Advertisment

எல்பின் நிறுவன உரிமையாளர் கைது! முதலீடு செய்த பணம் கிடைக்குமா?

22

திருச்சி மன்னார் புரத்தை தலைமையிட மாகக் கொண்டு மதுரை, சிவகங்கை, இராமநாத புரம், திருப்பூர், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் எல்பின் என்ற நிறு வனத்தை ரமேஷ்குமார் தொடங்கினார். அந்த நிறுவனத்தை அடிப் படையாகக் கொண்டு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து, பண இரட்டிப்பு, நிலம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து... அதில் பலரையும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளார்.

Advertisment

பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்க

திருச்சி மன்னார் புரத்தை தலைமையிட மாகக் கொண்டு மதுரை, சிவகங்கை, இராமநாத புரம், திருப்பூர், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் எல்பின் என்ற நிறு வனத்தை ரமேஷ்குமார் தொடங்கினார். அந்த நிறுவனத்தை அடிப் படையாகக் கொண்டு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து, பண இரட்டிப்பு, நிலம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்து... அதில் பலரையும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளார்.

Advertisment

பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் எல்பின் இ-காம் பிரைவேட் லிமிடெட், திருச்சியில் ஸ்பே ரோ க்ளோபல் ட்ரேடு, சென்னையில் வரகா மணி பிரைவேட், மதுரையில் ஜே.பி. ஓரியண்ட் டெக் மார்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமி டெட், கோயம்புத்தூரில் ஆர்.எம். வெல்த் கிரி யேஷன் பிரைவேட் லிமிடெட், இன்பை கேலக்ஸி மார்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இதைச் சார்ந்த அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட், அறம் டிவி சேனல், தமிழ் ராஜ்ஜியம் செய்தித் தாள் ஆகிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

elfin

இந்த நிறுவனங்கள் தொடங்கிய சில மாதங்களிலேயே ஒவ்வொரு நிறுவனமும் செயல்படாமல் நிறுத்தப் பட்டு, அதன் மேலாண் இயக்குநரான ரமேஷ்குமார் தலைமறைவானார். இந்த நிறுவனத்தை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாவட் டத்திலும் புகார் கொடுத்தனர். பலமுறை அந்நிறுவனங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலீடு செய்த பணம் கிடைக்காது என நினைத்து தற்கொலை செய்துகொண்டவர் களும் உண்டு.

Advertisment

இந்நிலை யில், அந்நிறு வனத்திற்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய 10-க் கும் மேற்பட்ட மாவட் டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன.

தலைமறைவான எல்பின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரை கைதுசெய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டு தலின் பேரில், காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் இயக்குனர் அபின் தினேஷ் மொடக் வழிகாட்டுதலில் கடந்த சில மாதங்களா கத் தேடப்பட்டு வந்த ரமேஷ்குமாரை கைதுசெய்தனர்.

ee

அவர் கைது செய்யப்பட்ட தகவலை வெளியே தெரியாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தனர். அது மெல்லக் கசிந்த நிலையில், இனியாவது தங்கள் பணம் திரும்பக் கிடைக்குமா என முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ரமேஷ்குமார் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

nkn220223
இதையும் படியுங்கள்
Subscribe