Advertisment

கர்ஜனை! -"இளையவேள்'’ ராதாரவி

radharavi

(43) "கலைஞர்' உருவான வரலாறு!

""இங்கே வந்திருக்கிற பிரபல நடிகர்களுக்கெல்லாம் தெரியும்... நாடகக்கலையின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்... "நாடகத்தில் நடிக்கின்ற கதாபாத்திரங்கள் அவர்களுடைய முதுகுப்புறத்தை, அமர்ந்திருக்கின்ற பார்வையாளர்களுக்குத் தெரியும்படியாக நடிக்கக்கூடாது' என்று ஒரு வரம்பு உண்டு. அதற்கு நேர்மாறாக... "இழந்த காதல்' நாடகத்தில் "நடிகவேள்' ராதா அவர்கள் தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்கிற கட்டத்தில், அவளை நாற்காலியில் உட்கார வைத்து, அவள் பக்கம் திரும்பி, பார்வையாளர்களுக்கு முதுகுப்புறம் தெரிகின்ற அளவிற்கு நின்றுகொண்டு, கழுத்தை... தோளைத் தொடுகின்ற அளவுக்கு வளர்ந்துள்ள சுருள் சுருளான அந்த சுருள்முடி குலுங்கக் குலுங்க நடிக்கும்போது... மன்னித்துக்கொள்ள வேண்டும் இதைச் சொல்வதற்காக... அவர் ரோமம் நடித்தது. அத்தகைய ஒரு மாபெரும் கலைஞன் இன்றைக்கு இல்லாவிட்டாலும்கூட அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள் இன்று தமிழ்நாட்டுக் கலை உலகிலே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

Advertisment

radharavi

"இழந்த காதல்' நாடகத்தில் வரும் முதல்காட்சியான நீதிமன்ற காட்சியிலே ராதா குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருப்பார். அவரின் முகம் நீதிபதியைப் பார்த்தபடி இருக்கும். அவரின் தலையின் பின்புறம் மட்டும் பார்வையாளர்களுக்குத் தெரியும். அப்போது வழக்கறிஞர் "இதோ இந்தக் குற்றவாளிக் கூண்டிலே நின்றுகொண்டிருக்கும் இந்த ஜெகதீஷ்...' எனச் சொல்லும்போது... ராதா சிங்கம் போல தனது முகத்தை பார்வையாளர்கள் பக்கம் திருப்பியதும்.... படபடவென கையொலி கிளம்பி... அது அடங்க சில நிமிடங்களாவது ஆகும். அப்போதெல்லாம் வசனம் பேச

(43) "கலைஞர்' உருவான வரலாறு!

""இங்கே வந்திருக்கிற பிரபல நடிகர்களுக்கெல்லாம் தெரியும்... நாடகக்கலையின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்... "நாடகத்தில் நடிக்கின்ற கதாபாத்திரங்கள் அவர்களுடைய முதுகுப்புறத்தை, அமர்ந்திருக்கின்ற பார்வையாளர்களுக்குத் தெரியும்படியாக நடிக்கக்கூடாது' என்று ஒரு வரம்பு உண்டு. அதற்கு நேர்மாறாக... "இழந்த காதல்' நாடகத்தில் "நடிகவேள்' ராதா அவர்கள் தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்கிற கட்டத்தில், அவளை நாற்காலியில் உட்கார வைத்து, அவள் பக்கம் திரும்பி, பார்வையாளர்களுக்கு முதுகுப்புறம் தெரிகின்ற அளவிற்கு நின்றுகொண்டு, கழுத்தை... தோளைத் தொடுகின்ற அளவுக்கு வளர்ந்துள்ள சுருள் சுருளான அந்த சுருள்முடி குலுங்கக் குலுங்க நடிக்கும்போது... மன்னித்துக்கொள்ள வேண்டும் இதைச் சொல்வதற்காக... அவர் ரோமம் நடித்தது. அத்தகைய ஒரு மாபெரும் கலைஞன் இன்றைக்கு இல்லாவிட்டாலும்கூட அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள் இன்று தமிழ்நாட்டுக் கலை உலகிலே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

Advertisment

radharavi

"இழந்த காதல்' நாடகத்தில் வரும் முதல்காட்சியான நீதிமன்ற காட்சியிலே ராதா குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருப்பார். அவரின் முகம் நீதிபதியைப் பார்த்தபடி இருக்கும். அவரின் தலையின் பின்புறம் மட்டும் பார்வையாளர்களுக்குத் தெரியும். அப்போது வழக்கறிஞர் "இதோ இந்தக் குற்றவாளிக் கூண்டிலே நின்றுகொண்டிருக்கும் இந்த ஜெகதீஷ்...' எனச் சொல்லும்போது... ராதா சிங்கம் போல தனது முகத்தை பார்வையாளர்கள் பக்கம் திருப்பியதும்.... படபடவென கையொலி கிளம்பி... அது அடங்க சில நிமிடங்களாவது ஆகும். அப்போதெல்லாம் வசனம் பேசாமலே... "போஸ்'களுக்கு மட்டும் கையொலி பெறுகிற ஒரு நடிகர் உண்டென்றால் அது ராதா மட்டும்தான்...''’’

1989ஆம் ஆண்டு...

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவின்போது... என் அப்பாவின் உருவப்படத்தை திறந்து வைத்து தலைவர் கலைஞர் சித்தப்பா பேசும்போது... இப்படிக் குறிப்பிட்டார்.

Advertisment

நடிகவேளின் நடிப்பை எந்த அளவிற்கு சிலாகித்திருக்கிறார் தலைவர் கலைஞர் என்பதற்கு இதுவே சாட்சி.

posterஎன் அப்பாவுடன் கலைஞருக்கு ஏற்பட்ட பரிட்சயமும், அபிமானமும், கலைஞரின் எழுத்தின் மேல் என் அப்பாவுக்கு ஏற்பட்ட வியப்பும் 1940-களிலிருந்து தொடங்கியிருக்கிறது.

கலைஞர் முயற்சியில் "தமிழ் மாணவர் மன்றம்' திருவாரூரில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது திருவாரூரில் கேம்ப் அடித்து நாடகங்களை நடத்தி வந்திருக்கிறார் என் அப்பா.

இதன் துவக்கவிழாவில் என் அப்பா கலந்துகொள்ள விரும்பி அழைத்திருந்தார். ஆனால்... விழா நாளில் என் அப்பாவுக்கு உடல்நலமில்லாமல் போனதால்... கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் மாணவர் மன்றத்தை வாழ்த்தி தனது உரையை எழுதி அனுப்பியிருக்கிறார்.

தனது 19-வது வயதில் கலைஞர் எழுதிய முதல் நாடகம் "பழநியப்பன்'. பிறகு இது "நச்சுக்கோப்பை' என பெயர் மாற்றப்பட்டது. மாணவர் மன்றம் சார்பில் இந்த நாடகத்தை நடத்த விரும்பிய கலைஞர்... என் அப்பாவிடம் இதுபற்றிப் பேச... அன்று நடக்கவிருந்த தனது நாடகத்தை ரத்து செய்துவிட்டு "நச்சுக்கோப்பை' நாடகம் நடத்த நாடக அரங்கை கொடுத்து உதவியிருக்கிறார்.

கூடவே... தானே முன்நின்று மேக்-அப் உள்ளிட்டவைகளையும் செய்து தந்திருக்கிறார் என் அப்பா.

அதன்பிறகு...

தஞ்சாவூரில் என் அப்பா நாடக கேம்ப் போட்டிருந்த சமயம்...

திராவிடர் கழகத்தின் முக்கியப்புள்ளியாக இருந்த திருவாரூர் சிங்கராயர் அவர்கள், கலைஞரை அழைத்துக்கொண்டு வந்து அப்பாவைச் சந்தித்திருக்கிறார்.

இதுபற்றி அப்பாவின் வார்த்தைகளில்....

""கருணாநிதியை அழைச்சிட்டு வந்திருந்த சிங்கராயர்... "தம்பி கருணாநிதி ஒரு நாடகம் தீட்டணும், அதுல நீங்க நடிக்கணும்கிறது என்னோட ஆசை. நீங்க என்ன சொல்றீங்க?'னு கேட்டார். "அதுக்கென்ன... அப்படியே செஞ்சிருவோம்'னு நான் சொன்னேன். அப்படித்தான் உருவாச்சு "தூக்குமேடை' நாடகம்''.’’

கலைஞர் அங்கேயே தங்கி ‘"தூக்குமேடை'’ நாடகம் எழுத வசதி செய்து கொடுத்திருக்கிறார் என் அப்பா. தஞ்சாவூர் கிருஷ்ணலீலா தியேட்டரிலேயே பலநாட்கள் கண்விழிச்சு நாடகத்தை எழுதியிருக்கார் கலைஞர்.

இந்த நாடகம் அரங்கேற்ற விளம்பரத்தில்தான் "அறிஞர் கருணாநிதி' என அப்பா விளம்பரப்படுத்தியது.

என் அப்பா கொடுத்த "அறிஞர்' பட்டம் கலைஞருக்குப் பிடிக்கவில்லை. "எனக்கு வேண்டாம் அறிஞர் பட்டம். தயவு செஞ்சு எடுத்திடுங்க' என கலைஞர் கேட்டுக்கொள்ள, "அந்த விஷயத்திலும் அண்ணாவுக்குத் தம்பியாவே இருக்கணும்'னு அவர் நினைக்கிறத நாம ஏன் தடுக்கணும்னு நினைத்த என் அப்பா, அதன்பிறகுதான் கலைஞர் என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.

அன்று முதல் ‘கலைஞர் கருணாநிதி’ எனப் புகழ்பெற்று... ‘கலைஞர்’ என்பதே அவரின் பெயர் என்கிற அளவிற்கு வாழும் வரலாறாகியிருக்கிறது என் அப்பா கொடுத்த அந்தப் பட்டம்.

""அறிஞர் பட்டத்த வேண்டவே வேண்டாம்னு சொன்னதுனால கருணாநிதி அவர்களை கலைஞர் கருணாநிதியாக கௌரவப்படுத்தியது உன் அப்பா'' என அப்பாவின் நாடகக் குழுவில் முக்கியமானவராக இருந்தவரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான நடிகர் அண்ணன் ரவுடி ரத்தினம் அவர்கள் என்னிடம் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார்.

"தூக்குமேடை' நாடகத்திற்காக பிரம்மாண்டமாவும், வித்தியாசமாவும், தத்ரூபமாவும் மேடையில் காட்சி அமைப்புகள் செய்யப்பட்டதாம்.

நாடக மேடையில் மாரியம்மன் கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, பால் குடம் எடுப்பது, கரகம் ஆடுவது, காவடி எடுப்பது... என எல்லாமே மேடையில் செய்யப்பட்டிருக்கு. நீதிமன்ற காட்சிகளும் அப்படியே அமைக்கப்பட்டிருந்தது. நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பை வாசிக்க வேண்டும் என்பதால்... தன் மேனேஜர் சாம்பு அவர்களை நீதிபதியாக நடிக்க வைத்திருக்கிறார் என் அப்பா.

"தூக்குமேடை' நாடகம் அரங்கேறும் நாளில் அன்றைய தினம் வசூலாகும் முழுத் தொகையையும் நாடகஆசிரியரான கலைஞருக்குத் தர என் அப்பா முடிவு செய்திருக்கிறார். பிறகு... "கலைஞரின் எழுத்திற்கு இன்னும் கூடுதல் மரியாதை செய்யவேண்டும்' என நினைத்து... நாடகத்திற்கு தந்தை பெரியாரை தலைமையேற்க வைத்து, அன்றைய தினம் வசூலாகும் தொகையை கûலைஞருக்குத் தர அப்பா முடிவு செய்திருக்கிறார்.

