சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில், கூவம் நதிக்கரையோரத் தில் 243 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது அப்பகுதி மக்களில் சிலர், தங்களுக்கு மாற்று இடம் இல்லா தது குறித்து பிரச்சனையில் ஈடுபட்ட காரணத்தால் முதல்கட்டமாக, இடிக்கப்பட்ட 93 வீடுகளில் வசித்துவந்தவர்களுக்கு புளியந்தோப்பு கே.பி. பூங்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கித் தரப்பட் டன. ஆக்கிரமிப்புப் பகுதி யில் குடியிருக்கும் எஞ்சிய மக்களுக்கு, குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்ட பிறகு, மீதமுள்ள வீடுகளை அகற்றும் பணி தொடங்கும் என மாநக ராட்சி தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில் வசித்துவரும் சிலர், "இந்த இடத்தை விட்டு எங்களால் செல்ல முடியாது' என்று எதிர்ப்பு தெரிவித்துவரு கிறார்கள். சென்னையின் பூர்வீகக் குடிமக்கள் தொடர்ச்சியாகச் சென்னையை விட்டு அகற்றப்படுவது ஏன்? இவர்கள் பூர்வகுடி என்றால் இவர்களுக்கு எப்படி பட்டா இல்லாமல் போனது? குடிசையில் இருப்பவர்களுக்கு அடுக்கு மாடி நல்ல விசயம்தானே, ஏன் போக மறுக் கிறார்கள்? நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளார்கள் என்றால் மற்றவர்களின் ஆக்கிரமிப்புகளையும் சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளதா? இல்லையென்றால் இந்த மக்களை வெளியேற்று வதை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறார்களா என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் இவ்விஷயத்தை அணுகினோம்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பக்கிங்காம் கால்வாய் மூலமாக படகுகளில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி இறக்குதி செய்யும் பணியிலும்,

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பக்கிங்காம் கால்வாய் மூலமாக படகுகளில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி இறக்குதி செய்யும் பணியிலும், சென்னை துறைமுகத்தி லும், ரயில்வேயிலும் பணியாற்றியவர்கள், அவரவர் பணிகளுக்கேற்ப அந்தந்த பணியிடங்களுக்கு அருகிலேயே குடிசைகளை அமைத்து வசிக்கத் தொடங்கினர். தொடக்க காலத்தில் சென்னை துறைமுகத்தைச் சுற்றியுள்ள வட சென்னைப் பகுதி மட்டுமே சென்னை நகரமாக இருந்துள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகள், பல்வேறு கிராமங்களாக இருந்துள்ளன. காலப்போக்கில் சென்னை விரிவடைய விரிவடைய, சேரி நத்தமாக இருந்த இடங்கள் மட்டும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவை அங்குள்ள அனைத்து சமூக மக்களுக்கும் பிரித் துக் கொடுக்கப்பட்டு அனைவரும் வசிக்கும்படி வழிசெய்யப்பட்டது. இச்சூழ்நிலையில், விரிவடைந்த சென்னை நகர்ப்புறத்தில் வாழும் குடிசைவாழ் மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை சரிவரச் செயல்படுத்தாததன் விளைவுதான் நகருக்குள் மக்கள் நெருக்கடியை ஏற்படுத்தியது. மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப அனைவரும் வாழ்வதற் கேற்ற இருப்பிடங்கள் மேலும் தேவைப்படும் காரணத்தால், இட வசதி கிடைக்காத மக்கள், ஆங்காங்கே கூவம் நதிக்கரையோரமாகவும், குளம், குட்டை, ஏரிகள் உள்ள பகுதிகளில் குடியேறும் நிலை உருவானது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 1975-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டு வரையிலும், 52,866 வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது தெரியவருகிறது. எனினும் இது போதாது என்பதால், இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்தபின்னும் சென்னை பூர்வகுடி மக்கள், கூவம் நதிக்கரை ஓரத்திலேயே வாழ்ந்துவரக்கூடிய அவல நிலை தொடரக்கூடும் என்று தெரிகிறது. சட்ட நெறி முறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காததே இத்தகைய சிக்கலுக்குக் காரணமாகிறது.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் சேரி இல்லாத நகரமாகச் சென்னை யை மாற்றுவதே இலக்கென்று உறுதிபூண்டுள்ளது. இதில் 1971 சட்டத்தின்படி இதுபோன்ற கூவம் நதிக்கரையோரம், குளம், குட்டையில் ஆக்கிரமித்து வாழும் மக்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலங்களை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைகளாக அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த இடங்கள், அவர்களின் வசிப்பிடங்களுக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே இருக்கவேண்டும். அதில் பயனாளிகளே வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான நிதியை தமிழக குடிசை மாற்று வாரியம் வழங்கவேண்டும். அவர்களை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்லும்போது இழப்பீட்டு நிதி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவர்களின் குறைகளைக் களைவதற்காக மாநில அரசு, குறை தீர்க்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளை நடைமுறைப் படுத்தாதவரை, குடிசை இல்லாத நகரத்தை உருவாக்குவது நடக்காத காரியம்.
அரும்பாக்கத்தில் அனைத்துப் பிரிவு ஜாதியினரும் வசித்துவந்தாலும், அதிகபட்சமாக எஸ்.சி., எஸ்.டி, பிரிவுகளைச் சேர்ந்த மக்களே வசித்து வருகிறார்கள். அரும்பாக்கத்தில் இருந்து வெளியேறிய காதர்பாஷா கூறுகையில், "புளியந்தோப்பு பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரியத்தின் வீட்டில் ஒரு படுக்கையறை, சமையலறை மற்றும் கழிப்பறை என சிக்கனமாக இருக்கிறது. அங்கே கணவன் மனைவி மட்டுமே தங்க இயலும். குடும்பமாகக் குழந்தைகளுடனோ, பெரியவர்களுடனோ தங்குவதற்கு சரிவராது. அந்த குடிசையைக் காட்டிலும் இது கொஞ் சம் பரவாயில்லை" என்றார்.
கீதா என்ற பெண்மணி கூறுகையில், "வீடு கொடுத்தது சந்தோசம்தான். ஆனால் என் குழந்தையின் கல்வியை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது'' என்கிறார். இன்னும் சிலர் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுகிறார்கள். அந்தவகையில் பட்டம்மாள் என்ற மூதாட்டி கூறுகையில், "இந்த இடத்தை விட்டு எங்களால் போகமுடியாது. காலங்காலமாக இந்த இடத் தில் தான் வசித்துவருகிறோம். இங்கு கிடைக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடைக்காது. இந்த அரசு, எங்களுக்கு இங்கேயே வீடு கட்டிக் கொடுக்கவேண்டும். இல்லையேல் எங்களை இப்படியே விட்டு விடுங்கள்'' என்கிறார். அங்கிருந்து அகற்றப்பட்ட சிலர் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தவிக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் நீர் நிலைகளை ஆக்கிர மிப்பதாகக்கூறி கூவம் சீரமைப்புக் குழுமம் மூலமாக இவர்களை அப்புறப்படுத்திவருவ தாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அரும் பாக்கத்தில் அகற்றப்பட்ட வீடுகளில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலேயே கூவம் நதிக்கரையை ஒட்டியபடி தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் வீடு கட்டித் வருகிறது. அதேபோல தொல்காப்பியப் பூங்கா முதல், மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழம், ராமாபுரம் மியாட் மருத்துவ மனை வரை, பல ஷாப்பிங் மால்களும், தனியார் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் ஆற்றின் பாதையில் ஆக்கிரமிப்பாகத்தான் கட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் இடித்து விடுகிறார்களா இந்த ஆட்சியாளர்கள்?
விருகம்பாக்கம் பகுதியில் ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பிரம்மாண்ட குடி யிருப்புகள், கால்வாயை ஆக்கிரமித்துதான் கட்டப் பட்டுள்ளன. அதேபோல நுங்கம்பாக்கம் அப்பல்லோ மருத்துமனையானது, கால்வாயை முழுமையாக மறைத்து, அதன் மேல் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இப்படி எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளாகக் கருதப்படுவதில்லை. ஏழை களின் வீடுகள் மட்டும் இவர்களுக்கு ஆக்கிரமிப்பு களாகத் தெரிகின்றனவா என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு பொதுப்பணித்துறை ஏ.இ. கவிதா கூறுகையில், "அரும்பாக்கத்தில் கட்டப்படும் கட்டிடத்தை குடிசை மாற்று வாரியம் கட்டுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ள காரணத்தால் தீர்ப்பு வந்தபிறகு மற்ற கட்டிடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இது தொடர்பாக நாகர்சேனை அமைப்பு தலைவர் அருங்குணம் வினாயகம் கூறுகையில், "சென்னையில் நில உச்சவரம்பு செய்யப்பட்ட 12 ஆயிரம் சதுரமீட்டர் நிலங்கள் அரசால் கையகப் படுத்தப்பட்டது. அந்த இடத் தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்திருந்தால் இடப்பற்றாக் குறை வந்திருக்காது. இவர் களும் கூவத்தை நாடி வந்தி ருக்கமாட்டார்கள். அதையெல் லாம் அரசு அலுவலகமாகவும், தனியாருக்கும் தாரைவார்த்த காரணத்தால், நீர் நிலைகளை நாடி வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆளுகின்ற அரசு எந்த காலத் திலும் குடிசைவாழ் மக்களுக்கு நில அதிகாரத்தை வழங்கியதே இல்லை. நகர்ப்புற வளர்ச்சி அமைச் சகம், விதிகளை மீறிச் செயல்படுகிறது '' என்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, "நீர் நிலை ஆக்கிர மிப்புகள் யாருடையதாக இருந்தாலும் அவர்களின் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இது தொடர்பாக வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதித் துறையின் அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானாவிடம் கேட்டபோது, "முதல்கட்டமாக மக்களுக்கு 93 வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 150 வீடுகள் கொடுக்கப்போகிறோம். நிலமாகக் கொடுப்பதற்கு சென்னையின் உள்ளே இடம் இல்லை என்ற காரணத்தினால் என்ன சட்ட விதி இருக்கிறதோ அதன்படிதான் அரசு செயல்படுகிறது'' என்றார்.