Advertisment

முதலிடத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை! -சாதித்தது எப்படி?

aa

பொதுமக்களிட மிருந்து காவல்துறை உதவி எண்ணுக்கு வரப்பெற்ற தொலை பசி அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது அரியலூர் மாவட்ட காவல்துறை.

Advertisment

பொதுவாகவே, காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், குற்றச்செயல் களை கண்காணிப்பதற்காகவும், அவை நடை பெறுவதற்கு முன்பு தடுப்பதற்காகவும் பெரு முயற்சி செய்துவருகிறது தமிழக காவல்துறை. இதற்காக பெருநகரங்கள் உட்பட சிறு

பொதுமக்களிட மிருந்து காவல்துறை உதவி எண்ணுக்கு வரப்பெற்ற தொலை பசி அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது அரியலூர் மாவட்ட காவல்துறை.

Advertisment

பொதுவாகவே, காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், குற்றச்செயல் களை கண்காணிப்பதற்காகவும், அவை நடை பெறுவதற்கு முன்பு தடுப்பதற்காகவும் பெரு முயற்சி செய்துவருகிறது தமிழக காவல்துறை. இதற்காக பெருநகரங்கள் உட்பட சிறு கிராமங் கள் வரை ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக் குள்ளும் ‘போலீஸ் பீட்’ எனப்படும் காவல்துறை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகள் கண் காணிக்கப்படுகின்றன.

aa

கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் அழைப்புகள் குறித்தும், அந்த அழைப்புகளுக்கு எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட் டது என்பது குறித்தும் கண்காணித்து வருகிறது சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகம். அதில்தான் முதலிடம் பிடித்துள்ளது அரியலூர் மாவட்ட காவல்துறை.

இது சாத்தியமானது எப்படி?’ என்பது குறித்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லாவிடம் பேசினோம்.

"நோய் வரும்முன் காப்பது எப்படி நமது ஆரோக்கியத்திற்கு நல்லதோ, அதேபோல எந்தவொரு பிரச்சனையும் துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் தடுப்பதும், அது உருவாகாமல் பாது காப் பதும் நல்லது. அதனால் தான், காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வரும் அனைத்து அழைப்பு களுக்குமே முக்கியத் துவம் கொடுத்து பிரச்ச னைகளை உடனுக்குடன் சரி செய்துவிடுகிறோம்.

Advertisment

aa

அரியலூர் மாவட் டத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் சுமார் 50-க்கும் மேற்பட்ட அழைப் புகள் காவல்துறை கட்டுப் பாட்டு அறையிலுள்ள அவசர உதவி எண்ணிற்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை உடனடி உதவிகேட்டு வருபவையாகவே இருக்கும். இதை, கட்டுப் பாட்டு அறையில் பணியாற்றும் ஒவ்வொரு வரும் நன்கு உணர்ந்துள்ளனர். தவிர, எந்த காவல் நிலைய லிமிட்டில் இருந்து ‘100 கால்’ அழைப்பு வந்தாலும், உடனடியாக அந்த ஸ்பாட்டில் ஆஜராகுமாறு அனைத்து காவலர் களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஸ்பாட்டிற்குச் செல்லும் காவலர்கள் அந்த பிரச்சனைகளை ‘அட்டன்ட்’ செய்துவிடுகின்ற னர். தேவைப்படும் மேல் நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டு விடுகின்றன.

தவிர, எங்கள் மத்திய மண்டல ஐ.ஜி. பால கிருஷ்ணனால் கடந்த ஜனவரி மாதம் இ-பீட்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தற்போது மாவட்டம் முழுக்க சுமார் 900-க்கும் அதிகமான ‘விர்ச்சுவல்’ காவல் உதவி மையங்கள் செயல் படுத்தப்படுவதும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்துள்ளது''’என்றார் எஸ்.பி.

nkn140522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe