ஆம்ஸ்ட்ராங்! படுகொலை ஸ்கெட்ச்! உண்மை குற்றவாளிகள் யார் யார்?

armstrong

மிழகத்தை உலுக்கிய அரசியல் படுகொலைகளில் ஒன்றாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் பிறந்து வளர்ந்த வேணுகோபால் தெருவில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த புதிய வீட்டில் சமீபத்தில் வாங்கிய புதிய காரில் அவர் உபயோகிக்கும் ஜெர்மன் தயாரிப்பு துப்பாக்கியை வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

amstrang

தமிழகத்தை உலுக்கிய அரசியல் படுகொலைகளில் ஒன்றாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் பிறந்து வளர்ந்த வேணுகோபால் தெருவில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த புதிய வீட்டில் சமீபத்தில் வாங்கிய புதிய காரில் அவர் உபயோகிக்கும் ஜெர்மன் தயாரிப்பு துப்பாக்கியை வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது மூன்று மோட்டார் பைக்குகளில் ஆறுபேர் வந்தனர். அதில் இரண்டு பேர் ‘சொமாட்டோ’ உணவு டெலிவரி கம்பெனியின் யூனிபார்ம் அணிந்து ஆம்ஸ்ட்ராங்குடன் பேசினர். அவர்களை "நீங்கள் யார்?'' என அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களுடன் வந்த ஒருவர் பின்னாலிருந்து ஆம்ஸ்ட்ராங்கின் காலை வெட்டினார். சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கின் வலது கையும் வெட்டப்பட்டது. கையும், காலும் வெட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்துப்பகுதியும் வெட்டப்பட்டது. திடீர் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ஆம்ஸ்ட்ராங்.

அந்தப் புதிய கட்டடத்துக்கு 5ஆம் தேதிதான் பெரிய இயந்திர இரைச்சலுடன் தளம் போடப்பட்டது. இரைச்சலும் வேலை ஆட்களின் சத்தமும் நிறைந்த அந்தக் கட்டடத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி இருந்தார். அவர் ஆம்ஸ்ட்ராங்கை சிலர் சுற்றிப்போட்டு வெட்டுவதைப் பார்த்ததும் பதட்டத்துடன் அவரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அவரது மண்டையிலும் மார்பிலும் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியவர்கள் வ

மிழகத்தை உலுக்கிய அரசியல் படுகொலைகளில் ஒன்றாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் பிறந்து வளர்ந்த வேணுகோபால் தெருவில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த புதிய வீட்டில் சமீபத்தில் வாங்கிய புதிய காரில் அவர் உபயோகிக்கும் ஜெர்மன் தயாரிப்பு துப்பாக்கியை வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

amstrang

தமிழகத்தை உலுக்கிய அரசியல் படுகொலைகளில் ஒன்றாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு 7 மணியளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூரில் அவர் பிறந்து வளர்ந்த வேணுகோபால் தெருவில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அந்த புதிய வீட்டில் சமீபத்தில் வாங்கிய புதிய காரில் அவர் உபயோகிக்கும் ஜெர்மன் தயாரிப்பு துப்பாக்கியை வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது மூன்று மோட்டார் பைக்குகளில் ஆறுபேர் வந்தனர். அதில் இரண்டு பேர் ‘சொமாட்டோ’ உணவு டெலிவரி கம்பெனியின் யூனிபார்ம் அணிந்து ஆம்ஸ்ட்ராங்குடன் பேசினர். அவர்களை "நீங்கள் யார்?'' என அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களுடன் வந்த ஒருவர் பின்னாலிருந்து ஆம்ஸ்ட்ராங்கின் காலை வெட்டினார். சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கின் வலது கையும் வெட்டப்பட்டது. கையும், காலும் வெட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் கழுத்துப்பகுதியும் வெட்டப்பட்டது. திடீர் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ஆம்ஸ்ட்ராங்.

அந்தப் புதிய கட்டடத்துக்கு 5ஆம் தேதிதான் பெரிய இயந்திர இரைச்சலுடன் தளம் போடப்பட்டது. இரைச்சலும் வேலை ஆட்களின் சத்தமும் நிறைந்த அந்தக் கட்டடத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி இருந்தார். அவர் ஆம்ஸ்ட்ராங்கை சிலர் சுற்றிப்போட்டு வெட்டுவதைப் பார்த்ததும் பதட்டத்துடன் அவரை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அவரது மண்டையிலும் மார்பிலும் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியவர்கள் வெட்டினார்கள். அருகிலிருந்த பாலாஜி என்பவரையும் வெட்டினார்கள். வெளியில் வெட்டுப்பட்ட வீரமணியை தூக்கிக்கொண்டு ஒரு கும்பல் ஓடியது. அப்பொழுதும் ஆம்ஸ்ட்ராங் வெட்டுப்பட்டுக் கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பின்னர் அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் இறந்துபோயிருந்தார்.

amstrang

வீரமணிக்கு 27 தையல்கள் போடுமளவிற்கு வெட்டுக்கள் பாய்ந்திருந்தன. ஆம்ஸ்ட்ராங்கின் கை, கால்களில் சரமாரியாக விழுந்த வெட்டுக்களால் கை, கால்கள் உடைந்து தொங்கின. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் அவரை பிரேதப்பரிசோதனை செய்த ராஜீவ்காந்தி புது மருத்துவமனை வளாகத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா, மத்திய அமைச்சர் முருகன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தே.மு.தி.க. பிரேமலதா என பிரபலங்களால் நிறைந்த மருத்துவமனை வளாகத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் சாலைமறியல் செய்து ஒட்டுமொத்த வட சென்னையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். அவரை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அவர் வசித்த பெரம்பூர் பகுதியில் முழுக் கடையடைப்பும் நடந்தது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படுகொலை, அகில இந்திய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. முன்னாள் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கண்டன அறிக்கைகள் விடுத்தனர். பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி தனி விமானத்தில் சென்னைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது உறவினருக்கு சொந்தமான பொத்தூர் என்கிற இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்வரை சென்னை நகரமே பெரிய பதட்டத்தில் ஆழ்ந்திருந்தது.

a

90களில் குத்துச்சண்டை மற்றும் கராத்தே வீரராக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். திராவிடர் கழக பின்புலத்தில் இயங்கிய அவரது தந்தை, விண்வெளி வீரரான ஆம்ஸ்ட்ராங்கின் பேரை அவருக்கு வைத்தார். பூவை மூர்த்தியின் சிஷ்யனாக அரசியலில் களமிறங்கிய அவர் பூவை மூர்த்திக்கு தொல்லை கொடுத்த ஒருவரை தீர்த்துக் கட்டியதால் புகழ் பெற்றார். தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரங்கநாதன் காங்கிரசில் இருந்தபோது இவரும் அவரோடு இருந்தார். பின்னர், ரங்கநாதனை விட்டு பிரிந்தபிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அதன் மாநிலத் தலைவர் ஆனார்.

சென்னை சட்டக் கல்லூரியில் தலித் மற்றும் முக்குலத்தோர் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் தலித் மாணவர்களுக்கு பின்புலமாக இவர் இயங்கியது இவரை பிரபலமாக்கியது. முக்குலத்தோர் மத்தியில் அழியாத முன் விரோதத்தையும் உருவாக்கியது. சென்னை நகரில் எது நடந்தாலும் அதில் ஆம்ஸ்ட்ராங்கின் கை இருக்கும் என அறியப்பட்டார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரஜினி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதில் ஆம்ஸ்ட்ராங்கின் கை இருக்கிறது என பேசப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருக்கமான தென்னரசு என்பவர் கொலை செய்யப்பட்டார். தென்னரசு கொலைக்கு பழிக்குப்பழி வாங்க ஆற்காடு சுரேஷ் என்பவரை சென்னை பட்டினப்பாக்கத்தில் வெட்டிக்கொலை செய்தனர்.

ஆரம்ப காலத்தில் இவர் மீதிருந்த வழக்குகளிலிருந்து கோர்ட் மூலம் இவர் விடுதலை பெற்றுவிட்டார். இவர் மீது இருந்த சரித்திரப் பதிவேடும் நீக்கப்பட்டது. அதனால் அவரால் சட்டப்பூர்வமாக பாதுகாப்பு பெறமுடியவில்லை. ஆனால் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகக் கூறி துப்பாக்கி வாங்கி வைத்துக்கொண்டார். குத்துச்சண்டை கராத்தே பயிற்சிகள் கைத் துப்பாக்கி என அனைத்தையும் மீறி யாரும் தன்னை நெருங்க முடியாது என சொல்லும் அவர், ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களில் தலையிட்டார்.

a

சென்னை நகரில் எந்த பெரிய கட்டடமும் ஆம்ஸ்ட்ராங்கை மீறி இடிக்கவோ கட்டவோ முடியாது. சென்ட்ரல் பக்கத்தில் உள்ள நடராஜ் தியேட்டர் விற்பனை விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பெயர் பெரிதாக அடிபட்டது. 5000 கோடி பொதுமக்கள் பணத்தை மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் நிறுவன உரிமையாளர் சிவக்குமாரை மிரட்டிய புகார் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே ஆருத்ரா நிறுவனத்தை சேர்ந்த சிலருக்கு ஆதரவாக ஆற்காடு சுரேஷ் செயல்பட்டதால் இருவருக்கும் இடையேயான மோதல் பெரிதானது. “"என்னைத் தூங்கவே விடவில்லை ஆம்ஸ்ட்ராங்.. தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தார். எனது மனைவி உட்பட அனைவரும் என்னை கேவலமாகப் பேசினார்கள். அதனால்தான் நான் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றேன்''’என ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பொன்னை பாலு உட்பட 15 பேர் கொண்ட கும்பல் போலீசின் பிடியில் சிக்கியுள்ளது. அவர்களிடமிருந்து கொலை செய்யப் பயன்படுத்திய கத்திகள் ரத்தக்கறை படிந்த சொமாட்டோ உடைகள் வெடிகுண்டுகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். இவர்கள்தான் கொன்றார்கள் என போலீசார் வழக்கை முடிக்கவில்லை. ஒரு கொலை நடந்தால் அந்தக் கொலை வழக்கு விசாரணையை முடிப்பதற்கு 50 நாள் அவகாசம் சட்டப்படி போலீசாருக்கு தரப்படும். எனவே, இப்பொழுது போலீசிடம் சிக்கியுள்ள 15 பேருடன் இந்த வழக்கு முடிந்துவிடவில்லை. கொலை நடந்தபோது அந்த இடத்துக்கு கத்தியுடன் சென்றது 6 பேர். மற்ற 9 பேரும் பல்வேறு இடங்களில் நின்றிருந்தார்கள். சி.சி.டி.வி. கேமராக்கள், பல சோர்ஸ்கள் மூலமாகத்தான் நாங்கள் குற்றவாளிகளை முடிவு செய்தோம் என்கிறார்கள் போலீசார். ஆனால், ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கு ஒரு பெரிய கும்பலே சதி செய்துள்ளது. அது எங்கள் புலன் விசாரணையில் தெரியவரும் என்கிறார்கள் சென்னை நகர போலீசார்.

ss

இந்தக் கொலையில் சென்னை நகரைச் சேர்ந்த சீசிங் ராஜா, சைதை சுகு, நாகேந்திரன், ஆகியோர் மட்டுமல்ல, தூத்துக்குடியைச் சேர்ந்த பாயாசம் என்கிற பரமசிவன், நெட்டூர் கண்ணன், ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த கூலிப்படையினர். இவர்களுக்குத் தலைமை தாங்கியது அ.தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமான திண்டுக்கல் மோகன்ராம். இந்த சீசிங் ராஜாவுக்கு ஆற்காடு சுரேஷ் நெருங்கிய நண்பர். ஆற்காடு சுரேஷ் கொலையானபோது சென்னை சிட்டி கமிஷனராக இருந்தவர் தற்போது டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஜிவால்தான். இந்தக் கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அத்தனை பேருக்கும் ஆம்ஸ்ட்ராங்குடன் ஒவ்வொரு விதமான மோட்டிவ் இருக்கிறது. திண்டுக்கல் மோகன் ராமுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே ரியல் எஸ்டேட் தகராறு இருக்கிறது. நெட்டூர் கண்ணன், பாயாசம் பரமசிவன் ஆகியோர் வாடகை கொலையாளிகள். இதில் திண்டுக்கல் மோகன்ராம் தமிழகத்திலேயே நம்பர் ஒன் ரவுடி. தலைமறைவாக இருக்கும் இவரது சிஷ்யன் சீர்காழி சத்யாவை செங்கல்பட்டு போலீசார் சமீபத்தில் துப்பாக்கியுடன் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங், பொற்கொடி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மாயாவதியிடம் கொடுத்து, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரி பாய் புலே பெயரைச் சூட்டினார். ஆம்ஸ்ட்ராங்கிடம், இத்தாலியிலிருந்து வாங்கப்பட்ட, பெரிட்டா டாம்கேட் ஐநாக்ஸ் 3032 எனும் மாடல் கைத்துப்பாக்கி உள்ளது. அதற்கு முறைப்படி உரிமம் பெற்று வைத்திருந்தார். இந்த துப்பாக்கி, 9 - 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, 400 கிராம் எடை உடையது. ஒன்பது ரவுண்ட் வரை சுடமுடியும் என்கிறார்கள் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஓ.சி.ஐ.யூ. என்கிற உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆம்ஸ்ட்ராங் படுகொலையை எப்படி செய்தார்கள் என காவல்துறையினரே சந்தேகம் எழுப்புகிறார்கள்.

இந்நிலையில் சென்னை நகரின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யான அருண், சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் காலை எட்டு மணிக்கு யாரையும் கேட்காமல் முதல்வரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தத்தை அழைத்து சென்னை கமிஷனர் அருண் என உத்தரவிட்டு செயல்படுத்தச் சொன்னார் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

-தாமோதரன் பிரகாஷ் அருண் பாண்டியன் துரை.மகேஷ்

படங்கள்: ஸ்டாலின்

armstrong

nkn100724
இதையும் படியுங்கள்
Subscribe