Advertisment

"கலைஞர் கல்வி கொடுத்தார்.... ஸ்டா-னோ வீடே கொடுத்துவிட்டார்!'' -கலைஞானம்

dd

கோயில் அன்னதானத்தில் அனுமதிக்கப்படாமல் விரட்டப்பட்டவர் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த அஸ்வினி. அதை அவர் ஊடகங்கள் முன் வெளிப்படுத்த, சோஷியல் மீடியாக்களில் வைரலானது. அஸ்வினி யை அழைத்து மரியாதை செலுத்தி, கோயில் அன்னதானத்தில் சமபந்தி விருந்து சாப்பிட்டார் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. அது மட்டுமின்றி, தீபாவளி நாளில், அஸ்வினியும் அவரது சமூகத்தினரும் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நரிக் குறவர்களுக்கும் இருளர் சமுதாயத்தின ருக்கும் வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவி வழங்கினார். ரேஷன் கார்டு உள்ளிட்ட அவர்களின் அடிப்படைத் தேவைகளை விரைந்து நிற

கோயில் அன்னதானத்தில் அனுமதிக்கப்படாமல் விரட்டப்பட்டவர் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த அஸ்வினி. அதை அவர் ஊடகங்கள் முன் வெளிப்படுத்த, சோஷியல் மீடியாக்களில் வைரலானது. அஸ்வினி யை அழைத்து மரியாதை செலுத்தி, கோயில் அன்னதானத்தில் சமபந்தி விருந்து சாப்பிட்டார் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. அது மட்டுமின்றி, தீபாவளி நாளில், அஸ்வினியும் அவரது சமூகத்தினரும் வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நரிக் குறவர்களுக்கும் இருளர் சமுதாயத்தின ருக்கும் வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவி வழங்கினார். ரேஷன் கார்டு உள்ளிட்ட அவர்களின் அடிப்படைத் தேவைகளை விரைந்து நிறைவேற்ற உத்தரவிட்டுள் ளார். மேடையில் தனக்கு பாசிமணி மாலை அணிவித்த அஸ்வினியின் வீட்டுக்கும், அங்குள்ள மற்ற சிலரின் வீடுகளுக்கும் நேரில் சென்று அவர்களின் வாழ்நிலையைக் கவனித்தார் முதல்வர். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் "ஜெய்பீம்' படம் வெளியாகியுள்ள நிலையில், ஒரு நாள் முதல்வர் போல மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

kalaiganam

இந்நிலையில், திரைப் படத் தயாரிப்பாளர் -வசன கர்த்தா கலைஞானம் தனது பழைய நினைவுகளுடன் தற்போதைய நடவடிக்கை களை நக்கீரன் வாசகர்களி டம் பகிர்ந்து கொள்கிறார்.

எச்சில் இலைச் சோற்றுக்கு நாய்களும் சண்டை போடு கிறது, நரிக்குறவர்களும் சண்டை போட்டு எச்சில் சோற்றை எடுத்து உண்பதை யும், பிளாட்பாரத்தில் பிரசவம் ஆவதையும் பார்த்து மிகுந்த கவலையுடன் நரிக் குறவர்களை நேரில் சந்தித்து... "நீங்கள் ஏன் இப்படித் தெருத்தெருவாக அலைகிறீர் கள். உங்களைப் பார்த்து நாய்களும் குரைக்கிறது, மனிதர்களும் ஒதுங்கிப் போகிறார்கள். மற்ற மனிதர் களைப் போல் படிக்க லாம், ஏதாவது தொழில் செய்யலாமே?'' என்றேன்.

Advertisment

அதற்கு அவர்கள், "சாமி... நாங்க தெலுங்கானாவிற்கும் மராட்டியத்திற்கும் இடைப் பட்ட மலைப்பகுதியில்தான் வாழ்ந்துவந்தோம். அடுத்து ஆந்திராவுக்கு வந்தோம். அதையடுத்து கிட்டத்தட்ட மூன்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டோம். வீடு, வீடாக பிச்சை எடுத்தும் ஊசி, பாசி, நரிக்கொம்பு விற்றும் பிழைக்கிறோம். எங்கே தங்கினாலும் போலீஸ் விரட்டிவிடுகிறார்கள். அதனால் பல துயரங்களுக்கு ஆளாகிக் கிடக்கிறோம் சாமீ...'' என்றனர்.

உடனே "குறத்தி மகன்' என்ற கதையை எழுதி டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சொன்னேன். அவர் திரைக்கதை எழுதி, இயக்கி வெளியிட்டார். தமிழ் -தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் வெற்றி.

ff

படத்தைப் பார்த்த நரிக்குறவர்கள் எங்களிடம் வந்து, "சாமி, நாங்க படிக்க முடிவு செய்துவிட்டோம்....'' என்றனர்.

"நீங்கள் உடனே நம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்து, உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்'' என்றோம். உடனே கலைஞரை சந்தித்து, "எங்களுக்குப் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தாருங்கள்'' என்றனர்.

ss

கலைஞர் அவர்களும் நரிக்குறவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டித் தந்துவிட்டார். அவர்கள் படித்து பட்டதாரிகளாகவும் வந்து கொண்டி ருக்கிறார்கள். ஆனால் அவர் கள் குடியிருக்க இடம்தான் கிடைக்கவில்லை.

தற்போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட இடம் கொடுத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும் பெரும் மகிழ்ச்சி யோடு என் லட்சியத்தை நிறை வேற்றியதற்காக முதலமைச்சர் வாழ்க வாழ்க வென தலை குனிந்து வணங்குகிறேன்.

nkn101121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe