ப்ளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம்! கேரளாவைப் பின்பற்றுமா தமிழகம்!

plasma

டந்த ஏப்ரல் 11-14 நக்கீரன் இதழில், ‘கொரோனாவுக்குச் செக்வைக்கும் கேரள மருத்துவம். அங்கீகாரம் பெறுமா ப்ளாஸ்மா சிகிச்சை‘என்ற தலைப்பில் கேரளாவின் வைரஸ் ஆராய்ச்சி நிபுணர்களான டாக்டர் அனூப் மற்றும் டாக்டர் ஷின்ட்டோ பிரான்சிஸ் தெக்கூடன் இருவரின் ப்ளாஸ்மா தெரபி பற்றி குறிப்பிட்டிருந்தோம். அச்சிகிச்சையின் மூலமாக பல கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகளைக் குணமாக்கியதை யும் மத்திய அரசின் அங்கீகாரத்துக்கு காத்திருப்பதையும் வெளிப் படுத்தியிருந்தோம்.

dd

டாக்டர்களின் வைரஸ் முறியடிப்பு ஆராய்ச்சி முறைகள் மற்றும் சி

டந்த ஏப்ரல் 11-14 நக்கீரன் இதழில், ‘கொரோனாவுக்குச் செக்வைக்கும் கேரள மருத்துவம். அங்கீகாரம் பெறுமா ப்ளாஸ்மா சிகிச்சை‘என்ற தலைப்பில் கேரளாவின் வைரஸ் ஆராய்ச்சி நிபுணர்களான டாக்டர் அனூப் மற்றும் டாக்டர் ஷின்ட்டோ பிரான்சிஸ் தெக்கூடன் இருவரின் ப்ளாஸ்மா தெரபி பற்றி குறிப்பிட்டிருந்தோம். அச்சிகிச்சையின் மூலமாக பல கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகளைக் குணமாக்கியதை யும் மத்திய அரசின் அங்கீகாரத்துக்கு காத்திருப்பதையும் வெளிப் படுத்தியிருந்தோம்.

dd

டாக்டர்களின் வைரஸ் முறியடிப்பு ஆராய்ச்சி முறைகள் மற்றும் சிகிச்சை முறை அனைத்தையும் கொண்ட ஃபார் மூலாவின் மெமோ ரண்டம் அடங்கிய மெடிக்கல் ரிப்போர்ட் டின் ஃபைல் மத்திய அரசின் சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறையின் அங்கீகாரத்திற்காக இரண்டு வாரத்திற்கு முன்பாகவே கேரள அரசு அனுப்பியிருந்தது. ஆனாலும் அதற்கான அங்கீகாரம் வரத் தாமதமாகியிருக்கிறது. தொடர்ந்து கேரள அரசு, மத் திய சுகாதாரத் துறையிடம் வலியுறுத்தியும் இரண்டு வாரங்களாகக் காலந்தாழ்ந்தப்பட்டதால் கேரள அரசின் தலைமைச் செயலாளர் மத்திய சுகாதாரத்துறையின் செகரட்டரியிடம் மருத்துவ அங்கீகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு மறுத்தால், லீகலாகப் போகவேண்டியிருக்கும் என்று நாசூக்காகச் சொல்லியிருக்கிறாராம் கேரள தலைமைச் செயலாளர். அதன்பிறகே கேரளாவின் ப்ளாஸ்மா தெரபி சிகிச்சை முறைக்கு மத்திய சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

ப்ளாஸ்மா தெரபி சிகிச்சைமுறையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேர்களும் குணமாகியிருக்கிறார்கள். அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும்போது. தங்களுக்குச் சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள், உதவிய செவிலியர்கள் மற்றும் கேரள அரசுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டப் பகுதியிலிருக்கும் தனது எல்லையைக் கர்னாடக அரசு மூடியதால், உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், எல்லைப்புற கேரள மக்களை அவசர சிகிச்சைக்காக கேரளாவின் உள் மாவட்டத்திற்குள் கொண்டுவர ஹெலிகாப்டர் சேவை வசதியையும் ஏற் படுத்தியிருக்கிறது பினராய் அரசு.

ff

இப்படி கேரளா முழுவதிலும், படிப்படி யாகக் கொரோனா பரவலைத் தடுத்தும் குணப்படுத்தியும் வரும் கேரள அரசு, மாநிலத்தின் நிலை மையைச் சுட்டிக்காட்டி லாக்டவுனை படிப் படியாகத் தங்கள் மாநிலத்தில் தளர்த்து வதற்கும் ஆலோசித்தது.

மே3 வரை லாக்டவுன் என மோடி அறிவித்துள்ள நிலையில், கேரளாவுக்குரிய நிதியை விரைந்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார் பினரயி விஜயன்.

கேரளாவின் வெற்றிகரமான ப்ளாஸ்மா சிகிச்சை பற்றி நக்கீரனில் வெளியான செய்தியை உளவுப்பிரிவினர் தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ப்ளாஸ்மா சிகிச்சைக்கு இங்கும் அனுமதி பெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

-பரமசிவன்

nkn150420
இதையும் படியுங்கள்
Subscribe