"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தி.மு.க. அரசின் இமேஜை குறைக்கும் முயற்சிகளைக் கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி''”
"ஆமாம்பா, அமைச்சர் நேருவைக் குறிவைத்து, அமலாக்கத்துறை அதிரடியில் இறங்கி இருக்கிறதே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/rang1-2025-10-30-16-09-23.jpg)
"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் கே.என். நேரு தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறை அண்மையில் ரெய்டு நடத்திய போது, நகராட்சி நிர்வாகத்துறையில் 800 போஸ்ட்டிங்குகளை நிரப்ப, தலா 25 லட்ச ரூபாய் வீதம் வாங்கியதாகக் கண்டுபிடித்திருக்கிறதாம். இது தொடர்பாக அவர் மீது வழக்கினைப் பதிவு செய்யுமாறு, அமலாக்கத்துறை இயக்குநரகம் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. எனினும் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு எதுவும் பதியப்படவில்லை. அமலாக்கத்துறையின் அந்தக் கடிதத்தை ஏற்பதா? வேண்டாமா? என்கிற விவாதம் அரசுத்துறையில் நடந்துவருகிறது. எஃப்.ஐ.ஆர். போடாமல் இதில் நேரடியாக அமலாக் கத்துறை தலையிட முடியாது. எனவே எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு தமிழக காவல்துறை தயங்கி வருகிறதாம். ஆனால் நேரு மீது வழக்கைப் பதிய வைத்துவிடவேண்டும் என்று அமலாக்கத் துறை தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறதாம். இந்த ஊழல் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, "திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன், பல ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றை தூசு தட்டி அதனை பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப்போன ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையின் மேலும் ஒரு முயற்சிதான் தற்போதைய இந்த கடிதம். காலியாக உள்ள 2,569 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்தது. தேர்வர்களிடம் விண் ணப்பங்கள் பெற, தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு, 38 மாவட்டங்களில், 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. அவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தால் மதிப்பிடப்பட
"ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தி.மு.க. அரசின் இமேஜை குறைக்கும் முயற்சிகளைக் கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி''”
"ஆமாம்பா, அமைச்சர் நேருவைக் குறிவைத்து, அமலாக்கத்துறை அதிரடியில் இறங்கி இருக்கிறதே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/rang1-2025-10-30-16-09-23.jpg)
"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் கே.என். நேரு தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறை அண்மையில் ரெய்டு நடத்திய போது, நகராட்சி நிர்வாகத்துறையில் 800 போஸ்ட்டிங்குகளை நிரப்ப, தலா 25 லட்ச ரூபாய் வீதம் வாங்கியதாகக் கண்டுபிடித்திருக்கிறதாம். இது தொடர்பாக அவர் மீது வழக்கினைப் பதிவு செய்யுமாறு, அமலாக்கத்துறை இயக்குநரகம் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. எனினும் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு எதுவும் பதியப்படவில்லை. அமலாக்கத்துறையின் அந்தக் கடிதத்தை ஏற்பதா? வேண்டாமா? என்கிற விவாதம் அரசுத்துறையில் நடந்துவருகிறது. எஃப்.ஐ.ஆர். போடாமல் இதில் நேரடியாக அமலாக் கத்துறை தலையிட முடியாது. எனவே எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு தமிழக காவல்துறை தயங்கி வருகிறதாம். ஆனால் நேரு மீது வழக்கைப் பதிய வைத்துவிடவேண்டும் என்று அமலாக்கத் துறை தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறதாம். இந்த ஊழல் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, "திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன், பல ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ஒன்றை தூசு தட்டி அதனை பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப்போன ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையின் மேலும் ஒரு முயற்சிதான் தற்போதைய இந்த கடிதம். காலியாக உள்ள 2,569 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்தது. தேர்வர்களிடம் விண் ணப்பங்கள் பெற, தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக 2.04 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு, 38 மாவட்டங்களில், 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. அவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தால் மதிப்பிடப்பட்டு, இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டதால், விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒரு ஆட்சேபனைகூட வரவில்லை. இறுதியாக, 2,538 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்த பணி நியமனங்களில் எந்த ஊழலும் நடக்கவில்லை. நியாயமான முறையில் நடந்துள்ள பணி நியமனத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தவே உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை செயல் படுகிறது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் நகராட்சி நிர்வாகத்துறை மேற்கொள்ளும்'’என்று அமலாக்கத்துறையின் ஊழல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தமிழக அரசுக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள்.''”
"வரும் தேர்தலில் சென்னையில் உள்ள பெரும்பாலான சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை அறிவாலயம் மாற்றப்போகிறது என்கிறார்களே?''”
"சென்னையிலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் அறிவாலயத் தரப்பு ஒரு சர்வேயை சீக்ரெட்டாக எடுத்தது. அப்போது வந்த ரிசல்ட் தி.மு.க.விற்கு திருப்தியைத் தரவில்லை. இது குறித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இதைத் தொடர்ந்து, சென்னை தொகுதிகளைத் தீவிரமாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறாராம் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின். மீண்டும் அவர், தொகுதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்த போது, 18 தொகுதிகளில் ஏறத்தாழ 10-ல் அங்குள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான மனநிலையில் தொகுதிவாசிகள் இருப்பது தெரியவந்திருக்கிறதாம். எனவே வரும் தேர்தலின்போது, அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றும் முடிவை அறிவாலயம் உறுதியாக எடுத்திருக்கிறது என்கிறார்கள்.''”
"மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஆராய 8ஆவது ஊதியக்குழு அமைக்கப் பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் குறித்து ஆராய 8 ஆவது ஊதியக் குழு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐ.ஐ.எம். பெங்களூர் நிறுவன பேராசிரியர் புலக்கோஷ், மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ 26,000-மாக உயர்த்தி வழங்க வழிவகுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த அடிப்படையில் சம்பளம் உயரும்போது, சாதாரண நிலையில் இருக்கும் ஊழியர்களின் மொத்த மாத சம்பளம் 70,000-ஐ தாண்டும் என்கிறார்கள்.''”
"இப்படி மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டால், அது தமிழக அரசையும் பாதிக்குமே?''”
"உண்மைதாங்க தலைவரே, அப்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பள உயர்வை, மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்கிறார்கள் இங்குள்ள அரசு ஊழியர்கள். ஏற்கனவே நிதிச்சுமையில் இருக்கும் தி.மு.க. அரசு, இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? என்பது கேள்விக்குறி. அதே சமயம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததில் தி.மு.க. அரசு மீது கோபமாக இருக்கும் அரசு ஊழியர்கள், 8 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையும் புறக்கணிக் கப்பட்டால், ஆளுங்கட்சிக்கு எதிரான மன நிலைக்குச் சென்றுவிடக்கூடிய ஆபத்தும் இருக் கிறது. அது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ப தால் தமிழக அரசு, இந்த 8 ஆவது ஊதியக் குழு வின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வரு கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.''”
"தமிழக மக்களின் வாக்குரிமையைக் காப்பாற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை தி.மு.க. கூட்டுகிறதே? எல்லோரும் வருவார்களா?''”
“"எஸ்.ஐ.ஆர். எனும் பெயரில் தமிழக மக்க ளின் வாக்குரிமையை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்திற்கு எதிராகப் போராடுவது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி களின் கூட்டத்திற்கு தி.மு.க., அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தை வருகிற நவம்பர் 2ஆம் தேதி சென்னை அக்கார்ட் ஓட்டலில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால், இதில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் மட்டுமே கலந்துகொள்ளும் சூழல் இருக்கிறது. இந்த கூட்டத்தில் அ..திமு.க. -பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். டாக்டர் ராமதாஸ் பா.ம.க. சார்பில் எம்.எல்.ஏ. ஜி.கே. மணியோ, எம்.எல்.ஏ. அருளோ பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் பிரேமலதா விவாதித்துள்ளார். இந்த நிலையில் இந்தக் கூட்டத்திற்கு த.வெ.க. விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கே சென்று, இதற்காக தி.மு.க. பூச்சி முருகன் அழைப்பு கொடுத்திருக்கிறார்.''”
"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தி.மு.க. அரசின் போக்கு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறதே?''”
"பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசா ரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 24ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்காமல் தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இருந்தும் அந்த கொலைவழக்கு தொடர்பான விசாரணைத் தகவல்களை சி.பி.ஐ. கேட்டும், தமிழக போலீஸ் தரவில்லை. இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இரண்டாவது முறையாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க. அரசு. இதனால், யாரைக் காப்பாற்ற தி.மு.க. அரசு முயற்சிக்கிறது? என்கிற கேள்வியை வழக்கறிஞர் தரப்பு எழுப்புகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. தலையீடு இருக்கக்கூடாது என இவ்வளவு தீவிரத்தைத் தி.மு.க. காட்டுவதை தமிழக எதிர்க்கட்சிகளும் பிரச்சினையாக்கலாமா? என்று ஆலோசிக்கின்றனவாம்.''’
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/rang2-2025-10-30-16-09-47.jpg)
"தமிழக அளவிலான பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனத்தில் ஹெவியா கல்லா கட்டியிருக் காங்களாமே?"
"ஆமாங்க தலைவரே, சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக காலியாக இருக்கும் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் நடை பெற்றுவருகிறது. தமிழகம் முழுவதும் 30 பிரிவுகள், 8 அணிகளுக்கான சட்டமன்றப் பொறுப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், மாநில துணைத் தலைவர், மாநிலச் செயலாளர் என கடந்த மாதம் நியமித்து முடித்துள்ளனர். ஒரு பிரிவுக்கு 12 பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனராம். இந்த நியமனத்தில் மாவட்டத் தலைவர் முதல் தலைமைவரை பதவிகளுக்கான பணப்பலன் கைமாறியுள்ளதாம். இந்த நியமனத்தில் அ...மலையின் விசுவாசிகளே இல்லாமல் கவனமாகப் பார்த்து பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். ஒட்டுமொத்தமாக 20 கோடிவரை வசூலாகியுள்ளதாக கட்சியினர் முணுமுணுக்க, கே.டி. ராகவன், நாச்சியப்பன் இருவரும் வசூல்செய்து, தங்களுக்கு 60 சதவிகிதத் தை ஒதுக்கிக்கொண்டு, கட்சிக்கு 40 சதவீதத்தையே கொடுத்துள்ளனராம். இந்த விவகாரம் தலைமைக் குத் தெரியவர... ஓ.பி.சி. பிரிவில் இளைஞரணி, மாவட்ட நிர்வாகிகள் நியமன அறிவிப்பு செல்லாதென பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ”
"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியா? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவா? என்கிற விவாதம் அ.தி.மு.க. வட்டாரத்தில் புழுதி கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம், அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் பலரும் எடப்பாடி தொடர்பான புகார்களை அமித்ஷாவிடம் நேரடியாகக் கொண்டு செல்கிறார்களாம். இதுகுறித்து அமித்ஷா வும் உடனுக்குடன் விசாரிக்கிறாராம். இது எடப்பாடிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம். இதுதான் இப்போது அ.தி.மு.க.வுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us