Advertisment

பகுதிச் செயலாளர்கள் நியமனம்! -திருவண்ணாமலை தி.மு.க.வில் குமுறல்!

ss

"வார்டு மறுவரையறை உருவாக்கத் தில் குளறுபடி? - அதிருப்தியில் ஆளும்கட்சிப் பிரமுகர் கள்'’என்கிற தலைப்பில் கடந்த ஏப்ரல் 23-25 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் திருவண்ணாமலை மாநகராட்சியில் ஆளும்கட்சி பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். கட்சிரீதியாக வார்டு மறுவரையறை முடிந்து பகுதிச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சி யாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 18 ஊராட்சிகளை இணைத்தது உட்பட பல நிர்வாகப் பணிகள் மாநகராட்சியில் நடக்கத்தொடங்கியுள்ளன. ஆளும்கட்சியான தி.மு.க. இதில் அசுரவேகம் காட்டுகின்றது. மாநகராட்சியின் வார்டுகளை 62ஆக உயர்த்த முடிவுசெய்யப் பட்டுள்ளது. 6 பகுதிச் செயலா ளர் பதவிகள் உருவாக்கப்பட்டு ஏப்ரல் இறுதியில், 6 பகுதிச் செயலாளர்களாக விஜயராஜ், கோவிந்தன், சண்முகம், குட்டி .புகழேந்தி, வழக்கறிஞர் சீனுவாசன், ஷெரிப் ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனம் சாதி பிரதிநிதித்துவப் படி செய்யப்பட்டுள்ளது. இது தான் அதிருப்தியை ஏற்படுத்தி

"வார்டு மறுவரையறை உருவாக்கத் தில் குளறுபடி? - அதிருப்தியில் ஆளும்கட்சிப் பிரமுகர் கள்'’என்கிற தலைப்பில் கடந்த ஏப்ரல் 23-25 நக்கீரன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் திருவண்ணாமலை மாநகராட்சியில் ஆளும்கட்சி பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். கட்சிரீதியாக வார்டு மறுவரையறை முடிந்து பகுதிச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சி யாக அறிவிக்கப்பட்டுள்ளதால் 18 ஊராட்சிகளை இணைத்தது உட்பட பல நிர்வாகப் பணிகள் மாநகராட்சியில் நடக்கத்தொடங்கியுள்ளன. ஆளும்கட்சியான தி.மு.க. இதில் அசுரவேகம் காட்டுகின்றது. மாநகராட்சியின் வார்டுகளை 62ஆக உயர்த்த முடிவுசெய்யப் பட்டுள்ளது. 6 பகுதிச் செயலா ளர் பதவிகள் உருவாக்கப்பட்டு ஏப்ரல் இறுதியில், 6 பகுதிச் செயலாளர்களாக விஜயராஜ், கோவிந்தன், சண்முகம், குட்டி .புகழேந்தி, வழக்கறிஞர் சீனுவாசன், ஷெரிப் ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனம் சாதி பிரதிநிதித்துவப் படி செய்யப்பட்டுள்ளது. இது தான் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து சிலர் தங்களது குமுறல்களை வாட்ஸ்அப் குரூப்களில் எழுதி அதனை சுற்றுக்கு விட்டு, பின்பு அழித்துவிட்டார்கள் என்கிறார்கள்.

Advertisment

tt

கட்சியின் மாநகர பகுதி ஆளும்கட்சி நிர்வாகிகள் சிலர் நம்மிடம், "பகுதிச் செயலாளர்களாக முதலியார் சமுதாயத்திலிருந்து இருவர், யாதவர், வன்னியர், போயர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நகராட்சியாக இருந்தபோதும் சரி மாநகராட்சியான பின்பும் இங்கே ஒடுக்கப்பட்ட, பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மொத்த வாக்காளர்களில் 25 முதல் 30% வரை உள்ளார்கள். அச்சமுதாயத்துக்கு பகுதிச்செயலாளர் பதவி தரவில்லை. போயர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டப்படுகிறார். அச்சமுதாயம் எப்படி எங்கள் சமுதாயமாகும்? எஸ்.சி. என சான்றிதழ் வைத்திருப்பவர்களெல்லாம் எங்கள் சமுதாயமாகிவிடுமா? எங்கள் சமுதாயத்தில் அவர் பெண் குடுத்து, எடுப்பாரா?'' எனக் குரலெழுப்புகிறார்கள்.

அதேபோல் நாயுடு சமுதாயத்தினர், "திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க.வில் கட்சி அணி அமைப்பாளர்களில் 90% ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், மாநகர பதவிகளிலும் அவர்களே நியமிக்கப்படுகிறார்கள். கட்சியின் முக்கிய பதவிகளில் மற்ற சமுதாயத்தைப் புறக்கணிக்கிறார்கள். மாநகரத்தில் வலிமையான சமுதாயமாக நாங்களும் இருக்கிறோம், எங்கள் சமூகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள் எனக் கேட்டால், அமைச்சர், துணைசபாநாயகர் இருவரும் உங்கள் சமுதாயம்தானே எனக் கேட்கிறார் கள். அப்படியென்றால் மாநகரச் செயலாளர், எம்.பி. முதலியார் சமுதாயத்தினர்தானே, பின்பு ஏன் அந்த சமுதாயத்துக்கே பதவிகள் தரவேண்டும் எனக் கேட்டு கட்சிக்குள் சர்ச்சை உருவாகியிருக்கிறது''’என வேதனையை வெளிப்படுத்தினர்.

தற்போது பகுதிச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்கள் குறித்து பேசும்போது, "பகுதிச் செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ள சி.எஸ்.எ. சண்முகம், திருவண்ணா மலை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். எனக்கு வயதாகிவிட்டது, என்னை அப்பொறுப்பி லிருந்து விடுவித்து, பதிலாக வேறு கட்சிப் பதவி தாருங்கள் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு அதைவிட பணிகள் அதிகமான பகுதிச் செயலாளர் பதவியைத் தந்துள்ளார் அமைச்சர். ஒரு பகுதிச் செயலாளர், தன்னை நியமித்து அறிவிப்பு வந்ததும் வார்டு செயலாளருக்கு போன்செய்து, வாங்க போய் அமைச்சரை சந்திச்சிட்டு வந்துடுவோம்னு அழைக்க, அவரோ, நான் உங்க பகுதியில்ல எனச் சொல்லியுள்ளார். தன் பகுதியில் வரும் வார்டுகள் எதுவென்றே தெரியவில்லை, அவரை பகுதிச் செயலாளராக்கியுள்ளார்கள்.

இன்னொரு பகுதிச் செயலாளர், நீங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வாங்கித் தருகிறேன் என ஒவ்வொருவரிடமும் லட்சக் கணக்கில் வசூல்வேட்டை நடத்திவிட்டார். இப்போது தி.மு.க. அரசே மக்களுக்கு இலவச பட்டா தருகிறது, இவரிடம் பணத்தைக் கேட்டால் தரமறுக்கிறார். அவர்மீது புகார் தரலாம் என பணத்தை தந்து ஏமாந்த சமுதாயத்தினர் ஆலோசனை நடத்திவரும் நிலையில் அவருக்கு பதவி தரப்பட்டுள்ளது. அவருக்கு கட்சியிலுள்ள இளைஞர்களை கட்சிக் கூட்டத்துக்கு அழைத்துவரக்கூட முடியாது, அந்த சமுதாயத்தில் அவரை ஏற்பதுமில்லை. இப்படிப் பட்டவர்களுக்கு பதவி தரச்சொல்லி யார் சிபாரிசு செய்தார்கள் எனத்தெரியவில்லை. மாநகரச் செயலாளர் கார்த்தி.வேல்மாறனுக்கு, யார் கட்சிப் பணி செய்கிறார்கள் எனத் தெரியாதா? அமைச்சரும், தெற்கு மா.செ.வுமான எ.வ.வேலுவிடம் கருத்து சொல்லும்போது, அதுகுறித்து மா.செ.வுக்கு தகவல் தெரிவிக்கவேண்டாமா? கட்சி விசுவாசி, களப்போராளிகளுக்கு பொறுப்புதராமல், ஜால்ரா அடிப்பவர்களுக்கும், ஒன்னும் தெரி யாதவர்களுக்கும், பினாமிகளுக்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது சரியா?''’என்கிறார்கள் கோபமாக.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள 6 பகுதிச்செயலாளர்களும் நகரத்தில் வசிப்பவர்கள். 18 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 25 கிராமங்கள் மாநகரத்தில் புதிதாக இணைந்துள்ளன. அந்த கிராமப் பகுதிகளிலிருந்து ஒரு பகுதிச் செயலாளர்கூட நியமிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, "பதவி கேட்கும் அனைவரும் குறிப்பிட்ட சமுதாயத்தினராகவே இருக்கிறார்கள். அதனால் பொறுப்புகள் சமூகநீதி அடிப்படையில் பிரித்துத்தரப்பட்டது. விடுபட்ட சமுதாயத்தின ருக்கு மாநகரப் பொருளாளர், அவைத்தலைவர் பதவிகள் தர ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள். கட்சியில் தொடரும் சறுக்கல்களால் சில விவகாரத்தில் அமைச்சர் பெயர் சர்ச்சையாகி வருகிறது.

Advertisment

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn070525
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe