சிம்புவின் ஏற்பாடு!

uu

ன்ஸிகாவின் 50-வது படம் என்கிற பில்டப்போடு ஆரம்பிக்கப்பட்ட "மஹா' திரைப்படம் ஒரு வருடத்திற்கு முன்பே படப்பிடிப்பு முழுவதும் முடிந்தும் சிலபல பிரச்சினைகளால் ரிலீசாவதில் தடை ஏற்பட்டது. தடைகளையெல்லாம் உடைத்து இப்போது ஜூன் 10-ம் தேதி ரிலீஸ் என்று அவசரமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அவசரத் திற்கு காரணம் கௌரவ வேடத்தில் நடித் துள்ள சிம்பு தான். "மாநாடு' பட வெற்றிச் சூட்டோடு படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்கிற முனைப்போடு உள்ளார் "மஹா' ஹன்ஸிகா.

தனுஷ்... கவுன்ட் டவுன் ஸ்டார்ட்!

செல்வராகவன் இயக்கும் "நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், "யாரடி நீ மோகினி', "குட்டி', "உத்தம புத்திரன்'’படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இத்தகவல் வெளியீட்டு நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வெளியிட உள்ள ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சார்பில், இப்படம் ஜூலை 1 அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக உறுதி செய்யப் பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான "கர்ணன்' படத்திற்குப் பிறகு தனுஷுக்கு திரையரங்கில் வெளியாகும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்பில் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

அமீரகத்தில் மையம் கொண்ட இசைப்புயல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இந்திய மொழிப் படங்களைக் கடந்து பல சர்வதேச படைப்புகளிலும் பணி யாற்றி வருகிறார். தமிழைப் பொறுத்தவரை "பொன்னியின் செல்வன்', "கோப்ரா', "அயலான்' உள்ளிட்ட படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில், அமீரகத்தின் முதல் பெண் இயக்குநர் நயிலா அல் காஜா இயக்கவுள்ள புதிய படம் ஒன்றிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். சமீபத் தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், அங்கு ஸ்டூடியோ ஒன்றையும் துவங்கி னார். இந்த நிகழ்வின்போது தான் "பாப்' படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, படத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் ஆனார்.

நெகிழ வைத்த "யுவன் 25'

dd

Advertisment

டந்த 1997-ஆம் ஆண்டு வெளியான "அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, "மாநாடு', "வலிமை', "நானே வருவேன்' என இந்த ஆண்டோடு 25 ஆண்டுகளைத் தொட்டுள்ளார். மக்களின் உணர்வோடும் பிளே லிஸ்ட்டோடும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்ட யுவன், தனது சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக சென்னையில் "யுவன் 25' என்ற கான்செர்ட் நடைபெற்றது. தமிழ் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது ஆயிரக்கணக்காக ரசிகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பலரது மனதையும் நெகிழவைத்தது நா.முத்துக்குமா ரின் நினைவுகள். யுவனின் இசைப்பயணத்தில் தவிர்க்க முடியாத ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். "நந்தா' படம் முதல் "தரமணி' வரை தொடர்ந்த இவர்களின் கூட்டணி, தியேட்டர் கொண்டாட்டம் முதல் தேசிய விருது வரை பல அங்கீகாரங்களுக்குச் சொந்தமானது. இவ்வெற்றிக் கூட்டணியை நினைவுகூரும் விதமாக "யுவன் 25' மேடையில் நடந்த சில சம்பவங்கள் பலரையும் கடந்த கால நினைவலைகளுக்குள் இழுத்துச் சென்றன.

விழா நடந்துகொண்டிருக்கும்போது, மேடையில் இருந்த ஸ்க்ரீனில் ஓவியர் ஒருவர் முத்துக்குமார் மற்றும் யுவனின் புகைப்படத்தை ஓவியமாக வரைந்தார். அப்போது மேடைக்கு வந்திருந்த தயாரிப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ், சுரேஷ் காமாட்சி, சத்யஜோதி தியாகராஜன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் நா.முத்துக்குமாரின் சிலை ஒன்றை யுவனுக்கு பரிசாக வழங்கினர். அதுமட்டு மல்லாது, தமிழ் கவிஞர்களில் தவிர்க்கமுடியாத ஒருவராக இருந்த முத்துக்குமாருக்கு தனியாக ஒரு விழா எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு மேடையேறிய முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார், தனது தந்தைக்கும் யுவனுக்கும் இடையே உள்ள நட்பின் ஆழத்தை விவரிக்கும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டது பலரையும் கண்கலங்க வைத்தது.

Advertisment

தனது அப்பா நா.முத்துக் குமார் எழுதிய "போகாதே... போகாதே' பாடலை, யுவன், நா.முத்துகுமாருக்காக பாடு வதைப் போன்று அதன் வரிகளில் மாற்றம் செய்திருந் தார் ஆதவன். இதனைப் பார்த்து நெகிழ்ந்த யுவன், "ஆதவனை பார்க்கும்போது முத்துக்குமார் என் கூடவே இருப்பதுபோல உள்ளது'' எனக் கூறியதைக் கண்ணில் நீர் ததும்பக் கூட்டத்தோடு அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் நா.முத்துக்குமாரின் மனைவி. யுவனின் இசைப்பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தாலும், அப்பயணத் தில் இனி வரும் காலங்களில் முத்துக்குமாரின் இடம் நிரப்ப முடியாததே.

-எம்.கே.