சென்னை விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக இன்ஸ்பெக்டர் சரவணன், சாம் வின்சென்ட் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி யுள்ளனர். சரவணன், குறித்து, நக்கீரன் 18-02-2018 இதழில் “"க்ளிக் பண்ணுங்க! ஃபிகர் கிடைக்கும்! -ஆன்லைன் விபச்சார விபரீதம்'’என அப்போதே சுட்டிக்காட்டியிருந்தது. தற்போது அதுவே பூதாகரமாக வெடித்துள்ளது.

சென்னையில் விபச்சாரம் நடக்காமல் தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கி ஏ.சி., இரண்டு இன்ஸ்பெக்டர்களை நியமித்து கண்காணித்து வருகிறது அரசு. 2018-ஆம் ஆண்டு இப்பிரிவுக்கு ஏ.சி.யாக ஷெரினாபேகமும் இன்ஸ்பெக்டராக சரவணனும், சாம் வின்சென்டும் பணிபுரிந்துவந்தனர்.

cc

லொக்கோட்டோ ஆஃப் மூலமாகவும், மசாஜ் சென்டர்கள், நடிகைகள் மூலமாகவும் ஈ.சி.ஆர். பகுதியில் வி.ஐ.பி.களுக்கு விபச் சாரத்துக்கு பெண்கள் சப்ளை செய்வதாக தகவல் கிடைக்க... ஏ.சி. ஷெரினாபேகம் முதல்கட்டமாக சென்னையில் இந்த தொழிலில் பிரபல மானவர்கள் யார் என்பதை விசாரித்தார். பூங்கா வெங்கடேஷ் (எ) கதிரேசன், டைலர் ரவி, எம்.ஜி.ஆர்.பாண்டி பெயரைக் குறிப்பிட்டு சென்னையை மூன்றாகப் பிரித்து, மூவரும் செயல்பட்டு வருவதாக அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அவர் நடத்திய முதல் ரெய்டு தோல்வியடைந்தது. தோல்வி கண்ட ஷெரினா, நாம் ரெய்டு செல்வது எப்படி மசாஜ் உரிமையாளர்களுக்குத் தெரிய வந்தது என்று சந்தேகப்பட்டு விசாரிக்கவே... இன்ஸ்பெக்டர் சரவணனும் அவருடனிருந்த ரைட்டர் சசிகுமாரும் ரெய்டு செல்லும் இடம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கொடுத்து வந்தது தெரிந்துள் ளது.

cc

இந்நிலையில், மசாஜ் சென்டர்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் வந்தநிலையில் ஏ.சி, இன்ஸ்பெக்டர் அனைவரும் மாற்றப்பட்டனர். அதில் சசிகுமார் மட்டும் தப்பித்து அங்கேயே பணிபுரிந்துள்ளார். அடுத்து வந்த ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சண்முகவேல் இருவரிடமும், "நிலுவையில் ஏன் இத்தனை வழக்குகள், இது நாள்வரை என்ன செஞ்சீங்க?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ஏ.சி. மகேஸ்வரி, அந்த லிஸ்ட்டிலுள்ள டைலர் ரவியைப் பிடிக்க திட்டம் வகுத்தார். அந்தத் தகவல் ரைட்டர் சசி மூலம் கசிய, டைலர் ரவி தப்பித்தார். ஏ.சி. மகேஸ்வரி அடுத்தடுத்து திட்டம்போட்டு, டைலர் ரவியை தேவகோட்டையில் பிடித்தார். அந்தக் குழுவிலிருந்த எஸ்.ஐ. பொன்சாமுவேல், ரைட்டர் சசிக்கு போன்செய்து, "டைலர் ரவியைப் பிடித்துவிட்டார்கள். அடுத்து பூங்கா வெங்கடேஷை பிடிக்க முடிவெடுத்துள்ளனர்' என்பதை சொல்ல, இந்தத் தகவலும் வெங்கடேஷை சென்றடைந்திருக்கிறது. விவகாரம் ஏ.சி.க்குத் தெரிந்ததும், எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட டைலர் ரவியிடமிருந்து டைரியையும், வாட்ஸ்அப் ரெக்கார்டையும் கைப்பற்றியபோது, அதில் இன்ஸ்பெக்டர் சரவணன் பெயர் இருந்துள்ளது. முன்னாள் ஏ.சி. ஷெரினாபேகத்திற்கும், இன்ஸ் சரவணனுக்கும் பிரச்சினை இருந்துவந்த நிலையில்... இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட ஷெரினா, இந்த ஆதாரத்தை வைத்து காய் நகர்த்தியுள்ளார்.

அக்பர்அகமது என்பவர் ஷெரினாபேகம், சரவணன் பணிக்காலத்தில் வெளிநாட்டு அழகிகள் மற்றும் சினிமா நடிகைகள் பலர் பாலியல் வழக்கில் சிக்கியபோது, அவர்களை விடுவிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் வேறு துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இப்போது இந்த ஆதாரத்தை ஷெரினாபேகம் மூலம் தெரிந்துகொண்ட அக்பர், விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல, நீதிமன்றம் மேல்நடவடிக்கைக்கு சிபாரிசு செய்தது.

ff

லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசா ரணையில், சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல்கள், மசாஜ் சென்டர்களில் தடையின்றி பாலியல் தொழில் நடத்த அனுமதி வழங்கி, புரோக்கர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான குழுவினர் இவர்கள் இருவர் வீட்டிலும் சோதனை செய்ததில், இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டிலிருந்து பல கோடி மதிப்புள்ள 8 முக்கிய ஆவணங்கள், பல்வேறு வங்கியில் வைத்துள்ள ரூ.18.5 லட்சம் வைப்புநிதி ரூ.2.50 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

விபச்சார தடுப்புப் பிரிவில் கோடியில் வருமானம் என்பதால், இத்துறைக்கு பணி வேண்டுமென்றால் ரூ.25 லட்சம் வரை கொடுத்தால் மட்டுமே பணி மாறுதல் கிடைக்குமாம், அப்படி முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சிபாரிசு மூலமாக உள்ளே வந்தவர்கள்தான் இன்ஸ்பெக்டர் சரவணனும் சசிகுமாரும். சசிகுமார், கூடுவாஞ்சேரியில் 1 கோடியில் நிலம் வாங்கியுள்ளாராம். "இவரை விசாரித்தால் இன்னும் பல போலீஸ் உயரதிகாரிகள் சிக்குவார்கள்' என்கிறது போலீஸ் தரப்பு.