""ஹலோ தலைவரே, "பாரத் மாத்தாக்கி ஜே'ன்னு குரல் கொடுத்த தேசபக்தர்களெல்லாம் இப்ப ’வெற்றிவேல்! வீரவேல்!னு தமிழுணர்வு பொங்க குரல் கொடுக்குறதை கவனிச்சீங்களா?''

""ஆமாம்பா, கந்த சஷ்டி கவசம் தொடர்பா கறுப்பர் கூட்டம்ங்கிற அமைப்பினர் யூ-டியூபில் செய்த விமர்சனம் தீயா பரவிடிச்சி. அதை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தலாமான்னு பா.ஜ.க. யோசிக்குது. தமிழ் நாட்டில் ராமரைவிட தமிழ்க் கடவுளான முருகன்தானே குன்றுதோறும் குடி கொண்டிருக்காரு.''’

ff

""உண்மைதாங்க தலைவரே, கந்த சஷ்டி கவசத்தை விமர்சனம் செய்த கறுப்பர் கூட்டம் மேலே கொடுக்கப் பட்ட புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கு. ஆனாலும், பா.ஜ.க. இதை தி.மு.க.வுக்கு எதிரா அரசியல் பண்ண முயற்சி பண்ணுது. இதைப் புரிஞ்சிக்கிட்ட மு.க.ஸ்டாலின், ரொம்ப கவனமாக இருந்தாரு.''’’

Advertisment

""சும்மா இருந்தால், அவரையும் சீண்டாமல் இருப்பாங்களா?''

dd""பா.ஜ.க. நினைப்பை அ.தி.மு.க மூலம் செயல்படுத்தும் விதமா அமைச்சர் வேலுமணி, தமிழர்களின் கடவுளான முருகனை அவமதிப்பதை ஸ்டாலின் வேடிக்கை பார்க்கலாமாங்கிறரேஞ்சுக்கு அமைச்சர் வேலுமணி அறிக்கைவிட்டார். உடனே ஸ்டாலின், அதுக்கு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மூலமா பதில் கொடுத்தார். அதில், முருகரை அவமதித்தவர்களுக்கும் தி.மு.க.வுக்கும் சம்மந்தமில்லை. எங்கள் கட்சியில் இருக்கும் ஒன்னரை கோடி பேரில் 1 கோடி பேர் இந்துக்கள்னு ஆர்.எஸ்.பாரதி சொன்னாரு.''

""தி.மு.க. வட்டாரத்தில் என்ன சொல்றாங்க?''’

Advertisment

""வேலுமணியின் சீண்டலைப் பார்த்த, பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமைச் சேர்ந்த சிலர், ஸ்டாலின் மருமகனான சபரீசனிடம், நம்மகிட்டேயிருந்து எடப்பாடிக்கு ஆலோசகரா போயிருக்கும் சுனில்தான், தி.மு.க.வை இந்துக்களுக்கு எதிரான கட்சியா சித்தரிக்கும் முயற்சியோடு, அ.தி.மு.க. புள்ளிகளை இயக்கிக்கிட்டு இருக்கார்னு சொல்ல, அதுக்கு சபரீசன், சுனிலுக்கு இப்படியெல்லாம் ரூட் போடத்தெரியாது. அவர் வெறும் புள்ளி விபரக்கணக்குகளைப் போடக்கூடியவர் தான்னு சொல்லியிருக்கார்.''

""சுனில் பற்றி அ.தி.மு.க.விலும் விமர்சனம் எழுந்ததாமே?''’

""ஆமாங்க தலைவரே, கறுப்பர் கூட்டத்தின் யூ-டியூப் விவகாரத்தை எடப்பாடியும் ஆரம்பத்தில் கண்டுக்கலை. கண்டிக்கவுமில்லை. தி.மு.க. ஆலோசனை டீமில் இருந்து இந்த் பக்கம் வந்த சுனில்தான், எடப்பாடியை தடுத்துட்டாருன்னு ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சீனியர்கள் மத்தியிலேயே டாக் அடிபடுது. அ.தி.மு.க.வை இந்த மக்கள் ஒட்டுமொத்தமா ஆதரிக்கனும்னுதான், ஜெ.’கோயிலுக்குப் போறதையும், அலகு குத்திக்கிறதையும், மண் சோறு சாப்பிடறதையும், தீ மிதிக்கறதையும் அனுமதிச்சார். அவர் இருந்திருந்தா இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி கோல் அடிச்சிருப்பாருன் னும் எடப்பாடி மீதான ஆதங்கத்தை அவங்க வெளிப்படுத்தறாங்களாம்.''

""கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி விவகாரம் டெல்லி வரை கொண்டுபோகப் பட்டிருக்கே?''

""தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், கட்சியின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்களிடம் இது பற்றி புகார் செஞ்சிருக்கார். பா.ஜ.க. சீனியர்களோ, இந்துத்துவாவுக்கு எதிரா யார் என்ன சொன்னாலும் கடுமையாக எதிர்வினை ஆற்றுங்கள்னு சொல்லியிருக்காங்க. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, தமிழகத்தில் இந்துக்களுக்கும் இந்துத்துவாவுக்கும் எதிராக இயங்கும் இயக்கங்கள், பத்திரிகைகள், செய்தியாளர்கள் யார்யார்னு லிஸ்ட் எடுக்கும்படி, மத்திய உளவுத்துறைக்கு உத்தரவு போட்டிருக்காராம். அதன் அடிப்படையில் ஒரு ஆட்டம் ஆரம்பிக்கும்னு தெரியுது.''

""சரிப்பா, கட்சிக் கட்டமைப்பில் அ.தி.மு.க. கொண்டுவர நினைக்கும் சில மாற்றங்களுக்கு அமைச்சர்கள் மத்தியில் இருந்தே எதிர்ப்பு கிளம்புதாமே?''

dd

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, கட்சியில் மூன்று எம்.எல்.ஏ. தொகுதிக்கு ஒரு மா.செ.ன்னு புதுசா பதவிகளை உருவாக்கி, அதில் தங்கள் ஆட்களை உட்கார வைக்கனும்னு எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முடிவு செஞ்சிருந்தாங்க. அதன்படி மா.செ.க்களின் முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கு. அதை அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் பார்வைக்குக் கொண்டு போனப்ப, பெரும்பாலான அமைச்சர்கள் அதற்கு தங்கள் அதிருப்தியைத் தெரிவிச்சிருக்காங்க. அதனால் அந்தப் பட்டியல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கு தாம்.''

""எடப்பாடிக்கு எதிரா கொரோனாவையே ஆயுத மாக்கும் முயற்சிகளும் அ.தி. மு.க.வுக்குள்ளேயே நடக்கு தாமே?''

""கொரோனா நேரத்தில் மாவட்டங்களைப் பிரிப்பதையும் ஒன்றியங்களைப் பிரிப்பதையும் பவருடன் இருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள்- மா.செ.க்கள் விரும்பலை. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் இ.பி.எஸ்.- ஒ.பி.எஸ். ப்ளானுக்கு ஆதரவா இருக்காரு. ஆனா, அதே டெல்டா மண்டலத்தின் தஞ்சை மாவட்ட வடக்கு மா.செ.வாகவும் பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும் கட்சியின் இரண்டு பதவிகளோடு இருக்காரு அமைச்சர் துரைக்கண்ணு. இரண்டில் ஒன்றைக்கூட பங்கு பிரிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அதனால மாவட்ட-ஒன்றிய பிரிப்புகளை அவர் எதிர்க்குறாரு. அதுபோலவே திருவாரூர் மாவட்ட அமைச்சரான காமராஜூம், இப்போதைக்கு தன் மாவட்ட ஏரியாவிலோ ஒன்றியங்களிலோ கை வைக்கக்கூடாதுன்னு சொல்றாராம். நாகை-மயிலாடுதுறை மாவட்டங்களை அப்படியே பாதுகாக்கணும்னு ஓ.எஸ்.மணியன் வரிந்து கட்டுறாரு. இப்படி பல மாவட்டங்களிலும் எதிர்ப்பு இருக்குது. அதோடு, கொரோனாவைக் காரணம் காட்டி, துறை ரீதியான அதிகாரங்கள் எல்லாத்தையும் முதல்வர் அலுவலகமே தன் கையில் எடுத்துக்கிறதாகவும் குமுறுறாங்க.''

""அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்த பிறகு, கட்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டமும் நடந்ததே... அதில் இதைப் பற்றி பேசி யிருப்பாங்களே?''

dd

""இதைப் பற்றி ஓப்பனா பேசணும்னு காத்திருப்பவர் சட்டம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம். அவர் 3 கேபினட் கூட் டத்தில் கலந்துக் கலைன்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. முதல் கூட்டத்தின்போது தனக்கு டெஸ்ட் எடுப்பதாகவும் ரிசல்ட்டுக்கு காத்திருக்கணும்னும் சொன்னாராம். அடுத்த கூட்டத்தின்போது, வயிற்றுப் பிரச்சினையால் வர முடியலையாம். சமீபத்தில் நடந்த கேபினட் கூட்டத்தின்போது, தன் டிரைவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்திருப்பதால் ரிசல்ட் பார்த் துட்டுவர்றேன்னு சி.எம்.முக்கு தகவல் அனுப்பிட்டாராம். எடப்பாடி செயல்பாடுகளால் கடும் அதிருப்தியா இருப்பதாலதான் கொரோனா சூழலை காரணம் காட்டி கேபினட் கூட்டத்தை சி.வி.சண்முகம் தொடர்ந்து புறக்கணிச்சிட்டதா கோட்டையிலே பேச்சு ஓடுது.''

