Advertisment

பள்ளி நிர்வாகத்தின் திமிர்! மர்மம் உடைக்குமா அரசு?

s

மிழகத்தையே உலுக்கியெடுத்தது கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி நடந்த கலவரம். பள்ளி சூறையாடப்பட்டு போர்க்களம் போல காட்சிகள் அரங்கேறியபின்பே விழித்துக் கொண்டது அரசு நிர்வாகம். அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஷ்ரவன்குமார் ஜடாவத் புதிய ஆட்சியராகவும், பகலவன், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப் பட்டனர்.

Advertisment

dd

கடந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்குக்கீழ் செயல்படும் காவல் நிலையங்களில் உளவுப் பிரிவு போலீசார் நியமிக்கப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்கும் தவறுகள், நடக்கப்போகும் தவறுகள், கலவரங்கள், சதித் திட்டங்கள் ஆகியவற்றை மோப்பம்பிடித்து மாவட்ட கண்காணிப் பாளருக்குத் தெரியப்படுத்துவார்கள். அவர் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் தடுப்பார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் (SBCID) சிறப்பு குற்றப் புலனாய்வுத்துறை உள்ளது. இதற்கு தலைமை அதிகாரியாக டி.எஸ்.பி. அல்லது இன்ஸ்பெக்டர் ரேங்கில் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் மாவட்ட அதிகாரிக்கு ரிப்போர்ட் அனுப்ப, அதை அவர் சென்னையிலுள்ள தலைமை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அந்த ரிப்போர்ட்டை தமிழக முதல்வருக்கு அனுப்பிவைப்பார். இந்த நடைமுறைகள் எல்லாம் கடந்த ஓராண்டாக சரியாகக் கடைப்பிடிக்கவில்லை. அப்படி கடைப்பிடித்திருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்கள் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள். மாணவி உயிரிழந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியர்கள் என ஐந்துபேர் கைதுசெய்யப்பட

மிழகத்தையே உலுக்கியெடுத்தது கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி நடந்த கலவரம். பள்ளி சூறையாடப்பட்டு போர்க்களம் போல காட்சிகள் அரங்கேறியபின்பே விழித்துக் கொண்டது அரசு நிர்வாகம். அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஷ்ரவன்குமார் ஜடாவத் புதிய ஆட்சியராகவும், பகலவன், புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப் பட்டனர்.

Advertisment

dd

கடந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்குக்கீழ் செயல்படும் காவல் நிலையங்களில் உளவுப் பிரிவு போலீசார் நியமிக்கப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்கும் தவறுகள், நடக்கப்போகும் தவறுகள், கலவரங்கள், சதித் திட்டங்கள் ஆகியவற்றை மோப்பம்பிடித்து மாவட்ட கண்காணிப் பாளருக்குத் தெரியப்படுத்துவார்கள். அவர் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் தடுப்பார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் (SBCID) சிறப்பு குற்றப் புலனாய்வுத்துறை உள்ளது. இதற்கு தலைமை அதிகாரியாக டி.எஸ்.பி. அல்லது இன்ஸ்பெக்டர் ரேங்கில் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் மாவட்ட அதிகாரிக்கு ரிப்போர்ட் அனுப்ப, அதை அவர் சென்னையிலுள்ள தலைமை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அந்த ரிப்போர்ட்டை தமிழக முதல்வருக்கு அனுப்பிவைப்பார். இந்த நடைமுறைகள் எல்லாம் கடந்த ஓராண்டாக சரியாகக் கடைப்பிடிக்கவில்லை. அப்படி கடைப்பிடித்திருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்கள் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள். மாணவி உயிரிழந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியர்கள் என ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்மீது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்காதது, பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பெற்றோருக்குக் காட்டாமல் மறைத்தது என வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை.

கலவரம் செய்தவர்கள், பாக்கெட் சாராயத்தைப் பயன்படுத்தி தீ வைத்துள்ள தாக காவல்துறை கூறுகிறது. வேடிக்கை பார்க்கச் சென்றவர்களின் சுமார் 70-க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

dd

Advertisment

18-ந் தேதி காலை அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வெ.கணேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சக்தி பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் விழுப்புரம் கீதாஞ்சலி, திருச்சி ஜூலியானா ஜெயந்தி, சேலம் கோகுலநாதன், ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர் சாந்தகுமாரி ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டனர். மாணவியின் பெற்றோர்களுக்கு இதுகுறித்து எழுத்து மூலம் தெரிவிக்க அவர்கள் வீட்டுக்கு வருவாய்த் துறையினர் சென்றனர்.

மாணவியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம் உட்பட யாரும் வீட்டிலில்லாத நிலையில் அவர்கள் வீட்டின் சுவரில் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர். தங்கள் தரப்பில் ஒரு டாக்டரை நியமிக்க மாணவியின் பெற்றோர் கேட்டதை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டும் மறுத்துவிட்டன. போஸ்ட்மார்ட்டம் நடத்திமுடிக்கப் பட்ட நிலையில், மாணவியின் பெற்றோர் தரப்பில் உடலை வாங்குவதற்கு யாரும் முன்வராததால், நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாணவியின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21-ஆம் தேதி காலை முதல் உயிரிழந்த பள்ளி மாணவியின் ஊரான பெரியநெசலூர் கிராமம் பரபரப்பாகக் காணப்பட்டது. காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டியிடம் தற்போதுள்ள சூழ்நிலையைப் பற்றி கேட்டனர். மேலும் மாணவியின் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள மயானத்திற்குச்செல்லும் பாதையைப் பார்வையிட்டார்கள். ஊரில் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் மாணவியின் உடலை அடக்கம் செய்யும்போது, அசம்பாவிதம் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்வதில் காவல்துறை அக்கறை காட்டிவருகிறது.

dd

கலவரக்காரர்களை விரைவாகக் கைது செய்து உள்ளே தள்ளியதுபோல, மாணவியின் மரணத்தில் நடந்தது என்ன என்பதையும் காவல்துறை சுறுசுறுப்பாக புலனாய்வு செய்து கண்டறியவேண்டும் என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

சக்தி பள்ளி நிர்வாகத்தின் பழைய வரலாறு

கனியாமூர் சக்தி பள்ளி குறித்து சின்னசேலம் பகுதியிலுள்ள பிரமுகர் கள், இந்தப் பள்ளியில் படித்த முன் னாள் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் பலரை சந்தித்துக் கேட் டோம். பின்வருவது அதன் தொகுப்பு:

பள்ளித் தாளாளர் ரவிக்குமா ரின் தந்தை விவசாயி. அவரது தாயார் பட்டப்படிப்பு படித்தவர். தற்போது பள்ளி அமைந்துள்ள பகுதியில் அவர்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் பிரைமரி ஸ்கூல் என்ற பெயரில் சிறிய அளவில் அவர் பள்ளியைத் தொடங்கினார். அவருக்குப் பிறகு பள்ளிப் பொறுப்பை ரவிக்குமாரும், அவரது மனைவி சாந்தியும் ஏற்றுக் கொண்டனர்.

இந்தப் பள்ளியில் 2004-ஆம் ஆண்டு சின்னசேலம் அருகிலுள்ள நா. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளிக்குப் பின்புறமுள்ள கிணற்றுச் சுவரருகே இறந்துகிடந்தார். தகவலறிந்த மாணவனின் பெற்றோர், அந்த ஊர் மக்கள் நியாயம் கேட்டு பள்ளிக்கு வந்தனர். பள்ளி நிர்வாக மோ 200-க்கும் மேற்பட்ட அடியாட் களை பள்ளிக்குள் நிறுத்திவைத் திருந்து, நியாயம் கேட்டு வந்த வர்களை அடித்துத்துரத்தினார்கள்.

இந்தத் தகவலறிந்த அப்பகுதி கம்யூனிஸ்ட் தோழர்கள் பள்ளி நிர்வாகத்தின் அராஜகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி, டி.எஸ்.பி.யாக இருந்த ஜெயபாலன், மாணவன் கொலைகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை செய்து, அந்த மாணவனை அதே பள்ளியில் படித்துவந்த மாணவன் ஒருவன் கழிவறைக்குச் செல்வதில் யார் முதலில் செல்வது என்ற தகராறில் பாட்டிலை உடைத்து குத்திக் கொலைசெய்துள்ளான் என்பதைக் கண்டறிந்து சிறைக்கனுப்பினார்.

kk

சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்து மாணவி மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பஸ்சை விட்டு இறங்கும்போது, பஸ்ஸின் கூரைமீது இருந்த ஸ்டெப்னி டயரை கவனக்குறைவாக மேலே இருந்து தள்ளிவிட்டுள்ள னர். அது மாணவி மீது விழுந்து அதே இடத்தில் இறந்துபோனார். அந்த பிரச்சனை பெரிதாகாமல் இருக்க நிர்வாகம் மாணவியின் பெற்றோரை அழைத்து கொடுக்கவேண்டியதைக் கொடுத்து சரிசெய்தனர். மாணவி பள்ளி நிர்வாகத்தினரின் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் விஷயம் அமுங்கிப்போனது.

அடுத்து 2012-ல் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பள்ளி பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பஸ் அவர் மீது மோதி பள்ளி வளாகத்தில் இறந்துபோனார். இதிலும் இழப்பீட்டுடன் திருப்தியடையும்படி மாணவியின் பெற்றோர்களைச் சரிக்கட்டி விஷயத்தை பெரிதுபடுத்தாமல் உடலை அடக்கம் செய்யவைத்தனர்.

தற்போது ஸ்ரீமதி விவகாரத்திலும், இறந்த மாணவியின் உடலில் பள்ளிச் சீருடையை அவர் இறந்தபிறகு அவசர அவசரமாக அணிவித்துள்ளனர். அதற்கு அடையாளமாக, அவரது பேண்ட் நாடா பின்பக்கம் முடிச்சுப் போடப்பட்டிருந்தது. பெண் பிள்ளைகள் பேன்ட்டை முன்பக்கம்தான் முடிச்சுப் போடுவார்கள். மாணவி இறந்தபிறகு அவரது சீருடையை பதட்டத்தில் அவரது உடலில் மாட்டி நாடா பின்பக்கம் வருவது தெரியாமல் பேன்ட்டை மாட்டி முடிச்சுப் போட்டுள்ளனர் என்கிறார்கள் உறவினர்கள். தவிரவும், இறப்பதற்கு முந்தைய தினம் 12-ஆம் தேதி வகுப்பறைக்குள் ஸ்ரீமதி சோர்வாக நடந்துவரும் புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சோர்வாக நடந்துவரும் ஸ்ரீமதி தன் மேஜையில் வந்து படுத்துக் கொள்கிறார். சுற்றி யிருக்கும் மாணவி கள் அவரைக் கண்டுகொள்ள வில்லை. இந்தக் காட்சிகள் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

இதுபோன்ற முந்தைய நிகழ்வு களால் சின்ன சேலத்தைச் சுற்றி யுள்ள கிராமங்களி லிருந்து பெரும் பாலான பெற்றோர் கள் தங்கள் பிள் ளைகளை இந்தப் பள்ளியில் சேர்ப்ப தில்லை.

பள்ளிப் பிள்ளை களுக்கான கட்டணத்தை கறாராக வசூலிப்பதாக பெற்றோர் குறைப்படுகின்றனர். ஆயிரம் ரூபாய்கூட குறைக்கமாட்டார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டணம் செலுத்து வதற்கு காலதாமதமானால் அந்த பிள்ளைகளை பலர் முன்னிலையில் அவமானமாகப் பேசுவது, மிரட்டுவது, திட்டுவதன் மூலம் பணம்கட்ட வைப்பார்கள். தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் அரசு ஒதுக்கீடாக 20% மாணவ- மாணவிகளை கட்டணமின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அரசு உத்தரவு. அந்தத் திட்டத்தின்கீழ் இந்தப் பள்ளியில் இடமிருக்கிறதா என்று கேட்கக்கூட முடியாது. பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளவர்களை கசக்கிப் பிழிவர். பள்ளியின் கெடுபிடி தாங்கமுடியாமல் பல ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருக்கக்கூடாது என்பது விதிமுறை. அதைமீறி சக்தி பள்ளி நிர்வாகத்தினர், குடும்பத்தோடு பள்ளிக்குள் வசித்து வந்தனர் என நீள்கிறது புகார்கள்.

-எஸ்.பி.எஸ்.

nkn230722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe