ரசுத் திட்டங்களுக்காக, மக்கள் பயன்படுத்தும் நிலத்தை விலைகொடுத்து வாங்கி அரசுகள் பயன்படுத்தும். சமயங்களில் புறம்போக்கு நிலத்தை, அரசியல்வாதிகளும் குண்டர்களும் ஆக்கிரமித்துப் பயன்படுத்துவ துண்டு. உச்சகட்டமாக விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ நிலத்தையே ஆக்கிரமித்து பஞ்சாப் மாநிலத்தில் தாயும் மகனும் அல்வா கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. உண்மையைச் சொல்லப்போனால், பஞ்சாப்பின் ஒரு பகுதி நம்மிடமும், மறுபகுதி பாகிஸ்தானிடமும் உள்ளது. இதில் நம் வசமுள்ள பஞ்சாப்பின் பெரோஸ்பூர் பகுதியிலுள்ள கிராமம்தான் பட்டுவல்லா. இந்தக் கிராமத்தில் விமானப் படைக்குச் சொந்தமான ஒரு ஓடுதளம் இருந்தது. 1962, 1965, 1971 போர்களில் எல்லாம் இந்த விமான ஓடுதளத்திலிருந்து, விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் இயக்கப்பட்டன.

ஆனால் அதன்பின் அந்த விமான தளமும் அதையொட்டிய நிலங்களும் நெடுநாட்களாகப் பயன்பாட்டில் இல்லை. இதை நன்கு கவனித்துக்கொண்டிருந்த உஷான் அன்சால் என்ற பெண்மணியும், அவரது மகன் நவீன் சந்தும்  ஒரு திட்டத்தை வகுத்தனர். பத்திரப் பதிவு அதிகாரிகளைக் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து, அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தங்களுடையதைப் போல் மாற்றிக் கொண்டனர். பிறகு அதை விற்றுக் காசும் பார்த்துவிட்டனர்.

Advertisment

28 ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப்பின் உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற வருவாய் அதிகாரி நிஷான் சிங் என்பவர் இந்த விவகாரத்தைக் குறித்து வழக்குத் தாக்கல் செய்ய, அதிர்ந்துபோன உயர்நீதிமன்றம், பஞ்சாப் விஜிலென்ஸ் பீரோ தலைவருக்கு இந்தக் குற்றச்சாட்டை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லியுள்ளது. இதையடுத்துதான் இந்த மோசடிப் பேர்வழிகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 

ஐ.பி.சி. பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 420 (மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்கத் தூண்டுதல்), 465 (போலி செய்தல்), 467 (மதிப்புமிக்க பத்திரம், உயில் போன்றவற்றை போலியாக உருவாக்குதல்), 471 (போலி ஆவணம் அல்லது மின்னணுப் பதிவேட்டை உண்மையானதாகப் பயன்படுத்துதல்) 1208 (குற்றவியல் சதி) என பல பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மேலும், இந்த இருவர் தவிர்த்து இந்த மோசடியில் தொடர்புடையவர்களை அடை யாளம் காண விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நில மோசடிங்கிற கிணறைத் தோண்டினா, விதவிதமா பூதம் கிளம்பும்போல இருக்குதே!

Advertisment

-சூர்யன்