சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் 60 வருடங்களாக வாழ்ந்துவரும் மக்களை வெளியேற்றும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1971-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், வீடில்லாமல் பொது இடத்தில் வசித்த மக்களுக்கு, அப்பகுதியிலேயே அவர்கள் வசிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்று அப்போதைய விவசாயத்துறை அமைச்சரான கோவிந்தசாமி, முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை வைத்ததை ஏற்றுக்கொண்ட கலைஞர், அந்த இடத்தை குடிசை மாற்று வாரியத்தின்கீழ் கொண்டுவந்து, அமைச்சரின் பெயரிலேயே கோவிந்தசாமி நகர் என்று உருவாக்கினார்.

ff

அந்த கோவிந்தசாமி நகரையொட்டிய 50 கிரவுண்டு நிலத்தை ராஜீவ் ராய் என்பவர் விலைக்கு வாங்குகிறார். அப்பகுதியில் அவரது பங்களாவையொட்டி குடியிருப்புகளாக இருப்பது உறுத்தலாக இருந்திருக்கிறது. அவற்றை அகற்றும் நோக்கில், 2008-ம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்தார். அதன்படி, 40 அடி சாலை மற்றும் கால்வாய்க் கரையோரமுள்ள வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள், 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றமோ, அதனை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்குமென்றது. உயர் நீதி மன்றமோ, குடிசை மாற்று வாரியம், பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை மூன்றும் ஆலோசித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணை ஒருபக்கம் போக, அனைத்து வீடுகளையும் அகற்ற நினைத்து வழக்குப் போட்டவர், அரசு அதிகாரிகளைத் தனது கைக்குள் வளைக்கத் தொடங்கினார்.

Advertisment

ff

இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் 40 அடிச் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தது. 2019-ல், 10 வாரத்திற்குள் மூன்று துறைகளும் முடிவெடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த குடியிருப்புப் பகுதியை அறிவிக்கப்பட்ட குடிசை மாற்று வாரியப்பகுதியிலிருந்து நீக்கும்படி குடிசை மாற்றுவாரிய மேலாண்மை இயக்குனர் பரிந்துரை செய்ய, அப்படி ரத்து செய்ய சட்டத்தில் இட மில்லையென்று கடந்த 19.03.22 அன்று, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை அரசு செயலர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவல் நீதிமன்றங்களின் பார்வைக்குப் போகாமல் மறைக்கப்பட்டதோடு, பொதுப்பணித்துறை இ.இ. ஜெயகுமாரி மற்றும் ஏ.இ. ராஜ்திலக் இருவரும் இணைந்து, ffராஜீவ் ராய்க்கு சாதகமாக, போலியான முகவரியைக் குறிப்பிட்டு, வீடுகளை அகற்றப்போவதாக நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே, 09.01.14-ம் ஆண்டு, மொத்தமுள்ள 625 வீடுகளில் பொதுப்பணித்துறை சார்பாக பயோமெட்ரிக் சர்வே எடுக்கப்பட்டு 366 வீடுகள் மட்டும் அகற்றப்பட்டன. தற்போது எந்த சர்வேயும் எடுக்காமலேயே, சரியான விவரத்தைக் குறிப்பிடாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை ஆர்.டி.ஐ.யும் உறுதிப்படுத்துகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரான கணேசன் கூறுகையில், "குடிசைமாற்று வாரியம் கொடுத்த வீட்டில்தான் வாழ்ந்துவருகிறோம். இக்குடியிருப்பை ரத்துசெய்ய சட்டத்தில் இடமில்லையென தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை அரசு செயலர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இதையெல்லாம் மீறி, தனிநபருக்கு உடந்தையாக எங்கள் வீடுகளை அகற்ற இ.இ ஜெயகுமாரி செயல்படுகிறார். இதற்காக பல கோடிகள் கைமாறியிருக்கக்கூடும். நாங்கள் வாழ வழிசெய்தவர் கலைஞர். தற்போது ஸ்டாலின் எங்களுடைய வீடுகளைக் காப்பாற்றித்தருவாரென்று நம்புகிறோம்'' என் றார்.

இதுகுறித்து ஏ.இ. ராஜ்திலக் பேச மறுத்துவிட்டார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கேட்டபோது, "இந்த விவகாரத்தை விசா ரித்து, முதல்வரிடம் தெரிவித்து நிச்சயம் நடவடிக்கை எடுப் போம்'' என்றார்.