""எடப்பாடி என்ன நினைக்கிறாரு?''

""சி.வி.சண்முகம் தனி லாபி பண்ணுறாருன்னு முதல்வருக்கு ரிப்போர்ட் வந்திருக்குதாம். சிறைத்துறை போஸ்டிங்குகளை முதல்வர் அலுவலகமே முடிவு செய்வதால் சி.வி.சண்முகத்துக்கு அதிருப்தியாம். அதுபோல, டெல்டா பகுதிகளில் குடிமரா மத்துங்கிற பேருல ஆறு, வாய்க்கால் பகுதிகளில் மணல் அள்ளியதிலும் கனிம வளத்துறை மந்திரியான தனக்கு சரியான விவரம் தரப்படலைன்னும் கோபமாம். இதை ஓப்பனாவே பல இடங்களில் பேசியதோடு, கொங்கு மண்டலத் தில் உள்ளவங்க மட்டும்தான் மந்திரிகளா, வடமாவட்டம்னா மரியாதை இல்லையான்னு சீறியிருக்காரு. இதே உணர்வில் இருக்கும் தென்மாவட்ட-டெல்டா ஏரியா அமைச்சர்களும் சண்முகம் சொல்வது நியாயம்தானேன்னு யோசிச்சிருக்காங்க.''

""ம்...''

dd

""தனக்கு மறைமுக சப்போர்ட் பெருகுவதை சி.வி.சண்முகம் புரிந்துகொண்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் அவரை அடுத்த முதல்வர் வேட்பாளரா முன்னிறுத்துவதற்கான லாபியை ஆரம்பிச்சிட்டாங்க. இந்தத் தலைவலி திருகுவலியாகிடக் கூடாதுன்னு நினைச்ச எடப்பாடி, வேற ப்ளான் போட்டுப் பார்த்தாரு. சி.வி.சண்முகக்த்துக்குப் பதிலா, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை பூஸ்ட் அப்பண்ணனும்னு ஓ.பி.எஸ்.கிட்டேயும் பேசியிருக்காரு. அதற்கான மூவ் நடந்துக்கிட்டிருந்த சூழலில்தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் போயிட்டாரு அன்பழகன்.''

""இதெல்லாம் சி.வி.சண்முகத்துக்கும் தெரிஞ்சிருக்குமே?''

""தெரிஞ்சதாலதான்... அரசின் கொரோனா கால செயல்பாடுகளை முன்னிறுத்தி, கட்சிப் பிரமுகர்களிடம் விமர்சனம் பண்ணியிருக்காரு. கொரோனா நடவடிக்கைகள்ல நிறைய குளறுபடி நடப்பதாகவும், கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி இருப்பதாகவும் கட்சி சீனியர்களிடம் விமர்சனங்களை வைக்கிறாராம். அவரைப் போலவே, முதல்வர் ஆசையில் இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, கொரோனா தடுப்பில் மக்கள் பாராட்டும் அளவிற்கு தான் சிறப்பாக செயல்பட்டதை எடப்பாடியால் ஜீரணிக்க முடியலைங்கிற விமர்சனத்தை எழுப்பிக்கிட்டு இருக்காராம்.''’

""நானும் இதன் தொடர்ச்சியான தகவலைச் சொல்றேன். முதல்வர் ஆகும் ஆசையில் தனக்கு எதிராக இயங்கும் அமைச்சர்களான சி.வி.சண்முகத்தின் மீதும், விஜயபாஸ்கர் மீதும் உடனடியா நடவடிக்கை எடுக்கனும்ன்னு எடப்பாடி துடிக்கிறாராம். அதனால் ஓ.பி.எஸ்.கிட்ட இதுபத்தி தீவிரமா விவாதிக்கவும் ஆரம்பிச்சிட்டாராம். ஆனால் ஓ.பி.எஸ்.தான் கொஞ்சம் நிதானிப்போம்னு லகானைப் பிடிச்சி இழுத்துக்கிட்டு இருக்காராம்.''