2019ஜனவரி 7-ஆம் தேதி காலை. கடலூர் மகளிர் நீதிமன்ற வளாகம். காலை 11 மணிக்கு குற்றவாளிகள் ஒவ்வொரு வரையும் வரவழைத்து குடும்ப விவரங்களைக் கேட்டபின், “""உங்கள் எல்லோருக்கும் குழந்தைகள் உள்ளனர்தானே. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி களும் குழந்தைகள்தானே. பிறகேன் இப்படிச் செய்தீர்கள்?''’எனக் கேட்டார் நீதிபதி லிங்கேஸ்வரன். ஒருவரிடமும் பதிலில்லை. பின் மதியம் 1 மணிக்குமேல் பரபரப்பாக தீர்ப்புகளை வழங்கத் தொடங்கினார்.
அந்தச் செய்தி வெளிவந்தபோது கடலூர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடே கொஞ்சம் நடுங்கித்தான் போனது. சுயநலமும் பேராசையும் வரம்புமீறிய காமமும் கைகோர்த்து பள்ளி மாணவிகளைச் சீரழித்த கதை அது.
கடலூர் மாவட்டம் திட்டக் குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த மாணவி ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய்- தந்தையின்றி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்துவந்த ரம்யா, அருகில் இட்லிக் கடை நடத்திவந்த தனலட்சுமியின் கடைக்கு ஒருநாள் இட்லி வாங்கச்சென்றார். குமாரின் மனைவியான லட்சுமி, அவரது கள்ளக்காதலன் ஆனந்தராஜுடன் அலங்கோலமான நிலையிலிருந்ததை பார்க்கும் அவலம் நிகழ்ந்தது.
தங்கள் விவகாரம் அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ரம்யாவை வீட்டுக்குள் இழுத்துச்சென்று சிக்கன் பக்கோடா கொடுத்து தாஜா செய்ததுடன், ஆனந்தராஜு மூலமாக அவளைச் சீரழித்து, யாரிடமும் சொல்லக்கூடா தென மிரட்டியனுப்பினார் தனலட்சுமி. மறுநாள் தனது கணவன் குமாருக்கும் ரம்யாவை பலியாக்கி யுள்ளார். தொடர்ந்து ஆனந்தராஜு அவளை நாசம் செய்ததோடு, நாச்சியார்பேட்டையிலுள்ள தங்கள் தொழில்கூட்டாளியான கலா வீட்டுக்குக் கூட்டிச்சென்று, சிறுமியென்றும் பாராமல் அன்பு, செல்வராஜ், மோகன்ராஜ், மதிவாணன் என பலருக்கும் பகிர்ந்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல், "விஷயம் வெளியில் வராமல் இருக்கவேண்டுமானால் உன் பள்ளித்தோழியையும் அழைத்து வா' என மிரட்டியுள்ளனர்.
மறுநாள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் 9-ஆம் வகுப்புத் தோழியை அழைத்துச்செல்ல, இதே கூட்டணி திவ்யாவையும் சீரழித்துள்ளது. மிரட்டலையும், பலகாரங்களையும் தற்காப்புக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கும்பலுக்குப் பயந்து மறைந்து மறைந்து பள்ளிக்குப் போன மாணவிகளை தேடிப்பிடித்து கலா வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலசுப்பிரமணி யம் என்பவர் மூலம் கஸ்டமர்களை வரவழைத்து பிஞ்சுகளை பாலியல் தொழிலில் தள்ளிச் சீரழித் துள்ளனர். இதனிடையே பேத்தியைக் காண வில்லையென ரம்யாவின் பாட்டியும், திவ்யாவின் தந்தையும் திட்டக்குடி காவல்நிலையத்தில் புகார் தர, இருவரும் மீட்டுவரப்பட்டனர்.
சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் மாணவிகளை மிரட்டி பழையபடி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது இக்கோஷ்டி. கலா, அவரிடமிருந்து ஜெபினா, மீண்டும் கலா என மாறி மாறி மாணவிகளை தொழிலுக்குப் பயன்படுத்தி யுள்ளனர். அந்த சமயம்தான் பாதிரியார் அருள்தாஸிடம் அனுப்பப்பட்டுள்ளனர். பாதிரியார் தன் தகுதியிலிருந்து இறங்கி, ஆபாசப் படம் காட்டி தரமிறங்கி நடந்துகொண்டிருக்கிறார். தவிரவும் ஒருவர் மாற்றி ஒருவரென பொருட் களைப்போல மாணவிகளை விலைபேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.
குழந்தைகளின் பெற்றோரும் பாட்டியும் புகார் கொடுத்திருந்த நிலையில், மாணவிகள் போலீஸாரின் பிடியில் சிக்கினர். மாணவிகளின் வாக்குமூலத்தையடுத்து பலரும் இந்த வழக்கில் சிக்கினர். சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தை அணுக, அரசியல் கட்சிகளின் நிர்பந்தமும் சேர வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் வந்தது.
கடந்த 7-ஆம் தேதி, நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றவாளிகளுக்கான தண்டனையையும் அபராதங் களையும் தனித்தனியே அறிவித்தார். பிரதான குற்றவாளிகளான ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனையுடன் கூடிய அபராதமும், அன்புவுக்கு 2 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா, மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்ட னையும், பாதிரியார் அருள்தாஸுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனையும் 5 லட்சம் அபராதமும்… மற்றவர்களுக்கு தண்டனை விவரங்களை யும் அறிவித்தார்.
அரசு வழக்கறிஞராக வாதாடிய செல்வப்பிரியா, ""பாதிக்கப்பட்ட மாணவி கள் மனிதத்தன்மையற்ற மிருகங்களால் சொல்லொணாத் துயரங்களை அனு பவித்துள்ளனர். இருவரும் ஊருக்கு வரத் தயங்கி வெளியூரில் தங்கியுள்ளனர். இடைக்கால நிவாரணமாக ரூ 2 லட்சம் அறி விக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் அபராதத் தொகையிலிருந்து தலா 5 லட்ச ரூபாய் 2 மாணவிகளுக்கும் வழங்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். மேலும் அரசிடமிருந்து 11 லட்சம் வரை நிவாரணம் பெறமுடியும்''’என்கிறார்.
இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் வாலண்டினாவோ,
""தொடக்கத்தில் 34 பேர் குற்றவளையத் துக்குள் கொண்டுவரப்பட்டனர். அப்போதைய அ.தி.மு.க. பேரூராட்சித் தலைவர் நீதிமன்னன், அவரது சகோதரர் கர்ணன் பெயர் அடிபட்டது. ஆனால் பாதிக்கும் மேலானோர் விசாரணையின் போது விடுவிக்கப்பட்டது ஏனெனத் தெரியவில்லை. அபராதத் தொகையிலிருந்து மாணவி களுக்கு நிவாரணம் தருவதற்குப் பதில், அரசே இழப்பீடு வழங்குவதுதான் சரியாக இருக்கும். மேலும் தலை மறைவாக உள்ள நான்கு பேருக்கு தண்டனைகள் வழங்கப்படவில்லை''’’ என அதிருப்தி தெரிவிக்கிறார்.
-சுந்தரபாண்டியன்