(54) அரசியல் நாகரிகத்தை மீட்டவர்!
நான் அ.தி.மு.க.வில் இருந்தபோதும் தளபதியுடன் சகோதர நட்பை பேணிவந்தேன். அவரும் அதைப் பேணிவந்தார்.
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள்... தி.மு.கழகத்தையும், அதன் தலைமையையும் கடுமையாக தாக்கி ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருந்த சில நாட்களில்... மணிவண்ணன் இறந்துபோனார். நான் உடனே கலைஞருக்கு தெரிவிக்க போன் செய்தேன். கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் அவர்கள்...’""நான் தலைவர்கிட்ட தகவலைச் சொல்கிறேன் ரவி. தலைவருக்கு காய்ச்சல்'' எனச் சொன்னார்.
அதேபோல தளபதிக்கு போன் செய்து சொன்னேன்.
தளபதி வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஜயகுமார் அவர்களின் மனைவி மஞ்சுளா அவர்கள் இறந்தபோதும் தளபதிக்கு போன் செய்து தெரியப்படுத்தினேன். அப்போது அவர் வெளியூரில் இருந்ததால்.. மூன்று நாட்களுக்குப் பிறகு, சென்னை திரும்பியதும்... விஜயகுமாரின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்தார்.
நானும் அ.தி.மு.க., விஜயகுமாரும் அ.தி.மு.க. ஆனாலும் வந்து விசாரித்துவிட்டு... என்னிடமும் பேசிவிட்டுச் சென்றார்.
என் தாயார் இறந்தபோதும் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார் தளபதி.
"கலைஞரைப்போல செயல்படுகிறார் ஸ்டாலின், கலைஞரைப்போல செயல்படுகிறாரா ஸ்டாலின்?'’
இப்படியான விமர்சனங்களை தளபதி எதிர்கொண்டுதான் வருகிறார்.
பிரபலமானவரின் பிள்ளையா இருப்பவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய விமர்சனம்... தவிர்க்க முடியாததுதான்.
ஆயினும் தளபதியார் தனது தந்தையின் அரசியல் அணுகுமுறை அனுபவத்
(54) அரசியல் நாகரிகத்தை மீட்டவர்!
நான் அ.தி.மு.க.வில் இருந்தபோதும் தளபதியுடன் சகோதர நட்பை பேணிவந்தேன். அவரும் அதைப் பேணிவந்தார்.
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் அவர்கள்... தி.மு.கழகத்தையும், அதன் தலைமையையும் கடுமையாக தாக்கி ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருந்த சில நாட்களில்... மணிவண்ணன் இறந்துபோனார். நான் உடனே கலைஞருக்கு தெரிவிக்க போன் செய்தேன். கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் அவர்கள்...’""நான் தலைவர்கிட்ட தகவலைச் சொல்கிறேன் ரவி. தலைவருக்கு காய்ச்சல்'' எனச் சொன்னார்.
அதேபோல தளபதிக்கு போன் செய்து சொன்னேன்.
தளபதி வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் விஜயகுமார் அவர்களின் மனைவி மஞ்சுளா அவர்கள் இறந்தபோதும் தளபதிக்கு போன் செய்து தெரியப்படுத்தினேன். அப்போது அவர் வெளியூரில் இருந்ததால்.. மூன்று நாட்களுக்குப் பிறகு, சென்னை திரும்பியதும்... விஜயகுமாரின் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்தார்.
நானும் அ.தி.மு.க., விஜயகுமாரும் அ.தி.மு.க. ஆனாலும் வந்து விசாரித்துவிட்டு... என்னிடமும் பேசிவிட்டுச் சென்றார்.
என் தாயார் இறந்தபோதும் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார் தளபதி.
"கலைஞரைப்போல செயல்படுகிறார் ஸ்டாலின், கலைஞரைப்போல செயல்படுகிறாரா ஸ்டாலின்?'’
இப்படியான விமர்சனங்களை தளபதி எதிர்கொண்டுதான் வருகிறார்.
பிரபலமானவரின் பிள்ளையா இருப்பவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய விமர்சனம்... தவிர்க்க முடியாததுதான்.
ஆயினும் தளபதியார் தனது தந்தையின் அரசியல் அணுகுமுறை அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டு... தனது தனித்துவத்தோடு இயங்குகிறார்.
செயல்பாடு எப்படி அமையவேண்டும் என்பதை... காலத்திற்கேற்ப வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இது அவசியமும்கூட.
என் அப்பா துணிச்சலாக தன் கருத்துகளை மேடையில் ஒளிவுமறைவு இல்லாமல் பேசக்கூடியவர்.
""நான் இன்கம்டாக்ஸ் ஏன் கட்டணும்? கட்டமாட்டேன்'' என்று பேசியிருக்கிறார்.
அது அப்போதைய காலகட்டம்.
இப்போது நான் அப்படிப் பேச முடியுமா?
ஜி.எஸ்.டி. எனக்கு உடன்பாடில்லைதான். ஆனாலும் நான் அதை கட்டிவிடுகிறேன். அதே சமயம்... எனக்கு ஜி.எஸ்.டி.யில் உடன்பாடில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
சட்டத்திற்கு உடன்படுவது... அதே சமயம் அந்தச் சட்டத்திற்கான எதிர்ப்பைத் தெரிவிப்பது.
இந்தமாதிரி அணுகுமுறைகள்தான் இந்த காலத்திற்கு சரியாக இருக்கும்.
தினசரி "முரசொலி' நாளிதழைப் படிக்கிறபோது தெரியும் தளபதியாரின் அழுத்தமான அரசியல் அணுகுமுறை.
மத்திய அரசை எதிர்த்து மாநில முதலமைச்சர் சொல்ல வேண்டியதை... தளபதி சொல்கிறார்.
பழமை மாறாமல் பேசவும், புதுமையோடு பேசவும் செய்கிறார் தளபதி.
விமர்சகர்கள் கோபமூட்டும்படியாக கிரிட்டிஸைஸ் செய்யும்போதும்... அதை ரசித்து சிரிக்கிறார்.
தளபதியின் பக்குவமான அரசியலை அறிந்துதான்... நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே... நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களின் மகள் திருமணவிழாவில்... ""தமிழக முதல்வராக தகுதியுள்ளவர் தளபதி'' எனப் பேசினேன்.
1989-90 காலகட்டத்தில்... கலைஞர் முதல்வராக இருந்தபோது... வேலு மிலிட்டரி ஹோட்டலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில்... தளபதிக்கும் எனக்கும் இடையே சிண்டு முடிய நினைத்ததையும் அதை நான் முறியடித்ததையும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அந்தச் சமயம் எனது முதல் தயாரிப்பான "தைமாசம் பூ வாசம்'’ படத்தின் தொடக்கவிழாவிற்கு வரும்படி தளபதியை அழைத்தேன். அவரும் வந்து சிறப்பித்தார். அதற்காக நான் அவருக்கு நன்ரி தெரிவிக்கச் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
நான் அ.தி.மு.க.விலிருந்து விலகி, தி.மு.கழகத்தில் இணைந்து கடந்த பிப்ரவரி 28-உடன் ஒருவருடம் ஆகிவிட்டது.
நான் கட்சியில் இணைந்த சில நாட்களில்... வடசென்னையில் மீட்டிங் பேச ஏற்பாடு செய்திருந்தார் சேகர்பாபு அவர்கள்.
அதில் நான் சில உதாரணங்களைச் சொல்லிப் பேசியபோது... அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு... என் மீது சர்ச்சையைக் கிளப்பினார்கள்... கண்டனங்களையும் வீசினார்கள்.
என் தங்கை ரதிகலாவின் தோழியான... என் அன்புச்சகோதரி கனிமொழிகூட என்னைப் புரிந்துகொள்ளாமல்... ""உடல் ஊனமுற்றவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என முதன்முதலில் குறிப்பிட்டுச் சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞரை நன்கறிந்தவர்கள் இப்படிப் பேசலாமா?'' என அறிக்கைவிட்டார்.
என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அதன்பிறகு அறிக்கை கொடுத்திருக்கலாம் சகோதரி கனிமொழி. ஆனால் செய்யவில்லை.
ஆனால் தளபதி என்ன செய்தார்...
என்னை அழைத்து விளக்கம் கேட்டார்.
நான் டப்பிங் யூனியன் தலைவராக இருந்தபோது... ""மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய உதவியிருக்கிறேன். லயன்ஸ் கிளப்பில் இருக்கும் நான் அதன் மூலமும் பல உதவிகளைச் செய்துள்ளேன். மற்றவர்களை இழிவுபடுத்தும் குணம் எனக்கு இல்லை. என் குடும்பம் அப்படித்தான் என்னை வளர்த்தது.
எங்களின் சென்னையை அடுத்த கிராமத்து வீட்டில்; ஒரு நாய் உடம்பெல்லாம் புண்பிடித்து இருந்தது. அதை எல்லோரும் அருவருப்போடு விரட்டியபோது... என் அப்பா அந்த நாய்க்கு மருந்துபோட்டு, நல்ல உணவுகள் தந்து குணமாக்கினார். அந்த நன்றியை மறக்காத அந்த நாய்... என் தந்தை இறந்ததும்... அவரின் அஸ்தியில் சிறிது எடுத்து வந்து கிராமத்து வீட்டில் நாங்கள் கட்டியிருந்த சமாதி முன்பாகவே சோகம் ததும்ப அமர்ந்திருந்து... அப்பா இறந்த பதினாறாம் நாள்... அந்த நாயும் இறந்தது.
எங்கள் குடும்பம்... பார்ப்பதற்குத்தான் பலாப்பழம் மாதிரி... வெளியே கரடுமுரடா தெரியும். உள்ளே... உள்ளத்தில் இனிப்பானது.
""பதினெட்டு வருஷமா மேடையில் நான் பேசிட்டு வந்த வசனம்தான். அதை இப்ப பெரிசாக்குறாங்க...'' என நீண்ட விளக்கத்தைச் சொன்னேன் தளபதியிடம்.
""என் விளக்கத்தையும், என் உள்மனதையும் புரிந்துகொண்ட தளபதி... “ராதாரவி அவர்கள் விளக்கம் தந்துவிட்டார். அதில் உள்நோக்கம் இல்லை. ஆனாலும் அவர் சார்பாக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்'' என அறிவித்தார் தளபதி.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்... நான் சில நடிகர்களை தாக்கிப் பேசினேன்.
""அவங்க நம்மை தாக்காதபோது... நாம ஏன் அவங்களை தாக்கிப் பேசணும்?'' என எனக்கு போன் செய்து சொன்னார் தளபதி.
இப்படியான தளபதியாரின் அனுபவமும், அணுகுமுறையும்தான் அவர் செயல் தலைவராக உயரக் காரணம்.
இதெல்லாம் தலைவருக்கான குவாலிபிகேஷன்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் சிகிச்சை பெற்று வந்தபோது... மருத்துவமனைக்கே வந்து... அ.தி.மு.க. தலைவர்களிடம் நலம் விசாரித்தார் தளபதி. அம்மா மறைந்தபோது... அஞ்சலி செலுத்தினார்.
மருத்துவமனைக்கு வந்து விசாரித்து... தமிழக அரசியலில் மறைந்துகிடந்த அரசியல் நாகரிகத்தை மீட்டெடுத்தார் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை... ஜெயலலிதா அம்மாவை தளபதி சந்தித்தபோது... ""உடம்பை நல்லபடியா கவனிச்சுக்கங்க. நீங்க எதிர்கால தமிழகம்'' எனச் சொன்னார் அம்மா.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தளபதியை பார்த்திருப்பார்கள். சிறுவயதிலிருந்தே அவரைப் பார்த்து வருபவர்கள் இருப்பார்கள்... நான் உட்பட. ஆனால் ஒவ்வொருவரின் கோணத்திலும் ஒவ்வொரு விதமாக தளபதியை கணித்திருப்பார்கள்... நான் உட்பட.
இப்போதும் எல்லோருமே ஒரே கோணத்தில் தளபதியைப் பார்க்க வேண்டும்... நான் உட்பட.
ஏனென்றால்... தளபதி நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.
தளபதிதான் இனி... கலைஞர்!
(புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான எனது அனுபவம்...)
தம்பி வருகை! தளபதியாரின் வழியிலேயே அவரின் மகன் தம்பி உதயநிதியும் ஆக்டிவ்வாக அரசியல் ஈடுபாடு காட்டுகிறார். தகப்பனின் பாணியை உள்வாங்கிக்கொண்டு... தனித்துவத்துடன் தம்பி உதயநிதி அரசியலில் வளரவேண்டும். இந்திய அரசியலில் ஞானியாகத் திகழும் கலைஞரை தாத்தாவாகவும், தளபதியாரை தந்தையாகவும் பெற்றிருக்கும் தம்பி உதயநிதி அரசியலில் வளரவேண்டும். |