Advertisment

ராணி எலிசபெத்தின் பாராட்டைப் பெற்ற ஆர்ட் மாஸ்டர்!

ss

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று காலமானார். இதையடுத்து, அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள், பல்வேறு நாட்டுத் தலைவர்களின் அஞ்சலிக்குப்பின், செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. வண்ண உடைகள், உடைக்கேற்ற தொப்பி, மாறாத புன்னகையென எனத் தனித்துவ அடையாளத்துடன், பிரிட்டன் நாட்டின் ராணியாக மிக நீண்ட காலம் பதவிவகித்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு, இந்த

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று காலமானார். இதையடுத்து, அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள், பல்வேறு நாட்டுத் தலைவர்களின் அஞ்சலிக்குப்பின், செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. வண்ண உடைகள், உடைக்கேற்ற தொப்பி, மாறாத புன்னகையென எனத் தனித்துவ அடையாளத்துடன், பிரிட்டன் நாட்டின் ராணியாக மிக நீண்ட காலம் பதவிவகித்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு, இந்தியர்களில் பலருக்கும் தனிப்பட்ட இழப்பு போன்ற துயரத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது.

Advertisment

artmaster

அதேபோல், சென்னையைச் சேர்ந்த ஆர்ட் மாஸ்டர் கருப்பையா, அவர் வரைந்த ராணி எலிசபெத்தின் புகைப்படத்தை மலர்களால் அலங் கரித்துவைத்து மலரஞ்சலி செலுத்தியுள்ளார். ராணி எலிசபெத்தின் மறைவுக்கு சென்னையைச் சேர்ந்த ஆர்ட் மாஸ்டர் மலரஞ்சலி செலுத்தியது ஏன் என்ற கேள்வியை அவர்முன் நாம் வைத்த போது, எலிசபெத் ராணி தொடர்பான மலரும் நினைவுகள் ஒன்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மறைந்த ராணி எலிசபெத்தின் 90வது பிறந்தநாளுக்காக, அவரின் அழகிய படம் ஒன்றை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து, அத்துடன் ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் இணைத்து, பக்கிங்காம் அரண்மனைக்கு ராணியின் பார்வைக்கு அனுப்பியிருந்தாராம். அவர் அனுப்பிய புகைப் படம் ராணியின் பார்வைக்குச் சென்றிருக்குமா என்ற கேள்விக்குறியுடன் இவர் இருக்க, ஆர்ட் மாஸ்டர் கருப்பையாவையும், அவரது குடும்பத் தினரையும் பாராட்டி ராணி எலிசபெத்திடமிருந்து பதில் கடிதம் வரவும், ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார். உலகின் மிகப்பெரிய அரச பரம்பரை யைச் சேர்ந்த மகாராணி, தனது ஓவியத்தை ரசித்துப் பாராட்டி பதில் கடிதம் எழுதி யிருப்பதைத் தனது ஓவியப் பணிக்கான மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதினார்.

இந்தநிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுச்செய்தி, ஆர்ட் மாஸ்டர் கருப்பையாவுக்கு தனிப்பட்ட இழப்பைப் போன்ற சோகத்தை ஏற்படுத்தியது. ராணிக்கு தனது அஞ்சலியைச் செலுத்தும்விதமாக, தனது இல்லத்தில், தான் வரைந்த ராணி எலிசபெத்தின் திருவுருவப்படத் துக்கு மாலை அணிவித்து, மலர்களால் அலங் கரித்து, மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில், அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர். நாகராஜ் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் அனைவருடன், ஓவியர் கருப்பையா வின் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து ராணி எலிசபெத்தின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.

-ஆதவன்

nkn240922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe