Advertisment

இது மோடிக்கு எதிரான மாநாடு! திருச்சியில் கர்ஜித்த திருமாவளவன்!

vv

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு ஜனவரி 26, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Advertisment

"வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக சுடர் ஒளி கொண்டுவரப்பட்டு மாநாட்டுத் திடலில் அது நிறுவப்பட்டது. பின்னர் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தொல். திருமா வளவன், 33 மாநாட்டு தீர்மானங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதற்கான விளக்கத்தை மாநாட்டில் திரண்டு இருந்தவர்களுக்குக் கூறி நிறைவேற்றினார்.

vck

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் சனநாயகம் வெல்லட்டும் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்:

பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு நல்குக.

பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்போம்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்.

பதினாறாவது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்ட வேண்டும்.

மாநில அதிகாரங்களை ஆதரிக்க வேண்டும்.

நீட் தேர்வு ரத்துசெய்ய வேண்டும், கல்வியை மீண் டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.

வெல்லும் சனநாயகம்! சர்வாதிகார பா.ஜ.க. அரசை தூக்கி எறிவோம்!

சனந

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு ஜனவரி 26, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Advertisment

"வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக சுடர் ஒளி கொண்டுவரப்பட்டு மாநாட்டுத் திடலில் அது நிறுவப்பட்டது. பின்னர் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தொல். திருமா வளவன், 33 மாநாட்டு தீர்மானங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதற்கான விளக்கத்தை மாநாட்டில் திரண்டு இருந்தவர்களுக்குக் கூறி நிறைவேற்றினார்.

vck

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் சனநாயகம் வெல்லட்டும் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்:

பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு நல்குக.

பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்போம்.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்.

பதினாறாவது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்ட வேண்டும்.

மாநில அதிகாரங்களை ஆதரிக்க வேண்டும்.

நீட் தேர்வு ரத்துசெய்ய வேண்டும், கல்வியை மீண் டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்.

வெல்லும் சனநாயகம்! சர்வாதிகார பா.ஜ.க. அரசை தூக்கி எறிவோம்!

சனநாயக அரசை நிறுவுவோம்.

என்பவை உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

vck

இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "திருச்சியில் கடல்போல திரண்டு இருக்கும் திருமாவின் சிறுத்தைகளே! இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதற்கு இலக்கணமாக தீரர்கள் கோட்டமாம் அருமை சகோதரர் திருமாவளவனின் படை வீரர்கள் சனநாயகம் காக்க கூடி யிருக்கிறீர்கள். அவர் சட்டக் கல்லூரி மாணவராக தி.மு.க. மாணவர் அணியில் பணியாற்றிய காலத்திலிருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள் தோறும் கொள்கை வலுப்பெறும் இளம் காளையாகத் தான் இன்று சனநாயகம் காக்கும் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளார்.

எனக்கு தோளோடு தோள் நிற்பவர் திருமாவளவன். தமிழ் இனத்துக்கு வலுச் சேர்க்கவே நாங்கள் இணைந்து நிற்போம். எங்களுக்கு இடையிலான உறவு தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத் கரையும் யாரேனும் பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலை சிறுத்தைகளும். அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கும் இயக்கம் தி.மு.க. பட்டியலின மக்களின் நலனை காக்கின்ற அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

சமூக நீதி, சமத்துவச் சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக் கும் அமைக்க வேண்டும் என்பதற்காக திருமாவளவன் வெல்லும் சனநாயக மாநாட்டினை கூட்டியுள்ளார். நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். ‘சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சியை தூக்கி எறிவோம், ஜனநாயக அரசை நிறுவுவோம்’ என சபதம் ஏற்று, முக்கியமான 33 தீர்மானங்களை நிறைவேற்றியுள் ளார் திருமாவளவன். இந்த முழக்கம் எதிர்வரும் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. ஒன்றியத்தில் யார் ஆட்சி நடக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து அகில இந்திய அளவில் இயங்கும் கட்சிகள் செயல்பட வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒற்றை லட்சியம் அனைவருக்கும் இருக்க வேண்டும். ‘இண்டியா கூட்டணி அமைத் தார்கள், இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றினார் கள்’ என வரலாறு கூற வேண்டும். இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் பா.ஜ.க. வீழ்த்தப்படும்''’எனப் பேசி அமர்ந்தார்.

vck

பின்னர் தன்னுடைய தலைமை உரையை வழங்கிய தொல். திருமாவளவன், "தமிழகத்தில் எல்லா கிராமங்களிலும் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அடுத்து விடுதலை சிறுத்தைகளின் உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த கட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவிக்கிடக்கிறது.

ஒரு ரூபாய்கூட என்னிடமிருந்து வாங்காமல் தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இந்த மாநாட்டிற்கு வந்துள்ளதுடன், மாநாட்டுக்கு கட்சி நிதியாகவும் இங்கு திரண்டு இருக்கக்கூடிய தொண்டர்கள் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு 61 அகவை முடிவதால் 61 சவரன் தங்கத்தை கட்சி நிதியாக தொண்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலிருந்து ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இங்கு கூடியிருக் கிறீர்கள். நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?

சனநாயகத்திற்கு எதிராக பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து சமத்துவம், சமூக நீதி போன்றவற்றை புதைகுழிக்குள் போட்டுப் புதைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை யை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிக்கின்றன.

டாக்டர் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு புதிய அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் மனு ஸ்மிருதி என்ற நாசகரமான அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மக்களை அடிமைப்படுத்த பார்க்கிறது.

அப்படிப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டால் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் முழுமை யாக பாதிக்கப்பட்டு, அவர்களின் இட ஒதுக்கீடு முற்றிலும் அகற்றப்படும். இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையின் கணக்கெடுப்பை இது வரை மத்தியஅரசு நடத்தவில்லை. தொடர்ந்து பல கட்சிகள் சாதி வாரிக் கணக்கெடுப்பை முன்வைத்து வரும் நிலையில், அந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் இவர்கள் காணாமல் போய்விடுவார் கள் என்ற பயத்தில் அதைச் செய்ய மறுக்கிறார்கள். அதுவே அவர்களது தயக்கத்துக்குக் காரணம்.

அதேபோல் இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கக்கூடிய மனிதர்களில் 80 சதவீதம் பேர் பிராமணர்களாக, மேல்சாதி வகுப்பினர்களாக இருக் கிறார்கள். அவர்கள்தான் இன்று நம்மை ஆண்டு வருகிறார்கள்.

இந்துக்களில் சத்திரிய இந்துக்களை ஏமாற்றும் விதமாக ராமர் கோவில் நாடகத்தை மோடி தொடங்கியிருக்கிறார். கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்து சத்திரிய இந்துக்களை ஏமாற்றி வருகிறார். நாங்கள் ராம பக்திக்கு எதிரான வர்கள் அல்ல. ராமர் அரசியலுக்கு எதிரானவர்கள்.

மோடி ஒரு மோசடிப் பேர்வழி என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து மோடியை இந்த வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாட்டின் மூலம் எதிர்த்து நிற்கிறோம். இது மோடிக்கு எதிரான மாநாடு''’என்று கர்ஜித்து அமர்ந்தார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமை வகித்த இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ, ஆசிரியர் வீரமணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி , காங்கிரஸ் சார்பாக திருநாவுக்கரசர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

vck

nkn310124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe