75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கிவிட்டு, பரப்புரைக்குப் புறப்பட்டார்.
சீனியரான கே.என்.நேரு, தனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் திருவாரூர் நோக்கி கிளம்பிய உதயநிதி, அனைவருடனும் கலகலப்பு பேச்சு, கைகுலுக்கல் என திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது திரண்டிருந்த கூட்டத்தைக் கவர்ந்தார். உதயநிதியின் சுற்றுப் பயண விவரம் தஞ்சை சரக உயர் போலீஸ்
75 நாட்கள், 15,000 கி.மீ. சூறாவளிப் பயணம், இலட்சக்கணக்கான மக்கள் சந்திப்பு என "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற புதிய செயல்திட்டத்தை அறிவாலயத்திற்குப் பதில் அன்பகத்திலிருந்து அறிவித்தார் கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. உடனடியாக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கிவிட்டு, பரப்புரைக்குப் புறப்பட்டார்.
சீனியரான கே.என்.நேரு, தனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் திருவாரூர் நோக்கி கிளம்பிய உதயநிதி, அனைவருடனும் கலகலப்பு பேச்சு, கைகுலுக்கல் என திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது திரண்டிருந்த கூட்டத்தைக் கவர்ந்தார். உதயநிதியின் சுற்றுப் பயண விவரம் தஞ்சை சரக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவர... வழியெங்கும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தங்களது வீட்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு, காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி, கலைஞர் பிறந்த திருக்குவளைக்கு கிளம்ப ஆயத்தமானார். அப்போது அங்கே திருவாரூர் எஸ்.பி.துரை, ஐந்து வாகனத்திற்கு மேல் சென்றால் கைது செய்வோம் என எச்சரித்ததால், போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது.
மாலை 4.30-க்கு திருக்குவளைக்கு உதயநிதி வந்தபோது, அங்கேயும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, நாகை, திருவாரூர் எஸ்.பி.க்களான ஓம்பிரகாஷ் மீனா, துரை மற்றும் 10 டி.எஸ்.பி.க்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், வஜ்ரா வாகனம், அதிரடிப்படை வாகனம் என ரொம்பவே டெரர் காட்டினார்கள். அத்துடன் திருக்குவளை வீதிகளில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த மைக்செட்டுகளை கழட்ட ஆரம்பித்ததால், சலசலப்பும் ஆரம்பித்தது.
இந்த சலசலப்புக்கிடையே குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பூரண கும்ப மரியாதை பெற்று, கலைஞரின் இல்லத்தில் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்த உதயநிதி, அங்கேயே பிரச்சாரத்தை தொடங்கினார். போலீசின் எச்சரிக்கையையும் மீறி மேடை ஏறி மைக் பிடித்த உதயநிதி எடப்பாடி ஆட்சியையும் அமைச்சர் துரைக்கண்ணுவின் பிணத்தை வைத்துக் கொண்டு 800 கோடி பணத்தைக் கைப்பற்றிய விவகாரத்தையும் சகட்டுமேனிக்கு பொளந்து கட்டினார்.
மேடையிலிருந்து இறங்கிய உதயநிதியைக் கைது செய்து வேனில் ஏற்றும் போது ஆவேசக் குரல் எழுப்பினார்கள் திமுகவினர். உதயநிதியுடன் எம்.எல்.ஏ.க்கள் கலைவாணன், மதிவாணன், அன்பில் மகேஷ், மாஜி எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், நாகை எம்பி.செல்வராஜ் ஆகியோரையும் கைது செய்து, தனியார் கல்யாண மண்டபத்தில் வைத்திருந்துவிட்டு, மாலை 6.30-க்கு ரிலீஸ் பண்ணினார்கள்.
உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாக்களில் பரவ ஆரம்பித்ததும் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியலில் குதித்தனர். வேதாரண்யம்-வேளாங்கண்ணி சாலையில் உள்ள செம்பேட்டையில் இரண்டாயிரம் பேரைத் திரட்டி மறியல் செய்து ஸ்தம்பிக்க வைத்தார் கிழக்கு ஒ.செ. சதாசிவம். அதேபோல் வாய்மேடு பழனியப்பன் தலைமையில் இன்னொரு டீம் சாலை மறியலில் குதித்து போலீசை திக்குமுக்காட வைத்தது.
வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் உப்பளத் தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்ற போதும் ஏற்படுத்தப்பட்ட தடையை மீறி உப்பளத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதல் கூறினார் உதயநிதி.
நவ.21-ஆம் தேதி மீனவர்கள் தினம் என்பதால், வேளாங்கண்ணியில் இருந்து அக்கரைப்பேட்டை சென்று மீனவர்களைச் சந்தித்த போதும் தடைகள், மீறல்கள். இன்ஜின் போட்டை ஓட்டியபடி கடலுக்குள் ளேயே சென்று மீனவர்களைச் சந்தித்து திரும்பியதும் மீண்டும் உதயநிதியை கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்துவிட்டு ரிலீஸ் செய்தனர். மூன்றாவது நாள், மயிலாடுதுறை மாவட்டம் சென்ற உதயநிதியை குத்தாலம் பகுதியில் கைது செய்தது காவல்துறை.
பைசா செலவின்றி உதயநிதியை பிராண்ட் பண்ணுகிறது எடப்பாடி அரசு என்கிறார்கள் அ.தி.மு.கவினரே!
-க.செல்வகுமார்