தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் மாதம் நடக்க வுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியில் தீவிரமாகியுள்ளன. 234 தொகுதிகளுக்கும் கட்சியினரிடம் விருப்பமனு வாங்கிக்கொண்டிருக் கிறது அ.தி.மு.க. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை விருப்பமனு பெறுவதாக அறிவிக்கப்பட்டதால் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்துச்சென்று அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்பமனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியைச் சேர்ந்த அ.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் மாதம் நடக்க வுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியில் தீவிரமாகியுள்ளன. 234 தொகுதிகளுக்கும் கட்சியினரிடம் விருப்பமனு வாங்கிக்கொண்டிருக் கிறது அ.தி.மு.க. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை விருப்பமனு பெறுவதாக அறிவிக்கப்பட்டதால் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்துச்சென்று அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்பமனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் ஆரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச் சாமி 120 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என ஒரு தொகுதிக்கு 15,000 ரூபாய் என 120 தொகுதிக்கு 18 லட்சத்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பணம்செலுத்தி விருப்ப மனு தந் துள்ளார். அதோடு ஆரணி சட்டமன்றத் தொகுதி யில், தான் போட்டியிட ஆரணி தொகுதிக்கு கஜேந் திரன் விருப்ப மனு தந்துள்ளார். இ.பி.எஸ் பெய ரில் 120 தொகுதிகளுக்கு பணம் கட்டியதை அ.தி. மு.க.வில் ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர். அதே நேரத்தில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி. மு.க. நிர்வாகிகளுக்கு இது அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஒரு தொகுதியில் கட்டுவார்கள், இரு தொகுதி களில் கட்டுவார்கள்,…இதென்ன 234 தொகுதிகளில் 120 தொகுதிகளுக்கு இ.பி.எஸ் பெயரில் விருப்பமனு தந்துள்ளார் என ஒ.செ. கஜேந்திரன் தரப்பினரிடம் நாம் கேட்டபோது, "தமிழ்நாட்டில் 117 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றிபெற்றால்தான் ஆட்சியமைக்கமுடியும். எங்கள் கட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு போக எப்படியும் 140 முதல் 150 தொகுதிகளாவது போட்டியிடவேண்டும் என தலைமைக் கழக நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அதில் போட்டி யிடும் தொகுதிகளில் நாங்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க வேண்டுமென்றே 120 சட்டமன்றத் தொகுதிகளில் இ.பி.எஸ் பெயரில் பணம் செலுத்தியுள்ளார்''’என்றார்கள்.
இதுமட்டும்தான் காரணமா என ஆரணி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "ஆரணி தொகுதியை எப்படியாவது கைப்பற்றி மூன்றாவது முறையாக போட்டியிடவேண்டும் என சிட்டிங் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திரன் முயற்சிக்கிறார். அதேபோல் போளூர் தொகுதியைச் சேர்ந்தவரும், மத்திய மா.செ.வுமான ஜெயசுதா, ஆரணி தொகுதிதான் வேண்டும் என இ.பி.எஸ்.ஸை வலம்வருகிறார். பேரவை மா.செ. பாரிபாபு, வழக்கறிஞர் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பாபுமுருகவேல் உட்பட சிலர் முயற்சிக்கிறார்கள். இவர்களில் பாபு முருகவேலைத் தவிர மற்றவர்களை தலைமையை நெருங்கவிடாமல் செய்கிறார்கள் சிட்டிங் எம்.எல். ஏ.வும், முன்னாள் எம்.எல்.ஏ.வும். அதனால்தான் இப்படியொரு விருப்பமனு தாக்கல் செய்து தலை மையின் கவனத்தை ஈர்க்கப்பார்க்கிறார் ஒ.செ. கஜேந்திரன்'' என்கிறார்கள். இன்னும் என் னென்ன கூத்துக்களெல்லாம் நடக்குமோ!
-தமிழ்குரு
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us