Advertisment

நாங்கள் பரிசோதனை எலிகளா? -செறிவூட்டப்பட்ட அரிசிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

rr

ரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தான் விவசாயிகளையும், பொதுமக்களையும் அதிரவைத்து, அவர்களைக் கொந்தளிக்கவும் வைத்திருக்கிறது.

Advertisment

எதனால் இந்த எதிர்ப்பு என அவர்கள் தரப்பில் விசாரித்தபோது...

அகில இந்திய விவசாய மக்கள் சேவைப் பிரிவுத் தலைவரான தங்க சண்முகசுந்தரம் நம்மிடம், "இயற்கை வேளாண்மை மூலம் விளைய வைத்து சாப்பிடும் ரேஷன் அரிசி யில் போதுமான சத்துக்கள் உள்ளன. அதை விடுத்து செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவேன் என் கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவுக்குள் அந்த செறி வூட்டப்பட்ட அரிசி இங்கே நுழையப் பார்க்கிறது. இதை நாடு முழுவதும் வழங்க ஒன்றிய அரசு முடிவுசெய்து விட் டது. கேட்டா

ரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தான் விவசாயிகளையும், பொதுமக்களையும் அதிரவைத்து, அவர்களைக் கொந்தளிக்கவும் வைத்திருக்கிறது.

Advertisment

எதனால் இந்த எதிர்ப்பு என அவர்கள் தரப்பில் விசாரித்தபோது...

அகில இந்திய விவசாய மக்கள் சேவைப் பிரிவுத் தலைவரான தங்க சண்முகசுந்தரம் நம்மிடம், "இயற்கை வேளாண்மை மூலம் விளைய வைத்து சாப்பிடும் ரேஷன் அரிசி யில் போதுமான சத்துக்கள் உள்ளன. அதை விடுத்து செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவேன் என் கிறார்கள். அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவுக்குள் அந்த செறி வூட்டப்பட்ட அரிசி இங்கே நுழையப் பார்க்கிறது. இதை நாடு முழுவதும் வழங்க ஒன்றிய அரசு முடிவுசெய்து விட் டது. கேட்டால் செறிவூட்டப் பட்ட அரிசியில் இரும்புச்சத்து கூடுதலாக இருக்கும் என்கிறார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த அரிசி ரகங்களை வாங்கி சமைத்து உண்டால், மனிதர்களுக்கு உடல்ரீதி யான பாதிப்புகள் நிறைய ஏற்படும். எனவே இது தவறான திட்டம் என்று இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, இந்த அரிசிக்கு தமிழக முதல்வர் தடைபோட வேண்டும்''’என்றார் அழுத்தமாக.

Advertisment

rr

தமிழ்நாடு உழவர் முன்னணி இயக்கத்தைச் சேர்ந்த முருகன் நம்மிடம் , " நம் மாநிலத் தை ஊட்டச்சத்து குறைவாக உள்ள மாநிலம் என்றும் குழந்தை பெறும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படுகிறது என்றும் கூறி, இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை நம் மக்கள் தலையில் கட்டப் பார்க் கிறார்கள். அரிசியை பட்டை தீட்டாமல் வழங்கினாலே நிறைய சத்து இருக்கும். குறிப்பாக அரிசியின் மேல்உறைகளில் தயமின், என்ற வேதிப்பொருள் ஆன்ட்டி ஆக்சைடு ஆக செயல்படுகிறது. ஆனால் அதை பட்டை தீட்டுவதன் மூலம் நீக்கிவிடுகிறோம். இந்த முறையை மாற்றினாலே சத்தான அரிசி நமக்குக் கிடைத்துவிடும்.

ரேஷன் அரிசியில் 500 கிலோவுக்கு ஒரு கிலோ என்ற அளவில் செறிவூட்ட்டப்பட்ட அரிசி முதலில் கலக்கப்படும் என்கிறார்கள். அதில் இரும்புத் தாது, போலிக் அமிலம் ஆகியவை இருக்கும் என்கிறார்கள். இதற்கு பதில் நம் வழக்கமான உணவையே சத்துள்ள தாக மாற்றிக்கொண்டாலே போதும். நாம் அன்றாடம் உணவில் முருங்கைக் கீரை, கரிசாலை போன்ற கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்கிறோம். அதிலேயே நிறைய இரும்புச் சத்து உள்ளன. தமிழகத்தில் நான்கு சதவீதம் பேர்களுக்கு ரத்தசோகை உள்ளது என்பதற்காக எட்டு கோடி மக்களுக்கும் இந்த செறிவூட்டப் பட்ட அரிசியை வழங்குவது என்ன நியாயம்? இது அரசியல் சாசனத்தின் அடிப் படை உரிமைகளை மீறும் செயல்.

கடந்த ஆண்டு களில் மலைவாழ் மக்களுக்கு அயோ டின் குறைபாடு உள்ளது என்றும், அதனால் அவர் களுக்கு தைராய்டு நோய் ஏற்படுகிறது என்றும் கூறி, அயோடின் கலந்த உப்பை அனைத்து மக்களுக்கும் வழங்கினார்கள். மூன்று சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மலைவாழ் மக்களின் அயோடின் குறைபாட்டைச் சரி செய்வதற்காக, அனைத்து rrமக்களுக்கும் அயோடின் உப்பை பயன்படுத்தச் செய்ததால், இப்போது நன்றாக இருந்தவர்களும் தைராய்டு நோயாளிகளாக ஆகிவிட்டார்கள்.

எனவே மத்திய அரசு திணிக்கும் செறி வூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது. எனவே இது தொடர் பாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விவசாய சங்க பிரதிநிதிகள் எல்லோரும் ஒரு குழுவாக சென்று நேரில் சந்தித்து, கோரிக் கை மனு அளித்திருக் கிறோம். அதைப் பரிசீல னை செய்வதாக உணவுத் துறை அமைச்சர் தெரிவித் துள்ளார். மீறி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட் டால் தமிழக உழவர் முன்னணி, கூட்டு இயக்கங் களோடு சேர்ந்து போராட் டத்தை முன்னெடுக் கும்''’என்றார் அழுத்தமாக.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற முடி வோடு மத்திய அரசு இதற்காக எட்டாயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. நாம் பயன்படுத்தும் அரிசியில் கல்லு, நெல்லு ஒன்று இரண்டு கிடப்பது போல்தான் செறி வூட்டப்பட்ட அரிசி நமது அரிசியில் கலந் திருக்கும். அதனால் எந்த பாதிப்பும் வராது என்று ஒன்றிய அரசு சப்பைக் காரணம் கூறி, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழக மக்களை பரிசோதனை எலிகளாக ஆக்கும் இந்த செயலை ஏற்க மாட்டோம் என்கிறார்கள், பெரும்பாலான விவசாயிகளும், பொதுமக்களும்.

அரசு என்ன செய்யப்போகிறது?

nkn080223
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe