Advertisment

அதிகாரிகளின் கவனம் பெற தீக்குளிப்பு முயற்சி! -நெல்லை பரபரப்பு

ff

நெல்லை கலெக் டர் அலுவலகம் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது. ஆட்சியர் காத்திகேயன், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்தியதால் இந்தப் பரபரப்பு திங்கட் கிழமையன்று கொஞ்சம் அதிகமாகவே இருந் தது. அப்போது, மனு கொடுக்க வந்திருந்த வைராவிக் குளத்தைச் சேர்ந்த வள்ளியம்மை என்கிற 70 வயது மூதாட்டி, திடீரென அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தன் மீது தீவைத்துக்கொள

நெல்லை கலெக் டர் அலுவலகம் வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது. ஆட்சியர் காத்திகேயன், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்தியதால் இந்தப் பரபரப்பு திங்கட் கிழமையன்று கொஞ்சம் அதிகமாகவே இருந் தது. அப்போது, மனு கொடுக்க வந்திருந்த வைராவிக் குளத்தைச் சேர்ந்த வள்ளியம்மை என்கிற 70 வயது மூதாட்டி, திடீரென அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தன் மீது தீவைத்துக்கொள்ள முயல, அங்கே கூச்சலும் பதட்டமும் தொற்றிக் கொண்டது.

Advertisment

ff

உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டு, அவரது தற்கொலை முயற்சியை தடுத்தனர். இந்த விபரீத முயற்சி பலித்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்கும்.

அந்த மூதாட்டி வள்ளியம்மையை போலீஸ் டீம் விசாரித்தபோது...’"என் மகள் முருகம்மாள் மணிமுத்தாறில் உள்ள ஒரு மீன் பண்ணையில் வேலை செய்து வருகிறார். அவர் அரசு வேலைக்காக வெளிநபர்களிடம் 4 லட்சம் கடன் வாங்கினார். அதற்காக கடன் கொடுத்தவங்க என் விளை நிலத்தை அபகரிக்க முயற்சி பண் றாங்க. இது சம்பந்தமா போலீசில் புகார் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் கலெக் டரிடம் மனு குடுக்க வந்தேன். என்னோட நிலைமையைப் பார்த்து, இங்கே மனு எழுதிக் கொடுத்த பெண், பாட்டி, வெறுமனே மனு குடுத்தா நட வடிக்கை இருக்காது. நீ தீக்குளிக்கிற மாதிரி நடின்னு சொன்னார். அத னால்தான் இப்படி'' ’என்றார் பதட்ட மாக.

Advertisment

இதைத் தொ டர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே மனு எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்கும் 45 வயது தங்கம் என்ற பெண்மணியை மடக்கிய போலீஸ் டீம், அவர் மீது 3 பிரிவுகளில் வழக் கைப் பதிவுசெய்து சிறையில் அடைத்தது.

ff

ஏரியாவாசிகளோ, "இப்படி அதிரடி யாக ஏதாவது செய்தால்தான் அதிகாரிகள் திரும்பிப் பார்க்கறாங்க. முறையா மனு கொடுத்து முறையிட்டால் யார் கவனிக்கிறா? அதனால்தான் இந்த சம்பவம் நடந்தி ருக்கு. இதிலிருந்து அதிகாரிகள் பாடம் கத்துக்கணும். அதை விட்டுட்டு, கைது நடவடிக்கையில் இறங்குவது நியா யம் இல்லை. மக்களின் குறை தீர்க்கவேண்டிய அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையே இதற்குக் காரணம். நியாயப்படி அவர் கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்கணும்'' என்கிறார்கள் ஆதங்கமாய்.

அதிகாரிகள் மாறுவார்களா?

-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்

nkn021223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe