ங்கிலாந்துக்கு சென்ற எடப்பாடி ஆகஸ்ட் 31-ம் தேதி தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தார் அதற்கான காரணம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது.

லண்டனில் அவருக்கு (ஈர்ப்ர்ய்ர்ள்ஸ்ரீர்ல்ஹ்) கோலோனோஸ்கோபி என்கிற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கோலோனோஸ்கோபி என்பது உடல் எடை அதிகமானவர்கள் இயற்கை உபாதைகளுக்கு சிரமப்படாமல் இருக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சை.

ddd

கோலோனோஸ்கோபி முறையில் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளி மயக்க நிலையில் வைக்கப்படுவார். அவருக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்து தெளிய 24 மணி நேரம் ஆகும். லேசர் மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அகமதாபாத்தில் திசுக்கட்டிக்கான அறுவை சிகிச்சை மயக்க மருந்து கொடுத்து நிறைவேற்றப்பட்டதை அங்குள்ள மருத்துவமனை குறிப்பு தெளிவுபடுத்தியது. ஆனால் எடப்பாடிக்கு கோலோனோஸ்கோபி செய்யப்பட்டது தொடர் பாக லண்டன் கிங்ஸ் மருத்துவமனை ஒப்புக் கொள்ளவில்லை. எடப்பாடியின் பயணத்தில் இருந்த தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த ஆகஸ்ட் 31-ம் தேதியை சந்தேகக் கண்ணோடு பார்த்த பலர் லண்டன் கிங்ஸ் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டனர். லண்டன் மருத்துவமனை "அப்படி எந்த சிகிச்சையும் இல்லை' என மறுத்துள்ளது. முதல்வருக்கு சிகிச்சை செய்யப்பட்டால் அதை உறுதிப்படுத்தி, ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றி அறிக்கைகள் தந்தது மாதிரி அறிக்கை தர வேண்டும் என அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் படி கடமைப்பட்டுள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான துறையும் அதன் செயலாளர் பியூலா ராஜேஷும் "அப்படி எதுவும் இல்லை' என மறுக்கிறார்கள்.

Advertisment

aadமருத்துவமனை விசிட்டுக்குப்பின் எடப்பாடி லண்டனில் உள்ள தன் மகன் மிதுனின் உறவினர் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தார். லண்டனில் அவரது உறவினர்களுடன் இருக்கும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கிடையே செப்டம்பர் 1-ம் தேதி கெவ் கார்டன் பகுதியை எடப்பாடி சுற்றிப் பார்த்தபோது அவரை அழகாக படமெடுக்க வேண்டும் என லண்டனை சேர்ந்த இளம் புகைப்பட நிபுணரை ஏற்பாடு செய்தனர். அவரை, பெருமாள்சாமி போன்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்யும் காரில் அனுப்பாமல் முதல்வரின் காரிலேயே ஏற்றி அனுப்பினார்கள். அவர் என்ன நினைத்தாரோ "நான் எனது கேமரா உபகரணங்களை பின்னால் வரும் பாதுகாப்பு வண்டியில் வைத்துவிட்டேன்' என முதல்வர் சென்ற காரிலிருந்து இறங்கி பின்னால் வந்த வண்டியில் ஏறிக் கொண்டார் என்கிறார்கள் வெளிநாட்டு விசிட் சென்றவர்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் செயலாளர் பியூலா ராஜேஷும் முதல்வர் இல்லாத நேரங் களில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை அதிகாரிகளிடம் நீண்ட நேரம் விவாதித்தபடியே இருந்தார்கள்.

"அது இந்திய பொருளாதாரத் தைப் போன்று மிக பலகீனமான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள லண்டன் கிங்ஸ் மருத்துவமனைகளை புதிய முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை' என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். செப்டம்பர் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு எடப்பாடி, விஜயபாஸ்கரை லண்டனில் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டு விட்டார். ஆனால் விஜயபாஸ்கரும் பியூலாவும் அங்கே இருந்தார்கள். அது செய்தியாக பரவ பியூலா 4-ம் தேதி லண்டனிலிருந்து தமிழகத்திற்கு புறப்பட்டு வந்துவிட்டார்.

Advertisment

அமெரிக்கா வந்த எடப்பாடி அங்கிருந்து பஃபலோ ஸ்டேட்டுக்கு சென்றார். நயாகரா நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் உள்ள பஃபலோ ஸ்டேட்டிற்கு எடப்பாடிக்கு முன்பே வந்த ராஜேந்திர பாலாஜி எடப்பாடி மாதிரி கோட் சூட் போடாமல் கரைவேட்டி வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்ப்பதும் அமெரிக்க வீதிகளில் சுற்றித் திரிவதும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது.

eesசேலம் பக்கத்தில் அமைய உள்ள கால்நடை பண்ணைக்காக அமெரிக்காவில் கால்நடை பண்ணைகளை சுற்றிப் பார்த்த எடப்பாடியுடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் பஃபலோ மாநிலத்தில் இணைந்தார். பஃபலோ ஸ்டேட்டிலிருந்து நியூயார்க் சென்ற எடப்பாடி அங்கும் சான் பிரான்சிஸ்கோ நகரிலும் "யாதும் ஊரே' என்கிற உலகத் தமிழர்களை ஒருங்கிணைக் கும் அமைப்பை தொடங்கி வைத்தார். இரு இடங்களிலும் முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தினார். ஜிம் மார்ட்டின், சிட்னி ஃபார்மா, நோவிட் லேப்ஸ், ஆஸ்பையர் கன்சல்டிங், ஜில்லிஜா டெக்னாலஜி ஆகிய தொழில் நிறுவனங்கள் 2,500 கோடி ரூபாய் முதலீடுகளை செய்கிறது. அதன் மூலம் 20,000 பேருக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமெரிக்காவிலிருந்து எடப்பாடி அறிவித்தார்.

அத்துடன் மேற்கு வங்கத்தில் இயங்கும் சுரேந்திர சாட்டர்ஜி என்கிற இந்தியருக்கு சொந்தமான ஹார்டியா பெட்ரோ கெமிக்கல் என்கிற நிறுவனம் 50,000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்யப் போகிறது என்கிற அறிவிப்பை அமெரிக்காவிலிருந்து எடப்பாடி வெளியிட்ட நிகழ்வும் நடந்தது. அடுத்தபடியாக சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,500 கோடி ரூபாய் முதலீடு தமி ழகத்திற்கு வருகிறது என அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே ஜெ. ஆட்சியில் 2015-ல் முதலீட்டாளர் மாநாடு, 2019-ல் எடப்பாடி நடத்திய முதலீட்டாளர் மாநாடு இவற்றில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான சுமார் 5 லட்சம் கோடி முதலீடு வந்தபாடில்லை. உற்பத்தி தொடங்கவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மிகக்குறைந்த அளவிலானது என்பதுடன் இதில் பல நிறுவனங்கள் டுபாக்கூர் கம்பெனிகள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

""எடப்பாடி அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற் கும் போய் வெறும் 5,000 கோடி முதலீட்டை தான் இதுவரை பெற்றிருக்கிறார். ஒரு பில்லியன் டாலர் அமெரிக்க பணத்தின் இந்திய மதிப்பு ஏழாயிரம் கோடி. உலகின் மிகப் பெரிய பணக்கார கம்பெனியின் முதலாளியான வாரன் பஃபெட் 86 பில்லியன் டாலர்களை வைத்திருக்கிறார். அதேபோல் மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற கம்பெனிகள் வைத்திருக்கின்றன. இவற்றை அதிர்ஷ் டம் மிக்க 500 கம்பெனிகள் என அழைப்பார்கள். இவையெல்லாம் அமெரிக்காவில்தான் உள்ளன. இவற்றில் ஒரு கம்பெனியுடன் பேசக்கூட எடப்பாடியால் முடியவில்லை.

சான் பிரான்சிஸ்கோ நகரத்திற்கு எடப்பாடி சென்றிருக்கிறார். அங்குதான் இன்று தொழில் நுட்ப உலகில் அதிக முதலீடும் தொழில்நுட்பமும் கொண்ட மென்பொருள் கம்பெனிகள் இருக்கின் றன. அங்குதான் கூகுள் நிறுவனத்தின் தலைவரான சென்னையில் பிறந்த தமிழர் சுந்தர் பிச்சை இருக்கிறார். அவரிடம் ஒரு அப்பாயின்ட் மெண்ட் பெறக்கூட எடப்பாடியால் முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் கம்பெனியுடன் அமெரிக்காவில் பேசுகிறார். அமெரிக்காவில் இருக்கும் செவ்ரான், ஸ்டாண்டர்டு ஆயில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்ற மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் கம்பெனிகளோடு பேச முடியவில்லை. அடுத்ததாக துபாய் செல்கிறார். துபாய் பங்கு மார்க்கெட் என்பது இந்தியாவில் உள்ள மும்பை மற்றும் டெல்லி பங்கு மார்க்கெட்டை விட மிகச் சிறியது. 5,000 கோடி ரூபாய் முதலீட்டை பெற அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் போக தேவையில்லை. இந்திய முதலாளியான டாடாவிடம் கேட்டாலே கொட்டிவிடுவார். இதற்காக இப்படி ஒரு வெளிநாடு சுற்றுப் பயணத்தை அரசாங்க செலவில் மேற்கொள்ள வேண்டியது இல்லை. எடப்பாடி வேறு ஏதோ நோக்கத்திற்காக கோட் சூட் போட்டுக் கொண்டு மந்திரி சகாக்களுடன் ஜாலியாக ஊர்வலம் வருகிறார். அவரது பயணத்தில் முதலீட்டை ஈர்க்கக்கூடிய அம்சம் கடுகளவு கூட இல்லை'' என்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

அரசாங்கப் பணத்தை செலவு செய்து யாருக்கு லாபம் தேடுகிறார்கள் முதல்வரும் அமைச்சர்களும்.

-தாமோதரன் பிரகாஷ்