அந்தச் சமயம் பெரியார் திருச்சியில் தங்கியிருந்தார். பெரியாரிடம் விஷயத்தைச் சொல்லி, பெரியாருக்குத் தோதான ஒரு தேதியை, அவரின் ஒப்புதலைப் பெற்றுவரும் பொறுப்பை சிங்கராயர் அவர்களிடம் ஒப்படைத்த என் அப்பா, 19.11.1947 அன்று பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி தலைமையில் தஞ்சை கொடிமரத்து மூலை கிருஷ்ணலீலா தியேட்டரில் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடக விளம்பர போஸ்டர்களில்... இரு புரட்சி நடிகர்களின் சந்திப்பு’என குறிப்பிடப்பட்டு எம்.ஆர்.ராதா, மு.கருணாநிதி நடிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் அபிநய சுந்தர முதலியார் என்கிற வேடத்தில் என் அப்பாவும், மாணவர் தலைவர் பாண்டியன் வேடத்தில் கலைஞரும் நடித்திருக்கிறார்கள்.

வாய்ப்புக் கிடைக்கும்போது தன் நண்பரான அறிஞர் அண்ணாவை நைஸாகத் தாக்கிப்பேசும் என் அப்பா, இந்த நாடகத்திலும் அப்படி ஒரு தாக்குதலை வைத்திருக்கிறார்.

பெரியாரின் தளபதி அண்ணா என்பது அப்போது எல்லோருக்கும் தெரியும். அண்ணா மீது மிகுந்த அபிமானம் உள்ளவர் கலைஞர் என்பதும் தெரியும்.

ஒரு விவாத காட்சியில்... கலைஞர் எழுதாத வசனத்தை பேசினார் அப்பா.

""உங்க அண்ணாவ தளபதி தளபதினு சொல்றீங்க. அவரு எந்தப் போர்க்களத்துக்குப் போய் ஜெயிச்சாரு? எப்புடி அவரு தளபதி ஆனாரு?'' என முதலியார் கேரக்டரை ஏற்ற அப்பா கேட்க...

சிலநொடிகள் திகைத்த கலைஞர்... சுதாரித்து...’’""வீணை மீட்டப்படாமல் இருந்தாலும் கை விரல்கள் பட்டதும் நாதம் எழுமல்லவா... வாள் வெட்டப்படாமல் இருந்தாலும் எடுத்து வெட்டினால் காயம் ஏற்படுமல்லவா...

அப்படித்தான்... போர்க்களம் என்று ஒன்று வராமல் இருந்தாலும் எங்கள் அண்ணா தளபதிதான். மீட்டப்படும்போது வீணை நாதம் இசைக்கும். வெட்டும்போது வாள் தன் கூர்மையைக் காட்டும். போர்க்களம் என்று வரும்போது எங்கள் தளபதி... "தான் தளபதி' என்பதை நிரூபிப்பார்''’ என பதில் தந்து அசத்தினார்.

திருச்சியில் பெரியாரை சந்தித்து என் அப்பா சொன்ன விஷயங்களைச் சொல்லி... ""கருணாநிதிக்கு நிதி அளிக்க "உங்களுக்குத் தோதான தேதி ஒன்றைத் தாருங்கள்'' என சிங்கராயர் அவர்கள் கேட்க... பெரியார் மறுத்துவிட்டார்.

ஏன்?

(""எல்லாப் பெரிய மனுஷங்களுக்கும் ஏதாவது ஒண்ணுல வீக்னஸ் இருக்குமில்ல...'' என என் அப்பா அதுபற்றிச் சொல்லியிருக்கிறார்)

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe