புதுக்கோட்டை மாவட் டத்தில் 2019-ஆம் ஆண்டு நடத்தவேண்டிய தொல்லியல் மாநாடு கொரோனா காரணங் களால் தாமதமாகி ஜூலை 16, 17 தேதிகளில் புதுக்கோட் டையில் நடந்தது. இந்தியா முழுவதுமிருந்து தொல்லியல் ஆய்வாளர்கள் நூற்றுக்கணக் கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் சட்டத்துறை அமைச் சர் ரகுபதி தொல்லியல் மாநாட்டு மலரை வெளியிட, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்பட பலரும் பெற்றுக்கொண்டனர். மாநாட்டு ஏற்பாடுகளை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் செய்திருந்தது.
மூன்று அமர்வுகள் நடந்த நிலையில், இரண்டாம் அமர்வில் பொற்பனைக்கோட்டை உள்பட சில வரலாற்றுத் தலங் களை ஆய்வாளர்கள் நேரில் பார்வையிட்டனர். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது. கடைசி அமர்வில் மூத்த மற்றும் இளைய தொல்லியல் ஆய்வாளர்களுக் கான விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
பொற்பனைக் கோட்டை அகழாய்வு, கண்ணனூர் கல்வட்டம் பாதுகாப்பிற்காக செல வில்லாமல் நீதிமன்றத் தில் வழக்காடி நல்ல தீர்ப்பைப் பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் நிறைவுரையாற்றும்போது, “"பொற்பனைக்கோட்டையில் முழுமையான சங்ககாலக் கோட்டை உள்ளது. அந்தப் பகுதியை ஆய்வு செய்யவேண் டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் வழக்கு தொடுத்தபோது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி நேரடியாக மத்திய அரசிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
அதன்பிறகே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆய்வு செய்வதாக அறிவித்தது. ஆனாலும் ஆய்விற்கு போதிய நிதி ஒதுக்கிக் கொடுக்கவில்லை. ஆய்வாளர் இனியன் தலைமையி லான ஆய்வாளர்கள் குழுவினர் சிறப்பாக முதல்கட்ட ஆய்வு செய்தனர். அதேபோல கண்ண னூரில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் கல்வட்டங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று அதனைப் பாதுகாக்க உத்தரவு பெற்றோம். வரலாற்றைப் பாதுகாக்க என்னாலான உதவிகளை இனியும் செய்வேன்''’என்று கூறினார்.
இத்தனை தொல்லியல் சான்றுப் பொருட்களும் திருச்சி துறையூர் வெங்கடாசலபுரம் பெரிய சாமி ஆறுமுகம் என்ற இளைஞரின் தேடலில் சேகரிக்கப்பட்டவை. இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது கிராமத்தில் தொடங்கி சுற்றியுள்ள 20 கிராமங்களில் கிடைத்த பொருட்கள்தான் அதிகம். அதேபோல தமிழ்நாடு முழுவதும் தேடிச்சென்று மேலே கிடக்கும் பொருட்களைச் சேகரித்து வைத் திருக்கிறேன். 9-ஆம் வகுப்பு மாணவனாக சேகரிக்கத் தொடங் கியது. இன்று பல ஆயிரம் தொல் லியல் பொருட்கள் என்னிடம் உள்ளன''’என்று விளக்கம் கொடுக் கிறார். -