ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக் கையை ஏற்று, தற்போது அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப் பட்ட நிலையில், கடந்த சில மாதங்களில் அவ்வழக்கில் விசாரணைக்குள்ளானவர்களும், தலைமறைவாக இருக்கும் சம்பவ செந்திலுக்கு நெருக்கமானவர்களும் வரிசையாக பா.ஜ.க.வில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது. 

Advertisment

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு ரவுடி சம்பவ செந்தில் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்தவரான மொட்டை கிருஷ்ணன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவரு கிறார்கள். இந்நிலையில், மொட்டை கிருஷ்ணனின் செல் போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை செய்த போது, அவருடைய சிம்கார்டு அகில் குமார் என்பவரின் பெயரில் இருந்துள்ளது. அதனால் தமிழக போலீசார் அகில்குமாரை விசாரணை செய்துள்ளனர். அகில்குமாரும், மொட்டை கிருஷ்ணனும் ரவுடி சம்பவ செந்திலுக்கு பினாமியாக செயல்பட்டுவருபவர்கள். சம்பவ செந்திலின் பணத்தை வைத்தே ஐ.பி.எல். சூதாட்டம் உள்ளிட்ட பலவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கு எப்படியும் சி.பி.ஐ.க்கு மாற்றப்படும், அப்படி மாற்றப்பட்டால் மேலும் சிக்கலை உண்டாக்குமென்பதை முன்கூட்டியே யோசித்த ரவுடி சம்பவ செந்தில், தனது கூட்டாளிகளின் பாதுகாப்புக்காக, மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வில் இணைக்கத் திட்டமிட்டார். தனக்கு நெருக்கமான சரத் மூலமாக வட சென்னை மாவட்டத் தலைவரான நாகராஜிடம் தொலைபேசியில் பேசிய சம்பவ செந்தில், "நம்ப பசங்கதான், அவங்களுக்கு கட்சியில் பொறுப்புக்களை வாங்கிக்கொடுங்க' என்று கேட்டுள்ளார்.

Advertisment

அதற்கு, "பிரதமர் மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது. அந்த விழாவுக்கான பணிகளை செய்யுங்கள். மேலும், மாநிலத்தலைவர் நயினார், இளைஞர் அணி எஸ்.ஜி.சூர்யா, எல்முருகன் ஆகியோரை சரிக்கட்டணும். அப்போது தான் உங்களுக்கு பொறுப்பு கிடைக்கும்'' என மாவட்ட தலைவர் நாகராஜ் சொல்லவே, அதன்படி நாகராஜிடம் வைட்டமின் 'ப' கொடுத்துள்ளனர்.  

மாவட்ட தலைவர் நாகராஜ் சொன்னபடியே ராய புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் மோடி பிறந்த நாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அன்பளிப் பாக வழங்கும் விழாவை அகில்குமார் நடத்தியுள்ளார். அந்த விழாவிற்கு பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினாரை வரவழைத்து அவர் மூலமாக அந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கினார். அந்த விழாவுக்கு அடுத்த நாளே அகில்குமாருக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

Advertisment

சம்பவ செந் திலுக்கு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்தி போன்றவற்றை சரத் என்பவர்தான் சப்ளை செய்வாராம். அதேபோல் முக்கிய நபர்களிடம் பேசு வதற்கு சரத்தின் செல்போனைத்தான் சம்பவ செந்தில் பயன்படுத்துவாராம். சரத் மீது, என்1 ராய புரம் காவல்நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கு உள்ளது. இப்படிப்பட்ட சரத்துக்கு பா.ஜ.க.வில் மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

amstrong1

அதேபோல், ஏற்கெனவே பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டி ருந்த நிரஞ்சனுக்கு, மீண்டும் வட சென்னை கிழக்கு மாவட்ட துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தலைமறைவான செந்திலுக்கு பணம் உள்ளிட்டவற்றை கொடுத்து பேணிக்காத்துவருபவர் நிரஞ்சன். இவர் ஒரு பள்ளியையும் தண்டையார்பேட்டையில் நடத்திவருகிறார். ஒரே சமூகம் என்பதாலேயே "நம்ம தம்பி' எனக்கூறி சம்பவ செந்தில் இணைத்துக் கொண்டார். தற்போது அவருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி முதற்கட்டமாக தன்னைச் சுற்றியுள்ள முக்கிய மான நபர்களுக்கு பா.ஜ.க.வில் பொறுப்புகளை வாங்கிக் கொடுத்து அவர்களிடம், "எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் வாராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். எப்படியாவது எல்.முருகன் மூலமாகப் பேசி, இந்த சி.பி.ஐ. விசாரணையில் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டால் போதும். வருகின்ற தேர்தலுக்கான நிதியாக எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்'. என சரத் மூலமாக பா.ஜ.க. வடசென்னை மாவட்டத் தலைவர் நாகராஜிடம் பேசியுள்ளாராம். பா.ஜ.க. தரப்பிலும், "கேட்கின்ற தொகையை மட்டும் கொடுத்தால் போதும், நிச்சயமாக இந்த விசாரணையில் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. எப்போதும் போலவே தலைமறைவாகத் தேடப்படும் குற்றவாளியாகவே இருப்பீங்க'' என்று அவரிடம் பேசி முடித்துள்ளார்களாம். 

ஏற்கெனவே, சம்பவ செந்தில் எப்போது சிக்கினாலும் என்கவுண்டரில் போட்டுத்தள்ள தமிழக போலீஸ் தயாராக இருந்துவந்த நிலையில், தற்போது எதிர்பார்த்தது போல வழக்கு சி.பி.ஐ. வசம் கை மாறியதும், பா.ஜ.க.வில் பாதுகாப்பு தேடும் புது   ரூட்டை கையிலெடுத்து    தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் அரசியலில் இறங்கியுள்ளார் சம்பவ செந்தில். கொலைக்குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள தேடப் படும் குற்றவாளிகளுக்கும், ரவுடிகளுக்கும் அடைக்கலம் தரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க., எப்படி மற்ற அரசியல் கட்சிகளை நோக்கி குற்றம் சுமத்துமென்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..

-சே