"ஜெய்பீம்' படத்தில் காட்டப் பட்டதுபோல அப்பாவி மனிதர்களை திருட்டு வழக்கு, விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று போலீசார் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டார்கள் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
இது சமூக வலைத்தளங்களில் பரவி மேலும் பரபரப்பானது. இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அபேஷா நகரைச் சேர்ந்த, பிரகாஷ், கொங்கராபாளையத்தைச் சேர்ந்த தர்மராஜ், இவரது சகோதரர் சக்திவேல், உறவினர்கள் பரமசிவம், செல்வம் ஆகிய ஐந்து நபர்களில் பரமசிவம், செல்வம் ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் சம்பந்தப்படவில்லை என்று அவர்கள் இருவரையும் அவர்களின் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்தனர். பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் மூவரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடு பட்டவர்கள் என்று கூறி அவர்களை கைது செய்துள்ளது போலீஸ்.
யார் தரப்பில் உண்மை...? நாம் தீவிர விசாரணை மேற்கொண்டோம்.
14-2-2021 அன்று இரவு ஒரு மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரது மனைவி ஜெயந்தி, இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது... வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது கழுத்திலிருந்த 5 பவுன், அவரது மகள் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதில் எதிர்த்துப் போராடிய ஜெயந்தி, கழுத்தில் கத்தியால் கிழிக்கப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி 72 வயது மூதாட்டி விசாலாட்சி. பூட்டப

அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி 72 வயது மூதாட்டி விசாலாட்சி. பூட்டப்பட்டிருந்த இவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே (12-1-2021) புகுந்து வீட்டிலிருந்து 25,000 பணம், அரை கிலோ எடைகொண்ட வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தங்கள் கைவரிசையைக் காட்டிவந்துள்ளனர்
இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ள உண்மையான குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி மேற்பார்வையில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், ஆரோக்கியராஜ். துரைராஜ் மற்றும் போலீசார் உட்பட ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட குற்ற வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவந்தனர். அதில்தான் பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்
கொள்ளை நடந்த இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தடயங்கள், பதிந்துள்ள கைரேகைகள், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த அங்க அடையாளங்கள், அத்துடன் தீவிர விசாரணையின் அடிப்படையில் மேற்படி மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி பகுதிகளில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டதோடு சின்ன சேலம், கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள நகைக் கடைகளில் விற்பனை செய்திருந்த முப்பத்தி எட்டு சவரன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்பிறகு அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். அப்போது சக்திவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அங்கிருந்த மருத்துவர்கள், அவர் உடல் நிலை நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இருந்தும் அவருக்கு ஈ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நலமாக இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது. ஆனாலும் சக்திவேல் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிடிவாதம் பிடித்ததையடுத்து, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸ் காவலுடன் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர் .
நகைத் திருட்டில் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி, "நாங்கள் செம்மறி ஆடுகள் மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் சின்னசேலம் அருகேயுள்ள ஈரியூர் கிராமத்தில் ஓலைக்குடிசை அமைத்து, அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருகிறோம். எங்க வீட்டு ஆண்கள், ஆடுகளை கிடை கட்டிவிட்டு இரவு பத்து மணி அளவில்தான் எங்கள் குடிசைக்கு வருவார்கள். அப்படித்தான் சம்பவத் தன்று இரவு சுமார் 7 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்தேன். திடீரென்று என்னருகே வந்த ஒருவன், "என்ன அக்கா சமையல் செய்கிறாயா?' என்று கேட்டபடியே திடீரென என் முதுகைவளைத்து குப்புற அழுத்திக் கொண்டு கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் செயினை அறுத்தான். எதிர்த்துப் போராடிய என்னை கடுமையாகத் தாக்கினான். கத்தியை எடுத்து "குத்திக் கொலை செய்து விடுவேன்' என்று மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். தற்போது அதில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளை போலீசார் பிடித்துள்ளனர். ஆனால் "அவர்கள் நிரபராதிகள், அவர்கள் மீது வழக்கு போடக்கூடாது, விசாரணையும் செய்யக்கூடாது என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்' எனக் கேள்விப்பட்டோம். எங்களைப்போன்ற ஆடுமேய்க்கும் கூலித் தொழிலாளிகளின் உயிரையும் உடைமையையும் குறி வைப்பவர்களை, போலீசார் தகுந்த ஆதாரத்துடன் கைது செய்யக்கூடாது என்பது என்ன நியாயம்?''’என்று கொந்தளித்தார்
பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது அருள்செல்வி, அவரது கணவர் மணி ஆகிய இருவரும், "கடந்த ஜனவரி மாதம் நாங்கள் வீட்டில் படுத்திருந்தோம். அப்போது அருள்செல்வி நிறைமாத கர்ப்பிணி. திடீரென வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், என் மனைவியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் செயினை அறுத்தார்கள். எதிர்த்துப் போராடிய எங்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கினார்கள். அதில் கர்ப்பிணி மனைவி மிகவும் பாதிக்கப்பட்டார். எங்கள் இருவருக்கும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று உயிர் பிழைத்தோம். தற்போது 4 மாத கைக்குழந்தை எங்களுக்கு உள்ளது. அப்படிப்பட்ட கொள்ளையர்களை, போலீசார் பிடித்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். கர்ப்பிணின்னுகூட பார்க்காம தாக்கிய கொள்ளையர்களையெல்லாம் அப்பாவிகள், நல்லவர்கள் என்று முத்திரை குத்தினால், கொடூர குற்றவாளிகளுக்கு போலீசார் மீதுள்ள பயம் போய்விடாதா?''’என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரான ராஜாராம், “"நானும் எனது மனைவியும் படுத்து தூங்கிக்கொண்டிருந் தோம். இரவு சுமார் 2 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் என் மனைவியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை அறுத்தார்கள். இருவரும் எதிர்த்துப் போராடினோம். அவர்கள் எங்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கினார்கள் கடைசியில் எங்களை அடித்துப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இந்த சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவி, அதிலிருந்து மீள முடியாமல் இறந்துபோனார். அப்படிப்பட்ட கொள்ளையர்களை போலீசார் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். அவர்களை நல்லவர்கள் என்பதும் கைதுசெய்யக் கூடாது, விசாரிக்க கூடாது, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதும் எந்த விதத்தில் நியாயம்?''’என்கிறார்.
இந்த கொள்ளைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் குறித்து தனிப்படை போலீசாரிடம் நாம் கேட்டபோது, "கொள்ளை நடந்தபோது கிடைத்த தடயங்கள் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்கள் கூறும் அங்க அடையாளங்கள் அடிப்படையிலும்தான் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். இத்தகையவர்கள் வெறுமனே கொள்ளை மட்டும் அடிப்பதில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளுக்குள் புகும் கொள்ளையர்கள், அங்கே பெண்கள் இருந்தால் சில்மிஷம் செய்வார்கள். அத்துமீறி நடப்பதும் உண்டு. பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் குடும்ப கவுரவம் கருதி கொள்ளையர்களின் அட்டகாசத்தை வெளியில் சொல்வதில்லை. அப்படிப்பட்ட கொடூரமான வர்கள்தான் இவர்கள்.
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். திருச்சியில் ஒரு எஸ்.எஸ்.ஐ.யை கொலையே செய்துள்ளனர். மனித உரிமை ஆணையம் நீதிமன்றம் ஆகியவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளன. மிகவும் சிரமப்பட்டு கொள்ளை யர்களைப் பிடிக்கும் எங்களைப் பாராட்டக்கூட வேண்டாம். பொய் வழக்கு போடுகிறோம் என்று சொல்லி வசைமாரி பொழியாமல் இருந்தாலே போதும்''’என்று ஆதங்கப் பட்டனர்.