ssரக்கோணம் நாடாளுமன் றத் தொகுதி யில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி யுள்ளது. களத்தில் 29 வேட்பாளர்கள் உள்ளனர். அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி என 6 சட்டமன்றத் தொகுதிகளில் வன்னியர் கள், பட்டியலினத்தவர், முதலியார் பெரும் பான்மையாக உள்ளனர். விவசாயிகள், நெசவாளர்கள் அதிகமுள்ள தொகுதி இது.

ஜெகத்ரட்சகன் தொகுதி மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கும்போது, "சோளிங்கர் நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு ரோப் கார் அமைத்துத் தந்துள்ளேன், 10 ஆயிரம் கோடியில் சென்னை டூ பெங்களுரூ காரிடர் கொண்டுவந்தேன், நகரி -திண்டிவனம் ரயில்பாதை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும், அரக்கோணத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுத்தேன், ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தொகுதியில் குடிநீர் பிரச்சனையைத் தீர்த்துள்ளேன். ராணிப்பேட்டை சிப்காட்டில் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் தொழிற்சாலை தொடங்க ஒப்பந்தமாகி யுள்ளது''’எனச்சொல்லி வாக்குகேட்கிறார். கோவில் குடமுழுக்குகளுக்கு நிதியுதவிகளை வாரி வழங்கியது, தி.மு.க. அரசின் இலவசப் பேருந்து, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி போன்ற திட்டங்களால் தெம்பாக இருக்கிறார் ஜெகத்ரட்சகன்.

அ.தி.மு.க. வேட்பாளர் விஜயன், சோளிங்கர் பேரூராட்சியின் முன்னாள் சேர்மன், சோளிங்கர் கிழக்கு ஒ.செ. என்பதால் சோளிங்கர் பகுதியில் அறிமுகமானவர். எளிமையானவர், இவர் மண்ணின் மைந்தர். தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களா? என கேள்வி எழுப்பும்போது இரண்டு கட்சி வேட் பாளர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை. கட்சி நிர்வாகிகள் சிலர், “"ரியல் எஸ்டேட் தொழில் வருமானம், பிரபல சாமியார் ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாய் விஜயன் மூலமாகவே வட்டிக்கு விடப்படுகிறது. நல்ல லாபம் வருகிறது, அதனால் செலவில் தாராளம் காட்டுகிறார்'' என்றனர்.

ss

Advertisment

பா.ஜ.க.- பா.ம.க. கூட்டணியில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு களமிறக்கப்பட்டுள்ளார். "சாராய ஆலை அதிபர் வேண்டுமா? சாராயத்தை ஒழிக்கும் கட்சி வேண்டுமா?' எனக்கேட்டு தொகுதியைச் சுற்றிவருகிறார். சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளில் பா.ம.க. பலமாக உள்ளதால் பா.ம.க.வினர் களத்தில் தீவிரம் காட்டு கின்றனர். பா.ஜ.க.வினருக்கு தொகுதியில் அவ்வளவாக வலிமையில்லை. அதோடு மோடி பெயரைச் சொன்னால் கட்சியினரே ஓட்டுப் போடமாட்டார்கள் என்பதால் மோடி பெயரைச் சொல்லி வாக்கு கேட்பதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் தனது மனைவி நஸ்ரினை நிறுத்தியுள்ளார். விஷாரம் பகுதியில் உள்ள இஸ்லாமிய வாக்குகளையும், இளைஞர்கள் வாக்குகளையும் குறி வைத்து வேலைசெய்கின்றனர்.

தொகுதியிலுள்ள வன்னியர் சமுதாய வாக்குகளை தி.மு.க. -பா.ம.க. வேட்பாளர்கள் பிரிக்கும் சூழ்நிலையில் அதற்கடுத்துள்ள பட்டியலின, முதலியார் சமுதாய வாக்குகள் யாருக்கு என்கிற கேள்வி பலமாக எழுந்துள்ளது. வழக்கமாக தி.மு.க.வுக்கு விழும் அந்த வாக்குகள் அ.தி.மு.க. வேட்பாளர் ஆச்சாரி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தால் அவர்மீது முதலியார் சமூகத்தினர் பார்வை திரும்பியது. அதனை உடைக்க ஏ.சி.சண்முகத்தை பிரச்சாரத்துக்கு அழைத்து வந்தது பா.ம.க. சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினத்தை தி.மு.க. முன்னிறுத்துகிறது.

தி.மு.க. வேட்பாளரின் தாராள செலவுகள், பிரச்சாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்குகிறார்கள் அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள்.