Advertisment

கர்ஜனை! -"இளையவேள்'’ராதாரவி (47)

radharavi

(47) தேர்தல் டூர்!

தென்சென்னை மாவட்ட தி.மு.கழக வளர்ச்சி நிதிக்காக கலைஞர் தலைமையில் நான் "ரத்தக்கண்ணீர்' நாடகத்தை நடத்துவதற்கு ஓரிரு நாட்கள் முன்பாக அண்ணன் டி.ஆர்.பாலு எனக்கு போன் செய்து... ""குறிப்பிட்ட தேதியில் நாடகம் வைத்தால் தலைவரால் பாதி நாடகம்தான் பார்க்க முடியும். இடைவேளைக்குப் பிறகு அவசர வேலையாக கிளம்பிவிடுவார். அதனால வேற ஒரு தேதியில் நாடகம் வைக்கலாம்'' என்றார்.

Advertisment

ஏற்கெனவே... எனது "நீ எந்த ஜாதி' நாடகத்திற்கு தலைமை ஏற்பதாக ஒப்புக்கொண்ட கலைஞர்... வேலைப்பளுவால் வரமுடியாமல் போனதால்... இந்த வாய்ப்பை நான் விடுவதாக இல்லை.

Advertisment

""திட்டமிட்ட தேதியிலயே நாடகம் போடுறேண்ணே... தலைவர் இடைவேளை வரை பார்த்தாலும் போதும்'' என்றேன்.

ஆனால்... மனசுக்குள் ஒரு திட்டம் போட்டேன்.

radharavia

"ரத்தக் கண்ணீர்' நாடகத்தில் என் அப்பாவின் நடிப்பைப் பார்த்து ரசித்தவர் கலைஞர். அதே வேஷத்தில் எனது நடிப்பை எப்படி எடுத்துக்கொள்வார்?

இந்த ஆர்வம் அதிகமாகவும், கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது.

திட்டமிட்டபடி நாடகம் கலைஞர் தலைமையில் நடந்தது.

நான் திட்டமிட்டபடி... கலைஞரை முழு நாடகத்தையும் இருந்து பார்க்க வைக்கும் விதமாக... இடைவேளையே விடாமல் தொடர்ந்து முழு நாடகத்தையும் போட்டு முடித்தேன்.

கலைஞர் முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார்.

"ரத்தக்கண்ணீர்' நாடகத்தின் ஹைலைட்டான குஷ்டரோகி வேஷத்திலேயே.... நான் மைக்பிடித்து... ""நம்மையெல்லாம் தலைவர் கலைஞ

(47) தேர்தல் டூர்!

தென்சென்னை மாவட்ட தி.மு.கழக வளர்ச்சி நிதிக்காக கலைஞர் தலைமையில் நான் "ரத்தக்கண்ணீர்' நாடகத்தை நடத்துவதற்கு ஓரிரு நாட்கள் முன்பாக அண்ணன் டி.ஆர்.பாலு எனக்கு போன் செய்து... ""குறிப்பிட்ட தேதியில் நாடகம் வைத்தால் தலைவரால் பாதி நாடகம்தான் பார்க்க முடியும். இடைவேளைக்குப் பிறகு அவசர வேலையாக கிளம்பிவிடுவார். அதனால வேற ஒரு தேதியில் நாடகம் வைக்கலாம்'' என்றார்.

Advertisment

ஏற்கெனவே... எனது "நீ எந்த ஜாதி' நாடகத்திற்கு தலைமை ஏற்பதாக ஒப்புக்கொண்ட கலைஞர்... வேலைப்பளுவால் வரமுடியாமல் போனதால்... இந்த வாய்ப்பை நான் விடுவதாக இல்லை.

Advertisment

""திட்டமிட்ட தேதியிலயே நாடகம் போடுறேண்ணே... தலைவர் இடைவேளை வரை பார்த்தாலும் போதும்'' என்றேன்.

ஆனால்... மனசுக்குள் ஒரு திட்டம் போட்டேன்.

radharavia

"ரத்தக் கண்ணீர்' நாடகத்தில் என் அப்பாவின் நடிப்பைப் பார்த்து ரசித்தவர் கலைஞர். அதே வேஷத்தில் எனது நடிப்பை எப்படி எடுத்துக்கொள்வார்?

இந்த ஆர்வம் அதிகமாகவும், கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது.

திட்டமிட்டபடி நாடகம் கலைஞர் தலைமையில் நடந்தது.

நான் திட்டமிட்டபடி... கலைஞரை முழு நாடகத்தையும் இருந்து பார்க்க வைக்கும் விதமாக... இடைவேளையே விடாமல் தொடர்ந்து முழு நாடகத்தையும் போட்டு முடித்தேன்.

கலைஞர் முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார்.

"ரத்தக்கண்ணீர்' நாடகத்தின் ஹைலைட்டான குஷ்டரோகி வேஷத்திலேயே.... நான் மைக்பிடித்து... ""நம்மையெல்லாம் தலைவர் கலைஞர் பார்த்துக்கொள்வார்.. நமக்கெல்லாம் நல்லது செய்வார்'' எனப் பேசினேன்.

அப்போது கலைஞர் ஒரு கதை சொன்னார்.

அது குமணன் கதை.

கொங்கு மண்டலத்தை ஆண்ட குமணன் தன் கொடைத்தன்மையால் வள்ளல் என புகழப்பட்டார். இயல் -இசை -நாடகம் என முத்தமிழையும் போற்றி வளர்த்தார். அந்த முத்தமிழ் அறிஞர்களுக்கு, புலவர்களுக்கு, கலைஞர்களுக்கு பொன்னாடையும், பரிசுகளையும் அள்ளி வழங்கினார் குமணன்.

குமணனின் புகழ் எங்கும் பரவியிருப்பதை ஜீரணிக்க முடியாத குமணனின் தம்பி... அண்ணனைக் கொன்று, அரசை கைப்பற்றி தான் மன்னனாக நினைத்தான். குமணனோ... நாட்டில் குழப்பத்திற்கு இடம் தராமல், தன் தம்பியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் சென்று வசித்தான்.

ஆனாலும்... "குமணன் தலையைக் கொண்டு வருபவருக்கு ஆயிரம் பொன் அளிக்கப்படும்' என ஆணையிட்டான் தம்பி.

குமணனிடம் முன்பு பரிசுபெற்ற புலவர் ஒருவர்... "அந்த வள்ளலின் நிலை இப்படியாகிவிட்டதே...' என வருந்தி அவனைப் பார்க்க காட்டிற்குச் சென்றார்.

காட்டில் தன்னைச் சந்தித்த புலவருக்கு தன்னால் பொருள் தரமுடியாமல் போய்விட்டதே...’ என மனம் வருந்திய குமணனுக்கு... அரசனான தனது தம்பி போட்ட உத்தரவு ஞாபகத்திற்கு வந்தது.

"புலவரே... என் தலையை வெட்டி எடுத்துச் சென்று அரசனிடம் கொடுங்கள். ஆயிரம் பொன் கிடைக்கும்'’ எனச் சொல்லி தன் வாளை புலவரிடம் தந்து... வெட்டுவதற்குத் தோதாக தலையைச் சாய்த்து நின்றான்.

மறுநாள்...

குமணனின் தலையை ஒரு கையிலும், குமணனின் வாளை ஒரு கையிலும் பிடித்தபடி... அரசன் முன் நின்றார் புலவர்.

""காட்டில் வசித்த அண்ணன், புலவரின் வறுமையைப் போக்க தன் தலையையே கொடுத்திருக்கிறாரே... அவரின் அருமை தெரியாமல் நடந்துகொண்டுவிட்டோமே...'' என தம்பி தன் உயிரை மாய்க்க துடித்தான்.

குமணன் கொல்லப்படவில்லை என்பதையும், அது போலியாக செய்யப்பட்ட தலை என்றும் புலவர் சொன்னார்.

மீண்டும் குமணன் அரசனானான்.

இந்த குமணன் கதையைச் சொன்ன கலைஞர்... "இப்போது நான் காட்டில் இருக்கும் குமணன் நிலையில் இருக்கிறேன். என் தலையைத் தரவும் தயாராக இருக்கிறேன்'’ என்று சொன்னவர்... "ராதாரவியை திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றும்'’ என்றும் சொன்னார்.

ஆனாலும் நான் தி.மு.க.வில் சேர்ந்த அந்த நாளில் இருந்து தி.மு.கழகத்தில் இருந்து நான் விலகின நாள் வரைக்கும்... (இப்ப நான் தி.மு.க.வில் தளபதியார் தலைமையின் கீழ் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்) எனக்காக "இதைச் செஞ்சு கொடுங்க, அதைச் செஞ்சு கொடுங்க. எனக்கு இது வேண்டும், எனக்கு அது வேண்டும்' என எனக்காக எதுவும் தலைவர் கலைஞரிடம் நான் கேட்டது இல்லை.

தி.மு.க. பிரமுகர்கள் என்னை மீட்டிங்கில் பேசுவதற்காக புக் செய்தார்கள். தமிழகம் முழுக்க மேடைகளில் பேசிவந்தேன்.

ஒருசமயம்... வடசென்னை தி.மு.க. பிரமுகரான மறைந்த ஏழுமலை நாயக்கர் அண்ணன் எனக்கு 500 ரூபாய் சம்பளம் பேசி, நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மீட்டிங்கிற்கு புக் செய்தார். ஆனால் அந்த மீட்டிங் நடக்கவில்லை. நான் அந்த அட்வான்ஸை திரும்பக் கொடுக்கச் சென்றபோது... "போய்யா... ராதா குடும்பத்துக்கு நாங்க எவ்வளவோ செய்யணும்'’எனச் சொல்லி வாங்க மறுத்துவிட்டார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்தது.. அந்த தேர்தலை யாராலும் அவ்வளவு சீக்கிரத்துல மறக்க முடியாது. இப்போ... 2016-ல் தேர்தலில் பல கட்சிகள் தனித்தனியா தேர்தல் களத்துல இருந்தது. அதேபோல, அந்த தேர்தலிலும் நடந்தது. "அண்ணா தி.மு.க. ஜா.அணி' (ஜானகி), "ஜெ. அணி' (ஜெயலலிதா) என இரண்டாகப் பிரிந்து தேர்தல் களத்தில் இறங்கியது. ஜானகி அம்மா இரட்டைப்புறா சின்னத்திலும், புரட்சி தலைவி அம்மா சேவல் சின்னத்திலும் போட்டியிட்டாங்க. தி.மு.கழகத்த வெற்றி பெற வைக்க வேண்டும் என அதிதீவிரமா களப்பணியில இறங்கினோம். நானும் எஸ்.எஸ்.மாமா (நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்), சந்திரசேகர் (நடிகர் வாகை சந்திரசேகர்) மூன்று பேரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினோம். இப்போது தேர்தல் நடக்கும் போது தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறாங்க. ’நைட் 10 மணிக்கு மேல பொதுக்கூட்டத்துல பேசக்கூடாது. காலையில 10 மணிக்கு மேலதான் பிரச்சாரத்த தொடங்கணும்’ என ஏகப்பட்ட கண்டிஷன். ஆனா 1989 தேர்தல்ல இதுபோன்ற கண்டிஷன்கள் எல்லாம் கிடையாது. நைட் எந்த நேரம் வேண்டுமானாலும் மீட்டிங், வேன்ல பிரச்சாரம் செய்யலாம். தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே தி.மு.கழகம் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது..

பிரச்சார டூர் (தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்) போடுவதில் தலைவர் கலைஞர் மன்னன். கன்னியாகுமரியில இருந்து கும்மிடிப்பூண்டி வரைக்கும் தமிழ்நாட்டின் பூகோள அமைப்பு கலைஞருக்கு அத்துபடி. "எந்த ஊருக்கு எப்படி போகணும், எப்படி வரணும்' என அவ்வளவு துல்லியமா டூர் போடுவார்.. தி.மு.கவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு சினிமாக்காரர்களை அவ்வளவாக பிடிக்காது. தலைவர் கலைஞர்தான் தேர்தல் பிரச்சார டூர் போட்டுக் கொண்டிருந்தார்.. கலைஞருக்கு இந்த பக்கம் பேராசிரியர் அன்பழகன், அந்த பக்கம் அண்ணன் ஆற்காடு வீராசாமி இருந்தாங்க. எனக்கான டூர் போடும்போது நான் அங்க இருந்தேன். அப்ப தலைவர் கலைஞர் "ரவி நீ ஒண்ணு செய், வேதாரண்யத்துக்கு பிரச்சாரத்துக்கு போகணும். அங்க இருந்து அதே ரூட்ல போய் அதே ரூட்லதான் திரும்பி வரணும், அப்படி வந்தா ஒருநாள் சரியாகிடும்' எனச் சொன்னார்.

அந்த காலகட்டத்தில் வேதாரண்யத்திற்கு ஒரே ரோடு மட்டும்தான் இருந்தது. அதே ரோட்ல போய்ட்டு அதே ரோட்ல திரும்பி வரணும். வேதாரண்யம் போயிட்டா அங்கிருந்து வேற எந்த ஊருக்கும் போகமுடியாது. அதனால் ஒருநாள் வீணாகும் என அந்த காலத்துல வேதாரண்யத்துக்கு எந்த தலைவரும் போகமாட்டாங்க.

நான் ஒரு காரிலும், எஸ்.எஸ். சந்திரன், சந்திரசேகர்... இவங்க ரெண்டுபேரும் ஒரு காரிலுமாக டூர்போக எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில்...

"முரசொலி' பத்திரிகையில் ஒரு அறிவிப்பு வந்தது.

(அதனால் கலைஞர் சித்தப்பாவுடன் எனக்கு சின்னதாக ஒரு வருத்தம்...)

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe