அவர்கள் இந்துக்கள் இல்லையா? -முப்பெரும் விழாவில் ஸ்டாலின் அதிரடி!

dmk-meet

ந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இணைந்திருந்தது பா.ம.க. அப்போது விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் ஒரு நாற்காலியைப் போட்டு, அதில் கலைஞரை அமர வைத்து, அவருக்கு மஞ்சள் சால்வையை அணிவித்து, "இதுதான் முதல்வர் நாற்காலி. வரப்போகும் தேர்தலில் வெற்றிபெற்று, கோட்டையில் முதல்வராக கலைஞர் அமர்வார்' என பேசினார் டாக்டர் ராமதாஸ். 2006 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதே விழுப்புரத்தில் இம்முறை தி.மு.க.வின் முப்பெரும் விழா நடந்திருக்கிறது. கலைஞர் இல்லாத தி.மு.க.வின் முதல் முப்பெரும் விழா, மு.க.ஸ்டாலினை முதல்வராக்க சூளுரைத்தது.

stalin

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவே செய்திருந்தார் மா.செ. பொன்முடி. வழக்கமாக தி.மு.க. முப்பெரும் விழாவில் வழங்கப்படும் "பெரியார் விருது' இந்த ஆண்டு மும்பை தேவதாசனுக்கும், "அண்ணா விருது' தியாகதுருகம் பொன்.ராமகிருஷ்ணனுக்கும், "கலைஞர் விருது' குத்தாலம் கல்யாணத்திற்கும், "பாவேந்தர் விருது' புலவர் இந்திரகுமாரிக்கும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "பேராசிரியர் விருது' கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கு வழங்

ந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இணைந்திருந்தது பா.ம.க. அப்போது விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் ஒரு நாற்காலியைப் போட்டு, அதில் கலைஞரை அமர வைத்து, அவருக்கு மஞ்சள் சால்வையை அணிவித்து, "இதுதான் முதல்வர் நாற்காலி. வரப்போகும் தேர்தலில் வெற்றிபெற்று, கோட்டையில் முதல்வராக கலைஞர் அமர்வார்' என பேசினார் டாக்டர் ராமதாஸ். 2006 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதே விழுப்புரத்தில் இம்முறை தி.மு.க.வின் முப்பெரும் விழா நடந்திருக்கிறது. கலைஞர் இல்லாத தி.மு.க.வின் முதல் முப்பெரும் விழா, மு.க.ஸ்டாலினை முதல்வராக்க சூளுரைத்தது.

stalin

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகவே செய்திருந்தார் மா.செ. பொன்முடி. வழக்கமாக தி.மு.க. முப்பெரும் விழாவில் வழங்கப்படும் "பெரியார் விருது' இந்த ஆண்டு மும்பை தேவதாசனுக்கும், "அண்ணா விருது' தியாகதுருகம் பொன்.ராமகிருஷ்ணனுக்கும், "கலைஞர் விருது' குத்தாலம் கல்யாணத்திற்கும், "பாவேந்தர் விருது' புலவர் இந்திரகுமாரிக்கும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "பேராசிரியர் விருது' கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கு வழங்கப்பட்டது.

கட்சியினருக்கு கடிதம் எழுதி ஸ்டாலின் அழைத்திருந்ததால், பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் உடன்பிறப்புகள் திரண்டு வந்திருந்தனர். மினி மாநாடு போலவே இருந்தது முப்பெரும் விழா. மா.செ. பொன்முடி வரவேற்புரை ஆற்றியபோது, விழா சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய கட்சித் தொண்டர்களுக்கு நன்றி சொன்னவர்... விழுப்புரம் தெற்கு, வடக்கு மா.செ.க்களான அங்கயற்கண்ணி, செஞ்சி மஸ்தான் ஆகியோரது பெயர்களைச் சொல்லாமல் கவனமாகத் தவிர்த்தார்.

dmk-meet

முப்பெரும் விழா நடைபெற்ற அதேநாள் பகலில் ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொண்டதால், விழா தொடங்கிய சிறிது நேரத்துக்குப் பின் வந்துசேர்ந்தார் தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன். விழா மேடையில் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உற்சாகமாக உட்கார்ந்திருந்தார்.

முன்னணித் தலைவர்கள் பேசி முடித்தபின், நிறைவுரை ஆற்ற வந்தார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். 2003-ஆம் ஆண்டு நடந்த விழுப்புரம் தி.மு.க. மாநாட்டிற்கு தலைமை ஏற்றதை பெருமையுடன் நினைவு கூர்ந்த ஸ்டாலின், ""கலைஞர் பிறந்தநாள் தமிழ் செம்மொழி நாளாக கொண்டாடப்படும், முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதன் மூலம் ஐ.ஏ.எஸ். படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும், திராவிட படைப்பாளிகளுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் விருது வழங்கப்படும்'' என அறிவித்துவிட்டு, ""மதவாத பாசிச ஆட்சியான மோடி அரசையும், மாநிலத்தில் நடக்கும் பேடி அரசையும் தூக்கி எறியும் நேரம் நெருங்கிவிட்டது'' என ஒரு பிடிபிடித்தார்.

dmk-meet""காவி புரட்சி செய்வோம் என்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேரில் 9 பேர் இந்துக்கள்தானே... நீட்டை எதிர்த்து இறந்த மாணவி பிரதிபாவும், மாணவரின் அப்பா கிருஷ்ணசாமியும் இந்துக்கள் இல்லையா? நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் தினம் தினம் செத்துப் போராடுகிறார்களே அவர்கள் இந்துக்கள் இல்லையா? டெல்லியில் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்களே விவசாயிகள், அவர்கள் இந்துக்கள் இல்லையா?''’என புதிய கோணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக சரமாரியாக வெடித்த ஸ்டாலின், ""எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. உங்கள் அனைவரையும் கலைஞராகப் பார்க்கிறேன்'' என்று சொல்லி தொண்டர்களுக்கு தெம்பூட்டினார்.

விழா நடந்துகொண்டிருந்தபோது பந்தலுக்குள்ளும் மைதானத்திலும் வலம் வந்து தொண்டர்களின் மனநிலையை படம் பிடித்தோம். திருவாரூர் மாவட்டம் மணக்கோடு சந்திரகாசன், “""கலைஞர் இல்லாத முப்பெரும் விழாங்கிறத நினைச்சா கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா தமிழகத்தின் முதல்வராக தளபதி ஆளப்போகும் அச்சார விழா என்பதை நினைத்தால் சந்தோஷமா இருக்கு. தலைவருக்கு மகனாக பிறந்தால் மட்டும், கட்சிக்குத் தலைவராகிவிட முடியுமா?''’என அழகிரிக்கு பஞ்ச் வைத்தார்.

லால்குடியைச் சேர்ந்த குமார் என்பவரோ, “""ஒட்டுமொத்த கட்சியினர் அனைவருமே தளபதி உருவில் தலைவரைப் பார்க்கிறோம். விரைவில் தமிழக முதல்வராக்கிப் பார்க்கும் சிந்தனையுடன்தான் செயல்படுகிறோம்''’என்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்கரணை முத்துவேல், ""கட்சியினர் யார் தவறு செய்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார் தளபதி. மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக களத்திற்கு வருகிறார். கடின உழைப்புக்கு காலம் நிச்சயம் நல்ல பரிசு கொடுக்கும் என்று சொல்வார்கள். அந்த நல்ல பரிசு விரைவில் தளபதிக்கும் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் ஊர் திரும்புகிறோம்''’என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

திருப்பூரைச் சேர்ந்த லட்சுமணசாமியோ, ""தொண்டர்களாகிய எங்களுக்குள் ஒரே சிந்தனை ஒற்றுமைச் சிந்தனைதான். ஆனா இந்த மா.செ.க்கள் மகாராஜாக்கள் என்கிற சிந்தனையுடனும் ஒ.செ.க்கள் ஜமீன்தார்கள் என்ற நினைப்புடனும் வலம் வருகிறார்கள். இதைத் தான் தளபதி அவர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்''’என்ற வேண்டுகோளை நம் மூலமாக கட்சித் தலைமைக்கு வைத்தார்.

தன்னை எப்போதும் தொண்டர்கள் அணுகலாம் என முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியது, இத்தகைய உடன்பிறப்புகளின் உணர்வை அறிந்துதான்.

-எஸ்.பி.சேகர்

________________________

பொன்முடி மட்டுமே…!

மேடையில் பொன்முடிக்கு இருந்த இடம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற இரு மா.செ.க்களான செஞ்சி மஸ்தான், அங்கயற்கண்ணி இருவருக்கும் கிடைக்கவில்லை. உள்கட்சி விருப்பு-வெறுப்புகள் முப்பெரும் விழாவில் வெளிப்பட்டதை லோக்கல் உடன்பிறப்புகளே ரசிக்கவில்லை. ஸ்டாலினுக்கு பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி பரிசளித்தபோது, அவர் நடத்தும் தளபதி நற்பணி மன்றத்தின் பெயரைச் சொல்லியே அழைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன் இதேபெயரில் அமைப்பு நடத்திய திண்டிவனம் முத்து கண்டிக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்பட்டதையும் இப்போது பொன்முடி மகன் மேடையேற்றப்பட்டதையும் தி.மு.க.வினர் சுட்டிக்காட்டிப் பேசினர். விழாவை பிரம்மாண்டமாக நடத்திய பொன்முடியைப் பாராட்டும் விதத்தில், "அவர்தான் நான்... நான்தான் அவர்'’என ஸ்டாலின் பேச, அது பொன்முடி தரப்புக்கு மட்டும் உற்சாகத்தைத் தந்தது.

-இளையர்

nkn210918
இதையும் படியுங்கள்
Subscribe