ஏப்ரல் 6 - தி.மு.க.! மே 2 - அ.தி.மு.க.? ஓட்டு மெஷினை மாற்ற முடியுமா?

evm

மிழகத்தில் வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 6, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 2 என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்ததிலிருந்தே, "அது நடக்கலாம்; இது நடக்கலாம்'’என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ‘மக்களின் ஐயப்பாடுதான் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். பல்வேறு தரப்பிலான வாக்காளர்களைச் சந்தித்தோம்.

evm

பழனிச்சாமி (பெரியகோட்டை)

""அதென்ன? ஓட்டுப் போட்டு ஒருமாசம் கழிச்சு ரிசல்ட்ட சொல்லுறது? தேர்தல் முடிஞ்சதுமே, லாக்டவுன்னு அறிவிச்சி, மக்களை நடமாடவிடாம பண்ணி, கட்சிக்காரங்களயும் ஏஜண்டுகளையும் விலைக்கு வாங்கி, ஓட்டுப் பெட்டிகள மாத்துறதுக்கு ரொம்பவே வாய்ப்பிருக்கு. பாது காப்புக்கு இருக்கிற துணை ராணுவம் சென்ட்ரல் கண்ட்ரோல்லதான இருக்கு? நம்ம கவர்மெண்டுகூட சேர்ந்து கூட்டுக்களவானித்தனம் பண்ணுனா, தெரியவா போகுது? நடக்கப்போற அக்கிரமத்த தடுத்து நிறுத்தணும்.''

தமிழ்ச்செல்வன் (திண்டுக்கல்)

""ஓட்டு மெஷினை நெட்வொர்க் மூலம் கரெக்ட் பண்ணிட லாம். அதான்... மேற்கு வங்காளத்துல உள்ள ஒரு தொகுதில ஒரே சின்னமா, தாமரைதானே தொடர்ந்து விழுந்திருக்கு. ஓட்டு மெஷின்களை வச்சிருக்கிற காலேஜ் ஏரியாவ சுற்றியும் நெட்வொர்க் கிடைக்கவிடாம பண்ணணும்.''

evm

விஸ்வ. வேல்முருகன் (புவனகிரி)

""அரசியல்வாதிகளுக்கு அதிகார போதை... பதவி வெறியிருக்கு. அது நிலைக்கிறதுக்காக எதுவும் பண்ணுவாங்க. ஏ.டி.எம். மெஷின்ல பணம் எடுத்தா சிலிப் வருதுல்ல. அதுமாதிரி, ஓட்டு மெஷின்லயும் ஏதாச்சும் பண்ணணும். ஓட்டுப் பெட்டிய மாத்த முடியாது. ஆனா.. இப்ப இருக்கிற டெக்னாலஜில சூழ்ச்சி நடக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு.''

தமிழ்நிதி (உளுத்தூர் கிராமம்)

""நார்த்ல பி.ஜே.பி.-க்கு வாக்கு வங்கி ரொம்ப குறைவா இருக்கிற தொகுதிகள்ல அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சதா ரிசல்ட் வந்திருக்கு. தமிழ்நாட்டுலயும் அந்த மாதிரி எதுவும் கோல்மால் பண்ணிட்டாங்கன்னா? மோடி என்ன சாதாரண ஆளா? அ

மிழகத்தில் வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 6, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 2 என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்ததிலிருந்தே, "அது நடக்கலாம்; இது நடக்கலாம்'’என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ‘மக்களின் ஐயப்பாடுதான் என்ன?’ என்பதை அறிய களமிறங்கினோம். பல்வேறு தரப்பிலான வாக்காளர்களைச் சந்தித்தோம்.

evm

பழனிச்சாமி (பெரியகோட்டை)

""அதென்ன? ஓட்டுப் போட்டு ஒருமாசம் கழிச்சு ரிசல்ட்ட சொல்லுறது? தேர்தல் முடிஞ்சதுமே, லாக்டவுன்னு அறிவிச்சி, மக்களை நடமாடவிடாம பண்ணி, கட்சிக்காரங்களயும் ஏஜண்டுகளையும் விலைக்கு வாங்கி, ஓட்டுப் பெட்டிகள மாத்துறதுக்கு ரொம்பவே வாய்ப்பிருக்கு. பாது காப்புக்கு இருக்கிற துணை ராணுவம் சென்ட்ரல் கண்ட்ரோல்லதான இருக்கு? நம்ம கவர்மெண்டுகூட சேர்ந்து கூட்டுக்களவானித்தனம் பண்ணுனா, தெரியவா போகுது? நடக்கப்போற அக்கிரமத்த தடுத்து நிறுத்தணும்.''

தமிழ்ச்செல்வன் (திண்டுக்கல்)

""ஓட்டு மெஷினை நெட்வொர்க் மூலம் கரெக்ட் பண்ணிட லாம். அதான்... மேற்கு வங்காளத்துல உள்ள ஒரு தொகுதில ஒரே சின்னமா, தாமரைதானே தொடர்ந்து விழுந்திருக்கு. ஓட்டு மெஷின்களை வச்சிருக்கிற காலேஜ் ஏரியாவ சுற்றியும் நெட்வொர்க் கிடைக்கவிடாம பண்ணணும்.''

evm

விஸ்வ. வேல்முருகன் (புவனகிரி)

""அரசியல்வாதிகளுக்கு அதிகார போதை... பதவி வெறியிருக்கு. அது நிலைக்கிறதுக்காக எதுவும் பண்ணுவாங்க. ஏ.டி.எம். மெஷின்ல பணம் எடுத்தா சிலிப் வருதுல்ல. அதுமாதிரி, ஓட்டு மெஷின்லயும் ஏதாச்சும் பண்ணணும். ஓட்டுப் பெட்டிய மாத்த முடியாது. ஆனா.. இப்ப இருக்கிற டெக்னாலஜில சூழ்ச்சி நடக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு.''

தமிழ்நிதி (உளுத்தூர் கிராமம்)

""நார்த்ல பி.ஜே.பி.-க்கு வாக்கு வங்கி ரொம்ப குறைவா இருக்கிற தொகுதிகள்ல அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சதா ரிசல்ட் வந்திருக்கு. தமிழ்நாட்டுலயும் அந்த மாதிரி எதுவும் கோல்மால் பண்ணிட்டாங்கன்னா? மோடி என்ன சாதாரண ஆளா? அதான்.. எதையும் நம்ப முடியல.''

கருப்பையா (சிவகங்கை)

evm

""நான் வாக்குச்சீட்டு மூலமாவும் ஓட்டுப் போட்டிருக்கேன். மெஷின்லயும் ஓட்டுப் போட்டிருக்கேன். ஓட்டுமெஷின் பத்தி என்னை மாதிரி படிக்காதவங்களுக்கு ஒரு விவரமும் தெரியாது. பட்டனை அமுக்குவோம்; சவுண்ட் வரும்; யாருக்குப் போட் டோம்னு தெரியும். அவ்வளவுதான்... போயிட்டே இருப்போம்.''

அருண் (காரைக்குடி)

""பி.ஜே.பி.யும் ஏ.டி.எம்.கே.வும் சேர்ந்து போட்ட ஓட்டுகளை மாத்திருவாங்கன்னு சொல்லுறது சின்னப்புள்ளத் தனமா இருக்கு. ஓட்டு மெஷின் இணைய வசதி எதுவும் இல்லாம, சாதாரண பேட்டரில இயங்கக்கூடியது. அட, கால்குலேட்டர் மாதிரிதான் இதுவும். வேட்பாளர் பேரெல்லாம் அகரவரிசைப்படி வரும். இதுல முறைகேடு நடக்கும்னு சொல்லுறத ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்கு சீட்டு முறையைவிட ஊயங மேல 100 சதவீதம் நம்பிக்கை வைக்கலாம்.''

செல்லையா (ஆழ்வார்குறிச்சி)

""அமெரிக்காவுலகூட ஓட்டுப்போட்ட மறுநாளே கவுண்ட் பண்ணுறாங்க. வங்காளத்துல தேர்தல் நடக்கிறதுக்கும் தமிழ்நாட்டுல தேர்தல் நடக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இதை ஒரு காரணமா வச்சி கவுண்டிங்க ரொம்ப லேட் பண்ணுறது சரியில்ல. தொழில்நுட்பம் ரொம்ப evmவளர்ச்சியடைஞ்சிருச்சு. விண்ணைத் தாண்டி அனுப்பியிருக்கிற சேட்டிலைட்ட, இங்கே பூமியிலிருந்து கண்ட்ரோல் பண்ண முடியுது. இ.வி.எம்.ம அந்த மாதிரி பண்ண முடியாதுன்னு சொல்லுறாங்க. நம்புறாப்ல இல்ல.''

மாணிக்கம் (சங்கரன்கோவில்)

""சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏப்ரல் மாசத்துல கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்துக்கு போகும்னு சொல் றாரு. அப்ப ஏதோ ஒரு திட்டம் இருக் குன்னு டவுட் வருது. செல் போன்ல நாலு மணிக்கு அலாரம் அடிக்க செட் பண்ணுனா கரெக்டா அடிக்குதுல்ல. அது மாதிரி ஓட்டு மெஷின்லயும் செட் பண்ண லாம்ல. வாக்கு எண்ணிக்கைய இவ்வளவு தாமதப்படுத்துறத மக்கள் ஒருக்காலும் ஏத்துக்கமாட்டாங்க. நாட்டுல ஒரு மூலைல இருந்துக்கிட்டு, அடுத்த நாட்டு மெஷின்ல இருக்கிற ரகசியத்த ஹேக் பண்ண முடியுதுல்ல. ஒரு நாட்டோட தலைவிதிய நிர்ணயிக்கிற மக்களோட தீர்ப்பை தெரிஞ்சிக்கிறதுக்கு eகாலதாமதம் கூடாது. தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு செயலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதா இருக்கணும்.''

விநாயகமூர்த்தி (சிவகாசி)

""எந்த தில்லுமுல்லும் பண்ண முடியாதுன்னு தேர்தல் ஆணையம் சவால் விடுது. ஓட்டு மெஷின்ல முறைகேடு பண்ண முடியும்னு சொல்லுறவங்க, அதை நிரூபித்துக் காட்ட ணும்ல. குற்றம் சொல்லுறவங்க யாரும் அதுக்கு முன்வரல. அதான்.. கோர்ட்வரை போயும் ஓட்டு மெஷினுக்கு எதிரா தீர்ப்பு வரல. ரிசல்ட் சாதகமா வந்துச்சுன்னா, ஓட்டு மெஷினைப் பத்தி முன்னால குறை சொல்லிட்டிருந்தவங்க மூச்சு விடறதில்ல. தேர்தல்ல தோற்கிறவங்கதான் மெஷினை குறை சொல்லுறாங்க. இயந்திரத் துக்கு பொய் சொல்லத் தெரியாது. அரசியல் வாதிகளுக்கு மெஷின் மேல பழியைப் போடுறது சுலபமான வேலை. இன்டர்நெட்டையோ, எந்த நெட்வொர்க்கையோ, ஓட்டுமெஷின்ல கனெக்ட் பண்ண முடியாது. எந்த ஓட்டு மெஷின், எந்த ஸ்டேட்டுக்கு போகுதுங்கிற விபரம் முன் கூட்டியே யாருக் கும் தெரியாது. சரியா சொல்ல ணும்னா... இந்த வாக்கு இயந்திரங்களை உற்பத்தி பண்ணுறவங்க நினைச்சாகூட, இதுல மோசடி பண்ணுற மாதிரி எதையும் செட் பண்ண முடியாது.''

ஹலீமா (ஓய்வுபெற்ற துணை ஆட்சியர், தக்கலை)

""வல்லரசு நாடுகள்கூட, இ.வி.எம். வேண்டாமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். வாக்கு சீட்டு மூலம் நேரடியாக வாக்களிக்கிறார் கள். வாக்காளர்களைப் பொறுத்தமட்டிலும், தன் கையால், அந்தக் கட்சிக்கு, அந்தச் சின்னத்தில்தான் முத்திரையிட்டேன் என்பது, அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டால் மட்டுமே நூற்றுக்கு நூறு உறுதி செய்யப்படுகிறது.''

evm

கடந்த பத்து ஆண்டுகளாக பேசப்படக் கூடிய இ.வி.எம். மீதான நம்பகத்தன்மை குறித்து, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, கிரா மத்து வாக்காளர்கள் கூட அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். மத்தி யிலும், மாநிலத்திலும் ஆள்பவர்கள் நினைத் தால், தாங்கள் போட்ட ஓட்டை மாற்றிவிட முடியுமென்று நினைக்கிறார்கள். ஒரு வாக்காளர், தான் விரும் பிய சின்னத்துக்கு வாக்களித்த நம்பிக்கையை வாக்குச்சீட்டு போல இ.வி.எம். தருவதில்லை. இன்றைக்கு, அரசியல் கட்சிகள், அரசியல் தலை வர்கள், அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல், விவசாய குடும்பத்திலிருந்து வரக்கூடிய வாக் காளர்கள் மத்தியில்கூட, இ.வி.எம். மீது நம்பகத் தன்மை குறைந்திருக்கும் நிலையில் உள்ளது.

தற்போது நடப்பது தேசிய தேர்தல் இல்லைதான். சில மாநிலங்களுக்கான தேர்தல் என்றாலும், இ.வி.எம்.கள், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்போடு, உறுதியான அறைகளில் மூடி முத்திரையிடப் பட்டு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கு இருக்கக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால், மோசடி செய் வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவே. அதே நேரத்தில், தொழில்நுட்பரீதியாக, கொஞ்ச நாட்களிலேயே இ.வி.எம். டிஜிட்டல்கள் மறைந்துவிடக் கூடியவை. நாம் பயன்படுத்தும் செல்போன்களில்கூட, சில டிஜிட்டல்கள் சேவ் செய்யாமல் இருந்தால் மறைந்துவிடும். இதுபோன்ற ஐயப்பாடுகள், ஓட்டு மெஷின்கள் மீது இருக்கின்றன. இந்த சந்தேகமெல்லாம் ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால், குறைந்த அவகாசத்தில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் ஆணையம், திரும்பத் திரும்ப விளக்கம் தந்தாலும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்த சந்தேகங்கள், தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

evm

மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இயந் திரத்தில் (விவிபேட்) உள்ள பதிவுச் சீட்டுகளை முழுமையாக எண்ணி, எந்தக் கட்சிக்கு அதிக வாக்கு என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப் படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் படும் இடத்தில் ஜாமர் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்பதும் ஏற்கப்படவில்லை.

இதனால், வாக்காளர் பதிவு ஒன்றாகவும், முடிவு வேறாகவும் இருக்கலாம். ஏப்ரல் 6-ந் தேதி தி.மு.க.வுக்கு வாக்கு. மே 2-ல் அ.தி. மு.க.வுக்கு வெற்றி என்று மாறக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ""இ.வி.எம். குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது'' என்கிறார் உறுதியாக.

வாக்கு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதை பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இ.வி.எம். பற்றி தவறான அவதூறு தகவல்களைப் பரப்பக்கூடாது என்று எச்ச ரித்துள்ள தேர்தல் ஆணையம் அது குறித்து விளக்கங்களையும் அளித்துள்ளது.

* இந்திய எலெக்ட்ரானிக் வோட்டிங் எந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. முதல் காரணம், இதனை இன்டர் நெட்டுடன் இணைக்க முடியாது.

* எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கே வாக்கு வந்து சேரும்படி செய்ய முடியாது. வேட்பாளர் பட்டியல் தயாரான பிறகுதான் வாக்கு எந்திரத்தில் எந்த சின்னம் எந்த இடத்தில் இடம்பெறும் என்பது முடிவாகும். குறுகிய காலத்தில் அத்தொகுதியிலுள்ள அனைத்து எந்திரங்களிலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்கு விழும்படி எந்திரத்தை மாற்றியமைப்பது சாத்தியமல்ல.

* நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக் களிக்கிறீர்கள் என்று உறுதிசெய்துகொள்ளவும் திருப்தியடையவும்தான் விவிபேட் கொண்டு வரப்பட்டது.

* வயர் மூலமும் வயர்லெஸ் முறையிலும் எப்படியும் ஹேக் செய்யப்பட முடியாது என்பதே இ.வி.எம்.மின் சிறப்பு.

வயர்லெஸ் முறையில் ஹேக் செய்ய ரேடியோ ரிசீவரும் ஆண்டெனாவும் அவசியம். ஈ.வி.எம். எந்திரத்தில் இதற்குத் தேவையான எலெக்ட்ரானிக் சர்க்யூட் கிடையாது.

* மிகச்சிறிய ட்ரான்சிவரை உருவாக்கி ஹேக் செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அவற்றை உலகிலேயே சில குறிப்பிட்ட நிறுவனங்களால்தான் உருவாக்க முடியும். கடையில் போய் கேட்டு வாங்கி வந்து மாட்டிவிட முடியாது.

எனவே இ.வி.எம். பாதுகாப்பானது என நம்பிக்கை தெரிவிக்கிறது.

தங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்தை தேர்தல் ஆணையத்தை நம்பி மே 2 வரை ஒப்படைத்துள்ள னர் தமிழக வாக்காளர்கள்.

-ராம்கி, பரமசிவன், சக்திவேல், மணிகண்டன், நாகேந்திரன், ராம்குமார், காளிதாஸ்

nkn03421
இதையும் படியுங்கள்
Subscribe