உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினர் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வாங்கும் தேதியை ஒரு வாரம் நீட்டித்துள் ளது தி.மு.க. தலைமை. ஆனால் அதற்குள் நாகை மாவட்ட தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல் பகிரங்கமாக வெடித்திருக்கிறது. மயிலாடுதுறையின் பிர தான சாலையான நீதிமன்ற சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. வினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மா.செ. நிவேதா முருகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஒ.செ.க்கள், ந.செ.க்கள் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக மா.செ.வைப் பார்த்து கேள்வி கேட்டனர். அப்போது நிவேதா முருகனுக்குப் பதிலாக மாஜி மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் எழுந்து, பதில் சொன்னதோடு, அறிவுரைகளையும் வாரி வழங்கினார்.
இதனால் கடுப்பான குத்தாலம் முன்னாள் சேர்மன், திருமணஞ்சேரி மனோகரன் எழுந்து, “"என்ன மாவட்டம் உங்ககிட்ட கேள்வி கேட்டா, அவர் பதில் சொல்றாரு. நீங்க மாவட்டமா இல்ல அவரு மாவட்டமா?' என வெடித்ததும், உஷ்ணமான கல்யாணம், மனோகரனை அடிக்கப் பாய்ந்ததோடு, தாறுமாறாக பேச ஆரம்பித்தார். பதிலுக்கு மனோகரனும் ஆவேசமாக பாய்ந்தார். இருவரையும் சமாதானப்படுத்துவது பெரும் பாடாகிவிட்டது. ஆனாலும் கல்யாணமும் மனோகரனும் தங்களது ஆதரவாளர்களைத் திரட்டி, கட்சி அலுவலகத்தை பதட்டமாக்கி விட்டனர்.
இது குறித்து மயிலாடுதுறை நகர் உ.பி. ஒருவர் நம்மிடம் பேசும்போது, "ஏ.கே.எஸ். விஜயன் மா.செ.வா இருந்த போதும் கல்யாணம் குரூப் தனி குரூப்பா இருந்துச்சு. இப்ப நிவேதா முருகனுக்கு எதிராகவும் தனி குரூப்பா இருக்கு. இந்த மயிலாடு துறையைப் பொறுத்தவரை யில் நகரச் செயலாளர் குண்டாமணி என்கிற செல்வ ராஜ் தனி குரூப் வச்சிருக்காரு. எந்த மா.செ.வும் இவரைக் கட்டுப்படுத்த முடியாது.
நகராட்சி சேர்மனாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பவானி சீனிவாசன் இருந்தபோது, குண்டாமணி வைஸ் சேர்மனா இருந்தாரு. பேருக்குத்தான் அந்தம்மா சேர்மன், மத்த டீலிங்கெல்லாமே குண்டாமணி தான். இப்போது கூட அ.தி.மு.க. ந.செ. வி.ஜி.கே.செந்தில்நாத னிடம், "உங்க மனைவியை சேர்மனுக்கு நிறுத்துங்க. அவர் ஜெயித்தா நான் வைஸ்சேர்மன், நான் ஜெயித்தால் அவர் வைஸ் சேர்மன்' என டீல் பேசி வருகிறார். அதேபோல் அவரது நட்பு, தொடர்பு எல்லாமே ஏ.டி.எம்.கே. எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், மாஜி எம்.பி. பாரதிமோகன் ஆகியோருடன் மட்டும்தான். சொந்தக் கட்சிக்காரனை கண்டுக்கவேமாட்டாரு. இதை கட்சித் தலைமையும் கண்டுக்கலேன்னா உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு ரொம்பவே சேதாரம் ஏற்படும்'' என்றார்.
-க.செல்வகுமார்