ஒரு என்கவுன்டர், இருவர் தலைமறைவு, ஒரு மரணம் மற்றும் சிறையில் 9 நபர்கள் தவிர ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதாகி சிறையிலிருந்த 30 நபர்களில் மீதமுள்ளோர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த ஜாமீன், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வழிவகுத்துள்ளது. எனினும், சி.பி.ஐ. விசாரணைக்காக நீதிமன்ற அவமதிப்பு பெட்டிஷனை ஆம்ஸ்ட்ராங் தரப்பு தாக்கல்செய்ய "கதரின்' நிலை சிக்கலாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த கொலைவழக்கிற்காக காவல்துறை விசாரணையை முடித்து 7,087 பக்க குற்றப்பத்திரிகையில், 725 சாட்சிகள் மற்றும் 576 ஆவணங்களை இணைத்து நாகேந்திரன், அஸ்வத்தாமன், சம்போ செந்தில், அருள், பாலு (எ) புன்னை பாலு, ராமு (எ) வினோத், திருவேங்கடம், திருமலை, மன்னா (அ) மணிவண்ணன், சிவசக்தி (எ) சிவா, அப்பு விஜய், கோழி
கோகுல், சந்தோஷ், செல்வராஜ், பொற்கொடி, பிரதீப், அரிஹரன், மொட்டை கிருஷ்ணா, ஹரிதர
ஒரு என்கவுன்டர், இருவர் தலைமறைவு, ஒரு மரணம் மற்றும் சிறையில் 9 நபர்கள் தவிர ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதாகி சிறையிலிருந்த 30 நபர்களில் மீதமுள்ளோர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்த ஜாமீன், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வழிவகுத்துள்ளது. எனினும், சி.பி.ஐ. விசாரணைக்காக நீதிமன்ற அவமதிப்பு பெட்டிஷனை ஆம்ஸ்ட்ராங் தரப்பு தாக்கல்செய்ய "கதரின்' நிலை சிக்கலாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த கொலைவழக்கிற்காக காவல்துறை விசாரணையை முடித்து 7,087 பக்க குற்றப்பத்திரிகையில், 725 சாட்சிகள் மற்றும் 576 ஆவணங்களை இணைத்து நாகேந்திரன், அஸ்வத்தாமன், சம்போ செந்தில், அருள், பாலு (எ) புன்னை பாலு, ராமு (எ) வினோத், திருவேங்கடம், திருமலை, மன்னா (அ) மணிவண்ணன், சிவசக்தி (எ) சிவா, அப்பு விஜய், கோழி
கோகுல், சந்தோஷ், செல்வராஜ், பொற்கொடி, பிரதீப், அரிஹரன், மொட்டை கிருஷ்ணா, ஹரிதரன், சதீஷ்குமார், சிவா, அப்பு, முகிலன், நூர் விஜய், அப்பு விக்னேஷ், ராஜேஷ், கோபி, செந்தில்குமார், அஞ்சலை, மலர்க்கொடி ஆகிய 30 நபர்களை குற்றவாளிகளாகக் காட்டியது. இதில், சம்போ செந்திலும், மொட்டை கிருஷ்ணனும் தலைமறைவாகினர். இன்றுவரை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதனைக் கண்டறியவில்லை காவல்துறை. திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட, நாகேந்திரன் சிறையிலேயே மரணித்தார்.
வழக்கின் விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையி லுள்ள நிலையில், "ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் செம்பியம் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட வில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையிலுள்ள அரசியல் தொடர்பு குறித்து முறையாக விசாரிக்கப்பட வில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக் கப்படவில்லை. உண் மையை வெளிக் கொண்டு வராமல் அவசரமாக காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலை யிட்டுள்ளதால், குற்றப் பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடவேண்டும்' என வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
காவல்துறையோ, "27 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத் துள்ளதாகவும், விசாரணை நிலுவையி லுள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கூடாது” எனவும் தெரிவித்தது. எனினும், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார் நீதிபதி வேல்முருகன். விசாரணை ஆவணங்களை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவும், 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியது குறிப் பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் அருள், பாலு (எ) புன்னை பாலு, ராமு (எ) வினோத், திருமலை, செல்வராஜ், மன்னா (அ) மணிவண்ணன், கோழி கோகுல், சந்தோஷ், அரிஹரன் ஆகியோர் சிறையிலிருக்க, மீதமுள்ள அனைவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதால், இதனையே காரணம் காட்டி சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டாம் என்றது தமிழக அரசு. ஆனால், இது எங்களுக்கு அச்சுறுத்தலான ஒன்று. நீதிமன்றம் கூறியபடி சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெட்டிஷனை தாக்கல் செய்துள்ளது கொலையுண்ட ஆம்ஸ்ட்ராங் தரப்பு.
"ஏறக்குறைய 725 சாட்சிகள் மற்றும் 576 சான்றாவணங்களை விசாரித்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 16 மாதங்கள் சிறையிலிருந்ததால் மணீஷ் சிசோடியா, செந்தில்பாலாஜி உள்ளிட்ட பல வழக்குகளை மேற்கோள் காட்டித்தான் ஜாமீன் கேட்டிருந்தோம்'' என்றார் ஜாமீன் பெற்றவர் களுக்காக ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்தமிழ்ச்செல்வன்.
இது இப்படியிருக்க, கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் வேறு சமூகத்தினர். ஆதலால் பட்டியலின வன் கொடுமையின்கீழ் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டுமென தனியாக ஒரு வழக்கினையும் தொடுத்துள்ளார் பொற்கொடி. கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட 30 நபர்களில் திருவேங்கடம், நாகேந்திரன், அஸ்வத்தாமன், அஞ்சலை, மன்னா (அ) மணி வண்ணன் ஆகியோர் பட்டியலின வகுப்பை யும், தலைமறைவான சம்போ செந்திலும், மொட்டை கிருஷ்ணனும் மாற்று சமூகத்தை யும், ஏனையோர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவுத்துறை அதிகாரி ஒருவரோ, "நீதிமன்ற அவமதிப்பு பெட்டிஷன் ஒரு பக்கம். சி.பி.ஐ.யின் ஆறு மாதத்திற்குள்ளான குற்றப்பத்திரிகை! இவைகளால் நிம்மதி யிழந்திருக்கின்றது அந்த "கதர்'. ஆ-2 அஸ்வத்தாம னும் அவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த கதை. எனினும், கொலை நடப்பதற்கு முன் விமானத்தில் இரு வரும் பயணித்தபோது ஆம்ஸ்ட்ராங் குறித்துப் பேசியதாகவும், அதுபோல் இரண்டு திருமண விழாக்களில் இருவரும் தனியாக அமர்ந்து பேசியதாகவும் மறைமுக சாட்சியமளித்துள்ளனர் நால்வர். இதற்கு ஆதாரமாக வீடியோக்களையும் ஒப்ப டைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சி.பி.ஐ. விசாரணையின்போது இது தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்பதால் பீதியில் இருக்கின்றது அந்த "கதர்' என்கின்றார் அவர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு விரைவில் வேறொரு கோணத்தை நோக்கிப் பாயும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
-வேகா
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us