே.சுரேஷுக்கு கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதனால் ஆர்.கே.சுரேஷை நோண்ட ஆரம்பித்த காவல் துறையினருக்கு பல அதிர்ச்சிகரத் தகவல்கள் கிடைத்தன.

Advertisment

rk

"ஆர்.கே.சுரேஷ், "ஸ்டுடியோ 9'’ என்கிற பெயரில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீசுக்குப் போட்டியாக படங்களை வெளியிடுபவர். ஏகப்பட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர். இவரது தந்தையார் களஞ்சியம், ராமனாத புரத்தைச் சேர்ந்தவர். இவர் திரைப்படத் துறையில் இருப்ப

ருத்ரா மோசடி மறுபடியும் ஹைலைட்டிற்கு வந்திருக்கிறது. இது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆசியுடன் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடு தொடர்புடையது என்பதால் பெரிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது. சுமார் 2400 கோடி ரூபாய் பொதுமக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா மோசடி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ரூசோ, அதில் 15 கோடியை பிரபல நடிகரான ஆர்.கே.சுரேஷுக்கு கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதனால் ஆர்.கே.சுரேஷை நோண்ட ஆரம்பித்த காவல் துறையினருக்கு பல அதிர்ச்சிகரத் தகவல்கள் கிடைத்தன.

Advertisment

rk

"ஆர்.கே.சுரேஷ், "ஸ்டுடியோ 9'’ என்கிற பெயரில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீசுக்குப் போட்டியாக படங்களை வெளியிடுபவர். ஏகப்பட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர். இவரது தந்தையார் களஞ்சியம், ராமனாத புரத்தைச் சேர்ந்தவர். இவர் திரைப்படத் துறையில் இருப்ப தால் சட்டவிரோத மாக பைனான்ஸ் செய்யும் நபர் கள் இவ ருக்கு நெருக்கம். ஆருத்ரா நிறுவனத்தின் டைரக்டராக இருந்த ஹரீஷ் என்பவர் ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர். அந்த தயாரிப்பாளர் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். அதற்கு 16 சதவீதம் வட்டி கிடைக்கிறது. அவர் அந்தத் தொகையை ஆர்.கே.சுரேஷுக்கு கொடுக்கிறார். அப்படி சட்டப் பூர்வமாக இரண்டு கோடி ரூபாய் ஆர்.கே.சுரேஷுக்கு கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து ஆர்.கே.சுரேஷ், ஹரீஷ் மூலம் அமர்பிரசாத் ரெட்டி, கேசவவிநாயகம், அண்ணாமலை ஆகிய மூவருக்கும் அறிமுகம் ஆகிறார்.

ஆருத்ரா நிதி நிறுவனப் பணம் ஆர்.கே.சுரேஷ் மூலம் திரைப்படத் துறையில் புழங்குகிறது. அந்த இலாபத்தை கணக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் அத்துறையில் கொட்டப்படுகிறது. அதில் உரிய கணக்குகளின் அடிப்படையில் 16 கோடியை ஆர்.கே.சுரேஷ் பெற்றிருக்கிறார். அதன் பிறகு ஆருத்ரா நிதி நிறுவனம் மேல் புகார்கள் அணிவகுக்கவே அதிலிருந்து நிறுவனத்தையும் தன்னையும் காப்பாற்றுவதற்காக மொத்தம் 500 கோடி ரூபாயை பா.ஜ.க. தலைவர்களுக்கு ஹரீஷ் கொடுக்கிறார். அதில் தலா 100 கோடியை அமர்பிரசாத் ரெட்டி, கேசவ விநாயகம், அண்ணாமலை ஆகிய மூவரும் பெறுகிறார்கள். அத்துடன் ஒரு பெரிய தொகையுடன் ஆருத்ராவின் இயக்குனர் ராஜசேகர் துபாய்க்கு தப்பிச் செல்ல அண்ணாமலை உதவுகிறார். அதன் தொடர்ச்சியாக ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஹரீஸ் ஆகியோருக்கு எல்.முருகன், அண்ணா மலை ஆகியோர் இணைந்து பா.ஜ.க.வில் பதவி வழங்குகிறார்கள்.

Advertisment

rk

துபாய்க்குத் தப்பியோடிய ராஜசேகர், அங்கு பல கோடி சொத்துக்களை ஆருத்ரா பணத்தில் வாங்கிப் போட்டுவிடுகிறார். இதற்கிடையே தலைமறைவாக இருந்த ஹரீஷை போலீஸ் கைது செய்கிறது. உடனே ஆர்.கே.சுரேஷ், ராஜசேகர் இருக்கும் துபாய்க்கே தப்பி ஓடிவிடுகிறார்கள். துபாய் அரசுக்கும் இந்தியப் போலீசுக்கும் இடையே குற்றவாளிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இருக்கின்றது. அதனடிப்படையில் ராஜசேகர் துபாயில் வாங்கியிருந்த சொத்துக்களை முடக்க தமிழ்நாட்டுப் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. தற்பொழுது ராஜசேகரின் துபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ராஜசேகரையும் ஆர்.கே.சுரேஷையும் கைது செய்வதற்கு தமிழ்நாடு போலீஸ் நடவடிக்கை எடுத்ததும், இருவரும் போலி பாஸ்போர்ட்டுகளில் அங்கிருந்து நித்யானந்தா பாணியில் தப்பி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.

மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் என சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ் “"நான் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலை எதிர்த்துப் போட்டி யிடுவேன். தேவர் குரு பூஜை நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வேன். அதற்குள் நீதி மன்றங்கள் மூலமாக பிணை பெற்றுவிடுவேன்'’என்று வாட்ஸ்-ஆப் மெசேஜ்கள் மூலம் பேசிவருகிறார். அவர் சரணடை யாமல் பிணை பெற முடியாது. அவரைத் தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்ததே நீதிமன்றம்தான் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

சர்வதேச அளவில் இயங்கும் கிரிமினல் குற்றவாளிகள் குழுக்களுடன் இணைந்து அண்டர்கிரவுண்டில் திரியும் வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ், ராஜசேகர் இருவரும் விரைவில் பிடிபடுவார்கள். அவர்கள் பிடிபட்டால் அமர்பிரசாத் ரெட்டி, கேசவ விநாயகம், அண்ணாமலை ஆகிய மூவரும் எப்படி பணம் வாங்கினார்கள் என்ற உண்மை வெளிவரும் என்கிறார்கள் போலீசார். நித்தி பாணியில் தப்பி ஓடும் ஆர்.கே.சுரேஷ் சிக்குவாரா அல்லது நித்தியின் கைலாசா நாட்டுக்குப் போய் ரஞ்சிதாவின் சிஷ்யராக செட்டில் ஆவாரா என்பதுவே அண்ணாமலை எதிர்ப்புக் கோஷ்டியின் கேள்வியாக உள்ளது'' என்கிறார்கள் பா.ஜ.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

nkn111023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe