கொரோனா பரவலை ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்துவதற்காக போலீசாருடன் ஊர்க்காவல்படை, ஓய்வு பெற்ற ராணுவத்தி னரையும் பாதுகாப்புக்கு பணிக்கு அழைத்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தினர். இவர்களோடு தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பு பணியில் இரவும், பகலும் ஈடுபட்டனர். கடந்த 70 நாட்களாக போலீஸ் நண்பர்கள் பணியில் இருந்தும் யாரும் கண்டுகொள்ளாததுதான் அவர்களின் வேதனையாக உள்ளது.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய போலிஸ் நண்பர்கள் குழுவின் நிர்வாகிகளுள் ஒருவர், ""ராமநாதபுரம் எஸ்.பி.யாக 1993ல் பணியாற்றிய, தற்போது சிபிசிஐடி டி.ஜி.பியாக உள்ள பிரதீப் பிலிப் சார்தான் இந்த அமைப்பை உருவாக்கினார். காவல்துறையினருக்கு சமூக சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் தேவை என்பதை கவனத்தில் கொண்டு இந்த அமைப்பை உருவாக்கினார். பின்னர் இது தமிழகம் முழுவதும் விரிவடைந்தது. இன்று ஒவ்வொரு
கொரோனா பரவலை ஊரடங்கு மூலம் கட்டுப்படுத்துவதற்காக போலீசாருடன் ஊர்க்காவல்படை, ஓய்வு பெற்ற ராணுவத்தி னரையும் பாதுகாப்புக்கு பணிக்கு அழைத்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தினர். இவர்களோடு தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பு பணியில் இரவும், பகலும் ஈடுபட்டனர். கடந்த 70 நாட்களாக போலீஸ் நண்பர்கள் பணியில் இருந்தும் யாரும் கண்டுகொள்ளாததுதான் அவர்களின் வேதனையாக உள்ளது.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய போலிஸ் நண்பர்கள் குழுவின் நிர்வாகிகளுள் ஒருவர், ""ராமநாதபுரம் எஸ்.பி.யாக 1993ல் பணியாற்றிய, தற்போது சிபிசிஐடி டி.ஜி.பியாக உள்ள பிரதீப் பிலிப் சார்தான் இந்த அமைப்பை உருவாக்கினார். காவல்துறையினருக்கு சமூக சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் தேவை என்பதை கவனத்தில் கொண்டு இந்த அமைப்பை உருவாக்கினார். பின்னர் இது தமிழகம் முழுவதும் விரிவடைந்தது. இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் இணைந்து காவலர்களுடன் சேர்ந்து ட்ராபிக் பிரச்ச னைகளை சரிசெய்வது, மாநகரங்கள், நகரங்களில் போக்குவரத்து ஒழுங்கு, இரவில் காவலர்களுடன் சேர்ந்து நைட் ரவுண்ட்ஸ் போவது, இன்பார்மர்களாக இருப்பது போன்ற பணிகளை செய்கின்றனர். அப்படி செய்யும் இவர்களுக்கு ஊர்க்காவல் படை யினரைப்போல் ஊதியம்கூட கிடையாது, எல்லோரும் சேவை மனப்பான்மையுடன் வந்து வேலை செய்கின்றனர். கடந்த மார்ச் 24ந்தேதி முதல் இப்போது வரை காவலர் களுடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். சராசரியாக தினமும் 400 முதல் 500 இளைஞர்கள் வரை ஒவ்வொரு மாவட்டத் திலும் காவலர்களுடன் இணைந்து பணி யாற்றினார்கள்.
இந்த கொரோனா காலத்தில் வெயில் நேரத்தில் செக்போஸ்ட்களில் நின்று கண்காணிப்பு பணியில் இருந்தது, தற்காலிக காய்கறி மார்க்கெட்களில் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியது, வாகனம் நிறுத்தும் இடங்களில் பாதுகாப்பு, கூட்டம் சேராமல் அப்புறப் படுத்தியது, ஊரடங்கை கடைபிடிக்காமல் வெளியே இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அதனை காவல்நிலையத்தில் கொண்டு வந்து விடுவது, இரவில் நைட் ரவுண்ட்ஸ் செல்வது என தீவிரமாக பணியாற்றினர். மற்ற நாட்களில் காவல்துறைக்கு உதவி செய்ய வருபவர்கள், சில மணி நேரம் மட்டுமே பணியாற்றுவார்கள். கொரோனா காலத்தில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். இங்கு பணியாற்றினால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும், அப்படி யிருந்தும் பணியாற்ற வரக்காரணம் சேவை மனப்பான்மைதான்.
இவர்களுக்கான உணவுகூட சேவை மனப்பான்மை கொண்டவர்களால் வழங்கியது தான். உதாரணமாக திருவண்ணாமலை நகரில் பணியாற்றிய போலீஸ் நண்பர்கள் குழுவின ருக்கு, திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் 65 நாட்கள் வழங்கப்பட்டது.
கடந்த மே 31ந்தேதியோடு அவர்கள் உணவு வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். இருந்தும் தங்களது சொந்த காசில் உணவு சாப்பிட்டுவிட்டு வந்து வேலை செய்கிறார்கள். இப்படித்தான் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முக்கிய பிரமுகர்களிடம் உதவி வாங்கி உணவு தந்தார்கள். இப்படி தொடர்ச்சியாக 70 நாட்களுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை எந்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பாராட்டவில்லை. காவல்நிலையத்தில் என்ட்ரிபோட்டுவிட்டே அவர்கள் காவலர்களுடன் சென்று உதவி செய்கிறார்கள். எங்கள் அமைப்பில் இருப்பவர் இன்று எந்த காவல் நிலையத்தில் யாருடன் பணியாற்றினார் என்பதை அங்குள்ள ரெக்கார்டுகள் சொல்லிவிடும். பணியாற்றியவர்களுக்கு ஒரு சான்றிதழ் தந்து ஒரு விருந்து தந்தால் கூட மகிழ்ச்சியாக இருக்கும், அதைக்கூட செய்ய எந்த மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை என புலம்பினார்கள்.
காவல்துறையினர், போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைந்து பணியாற்றியவர்களிடம், செக்போஸ்ட்களில் நிறுத்தி சரக்கு வாகனங்களை நிறுத்தி வசூல் செய்ய வைத்தது, டாஸ்மாக் கடைகள் முன் நிறுத்தி பாதுகாப்பு பணியை செய்ய வைத்து கடைக்காரரிடம் மாமூல் வாங்க வைத்தது, வாகன ஓட்டிகளை அடிக்கவும், மிரட்டவும் அதிகாரம் தந்தது என பல குற்றச்சாட்டுகள் போலீஸ் நண்பர்கள் குழு மீது வைக்கப்படுவது பற்றி நம்மிடம் பேசிய அந்த அமைப்பை சேர்ந்த ஒரு நிர்வாகியிடம் கேள்வியாக எழுப்பியபோது, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நிர்வாகி, ""அப்படி சில இடங்களில் நடப்பது எங்கள் கவனத்துக்கு வந்தது. நாங்கள் இளைஞர்களை காவலர்களை நம்பித்தான் அனுப்புகிறோம், சில காவலர்கள் அவர்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவது அதிர்ச்சியாக இருக்கிறது. அதனை தடுக்க முடியாமல் இருக்கிறோம்'' என்றார்.
சேவை மனப்பான்மையுடன் வந்து உதவி இளைஞர்களுக்கு ஒரு பாராட்டு தெரிவித்தால், நாளை அவர்கள் இன்னமும் முன்வந்து உதவுவார்கள். அதைவிடுத்து, அவர்களையும் ‘மாமூல்’ நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நினைப் பது நியாயமா?
-து. ராஜா